Tag Archives: ஆசிரியர்தெரிவு

குற்றங்கள் நிரூபிக்கப்படுமாயின் வழக்குத் தொடரப்படும்!

குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதான குற்றங்கள் நிரூபிக்கபடுமாயின் அவர்கள் மீது  வழக்குத்தொடரவும் குற்றவாளிகள் இல்லாவிட்டால்  அதற்கான  ஆதாரங்களை  வெளியிடவும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார். யுத்தக்காலத்தில் முஸ்லிம் பிரதிநிதிகள் நாட்டுக்கும் மக்களுக்கும் முழு ஒத்துழைப்பை வழங்கியிருந்தனர். ஆனால் வரலாற்றில்  முதல் முறையாக முஸ்லிம் பிரதிநிதிகள்  இல்லாத அமைச்சரவை உருவாகியுள்ளது. ஆகவே குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பனர்களிடம் சென்று வாக்கு மூலத்தை  பெற்று  ஒருமாதத்துக்குள் இறுதி விசாரணை அறிக்கைகளை குற்ற விசாரணை பிரிவு பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். அந்த அறிக்கைக்கு அமைவாக  ...

Read More »

கனடாவில் உலகின் மிகப்பெரிய சர்வதேச பெண்கள் மாநாடு !

கனடாவில் பிரிடிஸ் கொலம்பிய வான்கூவாரில் பெண்கள் 2019 மாநாடு அடம்பெற்று வருகின்றது. பெண்கள் மற்றும் சிறுமியர் நல்வாழ்வு, சுகாதாரம் பால்நிலைஈ, சமத்துவம், உரிமை குறித்து இப் பெண்கள் மாநாட்டில் ஆராயப்படுகின்றது 160 நாடுகளை சேர்ந்த 8000 பேர் இதில் பங்கேற்கின்றனர். இந்த பெண்கள் மாநாட்டில் 100000 வரையிலான பார்வையாளர்கள் கலந்துகொள்கின்றனர். கடந்த திங்கட்கிழமை 03ஆம் திகதி ஆரம்பமாண இப் பெண்கள் மாநாடு நாளை (06)  நிறைவடைகின்றது. இப் பெண்கள் மாநாட்டில் இலங்கைகை பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கை பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார ...

Read More »

சாஹ்ரானுடன் ஹிஸ்புல்லாவுக்கு தொடர்பு !

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மீது சஹ்ரானுடன்  நெருக்கிய  தொடர்புகளை வைத்துள்ளார் எனக் கூறி காத்தான்குடி காவல் துறை  நிலையத்தில் இன்று முறைப்பாடு ஒன்று செய்யப் பட்டுள்ளது.   குறித்த முறைப்பாட்டினை ஈரோஸ் இயக்கத்தின்  தலைவர் ஆர் .பிரபாகரன் இன்று காலை காத்தான்குடி காவல் துறை  நிலையத்தில் பதிவு செய்துள்ளார் . குறித்த முறைப்பாட்டில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா தற்கொலை  குண்டுதாரி சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்துள்ளார் எனவும், அது குறித்த  படங்கள் சமூக வலைத்தளங்களில் உலாவுவதாகவும் இது ...

Read More »

அவுஸ்திரேலியாவில் துப்பாக்கி சூடு! நால்வர் பலி!

அவுஸ்திரேலியாவின் டார்வின் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் நால்வர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.   அவுஸ்திரேலியாவின் டார்வின் பகுதியில் குறித்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக கூறப்படும் சந்தேக நபர் ஐரோப்பியர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இதையடுத்து கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபரிடம் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இது தீவிரவாத தாக்குதல் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

கேரள ஐஎஸ் தலைவர் ஆப்கானிஸ்தானில் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் நடத்திய தாக்குதலில், கேரளாவைச் சேர்ந்த ஐஎஸ் பிரிவு தலைவர் ரஷீத் அப்துல்லா உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தின் திரிக்காப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரஷித் அப்துல்லா. இவர் கடந்த 2016ம் ஆண்டு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் கோட்டையான ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு தனது மனைவி ஆயிஷா உள்ளிட்ட 21 பேருடன் குடிபெயர்ந்தார். இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. அப்துல்லாவின் சமூக வலைத்தளம் மூலமாக தகவலைப் பெற்ற ஒருவர் இத்தகவலை கூறியிருக்கிறார். ...

Read More »

ஞனாசார தேரரின் விடுதலை சந்தேகத்தை எழுப்புகின்றது!

முஸ்லிம்களுக்கு எதிராக நாட்டில் பிரச்சினை ஏற்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில், கடந்த காலங்களில் இனமோதல்களுக்கு காரணமாக இருந்த ஞானசார தேரரை ஜனாதிபதி விடுவிக்க எடுத்த தீர்மானம் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.   உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து முஸ்லிம் விரோத பிரச்சினை தலைதூக்க ஆரம்பித்தது. பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்று மூன்று வாரங்கள் கழிந்த பின்னர் இனவாதிகள் குருணாகல் மற்றும் மினுவங்கொடை பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு சொந்தமான கடைகள் வீடுகள் மற்றும் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் ...

Read More »

அரசாங்கம் பரிசீலித்து பார்க்க வேண்டும்!

அமைச்சர் ஒருவர் மீது குற்றச்சாட்டுக்கள் இருந்தால் அந்தக் குற்றச்சாட்டுக்கள் உண்மைதா என்பதை அரசாங்கம் பரிசீலித்து பார்க்க வேண்டும். அரசியல் காரணங்களுக்காக அவ்வாறு பரிசீலித்து பார்க்காமல் தட்டி கழிக்க கூடாது என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.   தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம் நேற்று யாழில் நடைபெற்றது. இதன் பின்னர் அமைச்சர் ரிசாட் பதீயூதின் மீதான குற்றச்சாட்டுக்களும் அவரை பதவி நீக்க கோருகின்ற போராட்டங்கள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலையே மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ் விடயம் தொடர்பாக அவர் மேலும் ...

Read More »

அவுஸ்திரேலியாவில் இலவச Wi-Fi பயன்படுத்துபவர்களுக்கு ஆபத்து!

அவுஸ்திரேலியாவில் இலவச Wi-Fi பயன்படுத்துபவர்களை பொலிஸார் கண்காணிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இலவச இணைய வசதியை (WiFi) வழங்கும் McDonald’s உணவகம், Westfield பல்பொருள் அங்காடி மற்றும் Apple Stores ஆகியவற்றில் WiFi வசதியை பயன்படுத்துபவர்களின் விபரங்களை அவுஸ்திரேலிய புலனாய்வுப்பிரிவினர் கண்காணிக்கலாம் என கூறப்படுகின்றது. பாதுகாக்கப்பட்ட தொடர்பாடல் (encryption technology) செயலிகளின் தகவல் பரிமாற்றங்களை ஒட்டுக்கேட்பது உட்பட இணைய பாதுகாப்பு தொடர்பில் பல புதிய கண்காணிப்புக்களை மேற்கொள்வதற்கு பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைவான புதிய சட்டத்தின்படி மேற்படி கண்காணிப்புக்கள் மேற்கொள்ளப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Morrison அரசின் காலத்தில் ...

Read More »

நாடு கடத்தப்பட்ட இலங்கை அகதிகள்! செய்திகளை மறுக்கும் அமைச்சர்!

அவுஸ்திரேலியா நோக்கி வந்துகொண்டிருந்த 20 இலங்கையர்கள் அண்மையில் நாடு கடத்தப்பட்டனர். இந்த நிலையில் குறித்த அகதிகள் கிறிஸ்மஸ் தீவுக்கு கொண்டுவரப்படாமலேயே இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. உள்துறை அமைச்சர் Peter Dutton இதனை தெரிவித்துள்ளார். படகில் வந்த 20 இலங்கையர்களை கிறிஸ்மஸ் தீவு முகாமுக்கு கொண்டுவந்து சில நாட்கள் தடுத்துவைத்திருந்த பின்னர் இலங்கைக்கு திருப்பியனுப்பியதாக முன்னர் வெளிவந்த தகவல்களை அமைச்சர் முற்றாக மறுத்தார். அகதிகள் அனைவரும் கிறிஸ்மஸ் தீவுகளுக்கு கொண்டுவரப்படாமலேயே இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர் என்று அவர் தெரிவித்தார். பிறிஸ்பனில் செய்தியாளர்கள் மத்தியில் பேசும்போது ...

Read More »

மொழி திணிப்பை திமுக எதிர்க்கும் – கனிமொழி

எந்த மொழிக்கும் எதிரான கொள்கையை மத்திய அரசு கொண்டிருந்தாலும், கொண்டிருக்காவிட்டாலும் நிச்சயமாக மொழி திணிப்பை திமுக எதிர்க்கும் என்று எம்.பி. கனிமொழி கூறி உள்ளார். தி.மு.க. எம்.பி. கனிமொழி இன்று காலை தூத்துக்குடி செல்லும் முன் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- எந்த காலத்திலும் எந்த மொழிக்கும் எதிரான கொள்கையை மத்திய அரசு கொண்டிருந்தாலும், கொண்டிருக்காவிட்டாலும் நிச்சயமாக மொழி திணிப்பை தி.மு.க. எதிர்க்கும். அது இந்தியாக இருந்தாலும் தி.மு.க. எதிர்க்கும். நாடாளுமன்றத்திலும் தி.மு.க. எதிர்க்கும். நாடாளுமன்றத்தில் எத்தனை பேர் இருந்தாலும் ஒரு எம்.பி.யாக இருந்தாலும் ...

Read More »