கட்டுநாயக்க விமான நிலையத்தில் கணவன், மனைவி தம்பதி ஒன்று நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவுஸ்திரேலியாவில் இருந்து நேற்றிரவு 11 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இந்த தம்பதியை குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் கைது செய்துள்ளதாக காவல் துறை ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளது. 46 தோட்டாக்களை வைத்திருந்த சம்பவம் தொடர்பாக கம்பஹா நீதவான் நீதிமன்றம் இவர்களுக்கு எதிரான பிடியாணை பிறப்பித்திருந்தது. அத்துடன் கைது செய்யப்பட்ட நபர், கடந்த 2018 ...
Read More »அதிக வாசிப்பு
அவுஸ்திரேலியாவில் நகம் கடிக்கும் பழக்கத்தில் இருந்த பெண்ணுக்கு ஏற்பட்ட நோய்!
இளம்பெண் ஒருவர் தமது நகம் கடிக்கும் பழக்கத்தால் புற்றுநோய்க்கு இரையாகியுள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் பகுதியில் குடியிருக்கும் பெண்ணுக்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. தோல் புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளானதால் அவரது கட்டைவிரல் வெட்டியெடுக்கப்பட்டுள்ளது. கோல்ட் கோஸ்ட் பகுதியில் குடியிருக்கும் கர்ட்னி வித்தோர்ன் என்பவர் பாடசாலையில் சக மாணவர்களால் கிண்டலுக்கும் கேலிக்கும் உள்ளான பின்னர் நகம் கடிப்பதை பழக்கமாக கொண்டுள்ளார். இந்த பழக்கம் ஒருகட்டத்தில் இவரது கட்டைவிரலில் உள்ள நகம் மொத்தமும் கடித்தே துப்பியுள்ளார். இந்த நிலையில் தமது கட்டைவிரல் கருமையாக ...
Read More »அவுஸ்திரேலியாவுக்கு வந்த அகதி செய்த மோசடி! -அவுஸ்திரேலிய குடியுரிமை ரத்து!
படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு வந்த அகதி ஒருவர் தனது சொந்தநாட்டில் திருட்டுத்தனமாகப்பெற்ற சாரதி அனுமதிப்பத்திரத்தைக் கொடுத்து அவுஸ்திரேலிய சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொண்டுள்ளார். இதன் மூலம் – அடையாள மோசடி புரிந்தார் என்ற குற்றத்தின் பேரில் – அவரது அவுஸ்திரேலிய குடியுரிமை ரத்துச்செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிராக செய்யப்பட்ட மேன்முறையீடும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டு படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு வந்த 26 வயது ஆப்கான் அகதியொருவருக்கே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறிப்பிட்ட நபர் அவுஸ்திரேலியாவுக்கு வந்த அதே ஆண்டில் தற்காலிக வதிவிட விசா கிடைத்தது. ...
Read More »அவுஸ்திரேலியா தடுத்து வைத்துள்ள ஈழ அகதியின் வேண்டுகோள்!
அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் கடந்த ஐந்து வருடங்களிற்கு மேலாகதடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழ தமிழர் ஒருவர் தன்னை விடுதலை செய்து பிரிட்டனில் உள்ள சகோதரியிடம் செல்வதற்கு அனுமதிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். 2013 முதல் மனஸ் தீவு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள திரவியராஜா சுப்பிரமணியம் என்ற 37 வயது இலங்கை தமிழரே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். பிரிட்டனில் உள்ள தனது குடும்பத்தினருடன் இணைவதற்கு பிரிட்டனின் உள்துறை அமைச்சு அனுமதி மறுக்கின்றது என பிரிட்டனின் குடிவரவு தீர்ப்பாயத்திற்கு அவர் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட நபர் இலங்கையில் அனுபவித்த சித்திரவதைகள் ...
Read More »பார்வையற்ற தமிழ் அகதியை ஓன்பது வருடங்களாக தடுத்துவைத்துள்ளது அவுஸ்திரேலியா!
பார்வையற்ற மனோநிலை பாதிக்கப்பட்ட தமிழ் அகதியொருவரை ஒன்பது வருடங்களாக அவுஸ்திரேலியா தடுத்து வைத்திருப்பதற்கு தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள ஐநா குறிப்பிட்ட தமிழ் அகதியை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது. ஐக்கியநாடுகளின் குழுவொன்று இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது. ஒரு தசாப்தகாலமாக சிறையில் வாடும் கண்பார்வையற்ற மனோநிலை பாதிக்கப்பட்ட தமிழ் அகதியை அவுஸ்திரேலியா உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என ஐநா தெரிவித்துள்ளது. ஒன்பது வருடங்களாக நபர் ஒருவரை தடுத்து வைத்திருப்பதன் மூலம் அவுஸ்திரேலியா சர்வதேச சட்டங்களை மீறியுள்ளது என ஐநா தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட ...
Read More »விக்டோரியாவை உலுக்கிய கோர விபத்துக்கள்! நால்வர் பலி!
விக்டோரியாவில் வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற மூன்று வீதி விபத்துக்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று இரவு இந்த விபத்து சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்துக்களில் ஒன்றில் பெண்ணொருவரை காரினால் மோதிவிட்டு அந்த இடத்திலிருந்து தப்பிச்சென்ற நபர் இன்று காலை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Ardeer பகுதியில் Ballarat வீதியில் இடம்பெற்ற குறிப்பிட்ட சம்பவத்தில் அந்தப்பெண் உயிரிழந்துள்ளார். இதேவேளை, Mount Eliza பகுதியில் வீதியில் எதிரே வந்த வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியதில் யூட் வாகனமொன்றில் சென்றுகொண்டிருந்த ஓட்டுனரும் அவருடன் சென்றவரும் அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். ...
Read More »அவுஸ்திரேலிய தேர்தல் முடிவுகளையடுத்து ஆறு அகதிகள் எடுத்த அதிர்ச்சி முடிவு!
மனுஸ் தீவுகளிலும் நவ்றுவிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள அகதிகள் மற்றும் சட்டவிரோத குடியேற்றவாசிகளில் ஆறு பேர் தற்கொலைக்கு முயன்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அவுஸ்திரேலிய தேர்தல் முடிவுகள் வெளியானதை தொடர்ந்து இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. பிரதமர் ஸ்கொட் மொறிசன் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையிலேயே இந்த தற்கொலை முயற்சிகள் இடம்பெற்றுள்ளன. மனுஸில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கடும் மன அழுத்தத்திற்கு உள்ளான நோய்வாய்ப்பட்டுள்ள நபர் ஒருவர் தனக்கு தானே தீ மூட்டி தற்கொலைக்கு முயன்றார். சூடானை சேர்ந்த அகதி அப்துல் அசீஸ் முகமட் இந்த விடயத்தை தனது டுவிட்டரில் பதிவு ...
Read More »ஆஸ்திரேலியாவில் ஆளுங்கட்சி மீண்டும் வெற்றி!
ஆஸ்திரேலியா தேர்தலில் கருத்துக்கணிப்புகளை தவிடுபொடியாக்கி ஆளுங்கட்சி மீண்டும் வெற்றிபெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவில் நேற்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. ஆஸ்திரேலியாவில் பிரதமர் ஸ்காட் மோரிசன் தலைமையிலான லிபரல் கட்சி தேசிய கூட்டணியின் ஆட்சி நடந்து வருகிறது. இங்கு ஏற்கனவே பிரதமராக இருந்து வந்த மால்கம் டர்ன்புல் கட்சியினால் நீக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து கடந்த 9 மாதங்களாக ஸ்காட் மோரிசன் பிரதமராக இருந்து வருகிறார். இந்த நிலையில் 151 இடங்களைக் கொண்ட அந்த நாட்டின் நாடாளுமன்றத்துக்கு மே மாதம் 18-ந்தேதி பொதுத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் ...
Read More »ஈழ பின்னணியில் உருவாகி `யு’ சான்றிதழ் பெற்ற முதல் தமிழ்ப் படம்!
ரஞ்சித் ஜோசஃப் இயக்கத்தில் ஈழ பின்னணியில் உருவாகி `யு’ சான்றிதழ் பெற்ற முதல் தமிழ்ப் படம் என்ற பெருமை `சினம் கொள்’ படத்திற்கு கிடைத்துள்ளது. கனடாவில் பிறந்து வளர்ந்த ரஞ்சித் ஜோசஃப் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் `சினம் கொள்’. இலங்கையில் போருக்குப் பிறகான தசாப்தத்தில் இலங்கையில் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி பேசும் படமாக இது உருவாகி இருக்கிறது. 6 வருடங்கள் சிறை தண்டனை முடிந்து வெளியே வரும் ஆண்டவன் கட்டளை புகழ் அரவிந்தன், அவரது வீடு சிறிலங்கா ராணுவத்தால் கைப்பற்றப்பட்டதை காண்கிறார். ...
Read More »ஆஸ்திரேலியாவில் இந்திய உணவகத்துக்கு ரூ.12½ லட்சம் அபராதம்!
ஆஸ்திரேலியாவில் உணவுப்பொருட்களை பாதுகாப்பதில் விதிமுறைகளை மீறிய இந்திய உணவகத்துக்கு ரூ.12½ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய நாட்டின் பெர்த் நகரின் தெற்கு வீதியில் ‘தி கரி கிளப் இந்தியன் ரெஸ்டாரண்ட்’ என்ற பெயரில் இந்திய உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. நிலிஷ் டோக்கே என்பவர் இந்த உணவகத்தை நடத்தி வருகிறார். இந்த உணவகம் உணவுப்பொருட்களை பாதுகாப்பதிலும், தூய்மையான தரத்தில் உணவக வளாகத்தை பராமரிப்பதிலும் தவறியது உள்ளிட்ட 7 விதிமுறைகளை மீறி இருக்கிறது. சுகாதார ஆய்வாளர்கள் நடத்திய சோதனையில் இது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த உணவகத்துக்கு ...
Read More »