அவுஸ்திரேலிய இளம் பெண்ணின் தோளில் இருந்த மச்சத்தில் ஏற்பட்ட மாற்றம்!

அவுஸ்திரேலியாவை சேர்ந்த இளம்பெண் உடலில் மச்சம் போன்ற மருவு ஏற்பட்ட மாற்றத்தை அவர் சாதாரணமாக எடுத்து கொண்ட நிலையில் ஸ்கேன் பரிசோனையில் அது தோல் புற்றுநோய் என்பது தெரியவந்ததால், அவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

Courtney Mangan (33) என்ற பெண்ணுக்கு தோள் பகுதியில் மச்சம் போன்ற மருவு சிறுவயதிலிருந்தே இருந்தது. அவருக்கு 30 வயதான போது அந்த மருவில் மாற்றம் ஏற்படுவதை Courtney உணர்ந்தாலும் அதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. ஆனால் பின்னர் அரிப்பும் வலியும் அந்த பகுதியை சுற்றி ஏற்பட்டதால் மருத்துவமனையை நாடினார். அங்கு Courtney-வுக்கு ஸ்கேன் பரிசோதனை செய்த போது மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

size: 1em; காரணம் அவருக்கு தோல் புற்றுநோய் ஏற்பட்டிருப்பதும், அந்த மருவு மூலம் அது ஏற்பட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து பல்வேறு விதமான சிகிச்சைகளை Courtney எடுத்து வருகிறார். இது குறித்து Courtney கூறுகையில், தோல் பரிசோதனை அடிக்கடி எல்லோரும் செய்து கொள்ளுங்கள், இது தான் நான் கற்ற பாடம்.

புற்றுநோய் மற்றும் அதற்கான சிகிச்சை காரணமாக நான் மலட்டுத்தன்மையின் விளிம்பில் இருப்பதாகக் மருத்துவர்கள் கூறினார்கள்.

ஆனால் எனக்கு இப்போது திருமணம் ஆகாததால் நான் இது குறித்து கவலைப்படவில்லை. எதிர்காலத்தில் குழந்தைகளைப் பெறுவதற்கான வாய்ப்பு எனக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன் என கூறியுள்ளார்.