2019 ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல்ளை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கையானது தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் தற்போது ஆரம்பமாகியுள்ளது.
அதன்படி காலை 9.00 மணிக்கு வேட்பு மனுக்களை ஏற்கும் நடவடிக்கைகள் இராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் திணைக்களத்தில் ஆரம்பமாகியுள்ள நிலையில், இன்று 11.30 மணிவரையில் வேட்பு மனுக்கள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளன.
அத்துடன் வேட்புமனு தொடர்பில் எதிர்ப்புத் தெரிவிப்பதற்கும் காலை 9.00 மணியிலிருந்து 11.30 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் அறிவிப்பார்.
Eelamurasu Australia Online News Portal