6 மாதங்களில் 1300 இற்கும் மேற்பட்ட குழந்தைகள் மீது பாலியல் துஷ்பிரயோகம்!

பாகிஸ்­தானில் கடந்த ஜன­வ­ரி­யி­லி­ருந்து ஜூன் மாதம் வரை  6 மாத காலத்தில் மட்டும் 1300 க்கும் மேற்­பட்ட குழந்­தைகள் மீது பாலியல் வன்­மு­றை வழக்­குகள் பதி­வா­கி­யுள்­ளதாக ஆய்­வ­றிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பாகிஸ்தான் அரசு மீது  காஷ்­மீரைக் குறி­வைத்து நடத்­தப்­படும் அர­சியல் குறித்து அதிக கவனம் செலுத்­தி­வ­ரு­வ­தாக குற்­றச்­சாட்­டுகள் வைக்­கப்­படும் அதே­வே­ளையில் இன்­னொரு பக்கம் மக்­க­ளிடம் வறுமை, வேலை­யின்மை உள்­ளிட்ட ஆட்சி நிர்­வா­கத்தில் மிகப்­பெ­ரிய சரிவைச் சந்­தித்து வரு­வ­தாக குற்­றச்­சாட்­டுகள் சுமத்­தப்­பட்டு வரு­கின்­றன. மேலும் பாகிஸ்­தானில் குந்­தை­க­ளுக்கு பாது­காப்­பற்ற சூழ்­நி­லையே நில­வு­வ­தாக ஆய்வு அறிக்­கைகள் தெரி­விக்­கின்­றன.

இது­கு­றித்து ‘தி நியூஸ் இன்­டர்­நே­ஷனல்’   வெளி­யிட்­டுள்ள செய்­தியில் கூறி­யுள்­ள­தா­வது:”சாஹில் என்ற அரசு சாரா தொண்டு நிறு­வனம் தொகுத்து வெளி­யிட்­டுள்ள இந்த அறிக்­கை­யில், இந்தக் கால­ கட்­டத்தில் 729 சிறு­மி­களும் 575 சிறு­வர்­களும் ஒருவித பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­திற்கு ஆளா­கி­யுள்­ளனர்.

ஆய்­வ­றிக்­கை­யின்­படி பஞ்­சாபில் 652, சிந்­துவில் 458, பலு­சிஸ்­தானில் 32, கைபர் பக்­துன்க்­வாவில் 51 வழக்­குகள் பதி­வா­கி­யுள்­ளன. இது தவி­ர, 13 வய­துக்குக் குறைந்த குழந்­தைகள் மீதான பாலியல் துஷ்­பி­ர­யோ­கங்கள் இஸ்­லா­மா­பாத்தில் 90, பாகிஸ்தான் ஆக்­கி­ர­மிப்­பு-­ காஷ்­மீரில் 18 மற்றும் கில்­கிட்-­பால்­டிஸ்­தானில் 3 என குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.லாகூரில் மட்டும் 50 குழந்­தைகள் பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­திற்கு ஆளா­னார்கள் என்று அறிக்கை மேலும் கூறி­யுள்­ளது.

இந்த ஆய்­வின்­மூலம் மத­ரஸா பள்­ளிக்­கூ­டங்­களில் 12 சிறு­மிகள் மற்றும் சிறு­வர்கள் பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­திற்கு ஆளா­னதும் தெரி­ய­வந்­தது. கசூரின் சுனியன் வட்­டா­ரத்தில் இருந்து காணாமல் போன நான்கு குழந்­தை­களில் மூன்று பேரின் உயி­ரி­ழந்த உடல்கள் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை கண்­டு­பி­டிக்­கப்­பட்­டதை அடுத்து இந்த அறிக்கை வந்­துள்­ளது.

பாதிக்­கப்­பட்ட மூன்று பேரும் அடக்கம் செய்­யப்­ப­டு­வ­தற்கு முன்பு பாலியல் பலாத்­காரம் செய்­யப்­பட்­ட­தா­க ­பொ­லிஸார்  தெரி­வித்­தனர். காணாமல் போன நான்கு குழந்­தை­களில் ஒரு­வரின் சடலம் மீட்­கப்­பட்­ட­தா­கவும்  மற்ற இரு­வரின் உயி­ரி­ழந்த உடல்கள் மட்டுமே கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­தா­கவும் அவை டி.என்.ஏ பரிசோதனைக்கு அனுப்பப்படவுள்ளன  என்றும் கசூர் பொலிஸார் தெரிவித்தனர்.

வியாழக் கிழமை இரவு அதே நகரத்திலிருந்து மற்றொரு குழந்தை கடத்தப்பட்டது”. என சாஹில் ஆய்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.