அவுஸ்திரேலியாவில் 29 மில்லியன் டொலர்களை மோசடி செய்த பெண்!

இலங்கையில் உள்ள செல்வந்தர் ஒருவரின் மகள் என்று கூறி அவுஸ்திரேலியாவில் 29 மில்லியன் டொலர்களை வசூலித்த பெண் ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

இவர் பல நிதி குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்வதால் அவரின் பெயரை அவுஸ்திரேலிய காவல்துறையினர் வெளியிடவில்லை.

550 மில்லியன் டொலர்களை செல்வமாக கொண்டுள்ள இலங்கையின் முன்னணி வர்த்தகரே தமது தந்தை என்று கூறியுள்ள இந்த பெண் அவருடன் இணைந்து எடுத்துக்கொண்டதாக கூறப்படும் புகைப்படங்களையும் தமது மோசடி பணிகளுக்காக பயன்படுத்தியுள்ளார்.

இதன்போது அவர் பண வைப்புகளுக்காகவும் பணத்தை வரவழைத்துக்கொள்ளவும் தமது “கிரான்ட் சுப்பர் ரிச்” என்ற நிறுவனத்தின் பெயரில் 140 வங்கிக்கணக்குகளை திறந்துள்ளார்.

அத்துடன் அவர் மேற்கு சிட்னி பகுதியில் வாரம் ஒன்றுக்கு 550 டொலரை செலுத்தி உயர்தரக்கட்டிடம் ஒன்றிலேயே வசித்து வந்துள்ளார். வெவ்வேறு தந்தையர்களின் பெயர்களில் மூன்று குழந்தைகளும் அவருக்கு உள்ளனர்.

இந்தநிலையில் பலரின் முறைபாடுகளுக்கு அமைய குறித்த பெண் கடந்த பெப்ரவரி 21ம் திகதி கைது செய்யப்பட்டார்.