Tag Archives: ஆசிரியர்தெரிவு

அந்தோனியார் திருச் சொரூபம் உடைப்பு!

பள்ளகண்டல் புனித அந்தோனியார் தேவாலயத்தில் உள்ள அந்தோனியார் திருச் சொரூபம் விசமிகளினால் உடைக்கப்பட்டுள்ளது. வில்பத்து சரணாலயத்தில் மத்தியில் அமையப்பெற்றுள்ள புனித அந்தோனியார் யாத்திரிகை ஸ்தலமான ‘பள்ளகண்டல் புனித அந்தோனியார்’ தேவாலயத்தில் உள்ள அந்தோனியார் திருச் சொருபம் கடந்த செவ்வாய்க்கிழமை (30) இரவு இனம் தெரியாத விசமிகளினால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது. மிகவும் சிறப்பு மிக்க குறித்த தேவாலயத்தில் குறிப்பாக ஒவ்வொரு வருடமும் புனித அந்தோனியாரின் திருவிழாவை சிங்கள, தமிழ் மக்கள் ஒன்றினைந்து சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். சிலாபம் மறைமாவட்டத்தின் கீழ் குறித்த தேவாலையம் அமைந்துள்ளது. குறித்த ...

Read More »

சஹ்ரானின் ஊடக பிரதானி காத்தான்குடியில் கைது !

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவரான சஹ்ரானின் ஊடக பிரிவின் பிரதானியாக செயற்பட்டு வந்தவர் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவர் காத்தான்குடியில் கைதுசெய்யப்பட்டுள்ளார். காத்தான்குடியைச் சேர்ந்த  38 வயதுடைய ஒருவரேயே நேற்ற கைது செய்து சி.ஐ.டி.யினரிடம் ஒப்படைத்துள்ளதாக காவல் துறை  உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார் . மட்டு. மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றிணையடுத்து சம்பவதினமான நேற்று செவ்வாய்கிழமை மாலை காவல் துறையினர்  முன்னெடுத்த சுற்றிவளைப்பின்போதே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் புதிய காத்தான்குடி பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய மொஹமட் மன்சூர் ...

Read More »

சுற்றிவளைப்புகளில் வெடி பொருட்கள் , இராணுவத்தினரின் ஆடைகள் மீட்பு!

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து நாட்டின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு , பாதுகாப்பு படையினர் நாடளாவிய ரீதியில் விசேட சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர். அதற்கமைய கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது வெடிப் பொருட்களுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். எரக்கன்டி பகுதியில் கடந்த மாதம் 27 ஆம் திகதி கிழக்கு கடற்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போது வெடிப் பொருட்களுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 16 வோட்டர் ஜெல் ஸ்ட்ரீக், 160 ...

Read More »

தற்கொலைதாரிகளின் பெயர் பட்டியல் !

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலை மேற்கொண்டவர்களின் பெயர் பட்டியலை  காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர். கடந்த 21 ஆம் திகதி 3 தேவாலயங்கள் உள்ளிட்ட 9 இடங்களில் தற்கொலை குண்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் குறித்த தற்கொலை குண்டுத் தாக்குதலை மேற்கொண்டவர்களின் பெயர் பட்டியலை தற்போது காவல் துறையினர்  வெளியிட்டுள்ளனர். குறித்த பெயர் பட்டியல்  ;- 01. சங்ரில்லா ஹோட்டல் ;- மொஹம்மட் காஸீம் மொஹம்மட் ஸஹ்ரான் 02. சங்ரில்லா ஹோட்டல் ;- மொஹம்மட் இப்ராஹிம் இல்ஹாம் அஹமட் 03.சினமன் கிரேன்ட் ஹோட்டல் ...

Read More »

பயங்கரவாதத்தை போதிப்பதாக சாகிர் நாயக்கின் Peace TV க்கு தடை!

பயங்கரவாதத்தை போதிப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டு சாகிர் நாயகத்தின் தொலைக்காட்சி அலைவரிசையான Peace TV ஐ இலங்கையில் தடைசெய்ய கேபிள் தொலைக்காட்சி அலைவரிசை வழங்கும் இரு நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த தொலைக்காட்சி அலைவரிசை இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் ஏற்கனவே தடைசெய்துள்ள நிலையில் நாட்டின் பாதுகாப்புக் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த தொலைக்காட்சி அலைவரிசை இலங்கையின் பிரதான கேபள் தொலைக்காட்சி அலைவரிசை வழங்குனர்களால் தடை செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவித்தல் எதுவும் இதுவரை வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read More »

தற்கொலைத் தாக்குதலில் காயமடைந்தோரை வைத்தியசாலையில் ஆசி வழங்கிய ரஞ்சித் ஆண்டகை!

இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று தற்கொலை படையால் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் உறவுகளை கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்களும், மதகுருக்களும் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர். மேலும், அங்கு சென்ற பேராயர், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல்களையும் இறையாசீர்வாதங்களையும் வழங்கியுள்ளார். மேலும் நாமும் தற்கொலை படை தாக்குதலில் படுகாயமடைந்த உறவுகள் மிகவிரைவில் சுகம் அடைந்து மீண்டும் வீடு திரும்ப வேண்டும் என தனிப்பட்ட ரீதியில் பிரார்த்திப்போம் எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

Read More »

நியூசிலாந்து தாக்குதலுக்கு முன்பே இலங்கை தற்கொலைப்படை தாக்குதல் திட்டமிடப்பட்டது!

நியூசிலாந்து தாக்குதலுக்கு முன்பே இலங்கை தற்கொலைப்படை தாக்குதல் திட்டமிடப்பட்டதாக நியூசிலாந்து தகவல் வெளியிட்டு உள்ளது. இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தின் வேதனை இன்னும் அனைவரது நெஞ்சையும் விட்டு விலகவில்லை. தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் என பல இடங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் தேசிய தவ்ஹீத் ஜமாத் தலைவரான ஜஹ்ரான் ஹாஷிம் என சந்தேகிக்கப்படுகிறது. இலங்கையில் நடந்த தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல் ...

Read More »

சென்னையில் கடவுச்சீட்டு இல்லாமல் தங்கியிருந்த இலங்கையர் கைது!

சென்னை பூந்தமல்லியில் கடவுச்சீட்டு இல்லாமல் தங்கியிருந்த இலங்கை நபர் கைது செய்யப்பட்டார் .சென்னை பூந்தமல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கடவுச்சீட்டு இல்லாமல் தங்கியிருந்த இலங்கை தானுகா ரோஷன் என்பவரை காவல் துறை கைது செய்துள்ளனர். கடந்த ஓராண்டாக தங்கியிருந்த தானுகா ரோஷன் மீது இலங்கையில் கொலை வழக்கு நிலுவையில் உள்ளது விசாரணையில் அம்பலமானது. கொலை வழக்கில் தொடர்புடைய இவர் பூந்தமல்லியில் சுதர்சன் என்ற பெயரில் தங்கி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Read More »

பிரியங்கா மோடியை எதிர்த்து போட்டியிடாதது ஏன்?

மோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிடாதது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி விளக்கம் அளித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி பாராளுமன்றத் தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி போட்டியிடலாம் என பரவலாக பேசப்பட்டது. கட்சி மேலிடம் கூறினால் போட்டியிட தயாராக இருப்பதாக பிரியங்காவும் கூறியிருந்தார். ஆனால், அவர் வேட்பாளராக அறிவிக்கப்படவில்லை. கடந்த முறை போட்டியிட்ட அஜய்  ராய், மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். வாரணாசியில் மோடி ஆதரவு அலை வீசுவதால், காங்கிரஸ் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என ...

Read More »

எனக்கு குண்டு துளைக்காத கார் வேண்டாம்!

தனக்கு குண்டு துளைக்காத கா​ர் வேண்டாமென, பேராயர் மல்கம் ரஞ்ஜித் ஆண்டகை தெரிவித்துள்ளார். தனது பாதுகாப்பைக் காட்டிலும் நாட்டினதும் நாட்டு மக்களினதும் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்துமாறு, ஆண்டகை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். நாட்டில் தற்போதுள்ள நிலையை கருத்திற்கொண்டு, பாதுகாப்பு நிமித்தம் வழங்கப்பட்ட வாகனம் குண்டு துளைக்காத வாகனம் என அறிந்துக் கொண்டதன் பின்னர் அதனை நிராகரித்ததாக பேராயர் பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை  தெரிவித்துள்ளார். அவரின் இல்லத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Read More »