அழுத்தங்கள், கெடுபிடிகள் இருந்த போதும், வடக்கு, கிழக்கில் மாவீரர் நாள் நிகழ்வுகள், பெரும்பாலும் தடையின்றி நடந்தேறியிருக்கின்றன. ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், கேள்விக்குறியாக இருந்த பல விடயங்களில், மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு அனுமதி அளிக்கப்படுமா என்பதும், ஒன்று. 2009இல் போரை முடிவுக்குக் கொண்டு வந்து – விடுதலைப் புலிகளை அழித்து விட்டதாகப் பிரகடனம் செய்தவர்கள், அதில் நேரடியாகப் பங்களித்தவர்கள் அனைவரும் இப்போது நாட்டின் மிகமுக்கிய பதவிப் பொறுப்புகளில் இருக்கிறார்கள். அப்போது ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக் ஷ இப்போது பிரதமராக இருக்கிறார். அப்போது பாதுகாப்புச் ...
Read More »கொட்டுமுரசு
சிதைவுறும் நம்பிக்கைகள்!
ஆட்சி மாற்றம் என்பது பக்கச்சார்பின்றி நேர்மையாக செயற்படும் அதிகாரிகளுக்கும், பக்கம் சார்ந்து செயற்படும் அதிகாரிகளுக்கும் சிக்கலானதாகவே அமைந்து விடுவது வழக்கம். ஆட்சிமாறும் போது, சந்தர்ப்பத்துக்கேற்ப மாறி விடும் அதிகாரிகள் தப்பிக் கொள்வார்கள். ஏதோ ஒரு பக்கம் சார்ந்து செயற்படும் அதிகாரிகள், அடுத்த முறை வரட்டும் என்று பதுங்கிக் கொள்வார்கள். நேர்மையாக செயற்படும் அதிகாரிகள் பந்தாடப்படுவார்கள். அவர்களுக்கு எந்த ஆட்சி வந்தாலும், சிக்கலாகவே இருக்கும். ஜனாதிபதித் தேர்தலை அடுத்து ஏற்பட்ட ஆட்சி மாற்றம், அதிகாரிகள் பலருக்கு இடமாற்றத்தைக் கொடுத்திருக்கிறது. பலருக்கு நல்ல பதவிகள் கிட்டி யிருக்கின்றன. ...
Read More »ஜெனிவா பிரேரணைக்கு பதிலாக மாற்று யோசணை…….!
இலங்கையில் புதிய அரசாங்கம் பதவியேற்றுள்ள இந்த முக்கியமான மற்றும் மாற்றமான புதிய அரசியல் சூழலில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43ஆவது கூட்டத் தொடர் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 24ஆம் திகதியிலிருந்து மார்ச் மாதம் 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை பாதிக்கப்பட்ட மக்களைப் பொறுத்தவரை தீர்க்கமானதாக உள்ளது. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை நிலைநாட்டும் விடயத்தில் மிகவும் முக்கியத்துவம் மிக்கதாகக் கருதப்படும் மற்றும் கடந்த காலங்களில் பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்திய இலங்கை தொடர்பான ஜெனிவா பிரேரணை குறித்தும் இந்தக் கூட்டத் தொடரில் ...
Read More »ஹம்பாந்தோட்டை துறைமுக குத்தகை உடன்படிக்கையை மீளாய்வு செய்வதற்கு சீனா இணங்குமா?
கொழும்பு (நியூஸ் இன் ஏசியா) கோத்தபாய ராஜபக்ஷ அரசாங்கம் சர்ச்சைக்குரிய அம்பாந்தோட்டை துறைமுகத்தின் குத்தகைக்காலம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தக்கூடிய சாத்தியம் குறித்து சீனாவிற்கு ஏற்கனவே உத்தியோகபூர்வமற்ற முறையில் தெரியப்படுத்தப்பட்டிருக்கக்கூடும். அல்லாவிட்டால் சர்வதேச ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் குத்தகைக் காலத்தை மீள் பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தும் திட்டம் குறித்து பகிரங்கமாக ஜனாதிபதி கோத்தபாய கூறியிருக்க மாட்டார் என்று அரசாங்கத்திற்கு நெருக்கமான வட்டாரமொன்று தெரிவித்திருக்கிறது. இந்தியாவின் பாதுகாப்பு விவகார சஞ்சிகையான பாரத் சக்தியின் பிரதம ஆசிரியர் நிதின் கோகலேவிற்கு அளித்த நேர்காணலில் ஜனாதிபதி ராஜபக்ஷ 99 வருடக் குத்தகையை இலங்கை மக்கள் ...
Read More »சிறிலங்கா சுவிஸ் தூதரகத்தின் பெண் பணியாளர் இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டார்!
நியுயோர்க் டைம்ஸ் தமிழில் – ரஜீபன் தேர்தல் முடிவடைந்து சில நாட்களிலேயே, ராஜபக்ச அரசியல் வம்சாவளியை விமர்சிப்பவர்கள் மீதான அரசியல் ரீதியிலான ஒடுக்குமுறைகள் மீண்டும் ஆரம்பமாகிவிட்டன என்ற அச்சம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. ராஜபக்ச குடும்பத்தினரின் மனித உரிமை மீறல்கள் ஊழல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரிகள் இலங்கையை விட்டு தப்பியோட முயல்கின்றனர் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக அச்சத்தை ஏற்படுத்தியுள்ள விடயமாக ஒரு சம்பவம் காணப்படுகின்றது. திங்கட்கிழமை இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரகத்தை சேர்ந்த பெண் பணியாளர் ஒருவரை வானில் கடத்திய இனந்தெரியாத நபர்கள் அவரின் ...
Read More »அரசியல், போராகப் பேய் வடிவம் எடுத்து நிற்கிறது!
தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2008 எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே! இன்று மாவீரர் நாள். தமிழீழத் தாய்நாட்டின் விடிவிற்காகத் தமது இன்னுயிரை ஈகம் செய்து, எமது இதயமெல்லாம் நிறைந்து நிற்கும் எம்முயிர் வீரர்களை நாம் நினைவு கூர்ந்து கௌரவிக்கும் புனித நாள். ஆண்டாண்டு காலமாக அந்நிய ஆதிக்கப் பிடிக்குள் அடங்கிக்கிடந்த எமது தேசத்தை, ஆக்கிரமிப்பாளர்களுக்கு அடிபணியாத அடங்கா மண்ணாக மாற்றிவிட்ட எமது வீரமறவர்களைப் பூசித்து வணங்கும் திருநாள். எமது தேசம் விடுதலை பெற்று, எமது மக்கள் சுதந்திரமாக, தன்மானத்துடன் வாழவேண்டும் ...
Read More »“கோத்தாபய மீது அழுத்தங்களைப் பிரயோகிப்போம்”!- சுமந்திரன்
வடக்கு கிழக்கு மக்கள் அச்சமான சூழலுக்குள் இருக்க வேண்டியதில்லை. புதிய ஜனாதிபதி பதவியேற்றவுடன் மக்களை பழிவாங்கும் போக்கிற்குச் செல்வார் என்று கூறமுடியாது. அதற்கு காலம் உள்ளது. அந்த இடைப்பட்ட காலத்தில் இந்தியாவினதும், ஏனைய சர்வதேச நாடுகளினதும் அழுத்தங்களை அவர் மீது பிரயோகிப்போம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு, கேள்வி:- ஜனாதிபதித் தேர்தலில் வடகிழக்கு தமிழ்ப் பேசும் மக்களும், பெரும்பான்மை சிங்கள மக்களும் இருவேறு ...
Read More »ஐ.தே.க. பிளவை நோக்கி நகர்கிறதா?
1994 ஆம் ஆண்டிலிருந்தே ஐக்கிய தேசியக் கட்சி பாரிய நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றது. இடைப்பட்ட காலத்தில் இரண்டு தடவைகள் கட்சியை பலப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைத்தது. 2001 ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியமைத்தது. எனினும் மூன்று வருடங்களில் அந்த ஆட்சியை இழந்தது. அதேபோன்று 2015 ஆம் ஆண்டும் ஐக்கிய தேசியக் கட்சியிடம் ஆட்சி வந்தது. குறிப்பாக 2015 ஆம் ஆண்டு தேசிய அரசாங்கம் அமைத்தாலும் அது ஐக்கிய தேசிய கட்சியின் பிரதான அதிகாரத்துடன் இருந்தது. எனினும் இக்காலப்பகுதியலும் ஐக்கிய ...
Read More »பிளவடைந்துள்ள அரசியலை மீள ஐக்கியப்படுத்துவதில் உள்ள சவால்கள்!
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையில் ஜனாதிபதியை தெரிந்தெடுப்பதில் தமக்கும் ஒரு பங்கு இருப்பதன் காரணமாக, ஜனாதிபதிக்கு சிறுபான்மையினத்தவர்களது நலன்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதில் ஆர்வம் இருக்கும் என்ற நம்பிக்கையே சிறுபான்மையினத்தினர் இம்முறை தேர்தலில் பெரிதும் அக்கறையும் ஆதரவும் காட்டுவதற்கான காரணமாக இருந்துள்ளது. ஆனால் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவின் தேர்தல் பிரச்சாரமும் தேர்தல் முடிவுகளும் பெரும்பான்மையின மக்களையே ஒன்றிணைத்ததாக அமைந்துள்ளமை சிறுபான்மையினத்தவர்களை அச்சுறுத்தக் கூடியதாகியுள்ளது. மேலும் பொதுவாகவே எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரும் 50 வீதத்திற்கு மேல் வாக்குகளைப் பெறப் போவதில்லை என்ற அனுமானம் ...
Read More »கோத்தாபயவின் வெற்றியினால் அதிர்ச்சி!
நந்தசேன கோத்தாபய ராஜபக்ச முழுமையான வெள்ளை ஆடையில் நவம்பர் 18 ம் திகதி அனுராபுரத்தில் உள்ள ருவன்வெலிசயவில் உள்ள பௌத்த தூபியில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டவேளை வடக்குகிழக்கில் அச்சம் பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்ற இடம்போன்று அந்த நிகழ்வில் தெரிவிக்கப்பட்ட சிங்களவர்கள் மாத்திரம் செய்தியும் முக்கியமானது என அதனை தொலைக்காட்சியில் பார்வையிட்ட தமிழர்கள் தெரிவித்தனர். செயற்பாட்டாளர்கள் மிகவும் அமைதியாக உள்ளனர்,அவர்கள் கட்டுரை எழுதுவதையும் அறிக்கைகள் விடுவதையும் நிறுத்திவிட்டனர்,அச்சம் வெளிப்படையாக தெரிகின்றது என யாழ்ப்பாணத்தை சேர்ந்த செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்தார். நல்லாட்சிக்காக பிரச்சாரம் செய்த காமினிவியாங்கொடவும் சந்திரகுப்ததேனுவரவும் தேர்தல் ...
Read More »
Eelamurasu Australia Online News Portal