தனக்கு குண்டு துளைக்காத கார் வேண்டாமென, பேராயர் மல்கம் ரஞ்ஜித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
தனது பாதுகாப்பைக் காட்டிலும் நாட்டினதும் நாட்டு மக்களினதும் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்துமாறு, ஆண்டகை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டில் தற்போதுள்ள நிலையை கருத்திற்கொண்டு, பாதுகாப்பு நிமித்தம் வழங்கப்பட்ட வாகனம் குண்டு துளைக்காத வாகனம் என அறிந்துக் கொண்டதன் பின்னர் அதனை நிராகரித்ததாக பேராயர் பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
அவரின் இல்லத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
Eelamurasu Australia Online News Portal