Tag Archives: ஆசிரியர்தெரிவு

கென்யா: வகுப்பறை இடிந்து விழுந்து 7 குழந்தைகள் உயிரிழப்பு!

கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியில் இன்றூ பள்ளியின் வகுப்பறை கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 7 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். கென்யா நாட்டின் தலைநகரான நைரோபியின் டகோரேட்டி புறநகர் பகுதியில் ஏராளமான ஏழை, எளிய மக்கள் வாழ்ந்து வருகின்றனர். வாழ்வாதாரத்துக்கு தேவையான அடிப்படை வசதிகளில் ஒன்றான வீடின்றி இவர்களில் பலர் கூடாரம் அமைத்து குடும்பம் நடத்துகின்றனர். இங்குள்ள குழந்தைகள் படிப்பதற்காக இயங்கிவரும் திறன் மேம்பாட்டு பள்ளியில் இன்று காலை வழக்கம்போல் வகுப்புகள் நடந்து கொண்டிருந்தன. அப்போது, ஒரு வகுப்பறை திடீரென்று இடிந்து விழுந்து தரைமட்டமானது. ...

Read More »

இறுதி அறிக்கையை நாளை கூடி ஆராயவுள்ள தெரிவுக்குழு!

கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதலை அடுத்து மே தாம் 22 ஆம் திகதி சபாநாயகர் கரு ஜெயசூரியவினால் நியமிக்கப்பட்ட விசேட தெரிவுக்குழு தமது விசாரணைகளை முடித்துள்ள நிலையில் நாளை தெரிவுக்குழு கூடி அவர்களின் இறுதி அறிக்கையை சமர்ப்பிப்பது குறித்து ஆராயவுள்ளனர்.   தெரிவுக்குழு தலைவர் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் நாளை நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. இதுவரை காலமாக தாம் மேற்கொண்ட விசாரணை நடவடிக்கைகள் மற்றும் பெற்றுக்கொண்ட சாட்சியங்கள் அனைத்தையும் கொண்டு இறுதி அறிக்கையை தயாரிக்கவும் அந்த ...

Read More »

எவ்வித அபிவிருத்தியும் காணாத கிராம மக்கள்!

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட கரியாளை நாகபடுவான் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் மீள் குடியேறி 10 வருடங்கள் ஆகியும் இதுவரை தாங்கள் தொடர்ச்சியாக அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி அவதியுறுவதாகவும் அரச அதிகாரிகள் தொடர்ச்சியாக பாராமுகமாக செயற்படுவதாகவும் மன்னார் மெசிடோ நிறுவனத்தினால் இன்று ஒழுங்கு செய்யப்பட்ட மக்கள் கருத்து கேட்கும் நிகழ்சி திட்டத்தில் விசனம் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி கரியாளை நாகபடுவான் கிராமத்தை சேர்ந்த மக்கள் யுத்த காலப் பகுதியில் இராணுவ நடவடிக்கை காரணமாக தங்களுடைய சொந்த கிராமத்தில் இருந்து  வெளியேற்றப்பட்டு தற்காலிகமாக பல்வேறு ...

Read More »

6 மாதங்களில் 1300 இற்கும் மேற்பட்ட குழந்தைகள் மீது பாலியல் துஷ்பிரயோகம்!

பாகிஸ்­தானில் கடந்த ஜன­வ­ரி­யி­லி­ருந்து ஜூன் மாதம் வரை  6 மாத காலத்தில் மட்டும் 1300 க்கும் மேற்­பட்ட குழந்­தைகள் மீது பாலியல் வன்­மு­றை வழக்­குகள் பதி­வா­கி­யுள்­ளதாக ஆய்­வ­றிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. பாகிஸ்தான் அரசு மீது  காஷ்­மீரைக் குறி­வைத்து நடத்­தப்­படும் அர­சியல் குறித்து அதிக கவனம் செலுத்­தி­வ­ரு­வ­தாக குற்­றச்­சாட்­டுகள் வைக்­கப்­படும் அதே­வே­ளையில் இன்­னொரு பக்கம் மக்­க­ளிடம் வறுமை, வேலை­யின்மை உள்­ளிட்ட ஆட்சி நிர்­வா­கத்தில் மிகப்­பெ­ரிய சரிவைச் சந்­தித்து வரு­வ­தாக குற்­றச்­சாட்­டுகள் சுமத்­தப்­பட்டு வரு­கின்­றன. மேலும் பாகிஸ்­தானில் குந்­தை­க­ளுக்கு பாது­காப்­பற்ற சூழ்­நி­லையே நில­வு­வ­தாக ஆய்வு அறிக்­கைகள் தெரி­விக்­கின்­றன. இது­கு­றித்து ...

Read More »

யாசிதி அகதிகள் : அவுஸ்திரேலியாவில் அவர்களது நிலை என்ன?

2014ம் ஆண்டு ஐ.எஸ் எனப்படும் கொடூர மதத்தீவிரவாத அமைப்பின் பிடியிலிருந்து தப்பித்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட அகதிகள் அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்துள்ளனர். மேற்கு ஈராக்கின் சின்ஜர் மலைப்பகுதியிலிருந்து  வெளியேறிய இந்த அகதிகள் இன்று புதியதொரு வாழ்வை அவுஸ்திரேலியாவில் தொடங்கியுள்ளனர். ஈராக்கின் சின்ஜர் மலையிலிருந்து வெளியேறிய லைலா தனது அனுபவத்தை பகிரும் போது, “ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் ஏராளமான ஆண்களையும் குழந்தைகளையும் கொன்றுள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ் வந்த பிறகு, நாங்கள் மலைக்கு சென்றோம். குடும்பத்துடன் மலையில் வசித்த நாங்கள் உணவின்றி தண்ணீரின்றி இருந்தோம். ஐந்து நாட்கள் நடந்தே சென்ற நிலையில் குர்தீஸ்தானை ...

Read More »

போருக்­குப்பின் ஆட்சி நடத்­திய அனை­வரும் வெட்கித் தலைகுனிய வேண்டும்!

வடக்கில் போரில் காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வி­னர்கள் போரா­டு­கின்­றனர்.  அதே­போல தென்­னி­லங்­கையில் போரை முன்­னின்று போராடி அங்­க­வீ­ன­மான இரா­ணு­வத்­தினர் ஓய்­வூ­தியம் வழங்­க­வில்லை என போரா­டு­கின்­றனர். அப்­ப­டி­யானால் இலங்­கையில் உள்­நாட்டு போர் முடி­வ­டைந்த பின்னர் ஆட்சி நடத்­திய அனை­வரும் வெட்க்கித் தலை குனிய வேண்டும். அவர்­களால் நாட்டு மக்கள் நிம்­ம­தி­ய­யாக வாழ முடி­யாது என ஜே.வி.பி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுனில் ஹந்­துன்­னெத்தி தெரி­வித்தார். யாழ்ப்­பா­ணத்தில் உள்ள ஜே.வி.பி கட்சி அலு­வ­ல­கத்தில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பி­லேயே அவர் இதனை தெரி­வித்தார். அவர் மேலும் தெரி­விக்­கையில், நாட்­டினை ஆண்டு ...

Read More »

பிள்ளையார் ஆலயத்தில் தேரருக்கு இறுதிக் கிரியை செய்ய முயற்சி!

முல்லைத்தீவு – பழைய செம்மலை, நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தை ஆக்கிரமித்து விகாரை அமைத்து தங்கியிருந்த கொலம்பகே மேதாலங்கார கீர்த்தி என்ற பௌத்த பிக்கு புற்றுநோய் காரணமாக நேற்று மரணமடைந்தார். இந்நிலையில் அவரின் இறுதி கிரியைகளை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் முன்னெடுக்க இராணுவம் மற்றும் கடற்படை ஏற்பாடுகளை செய்துவருகின்றது. இதனையடுத்து இதற்கு தடை கோரி ஆலய நிர்வாகத்தினர் முல்லைத்தீவு காவல் துறை  நிலையத்தில் நேற்று நள்ளிரவு முறைப்பாடு செய்துள்ளனர். தடை உத்தரவு பெறுவதற்கான நடவடிக்கைகள் காவல் துறையினர்  மேற்கொண்டுள்ளனர்.

Read More »

ஆறு வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்!

ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரையில் ஆறு வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். ஒரு சுயேச்சை வேட்பாளர் மற்றும் மஹிந்த அணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட மூவர் நேற்று(வெள்ளிக்கிழமை) கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். சுயேட்சை வேட்பாளராக அபரெக்கே புன்யானந்த தேரரும் அபே ஜனபல சார்பில் சமன் பெரேராவும் நேற்று கட்டுப்பணம் செலுத்தியிருந்தனர். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெடகொட, மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.அமரசிங்க மற்றும் இலங்கை சோசலிசக் கட்சி ...

Read More »

செல்லுபடியற்றது என அறிவித்த தேசியஅடையாள அட்டையை பயன்படுத்தினாரா கோத்தா?

இலங்கையின் ஆட்பதிவு திணைக்களம் செல்லுபடியற்றது என அறிவித்த தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தி பொதுஜனபெரமுனவின் ஜனாதிபதி வேட்;பாளர் கோத்தபாய ராஜபக்ச 2017 ,2018 மற்றும் 2019 இல்  வாக்காளர் பதிவில் தனது பெயரை பதிவு செய்தார் என  ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கோட்டை தேர்தல் தொகுதியில் உள்ள கங்கொடவில தெற்கு 526 ஏ கிராமசேவையாளர் பிரிவில்  கோத்தபாய ராஜபக்ச தன்னை பதிவு செய்துள்ளார் என தெரிவித்துள்ள ஆங்கில நாளிதழ் வாக்காளர் பதிவினை ஆராய்ந்தவேளை இது தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இலங்கையி;ன் ஆட்பதிவு திணைக்களம் ...

Read More »

மாற்றம் வந்து கொண்டிருக்கிறது!

நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மாற்றம் வந்து கொண்டிருக்கிறது என்று பருவநிலை மாற்றம் குறித்து தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் கிரெட்டா துன்பர்க் தெரிவித்துள்ளார். ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த கிரெட்டா துன்பர்க் என்ற சிறுமி பருவநிலை மாற்றத்திலிருந்து புவியைக் காக்க தனியாளாகப் போராடத் தொடங்கி உலகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை கிரெட்டா துன்பர்க் தலைமையில் உலகின் பல நாடுகளிலிருந்து பள்ளி மாணவர்களும், பணிக்குச் செல்பவர்களும் பருவநிலை மாற்றத்தால் உலகின் வெப்பநிலை உயர்ந்து வருவதை உலகத் தலைவர்களுக்கு உணர்த்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி சென்றனர். சுமார் ...

Read More »