ஹாங்காங்கில் ‘நைப் பிகைன்ட் பேக்’ என்ற தலைப்பில் வரையப்பட்ட சிறுமியின் ஓவியம் ரூ.177 கோடிக்கு ஏலம் போனது. ஹாங்காங்கில் ஓவியங்கள் ஏல விற்பனை நடைபெற்றது. இதில் ஜப்பானை சேர்ந்த பிரபல ஓவியக்கலைஞர் யோஷிடோமா நாரா வரைந்த ஓவியமும் இடம்பெற்றது. ‘நைப் பிகைன்ட் பேக்’ என்ற தலைப்பில் வரையப்பட்ட சிறுமியின் ஓவியம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. பெரிய கண்களுடன் முறைத்து பார்ப்பது போல நிற்கும் சிறுமியின் ஒரு கை மட்டுமே வெளியே தெரியும். மற்றொரு கை முதுகுபுறமாக மறைத்து வைத்திருப்பது போல ஓவியம் வரையப்பட்டிருக்கும். “அந்தச் ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
ராவணனை வணங்கும் வினோத கிராமம்!
சீதையை கடத்திச் சென்று அசோகவனத்தில் சிறைவைத்த இலங்கை மன்னன் ராவணனை வணங்கும் வினோத கிராமம் ஒன்று உள்ளது. அதைப்பற்றி தெரிந்து கொள்வோம். சீதையை கடத்திச் சென்று அசோகவனத்தில் சிறைவைத்த இலங்கை மன்னன் ராவணனை இந்து கடவுள் ராமன் வெற்றி கொண்டதை, நன்மை தீமையை வென்றதன் அடையாளமாக கருதி தசரா விழா இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. ஆனால், மகாராஷ்டிரா மாநிலம் அகோலா மாவட்டத்தில் உள்ள சங்கோலா கிராம மக்கள் ராமனைப் போன்று ராவணனையும் வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இது குறித்து அந்த பகுதியில் உள்ள சாமியார் ஒருவர் ...
Read More »சுயாதீனமான ஜனாதிபதியாகவே கடமையாற்றுவேன்!
தேர்தலில் வெற்றி பெற்று தான் ஜனாதிபதியாகத் தெரிவானால் எந்த கட்சியையும் சாராது சுயாதீனமான ஜனாதிபதியாகவே கடமையாற்றுவேன் என்று தேசிய மக்கள் இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்தார். கொழும்பு – மன்றக்கல்லூரியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நான் ஓய்வு பெற்ற போது நாட்டுக்காக சேவை செய்திருக்கின்றேன் என்ற மனதிருப்தியுடன் ஓய்வு பெற்றிருந்தாலும் , அதன் பின்னர் நாட்டின் நிலைவரத்தை உணர்ந்து இன்னும் இந்நாட்டு செய்ய வேண்டிய சேவைகள் இருக்கிறது ...
Read More »மாதகல் கடலில் கைப்பற்றப்பட்ட தங்கத்தில் ஒரு தொகையை கடற்படைக்கு…..!
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் ஆலோசனை மற்றும் கோரிக்கைக்கு அமைய, அனுராதபுரம் ‘ சந்த ஹிரு சேய’ நினைவுத் தூபியில் வைப்பதற்காக தங்கத்தினாலான சமாதி நிலை புத்தர் சிலையை அமைக்க, யாழ். மாதகல் கடலில் கைப்பற்றப்பட்ட ஒரு தொகை தங்கத்தில் 8 கிலோவை கடற்படைக்கு வழங்கியதக கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் விஷேட விசாரணைகளில் மேலும் பல விடயங்கள் அம்பலத்துக்கு வந்துள்ளன. இந்த 8 கிலோ தங்கத்தை பயன்படுத்தி ஒரு புத்தர் சிலையும், இதற்கு மேலதிகமாக இலங்கை வங்கி வழங்கியுள்ளதாக ...
Read More »3 ஆய்வாளர்களுக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு !
ஸ்டாக்ஹோம் உடல் செல், ஆக்ஸிஜன் குறித்து ஆய்வு மேற்கொண்ட அமெரிக்காவைச் சேர்ந்த 2 ஆய்வாளர்களுக்கும், இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு ஆய்வாளருக்கும் என மொத்தம் 3 பேருக்கும் சேர்த்து 2019-ம் ஆண்டு, மருத்துவத்துக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவம், பொருளாதாரம், இலக்கியம், அமைதி, இயற்பியல் உள்ளிட்ட துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு கடந்த 1901-ம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அந்த வகையில் 2019-ம் ஆண்டு, மருத்துவத்துக்கான நோபல் பரிசு 3 ஆய்வாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டீவனில் உள்ள ஸ்டாக்ஹோமில் நோபல் ...
Read More »விண்வெளியில் தனியாக நடக்கப்போகும் வீராங்கனைகள்!
சர்வதேச விண்வெளி மையத்தில் இருக்கும் கிரிஸ்டினா மற்றும் ஜெசிகா ஆகிய 2 வீராங்கனைகள் வருகிற 21-ந்திகதி வீரர்கள் துணையின்றி விண்வெளியில் தனியாக நடக்க போவதாக நாசா அறிவித்துள்ளது. அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்துள்ளன. விண்வெளி வீரர்கள் அங்கு தங்கியிருந்து ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இவர்கள் பராமரிப்பு பணிகள் மற்றும் புதிய கட்டுமானப்பணிகளுக்காக சில மணி நேரம் விண்வெளி ஆய்வு மையத்தை விட்டு வெளியே சென்று, விண்வெளியில் நடந்து வேலை செய்வது வழக்கம். ...
Read More »வேட்புமனுத் தாக்கல் செய்யும் நடவடிக்கை ஆரம்பம்!
2019 ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல்ளை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கையானது தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் தற்போது ஆரம்பமாகியுள்ளது. அதன்படி காலை 9.00 மணிக்கு வேட்பு மனுக்களை ஏற்கும் நடவடிக்கைகள் இராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் திணைக்களத்தில் ஆரம்பமாகியுள்ள நிலையில், இன்று 11.30 மணிவரையில் வேட்பு மனுக்கள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளன. அத்துடன் வேட்புமனு தொடர்பில் எதிர்ப்புத் தெரிவிப்பதற்கும் காலை 9.00 மணியிலிருந்து 11.30 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு ...
Read More »ஆஸ்திரேலியாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ள விசாக்கள்!
ஆஸ்திரேலியாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ள பிராந்தியா விசாக்கள், வெளிநாட்டினர் ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக வசிப்பதற்கான வழியை ஏற்படுத்துகின்றது. அதே சமயம், பிராந்திய விசாக்கள் மூலம் PR எனப்படும் நிரந்தர வதிவிடம் கோரி விண்ணப்பிக்கும் பொழுது, சம்பந்தப்பட்ட நபர் பிராந்திய பகுதியில் மூன்றாண்டுகள் வாழ்ந்ததை நிரூபிக்க வேண்டும் என ஆஸ்திரேலிய குடியேற்றத்துறை அமைச்சர் டேவிட் கோலிமன் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் பிரதான நகருங்களுக்கு வெளியே உள்ளவை பிராந்திய பகுதிகளாக பார்க்கப்படுகின்றது. இவ்வாறான பகுதிகளில் பணியாற்ற ஆட்கள் பற்றாக்குறை நிலவி வருவதால், வரும் நவம்பர் மாதம் திறன்வாய்ந்த குடியேறிகளுக்கான 2 ...
Read More »கொழும்பில் இளைஞர்கள் கடத்தப்பட்ட விவகாரம்- முக்கிய சந்தேகநபரிற்கு பதவி உயர்வு!
கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டட சம்பவத்தின் முக்கிய சூத்திரதாரி என கருதப்படும் முன்னாள் கடற்படை பேச்சாளர் டீகேபி தசநாயக்கவிற்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவி உயர்வு வழங்கியுள்ளமை குறித்து காணாமல்போனோர் குறித்த அலுவலகம் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது. 2008-2009 இல் கடற்படையை சேர்ந்த குழுவொன்றினால் கொழும்பில் இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவத்தில் முக்கிய சந்தேகநபர் என கருதப்படும் டீகேபி தசநாயக்காவிற்கே சிறிசேன பதவி உயர்வு வழங்கியுள்ளார். குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட அதிகாரிக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டமை குறித்த தனது ஆட்சேபனையை தெரிவிக்கும் கடிதமொன்றை இலங்கை ஜனாதிபதிக்கு ...
Read More »பொது வேட்பாளருக்கான கோரிக்கை..!
ஜனாதிபதி தேர்தலின் பிரதான வேட்பாளர்களாகக் கருதப்படுகின்ற கோத்தபாய மற்றும் சஜித் பிரேமதாச ஆகிய இருவருமே தமிழ்மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதிலான தமது நிலைப்பாடு குறித்து எழுத்தில் எந்த விதமான உத்தரவாதத்தையும் தர முடியாது என கூறியுள்ளனர். அவர்கள் சார்ந்த பிரதான அரசியல் கட்சிகளாகிய பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன கூட இந்த விடயத்தில் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை. பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ள தமிழ்மக்கள் தொடர்பில் உறுதியான ஓர் அரசியல் கொள்கையை அல்லது நிலைப்பாட்டை வேட்பாளர்களும் கொண்டிருக்கவில்லை. அவர்கள் சார்ந்த ...
Read More »
Eelamurasu Australia Online News Portal