இளம்பெண் ஒருவர் தமது நகம் கடிக்கும் பழக்கத்தால் புற்றுநோய்க்கு இரையாகியுள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் பகுதியில் குடியிருக்கும் பெண்ணுக்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
தோல் புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளானதால் அவரது கட்டைவிரல் வெட்டியெடுக்கப்பட்டுள்ளது.
கோல்ட் கோஸ்ட் பகுதியில் குடியிருக்கும் கர்ட்னி வித்தோர்ன் என்பவர் பாடசாலையில் சக மாணவர்களால் கிண்டலுக்கும் கேலிக்கும் உள்ளான பின்னர் நகம் கடிப்பதை பழக்கமாக கொண்டுள்ளார்.
இந்த பழக்கம் ஒருகட்டத்தில் இவரது கட்டைவிரலில் உள்ள நகம் மொத்தமும் கடித்தே துப்பியுள்ளார். இந்த நிலையில் தமது கட்டைவிரல் கருமையாக உருமாறுவதை கவனித்த கர்ட்னி, சுமார் நான்கு ஆண்டு காலம், தமது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து அதை மறைத்து வந்துள்ளார்.
இது ஒருகட்டத்தில் தோல் புற்றுநோய் பாதிப்புக்கு காரணமாக அமைந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் மருத்துவர்களால் இது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து அவளது கட்டைவிரலைக் காப்பாற்ற முயற்சித்த போதிலும், கடந்த வாரம் மருத்துவர்களால் அவரது கட்டைவிரல் வெட்டப்பட்டுள்ளது.
தமது நகம் கடிக்கும் பழக்கமே தோல் புற்றுநோய்க்கு காரணம் என தெரியவந்தது. அந்த கணம் தமக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது என கார்ட்னி தெரிவித்துள்ளார்.
நகமே இல்லாத கட்டைவிரலை தமது பெற்றோர் மற்றும் நண்பர்களிடன் காட்ட தாம் அச்சப்பட்டதாகவும், அதன் பின்னர் போலி நகங்களுடன் சமாளித்ததாகவும் கார்ட்னி குறிப்பிட்டுள்ளார்.
கார்ட்னியின் 16-வது வயதில் பாடசாலையில் ஏற்பட்ட வருத்தம் தரும் நிகழ்வுகளே, தமக்கு மன அழுத்தங்களையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியதாகவும்,
அதுவே நகம் கடிக்கும் பழக்கத்தில் கொண்டு சேர்த்ததாகவும், தற்போது கட்டைவிரல் இல்லாத நிலை ஏற்படுத்தியுள்ளதாகவும் கார்ட்னி சுட்டிக்காட்டியுள்ளார்.