Tag Archives: ஆசிரியர்தெரிவு

திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் காலமானார்!

திமுக பொதுச்செயலாளரும், முதுபெரும் திராவிட இயக்கத்தலைவரும், பேராசிரியர் என அழைக்கப்பட்ட க.அன்பழகன் காலமானார். திமுகவின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் கடந்த சில ஆண்டுகளாக வயோதிகம் காரணமாக உடல் நலிவுற்று தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கி ஓய்வில் இருந்தார். கடந்த சில மாதங்களாக அவரது உடல் நிலை மோசமான நிலையை அடைந்தது. இந்நிலையில் அவரது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டதை அடுத்து கடந்த மாதம் 24-ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது உடல் நிலை கடந்த சில நாட்களாக மோசமான நிலையை அடைந்தது. இந்நிலையில் ...

Read More »

சிட்னியில் மழை பெய்ததால்…….! எங்கள் நிலை வேறு யாருக்கும் வரக்கூடாது!

சிட்னியில் மழை பெய்ததால் விளையாடாமலேயே வெளியேற்றப்பட்டதால் இங்கிலாந்து அணி கப்டன் ஹீதர் நைட் கடும் வேதனை அடைந்துள்ளார். ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ‘ஏ’ பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளும் ‘பி’ பிரிவில் தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறின. நேற்று இரண்டு அரையிறுதி ஆட்டங்களும் சிட்னி மைதானத்தில் நடைபெறும் வகையில் அட்டவணை தயார் செய்யப்பட்டது. முதல் ஆட்டத்தில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோத இருந்தன. ஆனால் மழை பெய்ததால் போட்டியை நடத்த முடியாத நிலை ...

Read More »

விமான நிலையத்துக்கு வருவோர்க்கு முக்கிய அறிவித்தல்!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு பயணிகளுடன் வரும் நபர்களுக்கு  இன்று (06) காலை முதல் அனுமதி வழங்கப்படும். அதன்படி, விமான பயணிகள் உள்நுழையும் மற்றும் வெளியேறும்  வரவேற்பு பகுதிக்கு பயணியுடன் ஒருவர் செல்ல முடியும். இதற்கான அனுமதிசீட்டினை 30 ரூபாய்க்கு கொள்வனவு செய்ய முடியும். அதனை வழங்கும் பகுதி இன்று  காலை திறக்கப்படும். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பயணிகளுடன் ஏனையோர் வருவது தடைசெய்யப்பட்டிருந்தது.

Read More »

“கப்டன் பண்டிதர்” குடும்பம் நிர்க்கதியில்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதியான “கப்டன்” பண்டிதரின் தாயார் சின்னத்துரை மகேஸ்வரி மற்றும் சகோதரன் ஆகியோர் தாம் குடியிருந்த வீட்டிலிருந்து நீதிமன்ற உத்தரவையடுத்து நேற்றைய (05) தினம் வெளியேற்றப்பட்டுள்ளனர். புலிகளின் முன்னாள் நிதி மற்றும் ஆயுதப் பராமரிப்பு பொறுப்பாளருமான கப்டன் பண்டிதர் 1985ம் ஆண்டு இராணுவ நடவடிக்கையின்போது வீரச்சாவடைந்து இருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பண்டிதரின் தாயாரும் இரண்டு சகோதரர்களும் யாழ்ப்பாணம் – கம்பர்மலையில் வசித்து வந்த நிலையில் இவர்களில் ஒரு சகோதரன் 2006ம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டார். அதன்பின்னரும் கம்பர்மலையில் வசித்து வந்த நிலையில், ...

Read More »

படுக்கை அறைகளில் – கழிவறைகளில் கொரோனா வைரஸ் – சிங்கப்பூர் ஆய்வில் தெரிவிப்பு

படுக்கை அறைகளில் – கழிவறைகளில் கொரோனா வைரஸ் அதிகமாக காணப்படுகின்றது- சிங்கப்பூர் ஆய்வில் தெரிவிப்பு கொரோனாவைரஸ் படுக்கையறைகளிலும் கழிவறைகளிலும் அதிகமாக காணப்படுவது சிங்கப்பூர் ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. தரைகளையும் கழிவறைகளையும் சுத்தம் செய்வதற்கு வழமையாக பயன்படுத்தும் தொற்றுநோய் நீக்கிகள் மூலம் நாளொன்றிற்கு இரண்டு தடவை சுத்தம் செய்வதன் மூலம் வைரஸ்களை அழிக்கலாம் எனவும் சிங்கப்பூர் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க மருத்துவ சங்கத்தின் சஞ்சிகையில் இந்த ஆய்வு வெளியாகியுள்ளது. சீனாவில் நோயாளிகள் சுகாதார பணியாளர்கள் மருத்துவர்கள் மூலம் நோய் கிருமிகள் அதிகளவில் பரவியதை தொடர்ந்து இது ...

Read More »

கொரோனா வைரஸ் – பல மில்லியன் மக்கள் பாதிக்கப்படலாம் என அவுஸ்திரேலியா அச்சம்!

கொரோனா வைரஸ் காரணமாக மில்லியன் கணக்கானவர்கள் பாதிக்கப்படலாம் என அவுஸ்திரேலியா எச்சரிக்கை விடுத்துள்ளது. அவுஸ்திரேலியாவின் தலைமை மருத்துவ அதிகாரி பிரென்டன் மேர்பி இன்று செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்துள்ளார். அடுத்த பல வாரங்களில் மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்படலாம் என்ற சூழ்நிலையை அடிப்படையாக வைத்து அரசாங்கம் அவசரகால திட்டங்களை உருவாக்குகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரான் நிலை குறித்து அவுஸ்திரேலியா கவலையடைந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார் . இதேவேளை அவுஸ்திரேலிய மக்களை வழமை போன்று நடந்துகொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். தற்போது நீங்கள் கடைக்கு செல்லும்போது முகக்கவசத்தை ...

Read More »

ஒரு வாரமாக முகத்தை தொடாத ட்ரம்ப்!

கரோனா வைரஸ் அச்சம் காரணமாக தனது முகத்தை ஒருவாரமாக தொடவில்லை என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை 11 பேர் பலியான நிலையில் கலிப்போர்னியா போன்ற நகரங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கோவிட் -19 (கரோனா வைரஸ்) காய்ச்சலால் அமெரிக்கா 100 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் அமெரிக்க சுகாதாரத் துறை தீவிரமாக இறங்கி உள்ளது. கரோனா வைரஸ் தீவிரமாக இருப்பதால் அதன் பரவலை தடுக்கும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பான ஆலோசனை கூட்டமும் வெள்ளை மாளிகையில் நடைபெற்றது. இதில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெள்ளை ...

Read More »

அவுஸ்திரேலிய இளம் பெண்ணின் தோளில் இருந்த மச்சத்தில் ஏற்பட்ட மாற்றம்!

அவுஸ்திரேலியாவை சேர்ந்த இளம்பெண் உடலில் மச்சம் போன்ற மருவு ஏற்பட்ட மாற்றத்தை அவர் சாதாரணமாக எடுத்து கொண்ட நிலையில் ஸ்கேன் பரிசோனையில் அது தோல் புற்றுநோய் என்பது தெரியவந்ததால், அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். Courtney Mangan (33) என்ற பெண்ணுக்கு தோள் பகுதியில் மச்சம் போன்ற மருவு சிறுவயதிலிருந்தே இருந்தது. அவருக்கு 30 வயதான போது அந்த மருவில் மாற்றம் ஏற்படுவதை Courtney உணர்ந்தாலும் அதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. ஆனால் பின்னர் அரிப்பும் வலியும் அந்த பகுதியை சுற்றி ஏற்பட்டதால் மருத்துவமனையை நாடினார். அங்கு ...

Read More »

போப் பிரான்சிசுக்கு கொரோனா பாதிப்பு இல்லை!

உடல்நலக்குறைவால் அவதியுற்று வரும் போப் பிரான்சிசுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என மருத்துவ அறிக்கை வெளியாகியுள்ளது. சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது 70-க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் 3,125 பேர் பலியாகி உள்ளனர். மேலும், 90 ஆயிரத்து 931 பேர் வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஐரோப்பிய நாடான இத்தாலியிலும் கொரோனாவுக்கு 52 பேர் உயிரிழந்துள்ளனர். 2 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பரவியிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், இத்தாலியில் உள்ள ...

Read More »

கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பது எப்படி?

உலகை அச்சுறுத்தும் உயிர்க்கொல்லி நோயான கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பது எப்படி? என்பது குறித்து ஜெர்மனியை சேர்ந்த சீமென்ஸ் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகை அச்சுறுத்தி வருகிறது. 70-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ள இந்த வைரசால் இதுவரை 3,100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் தாக்குதலால் பலியானவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதே போல வைரசால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையும் தினந்தோறும் அதிகரித்து வருவது பீதியை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ...

Read More »