வுகானின் கொரோனா வைரஸ் தெரியப்படுத்திய பத்திரிகையாளருக்கு சிறைத்தண்டனை

கடந்த வருடம் வுகானில் கொரோனா வைரஸ் மிகப் பெரும் பாதிப்பை  ஏற்படுத்திக்கொண்டிருந்த நகரின் நிலை குறித்த செய்திகளை வெளியிட்ட ஒருவருக்கு citizen-journalist    சீனா நான்கு வருட சிறைத் தண்டனையை வழங்கியுள்ளது.

ஜாங் ஜான்  என்ற 37 வயது பெண்ணிற்கே  சீனா சிறைத்தண்டனையை வழங்கியுள்ளது.

அவர் பிரச்சினைகளை உருவாக்கினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே சீனா இந்த தண்டனையை வழங்கியுள்ளது.
வுகானில் அவ்வேளை காணப்பட்ட நிலவரத்தை குறிப்பாக மருத்துவமனைகளில் காணப்பட்ட நிலவரத்தினை உடனடியாக நேரடியாக வெளிஉலகிற்கு தெரிவித்த சிலரில் ஜாங் ஜான் ஒருவர் என்பதுடன்  இது தொடர்பில் தண்டனை விதிக்கப்பட்ட முதல் நபர் அவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நாங்கள் மேல்முறையீடு செய்வோம் என தெரிவித்துள்ள தண்டனை விதிக்கப்பட்டவரின் சட்டத்தரணி  தனது பேச்சு சுதந்திரத்தினை பயன்படுத்தியமைக்காகவே தான் தண்டிக்கப்பட்டதாக கருதுகின்றார் என  குறிப்பிட்டுள்ளர்ர்.
வுகானில் கொரோனா வைரஸ் தீவிரமடையத் தொடங்கியதை தொடர்ந்து அரசாங்கத்தின் நடவடிக்கைகளை விமர்சிப்பதற்கு கடுமையாக தணிக்கை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மருத்துவர்கள் தகவல்களை அம்பலப்படுத்துபவர்கள் கடுமையாக எச்சரிக்கப்பட்டனர்.