கொட்டுமுரசு

மைத்­தி­ரியின் பிடிவாதம்..!

சர்­வ­தே­சத்­திலும் உள்­நாட்­டிலும் எதிர்ப்­புகள் வலு­வ­டைந்­துள்ள போதிலும் தூக்குத் தண்­ட­னையை நிறை­வேற்­றியே ஆக வேண் டும் என்ற ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தீர்­மா­னத்தில் தளர்ச்­சியைக் காண முடி­ய­வில்லை. மரண தண்­டனை விதிக்­கப்­பட்ட கைதி­களை தூக்கில் இட்டு தண்­டிக்­கின்ற நடை­முறை நான்கு தசாப்­தங்­க­ளுக்கு மேலாக நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்­தது. மரண தண்­ட­னைக்குப் பதி­லாக அந்தக் கைதிகள் ஆயுட்­கால சிறைத் தண்­ட­னையை அனு­ப­வித்து வந்­துள்­ளார்கள். ஜனா­தி­ப­தியின் தூக்குத் தண்­டனை நிறை­வேற்றத் தீர்­மானம் இந்த நடை­மு­றைக்கு முற்­றுப்­புள்ளி வைக்க வழிவகுத்­துள்­ளது. எதிர்ப்­புகள் இருந்த போதிலும், மரண தண்­டனைக் கைதி­களை – குறிப்­பாக போதைப் ...

Read More »

கொள்ளையடித்த பணத்தை தந்துவிட்டு பாகிஸ்தானை விட்டு வெளியேறுங்கள்!

பாகிஸ்தான் முன்னாள் அதிபரும் முன்னாள் பிரதமரும் மக்களிடம் கொள்ளையடித்த பணத்தை திருப்பித் தந்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறுவதில் எனக்கு ஆட்சேபணை இல்லை என இம்ரான் குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மற்றும் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் ஆகியோருக்கு எதிராக பல்வேறு ஊழல் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அவர்கள் சில வழக்குகளில் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் அடைப்பட்டிருக்கும் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி நேற்று மற்றொரு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், மக்களிடம் கொள்ளையடித்த பணத்தை திருப்பித் ...

Read More »

அரசியல் சகதிக்குள் சிக்கித் தத்தளிக்கும் நிலை !

கல்­முனை வடக்கு உப­பி­ர­தேச செய­ல­கத்தைத் தர­மு­யர்த்­தக்­கோரி நடத்­தப்­பட்ட  உண்­ணா­வி­ர­தப்­போ­ராட்டம் கடந்­த­ வாரம் அனை­வ­ரது கவ­னத்­தையும் ஈர்த்­தி­ருந்­தது. கடந்த திங்கள்(17) முதல் ஞாயிறு (23) ஏழு தினங்கள் சாகும்­வரை உண்­ணா­வி­ர­த­மி­ருந்த கல்­முனை சுபத்ரா ராமய விகா­ரா­தி­பதி வண.ரண்­முத்­து­கல சங்­க­ரத்ன தேரர் கிழக்­கி­லங்கை இந்­து ­கு­ருமார் ஒன்­றியத் தலை­வரும் கல்­முனை முருகன் ஆலய பிர­தம குரு­வு­மான சிவஸ்ரீ க.கு.சச்­சி­தா­னந்த சிவக்­கு­ருக்கள் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் கல்­முனை மாந­க­ர­சபை உறுப்­பி­னர்­க­ளான சந்­தி­ர­சே­கரம் ராஜன், அழ­கக்கோன் விஜ­ய­ரெத்­தினம் அனைத்து இந்து ஆல­யங்­களின் ஒன்­றி­யத்­த­லை­வரும் தொழி­ல­தி­ப­ரு­மான  கிருஸ்­ண­பிள்ளை லிங்­கேஸ்­வரன் ஆகியோர் இதில் ...

Read More »

மைத்­தி­ரி­யின் இன்­னொரு குத்­துக்­க­ரணம்!

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேனவின் ஆகப் பிந்­திய குத்­துக் ­க­ரணம், 19 ஆவது திருத்தச்சட்­டத்­துக்கு எதி­ராகத் தூக்­கி­யி­ருக்­கின்ற போர்க்­கொடி தான். ஆடத்­தெ­ரி­யா­தவன் மேடை கோணல் என்­றானாம், என்­பது பழ­மொழி. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறிசேன, 19 ஆவது திருத்­தச்­சட்­டத்தை இல்­லாமல் செய்ய வேண்டும் என்று வெளி­யிட்­டி­ருக்­கின்ற கருத்து, அந்தப் பழ­மொ­ழியைத் தான் நினை­வு­ப­டுத்­து­கி­றது. பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுடன் இன்­னமும் அவ்­வப்­போது முட்டி மோதிக் கொண்­டி­ருக்கும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, அவ­ருக்கு முன்­பா­கவே இந்தக் கருத்தை முதலில் வெளி­யிட்­டி­ருந்தார். தற்­போ­தைய அர­சாங்கம், கடந்த நான்­கரை ஆண்­டு­களில் சரி­யாகச் செயற்­ப­டாமல் ...

Read More »

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஒரு ஜனாதிபதியின் தடுமாற்றம்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமது அரசியல் எதிர்காலத்துக்காகவும் இருப்புக்காகவும் தமது குடும்பத்தின் பாதுகாப்புக்காகவும் என்னென்னவோ எல்லாம் செய்து வருகிறார். அந்த விடயத்தில், அவருக்கு எவ்வித கொள்கைகளும் இருப்பதாகத் தெரியவில்லை. ஒரு நாள், முன்னாள் ஜனாதிபதியும் 2014ஆம் ஆண்டு முதல் மூன்றாண்டுகளாகத் தமது பரம எதிரியாகவும் இருந்தவருமான மஹிந்த ராஜபக்‌ஷவுடன் அவர் கூட்டுச் சேர முயற்சிக்கிறார். மறுநாள், அந்த முயற்சிகள் அவ்வாறே இருக்க, ஐக்கிய தேசிய கட்சியுடன் சேரத் தயார் எனக் கூறினார். இப்போது, ஜனாதிபதித் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாகத் தெரிவித்துள்ளார். இப்போது அவர், ...

Read More »

பல்­திறப்புல­மையும் ஆளு­மையும் கொண்டிருந்த தில்லைநாதன்!

எஸ்.தில்­லை­நா­தனின் மரணம் எம்­மத்­தி­யி­லி­ருந்து பல்­திறப்புல­மையும் ஆளு­மையும் கொண்ட மூத்த ஊட­க­வி­ய­லாளர் ஒரு­வரை அப­க­ரித்துச் சென்­று­விட்­டது. அரை­நூற்­றாண்­டுக்கும் அதி­க­மான கால­மாக ஊட­கத்­து­றையில் சேவை­யாற்­றிய தில்­லை­நாதன் 1960களின் முற்­கூறில் அச்சு இத­ழி­யலில் பணி­யாற்றத் தொடங்­கி­யி­ருந்­தாலும், பிற்­கா­லத்தில் இலத்­தி­ர­னியல் ஊட­கத்­து­றை­யிலும் தனது முத்­தி­ரையைப் பதித்­தவர். மும்­மொ­ழி­க­ளிலும் வள­மான ஆற்­றலைக் கொண்ட அவர் வீர­கே­ச­ரியில் ஒரு இளை­ஞ­னாக 1960களில் சேர்ந்தபோது இலங்­கையின் தமிழ்ப் பத்­தி­ரிகை உலகில் பழுத்த அனு­ப­வமும், அறி­வாற்­றலும் உடை­ய­வர்­க­ளாக விளங்­கிய கே.வி.எஸ்.வாஸ், எஸ்.டி.சிவ­நா­யகம், கே.சிவப்­பி­ர­காசம் போன்­ற­வர்­களின் வழி­ந­டத்­தலில் பணி­யாற்றும் அதிர்ஷ்­டத்தைக் கொண்­டி­ருந்தார். ஒரு அலு­வ­லகச் செய்­தி­யாளர் என்ற ...

Read More »

இராணுவ முகாமில் 3 வருடமாக பாலியல் அடிமையாக வைக்கப்பட்டிருந்த பெண்!

முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக மனித உரிமை மீறல் வழக்குகள் பத்து அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. யஸ்மின் சூக்காவை தலைமையாக கொண்ட சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பின் ஏற்பாட்டில் இந்த நட்டஈட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.  ஏப்ரலில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்களிற்கு மேலதிகமாக எட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில் 3 வருடமாக பாலியல் அடிமையாக வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் இளம்பெண் ஒருவரும் வழக்கு தாக்கல் செய்துள்ளார். கருத்தடை மருந்துகள் ஏற்றப்பட்டு, இராணுவ முகாமில் பாலியல் அடிமையாக வைக்கப்பட்டிருந்ததாக அவர் ...

Read More »

இல்லாத உறவுக்கு ஏன் இந்த அபிஷேகம்!

“நான் சொன்னவற்றைச் செய்வேன்; செய்தவற்றைச் சொல்வேன்”. இது சூப்பர்ஸ்டார் ரஜனிகாந்த், தனது படங்களில் பொதுவாக உச்சரிக்கும் வாக்கியம் (பஞ் டயலக்) ஆகும். திரையில் கதைக்க, கேட்க சுவையானது; சுவாசிரியமானது. ஆனால் நிஜ வாழ்வில்? அவ்வாறே, உறுதிமொழிகள் வழங்குவதும் மிக இலகுவானது. ஆனால், அதை நிறைவேற்றுவது மிகக் கடினமானது. இலங்கை அரசியல் வரலாற்றில், இனப்பிணக்கு விவகாரத்தில் தமிழ் மக்களுக்குக் காலத்துக்குக் காலம் ஆட்சியாளர்களால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் ஆயிரம் ஆயிரம். அவற்றில் நிறைவேற்றப்பட்டவைகள்? ‘மனிதன் அனுபவிக்கும் பெரும்பாலான துன்பங்களைத் தன்பேச்சின் மூலமாகத்தான் தேடிக் கொள்கின்றான்’ என்கிறார் ரேபியா ...

Read More »

மாற்று கூட்டணி அமைப்பதில் உள்ள பிரதான தடை எது?

தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றாக வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான கூட்டணி அமைவதில் தடைகள் உள்ளமைக்கு காரணம், ஒரு தரப்பினர் தமது தனிப்பட்ட அடையாளம் அழிந்து விடுமோ என்று எண்ணுவதே ஆகும் என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் வழங்கிய செவ்வியில் தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு, கேள்வி:- தற்போதைய தமிழர் அரசியல்களம் தமிழர்களின் உரிமையை பெறுவதற்கு சாதாகமானதாக உள்ளதா? பதில்:-ஆங்கிலேயரின் காலனித்துவ ஆட்சியின் கீழ் இலங்கை இருந்தபோது நிர்வாக வசதி கருதி இந்நாட்டில் ...

Read More »

தேசிய அளவில் பரி­ண­மித்­த கல்முனை விவகாரம்!

“கல்­முனை உப பிர­தேச செய­ல­கத்தைத் தர­மு­யர்த்தும் விவ­காரம் தீவி­ர­ம­டைந்து, மூவின மக்­க­ளி­டை­யேயும் மனக் கசப்­பையும் வெறுப்­பு­ணர்­வையும் வளர்த்துச் செல்­கின்ற ஒரு மோச­மான நிலைமை உரு­வாகி இருந்த போதிலும், அர­சி­யல்­வா­தி­களும், ஆட்­சி­யா­ளர்­களும் இந்த விட­யத்தில் அச­மந்தப் போக்கைக் கடைப்­பி­டித்து வரு­வது கவ­லைக்­கு­ரி­யது.” கல்­முனை வடக்கு உப பிரதேச செய­ல­கத்தைத் தர­மு­யர்த்தக் கோரி நடத்­தப்­ப­ட்ட போராட்­டமும், அதனை எதிர்த்து நடத்­தப்­பட்ட போராட்­டமும் இந்த நாட்டில் இனங்­க­ளுக்­கி­டை­யி­லான நல்­லு­றவு மோச­ம­டைந்து செல்­வதைக் கோடிட்டுக் காட்­டி­யி­ருக்­கின்­றன. இந்த செய­ல­கத்தை முழு­மை­யா­ன­தொரு பிர­தேச செய­ல­க­மாகத் தர­மு­யர்த்த வேண்டும் என்ற கோரிக்கை மூன்று ...

Read More »