கொக்குவில் மேற்கு பிடாரி அம்மன் ஆலய பகுதியில் நேற்றிரவு வாள் வெட்டுக்குழு நடமாடியுள்ளனர்.
அதன்போது அப்பகுதியில் உள்ள வீடொன்றின் முன்னால் கதிரையில் உட்காந்திருந்த வீட்டின் உரிமையாளர் மீது மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் வாள் வெட்டினை மேற்கொள்ள முயன்றுள்ளனர்.
இந் நிலையில் அவர் அபாய குரல் எழுப்பியவாறு வீட்டினுள் ஓடியுள்ளார். அதனை அடுத்து வாள் வெட்டு குழுவினர் கதிரையை வெட்டி சேதப்படுத்தியுள்ளனர்.
வீட்டு உரிமையாளரின் அபாய குரலை அடுத்து அயலவர்களும் அப்பகுதியில் கரப்பந்தாட்டம் விளையாடிக்கொண்டிருந்த இளைஞர்களும் அவ்விடத்திற்கு விரைந்த போது வாள் வெட்டுக்குழு அங்கிருந்து தப்பிசென்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண காவல் துறையினருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து காவல் துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Eelamurasu Australia Online News Portal