நாட்டில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக மன்னார் மாவட்டம் முழுவதும் குளங்கள் மற்றும் வாய்கால் நீர் நிலைகள் என அனைத்தும் வற்றிய நிலையில் காணாப்படுவதனால் மனிதர்கள் மாத்திரம் இல்லாமல் கால் நடைகளும் பாதிப்படடைந்துள்ளன.
மன்னார் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக அதிகரித்த வெப்பம் காரணமாக ஏற்பட்ட வறட்சியால் மன்னார் , மடு, மாந்தை மேற்கு , முசலி , நானாட்டான் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் கால் நடை வளர்ப்பாளர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

மன்னாரில் காணப்படும் அதிகளவான குளங்கள் மற்றும் கால்வாய்கள், நீர் நிலைகள் வற்றிய நிலையில் காணப்படுவதனால் விவசாயச் செய்கையில் ஈடுபடுபவர்கள், தோட்டச் செய்கையில் ஈடுபடுவோர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக கால் நடைகளின் மேய்ச்சல் நிலங்கள் அனைத்தும் வெப்பம் காரணமாக வறண்டு காணப்படுவதனால் மேய்ச்சல் நிலங்கள் இன்றி கால் நடைகளும் இறந்து போகின்ற நிலை ஏற்பட்டுள்ளது.

அதே நேரத்தில் குளங்கள் அனைத்திலும் நீர் வற்றிய நிலையில் காணப்படுவதினால் நன்னீர் மீன் பிடியில் ஈடுபடும் பெரும்பாலான மீனவர்கள் வாழ்வாதாரம் இன்றி பாதிப்படைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Eelamurasu Australia Online News Portal