யாழ்ப்பாணம், மயிலிட்டி ஜே – 251 கிராம சேவகர் பிரிவில் பல குடும்பங்கள் தற்போதும் அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி சிறிய பாதுகாப்பற்ற குடிசைகளில் வசித்து வருகின்றனர்.
கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக இடம்பெயர்ந்து யாழ்ப்பாணம் மற்றும் நாட்டின் பல பகுதிகளிலும் இந்தியாவிலிருந்தும் வந்து தமது சொந்த காணிகளில் மீளக் குடியமர்ந்த மக்களே இவ்வாறு எந்தவித அடிப்படை வசதிகளுமின்றி தற்காலிக கொட்டில் வீடுகளில் வசித்து வருகின்றனர்.
அவர்களின் அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய வகையில் மலசலகூடங்களோ, கிணறு வசதிகளோ, குடிநீர் வசதிகளோ, பாதுகாப்பான வீட்டு வசதிகளோ இன்றி, தமது வாழ்வாதாரத்தைக் கொண்டு செல்லக்கூடிய வகையில் தொழில் எதனையும் செய்ய முடியாதவர்களாக வசித்து வருகின்றனர்.
கடந்த 2009 யுத்தம் முடிவுற்ற பின்னரும் தாம் தொடர்ந்தும் அகதி வாழ்வையே எதிர்நோக்குவதாகவும் தமது இந் நிலையை கருத்தில் கொண்டு தமக்கான அடிப்படை வசதிகளை உரிய அதிகாரிகள் ஏற்படுத்தித் தருமாறு அம்மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
Eelamurasu Australia Online News Portal