கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதலை அடுத்து மே தாம் 22 ஆம் திகதி சபாநாயகர் கரு ஜெயசூரியவினால் நியமிக்கப்பட்ட விசேட தெரிவுக்குழு தமது விசாரணைகளை முடித்துள்ள நிலையில் நாளை தெரிவுக்குழு கூடி அவர்களின் இறுதி அறிக்கையை சமர்ப்பிப்பது குறித்து ஆராயவுள்ளனர்.
தெரிவுக்குழு தலைவர் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் நாளை நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.
இதுவரை காலமாக தாம் மேற்கொண்ட விசாரணை நடவடிக்கைகள் மற்றும் பெற்றுக்கொண்ட சாட்சியங்கள் அனைத்தையும் கொண்டு இறுதி அறிக்கையை தயாரிக்கவும் அந்த அறிக்கையை அடுத்த மாதம் (ஒக்டோபர் ) முதல் வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்குழு உறுப்பினர் ஆனந்த குமாரசிறி உறுதிப்படுத்தினார்.
Eelamurasu Australia Online News Portal