Tag Archives: ஆசிரியர்தெரிவு

விக்டோரியாவில் காணாமல்போன தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஆபத்தான நிலையில் மீட்பு!

அவுஸ்திரேலியாவில் விக்டோரியாவின் மேற்குப் பகுதியிலுள்ள Colac-Lavers Hill வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது காணாமல்போன இலங்கையைச் சேர்ந்த தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Boxing day அன்று Delahey பகுதியைச் சேர்ந்த 30 வயதான இந்நபரும் அவரது நண்பரும் வெவ்வேறு மோட்டார் சைக்கிள்களில் Colac-Lavers Hill வீதியால் சென்றுகொண்டிருந்ததாகவும் இரவு 8 மணியளவில் இருவரும் வெவ்வேறாக பிரிந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் நீண்டநேரமாகியும் தனது நண்பர் குறிப்பிட்ட இடமொன்றிற்கு வராததையடுத்து அச்சமடைந்த சக நண்பர் அவசர சேவைகள் பிரிவுக்கு அறிவித்துள்ளார். ...

Read More »

துபாயில் அடுத்த மாதம் இலக்கிய திருவிழா- மலாலா பங்கேற்கிறார்

துபாயில் அடுத்த மாதம் நடைபெறும் இலக்கிய திருவிழாவில் இளம் வயதில் நோபல் பரிசு பெற்ற மலாலா பங்கேற்று பேசுகிறார். துபாய் அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மலாலா யூசப்சையி (வயது 23) கடந்த 1997-ம் ஆண்டு ஜூலை மாதம் 12-ந் தேதி பாகிஸ்தானில் உள்ள மிங்கோரா என்ற ஊரில் பிறந்தவர். அந்த ஊரில் தலிபான் பயங்கரவாதிகளால் பெண்கள் பள்ளிக்கூடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. இவர் தனது 12 வயதில் கடந்த 2012-ம் ஆண்டு அக்டோபர் 9-ந் தேதி ஒரு பெண்ணாக பள்ளிக்கு சென்றதால் ...

Read More »

2021 ஒக்டோபருக்குள் கொரோனா மருந்தினை வழங்கும் நடவடிக்கைகள் பூர்த்தியாகிவிடும்-அவுஸ்திரேலியா

அடுத்தவருடம் ஒக்டோபர் மாதத்திற்குள் கொரோனா வைரஸ் மருந்தினை விநியோகிக்கும் நடவடிக்கைகள் பூர்த்தியாகிவிடும் என அவுஸ்திரேலிய சுகாதார அமைச்சர் கிரேக் ஹன்ட் தெரிவித்துள்ளார். சுயவிருப்பத்தின் அடிப்படையிலேயே மருந்து வழங்கப்படும் என அவர் வலியுறுத்தியுள்ளார். அவுஸ்திரேலியா கொரோனா வைரசிற்கான மருந்துகளிற்கு அனுமதிவழங்கும் நடைமுறையை நோக்கி உரிய வேகத்தில் பயணித்துக்கொண்டிருக்கின்றது என சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். ஒக்டோபர் மாத முடிவிற்குள் அவுஸ்திரேலியாவில் கொரோனா மருந்தினை வழங்கும் நடவடிக்கைகள் பூர்த்தியாகிவிடும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலவசமாக, சுயவிருப்பத்தின் அடிப்படையில் அனைவருக்கும் கொரோனா மருந்து வழங்கப்படும் என ...

Read More »

இலங்கையில் மிகவும் வயது முதிர்ந்த பெண் ஒருவர் மரணம்

இலங்கையில் மிகவும் வயது முதிர்ந்த மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார். களுத்துறை-தொடாங்கொடை பகுதியைச் சேர்ந்தவர் 117 வயதான ‘வேலு பாப்பானி அம்மா’ என்று அழைக்கப்படும் மூதாட்டி ஒருவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். வேலு பாப்பானி அம்மா 1903 ஆம் ஆண்டு மே 03 ஆம் திகதி, களுத்துறை மாவட்டம், தொடங்கொடை பிரதேச செயலக பிரிவில் உள்ள நேஹின்ன கிராமத்தில் பிறந்தார். முதியோருக்கு அரசாங்கம் வழங்கும் அடையாள அட்டையின் மூலம் அவரது வயது உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. குறித்த மூதாட்டிக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் முதலாம் ...

Read More »

மாகாண சபை தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது

தற்போது நிலவும் கொவிட்-19 கொரோனா தொ ற்று நிலைமையைக் கருத்தில் கொண்டு மாகாண சபை தேர்தலை ஒத்திவைப்பது என அரச கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர் இருப்பினும், நாட்டுக்கு மாகாண சபை அமைப்பு தேவை என்று அரச கட்சியின் பாராளுமன்ற உறுப் பினர்கள் மற்றும் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன், மாகாண சபை தேர்தல் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து ஜனாதிபதி தலைமையில் அரச கட்சித் தலைவர்கள் கூட்டம் நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இதேவேளை மாகாண ...

Read More »

திருக்கேதீஸ்வர ஆலய காணி ‘மாதோட்ட’ விகாரையின் பிக்குவால் அபகரிப்பு

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு சொந்தமான காணியை ‘மாதோட்ட’ விகாரையின் பிக்கு அபகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் வன்னி மாவட்டநாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இன்று செவ்வாய்க் கிழமை காலை குறித்த பகுதிக்குச் சென்று பார்வையிட்டுள்ளார். மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு சொந்தமான 5 ஏக்கர் காணி சைவ மங்கையர் கழகத்துக்கு 99 வருட குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டது. குறித்த காணியானது நீண்ட காலமாக திருக்கேதீச்சர ஆலயத்தின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளது.இக் காணியானது நாட்டில் ஏற்பட்ட இடப் பெயர்வு காரணமாக இராணுவம் அவ் இடத்தில் நிலை ...

Read More »

வுகானின் கொரோனா வைரஸ் தெரியப்படுத்திய பத்திரிகையாளருக்கு சிறைத்தண்டனை

கடந்த வருடம் வுகானில் கொரோனா வைரஸ் மிகப் பெரும் பாதிப்பை  ஏற்படுத்திக்கொண்டிருந்த நகரின் நிலை குறித்த செய்திகளை வெளியிட்ட ஒருவருக்கு citizen-journalist    சீனா நான்கு வருட சிறைத் தண்டனையை வழங்கியுள்ளது. ஜாங் ஜான்  என்ற 37 வயது பெண்ணிற்கே  சீனா சிறைத்தண்டனையை வழங்கியுள்ளது. அவர் பிரச்சினைகளை உருவாக்கினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே சீனா இந்த தண்டனையை வழங்கியுள்ளது. வுகானில் அவ்வேளை காணப்பட்ட நிலவரத்தை குறிப்பாக மருத்துவமனைகளில் காணப்பட்ட நிலவரத்தினை உடனடியாக நேரடியாக வெளிஉலகிற்கு தெரிவித்த சிலரில் ஜாங் ஜான் ஒருவர் என்பதுடன்  இது தொடர்பில் ...

Read More »

உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு எதிராக பௌத்தமதகுருமார் ஆர்ப்பாட்டம்

கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பௌத்தமதகுருமார் பலர் இன்று ஜனாதிபதி செயலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர். இது தொடர்பில் அவர்கள் மனுவொன்றையும் சுகாதார அமைச்சரிடம் கையளித்தனர். சிங்களராவய உட்பட பல அமைப்புகளை சேர்ந்த பௌத்தமதகுருமார் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பௌத்தபிக்குகளுக்கும் ஜனாதிபதி செயலகத்தி;ன் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள பொலிஸாரிற்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து பதற்றமானநிலையேற்பட்டது. இதனை தொடர்ந்து அந்த பகுதிக்கு சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி வந்ததை தொடர்ந்து கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் ...

Read More »

சம்மந்தன் மக்களை மீண்டும் ஏமாற்ற ஆரம்பித்துள்ளார்

மாகாண சபைக்கான தேர்தல் நெருங்குவதால் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தற்போதும் சமஷ்டித் தீர்வுதான் எனக் கூறி; மீண்டும் தமிழ் மக்களை ஏமாற்ற ஆரம்பித்துவிட்டார் என தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்தார். தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சி செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி இன்று திங்கட்கிழமை (28) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது சமஷ்டி என்ற பதம் சிங்களத் தலைமைகளுக்கும், சிங்கள மக்களுக்கும் பிடிக்காத ஒரு சொல்லாகி விட்டது. ...

Read More »

அவுஸ்திரேலியாவில் தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஆற்றில் மூழ்கிப் பலி

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா- நியூ சவுத் வேல்ஸ் மாநில எல்லையிலுள்ள Liparoo அருகே தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் ஆற்றில் மூழ்கிப் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது. மட்டக்களப்பு பட்டிருப்பு தொகுதி பழுகாமத்தைச் சேர்ந்த சோ.திசாந்தன் என்ற 28 வயது இளைஞரே இவ்வாறு பலியானவர் என அவரது நண்பர்கள் தெரிவித்தனர். புகலிடம்கோரி அவுஸ்திரேலியா வந்த திசாந்தன் குயின்ஸ்லாந்து, சிட்னி போன்ற இடங்களில் வசித்த பின்னர் அண்மையில் விக்டோரியாவில் குடியேறியதாக குறிப்பிடப்படுகிறது. நத்தார்  தினத்தன்று தனது நண்பர்களுடன் Murray ஆற்றுக்குச் சென்றிருந்த இவர் அங்கு நீச்சலில் ஈடுபட்டபோது காணாமல்போனதாகவும், பாரிய தேடுதல் ...

Read More »