முல்லைத்தீவு – பழைய செம்மலை, நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தை ஆக்கிரமித்து விகாரை அமைத்து தங்கியிருந்த கொலம்பகே மேதாலங்கார கீர்த்தி என்ற பௌத்த பிக்கு புற்றுநோய் காரணமாக நேற்று மரணமடைந்தார்.
இந்நிலையில் அவரின் இறுதி கிரியைகளை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் முன்னெடுக்க இராணுவம் மற்றும் கடற்படை ஏற்பாடுகளை செய்துவருகின்றது.
இதனையடுத்து இதற்கு தடை கோரி ஆலய நிர்வாகத்தினர் முல்லைத்தீவு காவல் துறை நிலையத்தில் நேற்று நள்ளிரவு முறைப்பாடு செய்துள்ளனர். தடை உத்தரவு பெறுவதற்கான நடவடிக்கைகள் காவல் துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
Eelamurasu Australia Online News Portal