Tag Archives: ஆசிரியர்தெரிவு

வட மாகாண அபிவிருத்தி குறித்து கனடா – ஈரான்!

சிறிலங்காவிற்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டெவொயிட் மெக்கினன் மற்றும் வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று கொழும்பில் இடம்பெற்றது.   வடமாகாணத்தில் கனேடிய அரசாங்கத்தினால் மேற்கொள்ள கூடிய அபிவிருத்தி உதவிகள் குறித்து இச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது. அத்தோடு கனேடிய அரசாங்கத்தின் ஆசிய விவகாரங்களுக்கான பணிப்பாளரின் இலங்கை வருகை குறித்தும், இவ்வருகையின்போது கனேடிய அரசாங்கத்தினால் வடமாகாணத்தில் முன்னெடுக்க கூடிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது. இதேவேளை ஆளுநருக்கும் சிறிலங்காவுக்கான ஈரானின் தூதுவர் மொஹமட் ஷேரி ஹமிரனி ஆகியோர்களுக்கு இடையிலான சந்திப்பொன்றும் கொழும்பிலுள்ள ...

Read More »

இலங்கையில் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் ஒன்றிணைந்து செயற்படுவோம் – சீனா

இலங்கையின் அனைத்து மட்ட அரச தரப்பு மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் ஒன்றிணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதுடன், பல்வேறு துறைகளிலும் எமது தொடர்ச்சியான ஒத்துழைப்பை வழங்குவதற்குத் தயாராக உள்ளதாக இலங்கைக்கான சீனத்தூதுவர் தெரிவித்திருக்கின்றார்.   தமிழ், சிங்களப் புதுவருடத்தையொட்டி இலங்கைக்கான சீனத்தூதுவர் செங் சூவான் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியொன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டிருக்கின்றார். அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது, புதுவருடம் பிறந்துள்ள நிலையில், இலங்கையின் அனைத்து மட்ட அரச தரப்பு மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் ஒன்றிணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதுடன், பல்வேறு துறைகளிலும் எமது ...

Read More »

ஜூலியன் அசாஞ்ச்சை அவுஸ்திரேலியாவிற்கு அழைத்துவர வேண்டும் !

WikiLeaks நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச்சை அவுஸ்திரேலியாவிற்கு அழைத்துவர வேண்டும் என்று அவரின் தந்தை கேட்டுக்கொண்டுள்ளார். தமது மகன் கைது செய்யப்பட்ட விதம் கண்டு, தாம் அதிர்ச்சியடைந்ததாகவும் அவர் கூறினார். கடந்த 7 ஆண்டுகளாக லண்டனில் உள்ள எக்குவடோர் தூதரகத்தில் அடைக்கலமாகத் தங்கியிருந்த அசாஞ்ச்சை சில நாள்களுக்கு முன்னர் காவல் துறை யினர் கைது செய்தனர். அசாஞ்ச் விவகாரத்தை, அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் மாரிஸ் பேன் கவனித்து வருகிறார். இதற்கு முன்பாக அசாஞ்ச்சைத் தன்னிடம் ஒப்படைக்க ஆஸ்திரேலியா கோரிக்கை விடுக்கப் போவதில்லை என்றும், அந்த விவகாரம், ...

Read More »

யாழ்.மாநகர முதல்வர் உள்ளிட்ட சிலருக்கு பாதுகாப்பு தேவையா?

யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் மற்றும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கேசவன் சயந்தன் ஆகியோருக்கு காவல் துறை பாதுகாப்பு வழங்குமளவுக்கு அச்சுறுத்தல்கள் எவையும் இல்லை என பாதுகாப்பு அமைச்சுக்கு அறிக்கையிடப்பட்டுள்ளது. தமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் போதியளவு காவல் துறை பாதுகாப்பு வழங்குமாறு யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் மற்றும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கேசவன் சயந்தன் ஆகியோர் பாதுகாப்பு அமைச்சுக்கும் காவல் துறை திணைக்களத்துக்கும் கடிதம் எழுதியிருந்தனர். இவர்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் தான் ...

Read More »

மீளக் குடியேறியும் அகதிகாளாக வாழும் மக்கள் !

யாழ்ப்பாணம், மயிலிட்டி ஜே – 251 கிராம சேவகர் பிரிவில் பல குடும்பங்கள் தற்போதும் அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி சிறிய பாதுகாப்பற்ற குடிசைகளில் வசித்து வருகின்றனர். கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக இடம்பெயர்ந்து யாழ்ப்பாணம் மற்றும் நாட்டின் பல பகுதிகளிலும் இந்தியாவிலிருந்தும் வந்து தமது சொந்த காணிகளில் மீளக் குடியமர்ந்த மக்களே இவ்வாறு எந்தவித அடிப்படை வசதிகளுமின்றி தற்காலிக கொட்டில் வீடுகளில் வசித்து வருகின்றனர். அவர்களின் அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய வகையில் மலசலகூடங்களோ, கிணறு வசதிகளோ, குடிநீர் வசதிகளோ, பாதுகாப்பான வீட்டு ...

Read More »

வடகொரியாவில் அடுத்த வாரம் புதின்-கிம் ஜாங் அன் சந்திப்பு?

வரலாற்றில் முதல்முறையாக ரஷிய அதிபர் புதினும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகள் மூலம் உலக நாடுகளை வடகொரியா அச்சுறுத்தி வந்தது. இதனால் வடகொரியா சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை சம்பாதித்தது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் சந்தித்து பேசிய பிறகு, இந்த சூழல் மாறியது. வடகொரியா அணு ஆயுத சோதனைகளை நிறுத்தி, அமைதிக்கு திரும்பியதை சர்வதேச நாடுகள் ...

Read More »

நேபாளத்தில் விமான விபத்து – 3 பேர் பலி!

நேபாளத்தில் விமான நிலையத்தில் நின்றிருந்த ஹெலிகாப்டர் மீது விமானம் மோதிய விபத்தில் 3 பேர் பலியாகினர். நேபாளத்தில் லுகியா விமான நிலையத்தில் இன்று ஒரு குட்டி விமானம் புறப்பட்டது அப்போது கட்டுப்பாட்டை இழந்து ஓடு தளத்தில் தாறுமாறாக ஓடி அருகில் இருந்த ஹெலிகாப்டர் தளத்துக்கு சென்றது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 ஹெலிகாப்டர்கள் மீது மோதி நொறுங்கியது. இந்த விபத்தில் நின்று கொண்டிருந்த ஹெலிகாப்டரின் இணை விமானி துங்கானா, உதவி சப்- இன்ஸ்பெக்டர் ராம்பகதூர் காட்கா ஆகியோர் அதே இடத்தில் பலியாகினர். படுகாயம் அடைந்த ...

Read More »

மன்னாரில் கடும் வறட்சி : மக்கள், கால்நடைகள் பாதிப்பு!

நாட்டில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக மன்னார் மாவட்டம் முழுவதும் குளங்கள் மற்றும் வாய்கால் நீர் நிலைகள் என அனைத்தும் வற்றிய நிலையில் காணாப்படுவதனால் மனிதர்கள் மாத்திரம் இல்லாமல் கால் நடைகளும் பாதிப்படடைந்துள்ளன.   மன்னார் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக அதிகரித்த வெப்பம் காரணமாக ஏற்பட்ட வறட்சியால் மன்னார் , மடு,  மாந்தை மேற்கு , முசலி , நானாட்டான் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் கால் நடை வளர்ப்பாளர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். மன்னாரில் காணப்படும் ...

Read More »

போர்க் கைதிகள் தொடர்பாக ஜெனீவா ஒப்பந்தம் என்ன சொல்கிறது?

இரு நாடுகளிடையே போர் ஏற்படும் போது சம்பந்தப்பட்ட இரு நாடுகளுக்குமே உயிர்ச்சேதம், பொருட்சேதம் என்று பெரும் இழப்பு ஏற்படுகிறது. தலைமையின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு போரில் ஈடுபடும் ராணுவ வீரர்களின் உயிருக்கு உத்தரவாதம் கிடையாது. மரணம் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம் என்ற நிலையிலேயே அவர்கள் தாய் நாட்டுக்காக ஆயுதம் ஏந்துகிறார்கள். போரின் போது பல வீரர்கள் எதிரி நாட்டு ராணுவத்திடம் போர்க்கைதிகளாக சிறைபிடிக்கப்பட்டு சித்ரவதைக்கு உள்ளாக்கப்படுவதும் உண்டு. இதற்கு முடிவு கட்ட சர்வதேச நாடுகள் தீர்மானித்ததன் விளைவாக சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனீவா நகரில், போர்க்கைதிகளை ...

Read More »

உலகத் தமிழ் மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துத் தெரிவித்த அவுஸ்திரேலிய பிரதமர்!

சித்திரைப் புத்தாண்டு நாளாகிய இன்றைய தினம் உலகத் தமிழ் மக்களுக்கு அவுஸ்திரேலிய பிரதமர் Scott Morrison தனது புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விசேட வாழ்த்துச் செய்தி ஒன்றினை வெளியிட்டுள்ளார். உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களாலும் சிறிலங்காவின் சிங்கள மக்களாலும் இன்றைய தினம் வசந்த காலத்தை வரவேற்கும் சித்திரைப் புத்தாண்டு நாள் கடைப்பிடிக்கப்படுகின்ற நிலையில் அவ்ஸ்திரேலியப் பிரதமர் தனது வாழ்த்துக்களை தமிழ் மக்களுக்குத் தெரிவித்திருக்கின்றார். அவுஸ்திரேலியாவில் அனைத்து கலாசாரங்களும் மதிக்கப்படுகின்ற நிலையில் ஆஸிவாழ் தமிழர்களுக்கும் மற்றும் உலகெங்கும் பரந்துவாழும் தமிழ் மக்களுக்கும் ...

Read More »