WikiLeaks நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச்சை அவுஸ்திரேலியாவிற்கு அழைத்துவர வேண்டும் என்று அவரின் தந்தை கேட்டுக்கொண்டுள்ளார்.
தமது மகன் கைது செய்யப்பட்ட விதம் கண்டு, தாம் அதிர்ச்சியடைந்ததாகவும் அவர் கூறினார்.
கடந்த 7 ஆண்டுகளாக லண்டனில் உள்ள எக்குவடோர் தூதரகத்தில் அடைக்கலமாகத் தங்கியிருந்த அசாஞ்ச்சை சில நாள்களுக்கு முன்னர் காவல் துறை யினர் கைது செய்தனர்.
அசாஞ்ச் விவகாரத்தை, அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் மாரிஸ் பேன் கவனித்து வருகிறார்.
இதற்கு முன்பாக அசாஞ்ச்சைத் தன்னிடம் ஒப்படைக்க ஆஸ்திரேலியா கோரிக்கை விடுக்கப் போவதில்லை என்றும், அந்த விவகாரம், அமெரிக்காவுக்கும், பிரிட்டனுக்கும் இடையிலானது என்றும் கேன்பரா கூறியிருந்தது.
ரகசியமான ஆயிரக்கணக்கான அமெரிக்க அரசதந்திர ஆவணங்களை WikiLeaks வெளியிட்டிருந்தது.