கொரோனா வைரஸ் நோயாளிகளுடன் மெல்பேர்னில் தரையிறங்கிய விமானம்!

உருகுவேயிலிருந்து 80 கொரோனா வைரஸ் நோயாளிகளுடன் புறப்பட்ட விமானம் மெல்பேர்னில் தரையிறங்கியது.

உருகுவேயில் தரித்து நின்ற கிரேக் மோர்டைமர் ஆடம்பர கப்பலில் காணப்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்த விமானம்மெல்பேர்னில் தரையிறங்கியுள்ளது.

குறிப்பிட்ட விமானத்தில் வைரசினால் பாதிக்கப்பட்ட 80 அவுஸ்திரேலியர்கள் உட்பட 112 அவுஸ்திரேலியர்களும் நியுசிலாந்து பிரஜைகளும் உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட விமானத்தில் உள்ள பயணிகளை தனித்தனியாக மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சில பயணிகளிற்கு கப்பலில் இருந்து இறங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது அவர்கள் இறங்கி பேருந்துகளில் ஏறுவதை காணமுடிகின்றது அவர்களை அதிகாரிகள் ஹோட்டல்களிற்கு அழைத்து செல்கின்றனர் அங்கு அவர்கள் 14 நாள் தனிமைப்படுத்தலிற்கு உட்படுத்தப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

112 பயணிகளும் 14 நாட்கள் அந்த கப்பலில் இருந்துள்ளனர்,நேற்று அவர்கள் தாங்கள் பேருந்துகளில் ஏற்றப்பட்டவேளை அதனை அவர்கள் கொண்டாடும் படங்கள் வெளியாகியுள்ளன.

ரூபி பிரின்செஸ் கப்பலில் இருந்த பயணிகள் அவுஸ்திரேலியாவிற்குள் இறங்குவதற்கு அனுமதிக்கப்பட்டதால் ஏற்பட்ட சர்ச்சையை தொடர்ந்து இம்முறை அவுஸ்திரேலிய அதிகாரிகள் நிலவரத்தை உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர்.