ஆஸ்திரேலியாவில் ஊரடங்கை மீறி காதலியை பார்க்க சென்ற வாலிபருக்கு 1 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உலகின் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில நாடுகளில் மக்கள் கொரோனா வைரசின் வீரியத்தை புரிந்து கொள்ளாமல் ஊரடங்கை உதாசீனப்படுத்தி வருகின்றனர். இதனால் அந்த நாடுகள் ஊரடங்கை மீறும் நபர்களுக்கு அபராதம், சிறை போன்ற தண்டனைகளை வழங்கி வருகின்றன. அந்த வகையில் ஆஸ்திரேலியாவிலும் ஊரடங்கை மீறினால் சிறை தண்டனையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என அந்த நாட்டு அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. ...
Read More »அதிக வாசிப்பு
கொரோனா வைரஸ் நோயாளிகளுடன் மெல்பேர்னில் தரையிறங்கிய விமானம்!
உருகுவேயிலிருந்து 80 கொரோனா வைரஸ் நோயாளிகளுடன் புறப்பட்ட விமானம் மெல்பேர்னில் தரையிறங்கியது. உருகுவேயில் தரித்து நின்ற கிரேக் மோர்டைமர் ஆடம்பர கப்பலில் காணப்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்த விமானம்மெல்பேர்னில் தரையிறங்கியுள்ளது. குறிப்பிட்ட விமானத்தில் வைரசினால் பாதிக்கப்பட்ட 80 அவுஸ்திரேலியர்கள் உட்பட 112 அவுஸ்திரேலியர்களும் நியுசிலாந்து பிரஜைகளும் உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட விமானத்தில் உள்ள பயணிகளை தனித்தனியாக மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சில பயணிகளிற்கு கப்பலில் இருந்து இறங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது அவர்கள் இறங்கி பேருந்துகளில் ஏறுவதை ...
Read More »அவுஸ்திரேலியாவில் கொரோனா பரப்பிய கப்பல்!
கொரோனா வைரஸ் பரவலை சரியாக கையாண்ட அவுஸ்திரேலிய அரசு தன்னுடைய சிறிய தவறினால், இன்று நாட்டில் 600க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் பரவ காரணமாகியுள்ளது. தெற்கு சிட்னி நகரில் உள்ள கெம்ப்லா துறைமுகத்தில் மார்ச் மாத துவக்கத்தில் ரூபி பிரின்சஸ் என்ற சொகுசு கப்பல், பயணம் முடித்து வந்தடைந்தது. அது பின்னர் அடுத்த பயணத்திற்கு தயாராகி கொண்டிருந்தது. அந்த கப்பலில், வந்தவர்களில் 158 பேர் உடல்நலம் குன்றி இருப்பதை கண்ட அரசு 9பேருக்கு கொரோனா சோதனை செய்தது. அதில், யாருக்கும் கொரோனா தொற்று இருப்பதாக வரவில்லை. ...
Read More »அவுஸ்திரேலியாவில் 29 மில்லியன் டொலர்களை மோசடி செய்த பெண்!
இலங்கையில் உள்ள செல்வந்தர் ஒருவரின் மகள் என்று கூறி அவுஸ்திரேலியாவில் 29 மில்லியன் டொலர்களை வசூலித்த பெண் ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. இவர் பல நிதி குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்வதால் அவரின் பெயரை அவுஸ்திரேலிய காவல்துறையினர் வெளியிடவில்லை. 550 மில்லியன் டொலர்களை செல்வமாக கொண்டுள்ள இலங்கையின் முன்னணி வர்த்தகரே தமது தந்தை என்று கூறியுள்ள இந்த பெண் அவருடன் இணைந்து எடுத்துக்கொண்டதாக கூறப்படும் புகைப்படங்களையும் தமது மோசடி பணிகளுக்காக பயன்படுத்தியுள்ளார். இதன்போது அவர் பண வைப்புகளுக்காகவும் பணத்தை வரவழைத்துக்கொள்ளவும் தமது “கிரான்ட் சுப்பர் ரிச்” ...
Read More »அவுஸ்திரேலிய குடியுரிமை கொண்ட இலங்கையர் ஒருவர் காெராேனா வைரஸுக்கு பலி!
அவுஸ்திரேலிய குடியுரிமை கொண்ட இலங்கையர் ஒருவர் காெராேனா வைரஸுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். அவுஸ்திரேலியா மெல்பேர்ன் நகரில் வசித்து வந்த 52 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Read More »கொரோனா அச்சம் ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகையில் தாக்கம் செலுத்தக்கூடுமா?
உலகெங்கும் கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள தாக்கம், இந்தியா முதல் ஆஸ்திரேலியா வரை, சீனா முதல் அமெரிக்கா வரை எதிர்பாராத சூழல்களை உருவாக்கியிருக்கிறது. இந்த தாக்கம் பல பின்விளைவுகளை உருவாக்கும் எனக்கூறப்படும் நிலையில், தற்போது கொரோனா உருவாக்கியுள்ள அச்சம் ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை புள்ளிவிவரங்களில் தாக்கம் செலுத்தக்கூடும் எனப்படுகின்றது. கொரோனா அச்சம் காரணமாக, ஆஸ்திரேலியாவின் எல்லைகள் மூடப்பட்டுள்ளதால் வெளிநாட்டினரின் குடியேற்றத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை சில ஆஸ்திரேலியர்கள் வரவேற்கக்கூடும் என்றும் ஆனால் அது ஆஸ்திரேலியாவின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் எனக் கூறியிருக்கிறார் ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் ...
Read More »கொரோனா குறித்த அதிர்ச்சி தகவல்
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த நால்வருக்கும், குறித்த வைரஸ் எவ்வாறு பரவியது என்பது தொடர்பான தகவல் இதுவரை வெளியாகவில்லையென, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன், சமூகத்தில் கொரோனா தொற்று அறிகுறிகளை வெளிப்படுத்தாதவர்களும் இருக்கலாமென, அச்சங்கம் சந்தேகம் வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்றாளர்கள் சமூகத்தில் இணைந்திருப்பார்களானால், அதனால் பாரிய நோய் தொற்று ஏற்படக்கூடுமென, சங்கத்தின் பிரதித் தலைவர் சாரத கன்னங்கர அதிர்ச்சி தெரிவித்துள்ளார். எனவே, கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதையிட்டு, மக்கள் முன்னரைவிட சுகாதார விதிமுறைகளை அதிகளவில் பின்பற்ற வேண்டுமென, அவர் தெரிவித்துள்ளார். ...
Read More »அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை
அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள வடகொரியா, அணு ஆயுத பேச்சுவார்த்தையை நடத்த அமெரிக்கா விரும்பவில்லை என குற்றம் சாட்டி உள்ளது. அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையிலான அணு ஆயுத பேச்சு வார்த்தையில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. வடகொரியா அணு ஆயுதங்களை முழுமையாக கைவிட வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தும் நிலையில் தங்கள் நாட்டின் மீதான பொருளாதார தடைகள் அனைத்தையும் திரும்ப பெற வேண்டுமென வடகொரியா கூறுகிறது. இந்த நிலையில் இந்த மாத தொடக்கத்தில் இருந்து வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை ...
Read More »கரோனா வைரஸால் கலங்கும் உலக மக்கள்: ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா!
கரோனா வைரஸ் பெருந்தொற்று நோயைக் கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் விழிபிதுங்கி நிிற்கிறார்கள். நாள்தோறும் உயிரிழப்புகளும், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ஆனால், வடகொரியா எந்தவிதமான பதற்றமும் இல்லாமல் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. தீவிர கம்யூனிஸ்ட் நாடான வடகொரியாவுக்கு அண்டை நாடான தென் கொரியாவில் கரோனா வைரஸுக்கு இதுவரை 152 பேர் பலியாகியுள்ளனர். 9,583 பேர் பாதி்க்கப்பட்டுள்ளனர். மற்றொரு அண்டை நாடான ஜப்பானில் 52 பேர் கரோனா வைரஸால் உயிரிழந்தனர். 1,693 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இதுவரை வடகொரியாவில் என்ன நடக்கிறது? அங்கு கரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டதா, பரவல் என்ன, ...
Read More »கொரோனா வைரஸ் தாக்கம் : அவுஸ்திரேலியாவின் அனைத்து செயற்பாடுகளும் முடக்கம்
அவுஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நாட்டின் அனைத்து செயற்பாடுகளையும் முடக்குவதற்கு தீர்மானித்துள்ளது. இதற்கமைய, அவுஸ்திரேலியாவின் பெரும்பாளான பாடசாலைகள் உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்டிருந்தாலும் அந்த நாட்டின் சினிமா தியெட்டர்கள், விடுதிகள் மற்றும் வழிபாட்டுத் தளங்கள் என்பன மூடப்பட்டுள்ளதால் தமது குழந்தைகளை வீட்டிலேயே வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் ஒரே இரவில் 149 பேர் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கமைய, தற்போது நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் 818 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, அவுஸ்திரேலியாவின் இதுவரை ஆயிரத்து 886 ...
Read More »
Eelamurasu Australia Online News Portal