கொட்டுமுரசு

தமிழ் மக்களின் ’அரசியல் அணி’

படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் டி.சிவராம் (தராக்கி) `காலத்தின் தேவை அரசியல் வேலை` என்று குறிப்பிடுவார். காலத்தே பயிர் செய்தல் எல்லாவிதமான விடயங்களிலும் முக்கியம் பெறுகிறது. அதே போன்றுதான் இப்போதைய பூகோளவியல் அரசியல் மாற்றத்திலும் அரசியல் வேலையைச் சரியான முறையில் செய்தாகவேண்டிய கட்டாயம் தமிழ் மக்களுக்கும் அவர்களது அரசியல் தரப்பினருக்கும் ஏற்பட்டிருக்கிறது. அதாவது வாய்ப்பைப் பயன்படுத்தியாகவேண்டுமென்ற நிலை மீண்டும் ஒருமுறை உருவாகி இருக்கிறது. ‘விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள்’ என்ற ஒருமிப்புடன் எழுந்த அரசியல் பிரயோகம் ‘முக்கியமானதோர் அரசியல் அமைப்பு’ எனும் பாவனையுடன் ...

Read More »

புதிய அமைச்சரின் கீழ் அதிகளவு மாற்றம் இல்லை

*தவறுகளின் அபாயத்தைத் தவிர்க்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன வளர்ச்சியைத்தடத்திற்கு கொண்டுவர முன்னுரிமைஅளிக்கப்படும். *ஜிஎஸ்பி +இல்லாமல் சிறப்பாக செயற் பட்டதை மத்திய வங்கிகாண்பிக்கிறது  *சர்வதேச நாணய நிதியத்தின்இலங்கை ரூபா ஒதுக்கீடுகளுடன் எந்த நிபந்தனைகளும் இணைக்கப்படவில்லை . *முன்னைய அரசு விட்டுச்சென்ற குறைந்தளவு கையி ருப்பால் கடினமான காலம். மட்டுப்படுத்தப்பட்ட வெளிநாட்டு நிதி, பாரியளவு வெளிநாட்டு கடனை திருப்பிச் செலுத்தவேண்டியிருத்தல் , அதிகரித்துவரும் வறுமையை குறைப்பதற்கான அரசாங்க நடவடிக்கைகளில் ஆற்ற ல் போதாமை ஆகியவற்றுடன் இலங்கையின் பொருளாதாரம் நெருக்கடியின் விளிம்பில் உள்ளது என்ற கருத்துக்களுக்கு மத்தியில், ...

Read More »

நன்றி மறக்கும் அரசியல்!…..

1971ல் ஜே.ஆரின் மகனை மனிதாபிமான விடுதலை செய்தார் சிறிமாவோ. 2015ல் தோற்றுப்போன மகிந்தவை பாதுகாப்பாக உலங்குவானூர்தியில் ஊருக்கு அனுப்பி வைத்தார் ரணில். அடுத்தடுத்து நாடாளுமன்ற ஆசனத்தை இழந்திருந்த சம்பந்தனுக்கு 2001ல் புதுவாழ்வு வழங்கினர் விடுதலைப் புலிகள். இவைகளுக்குக் கிடைத்த பிரதியுபகாரம்…… இலங்கைத் தீவின் அரசியல் பாதை சிங்களத் தேசியம், தமிழ்த் தேசியம் என இரண்டாகத் தனித்தனி வழியில் நீள்கிறது. சிங்களத் தேசியம் என்பது பௌத்தமும் இணைந்ததாக, கட்சிகளின் வேறுபாடுகளுக்குள்ளும் வளர்ச்சி பெற்றே செல்கிறது. ஆனால், தமிழ்த் தேசியம் 2009ம் ஆண்டுக்குப் பின்னர் மாட்டு வால் ...

Read More »

பசில் வருகையின் அவசரம் என்ன ?

ஆளும் பொதுஜன பெரமுனயின் சிற்பி என வர்ணிக்கப்படும் பசில் ராஜபக்ச அவசர அவசரமாக அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்டு பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளதுடன் நிதி அமைச்சரும் ஆகியுள்ளார். இதில் சிறப்பம்சம் என்னவென்றால் நிதியமைச்சருக்கான சத்தியப்பிரமாணத்தை ஜனாதிபதி மாளிகையில் எடுத்த பின்பே பாராளுமன்றத்தின் சபாநாயகர் முன்பு பாராளுமன்ற உறுப்பினருக்கான சத்திய பிரமாணத்தை மேற்கொண்டிருந்தார். திடீரென இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டமைக்கான காரணங்கள் தொடர்பாக பல்வேறு ஊகங்கள் வெளிவந்துள்ளன. இலங்கை அரசியலமைப்பின் 20 வது திருத்தம் மேற்கொள்ளப்பட்ட போது மேற்படி திருத்தத்தில் இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர்கள் இலங்கையின் தேர்தல்களில் ...

Read More »

சிதைக்கப்படும் தமிழர் தாயகமும் அச்சுறுத்தப்படும் தமிழ்த்தேசியமும்

தமிழ் மக்களின் உரிமைசார் அரசியல், அவர்களின் தாயகக் கோட் பாட்டிலேயே மையம் கொண்டிருக்கின்றது. வரலாற்று ரீதியிலான அவர்களின் வாழ்விடங்களாகிய வடக்கு கிழக்கு தாயகப் பிரதேசத்தையே அந்தக் கோட்பாடு உள்ளடக்கி இருக்கின்றது. இது வெறுமனே தாயக மண்ணாக அல்லாமல், சமூக, கலை, கலாசார, வாழ்வியல் கூட்டுச் சேர்க்கையின் அரசியல் அடையாள மாகத் திகழ்கின்றது. இதுவே தமிழ்த் தேசியத்தின் அடி நாதம். இந்தத் தாயகப் பிரதேசத்தில் இறைமை சார்ந்த அரசியல் உரிமைகளுடன் தங்களைத் தாங்களே ஆளத்தக்க அதிகார பலத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்பதே அவர்களின் அரசியல் கோரிக்கையாகும். ...

Read More »

வைரஸ் தொற்றுக்குள்ளும் வாள்கள் ஓயவில்லை ?

அண்மையில் பிரபல ஈழத்து இசையமைப்பாளர் ஒருவரோடு கதைத்த்துக்கொண்டிருந்தேன். “அண்மையில் நீங்கள் இசையமைத்த ஒரு  பாடலைக் கேட்டேன். நீங்கள் முன்பு இசையமைத்த பாடல்களின் தரத்துக்கு அது இல்லை. ஏன் இப்பொழுது உன்னதமான பாடல்களை எங்களால் உருவாக்க முடியவில்லை” என்று கேட்டேன். 1980களில் 90களில் நாடகங்களுக்கும் அரசியல் தேவைகளுக்கும் பாடல்களை உருவாக்கிய பலரும் இசையமைப்பாளர்களை உறங்க விடுவதில்லை.அவர்கள் உருவாக்கித்தரும் மெட்டுக்களை எடுத்த எடுப்பில் ஏற்றுக் கொள்வதுமில்லை. இது போதாது இது போதாது இன்னும் வேண்டும் இன்னும் வேண்டும் என்று கேட்டு தொடர்ச்சியாக நச்சரித்து ஒரு பாடல் அதன் உன்னதமான ...

Read More »

சீன கடலட்டைப் பண்ணைகளா? இந்திய இழுவை மடிகளா?

கடந்த சில நாட்களாக வடக்கில் சீன மற்றும் பாகிஸ்தான் நிறுவனங்கள் அகல கால் பதிப்பதாகவும் இது ஈழத்தமிழர் நலன்களுக்கும்  அதற்கு அப்பால் இந்திய இறையாண்மைக்கும் அச்சுறுதலை ஏற்படுத்தலாம் எனவும் பாராளுமன்றத்தில் தமிழ் கட்சி உறுப்பினர் ஒருவர் மிகுந்த உசாராகப் பேசியிருந்தார். அத்துடன் இந்தியா தமது தொப்புள்கொடி உறவுகளாம், அதனால் இந்தியா பக்கமே தாங்கள் நிற்போம் இந்தியாவுக்கு எதிரான இவ்வாறான நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ளவேண்டும் எனவும் விளாசித்தள்ளியிருந்தார். இவர்கள்   பேசிக்கொண்டிருந்த அதேகாலப்பகுதியில் (4.7.2021)பாக்கு நீரிணைக்கடலில் தொப்புள்கொடி உறவுகள் வட மராட்சி கிழக்கு மீனவர்களின் சுமார் எழுபத்தைந்துக்கும்  (75) மேற்பட்ட படுப்பு ...

Read More »

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகளில் ஒரு மனப்போக்கு மாற்றம்

கடந்த வருடம் கொவிட் –19 பெருந்தொற்று நோய் பரவத்தொடங்கிய நேரத்தில் இருந்து இலங்கைக்கு முக்கியமானதும் காலப்பொருத்தமானதுமான உதவிகளையும் ஆதரவையும் வழங்குவதில் சீனா அதிமுன்னணியில் இருந்திருக்கிறது.கடனாகவும் நாணயபரிமாற்றமாகவும் சீனா இலங்கைக்கு 200 கோடிக்கும் அதிகமான டொலர்களை வழங்கியிருக்கிறது ;10 இலட்சத்துக்கும் அதிகமான சினோபார்ம் தடுப்பூசிகளை நன்கொடையாகவும் சுமார் 60 இலட்சம் தடுப்பூசிகளை வேறு வழிகளிலும் இதுவரை காடுத்திருக்கிறது.ஆனால், கடந்த கால மற்றும் தொற்றுநோய்க் கால உதவிகளுக்கு மத்தியிலும், முன்னொருபோதும் இல்லாதவகையில் சீனா இலங்கையில் பொதுமக்களின் கூர்மையான அவதானிப்புக்குள்ளாகியிருக்கிறது. இது மிகவும் முக்கியமானது.ஏனென்றால்,(சுதந்திரம் பெற்ற 1948 ஆம் ...

Read More »

மூளை என்றொரு மின்தடம்

அமெரிக்காவைச் சேர்ந்த நரம்பியலாளரும், பிபிசியில் ஒளிபரப்பாகும் ‘தி ப்ரெய்ன்’ என்ற புகழ்பெற்ற தொடர் நிகழ்ச்சியை வழங்குபவருமான டேவிட் ஈகிள்மேன், மனித மூளையின் அசாத்தியமான நெகிழ்வுத்தன்மை குறித்து சமீபத்தில் எழுதியுள்ள ‘லைவ்வயர்ட்’ நூல் குறித்து ‘தி கார்டியன்’ இதழுக்கு ஒரு நேர்காணலை அளித்துள்ளார். புதிய அனுபவங்களுக்கேற்பத் தன்னைத் தகவமைத்துக்கொள்வதில் மூளை எப்படிச் சிறந்து விளங்குகிறது என்பதை இந்த நேர்காணலில் பகிர்கிறார். செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்காக இவர் கைக்கடிகாரத்தின் வடிவத்தில் உருவாக்கிய ‘பஸ்’ (buzz) என்ற கருவி, ஒலியை வெவ்வேறு அதிர்வு வடிவங்களாகப் பெயர்த்து என்ன சத்தம் ...

Read More »

பசிலின் மறுபிறவி

ஆளும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பொருளாதார அமைச்சருமான பசில் ராஜபக்‌ஷ, நாளை (08 ஆம் திகதி) தேசிய பட்டியல் மூலமாக, பாராளுமன்றத்துக்கு வருவார் எனச் செய்திகள் பரவியுள்ளன. அவர், தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுவதற்குத் தடையாக இருந்த, பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் உறுப்பினர் ஒருவர் இராஜினாமாச் செய்ய வேண்டும் என்ற நிலைமை தற்போது சீர்செய்யப்பட்டுள்ளது. பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த தேசிய பட்டியல் உறுப்பினர்கள் நான்கு பேர், அவருக்காக இராஜினாமாச் செய்யத் தயாராக இருப்பதாக, கடந்த ...

Read More »