அவுஸ்திரேலியாவில் பட்டப்படிப்பை மேற்கொண்டிருந்த இலங்கையரான மொஹமட் நிஷாம்தீனை பயங்கரவாதியென தெரிவித்து அவரைக் கைதுசெய்ய சதித்திட்டம் தீட்டி சூழ்ச்சி மேற்கொண்ட அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவாஜாவின் சகோதரர் அர்சலான் கவாஜா மீண்டும் அவுஸ்திரேலிய காவல் துறையினர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெண் சாட்சியாளரொருவருக்கு அழுத்தம் கொடுக்க முற்பட்டு பிணை நிபந்தனைகளை மீறிய குற்றச்சாட்டிலேயே அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவாஜாவின் சகோதரர் அர்சலான் கவாஜா கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அர்சலானின் சூழ்ச்சியால் இலங்கையரான மொஹமட் நிசாம்தீன் சுமார் ஒரு மாதக்காலமாக அவுஸ்திரேலிய உயர் பாதுகாப்பு சிறையொன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பிணையில் விடுதலையானமை குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal