சிதைவுறும் நம்­பிக்­கைகள்!

ஆட்சி மாற்றம் என்­பது பக்­கச்­சார்­பின்றி நேர்­மை­யாக செயற்­படும் அதி­கா­ரி­க­ளுக்கும், பக்கம் சார்ந்து செயற்­படும் அதி­கா­ரி­க­ளுக்கும் சிக்­க­லா­ன­தா­கவே அமைந்து விடு­வது வழக்கம்.

ஆட்­சி­மாறும் போது, சந்­தர்ப்­பத்­துக்­கேற்ப மாறி விடும் அதி­கா­ரிகள் தப்பிக் கொள்­வார்கள். ஏதோ ஒரு பக்கம் சார்ந்து செயற்­படும் அதி­கா­ரிகள், அடுத்த முறை வரட்டும் என்று பதுங்கிக் கொள்­வார்கள்.

நேர்­மை­யாக செயற்­படும் அதி­கா­ரிகள் பந்­தா­டப்­ப­டு­வார்கள். அவர்­க­ளுக்கு எந்த ஆட்சி வந்­தாலும், சிக்­க­லா­கவே இருக்கும்.

ஜனா­தி­பதித் தேர்­தலை அடுத்து ஏற்­பட்ட ஆட்சி மாற்றம், அதி­கா­ரிகள் பல­ருக்கு இட­மாற்­றத்தைக் கொடுத்­தி­ருக்­கி­றது. பல­ருக்கு நல்ல பத­விகள் கிட்­டி­ யி­ருக்­கின்­றன. சிலர் தூக்கி அடிக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்கள். இன்னும் பலர் என்ன நடக்கப் போகி­றதோ என்ற அச்­சத்தில் இருக்­கி­றார்கள்.

ஆட்சி மாற்­றத்­துக்குப் பின்னர் நாங்கள் யாரையும் பழி­வாங்­க­மாட்டோம் என்று பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷ கூறி­யி­ருந்தார். ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவும் அதனை வலி­யு­றுத்திக் குறிப்­பிட்­டி­ருந்தார்.

ஆனால், ஆட்சி மாற்­றத்­துக்குப் பின்னர் நடந்து வரும் சம்­ப­வங்கள் பல, அர­சியல் பழி­வாங்­கல்­க­ளா­கவே, காழ்ப்­பு­ணர்­வு­க­ளா­கவே தென்­ப­டு­கின்­றன.

தேர்­தலில் யாருக்கு வாக்­க­ளித்­தீர்கள் என்று கேட்டு, யட்­டி­யந்­தோட்­டையில் தமி­ழர்கள் வீடு­க­ளுக்குள் நுழைந்து தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்ட சம்­பவம் பெரும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யது.

பாணந்­து­றை­யிலும், வேறு சில இடங்­க­ளிலும் தமிழ் மொழி­யி­லான பெயர்ப் பல­கைகள் அழிக்­கப்­பட்­டன.

அதை­விட பல இடங்­களில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஆத­ர­வா­ளர்கள் தாக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்கள், அலு­வ­ல­கங்கள் சேத­மாக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதி­யு­தீனின் வாகன அணி கூட தாக்­கு­த­லுக்கு உள்­ளா­கி­யி­ருக்­கி­றது.

இது­போன்ற சம்­ப­வங்கள், அச்­சு­றுத்­தல்கள் அர­சாங்­கத்தின் உயர் மட்­டத்தில் இருந்து முன்­னெ­டுக்­கப்­பட்­ட­வை­யாக இல்­லாமல் இருக்­கலாம். ஆனால் அர­சாங்­கமே பொறுப்­புக்­கூற வேண்­டி­யவை.

ஏனென்றால், ஜனா­தி­பதி கோத்­தாபய ராஜபக் ஷ தேர்தல் பிர­சா­ரங்­களின் போது, நாட்டின் பாது­காப்பை என்னால் மட்­டுமே 100 சத­வீதம் உறு­திப்­ப­டுத்த முடியும் என்று கூறி­யி­ருந்தார்.

100 சத­வீதம் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­துவேன் என்று உறு­தி­ய­ளித்­த­வரின் ஆட்­சியில், தனி­யொ­ரு­வ­ருக்கு எந்த வகை­யி­லேனும் தீங்­கி­ழைக்­கப்­பட்டால், அது அவ­ரது புக­ழுக்கே களங்­கத்தை ஏற்­ப­டுத்தும்.

தமிழ் மொழி­யி­லான பெயர்ப் பல­கைகள் அழிக்­கப்­பட்ட சம்­பவம் குறித்து கருத்து வெளி­யிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவா­னந்­தாவே, இது அர­சாங்­கத்­துக்கு களங்­கத்தை ஏற்­ப­டுத்தும் என்று குறிப்­பிட்­டி­ருந்தார்.

எனவே, நாட்டில் நடக்கும் ஒவ்­வொரு சம்­ப­வத்­துக்­கு­மான பொறுப்பில் இருந்து அர­சாங்கம் ஒரு­போதும் நழுவிக் கொள்ள முடி­யாது.

சில சம்­ப­வங்கள் குறித்து தக­வல்கள் வெளி­யா­னதும், அதனை சரிப்­ப­டுத்­தவோ, விசா­ர­ணை­களை மேற்­கொள்­ளவோ மேலி­டத்தில் இருந்து உத்­த­ர­வுகள் பிறப்­பிக்­கப்­பட்­டுள்ள போதும், உயர்­மட்­டத்தில் இருந்து முன்­னெ­டுக்­கப்­படும் பல நட­வ­டிக்­கை­களில் எந்த மாற்­றத்­தையும் காண முடி­ய­வில்லை.

குற்ற விசா­ரணைத் திணைக்­க­ளத்தின் பணிப்­பா­ள­ராக இருந்த ஷானி அபே­சே­கர, காலி பிரதி பொலிஸ் மா அதி­பரின் உத­வி­யா­ள­ராக மாற்­றப்­பட்­டி­ருக்­கிறார். இது அர­சியல் அரங்கில் பெரும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்ள ஒரு சம்­பவம்.

அடுத்து, குற்ற விசா­ரணை திணைக்­க­ளத்தில் மிக­முக்­கி­ய­மான புல­னாய்வு அதி­கா­ரி­யாக இருந்த நிசாந்த சில்வா தனது குடும்­பத்­தி­ன­ருடன் நாட்டை விட்டு ஓடி­யி­ருக்­கிறார். இது இன்னும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

மஹிந்த ராஜபக் ஷவின் முன்­னைய ஆட்­சிக்­கா­லத்தில் இடம்­பெற்ற கொலைகள், ஆட்­க­டத்­தல்கள், தாக்­கு­தல்கள், அச்­சு­றுத்­தல்கள் போன்ற பல குற்றச் செயல்கள் குறித்து குற்ற விசா­ரணைத் திணைக்­களம் விசா­ரித்து வந்தது.

இந்த விசா­ர­ணை­களில் பல அர­சி­யல்­வா­திகள், இரா­ணுவ, கடற்­படை அதி­கா­ரிகள், புல­னாய்வு அதி­கா­ரிகள் பலர், நெருக்­க­டி­களை எதிர்­கொண்­டனர். சில­ருக்கு எதி­ராக வழக்­கு­களும் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளன. சில விசா­ர­ணைகள் இறு­திக்­கட்­டத்தை எட்ட முன்­னரே, ஆட்சி மாற்றம் ஏற்­பட்டு விட்­டது.

இந்த விசா­ர­ணை­களில் முக்­கிய பங்­காற்­றி­ய­வர்­களில் ஒருவர் தான் ஷானி அபே­சே­கர. குற்ற விசா­ரணைத் திணைக்­க­ளத்தின் பணிப்­பா­ள­ராக இருந்த அவர், பிரதி பொலிஸ் மா அதிபர் ஒரு­வரின் உத­வி­யா­ள­ராக நிய­மிக்­கப்­பட்­டி­ருக்­கிறார்.

நிசாந்த சில்வா தாம் பழி­வாங்­கப்­ப­டுவோம் என்ற அச்­சத்தில் நாட்டை விட்டு வெளி­யே­றி­யி­ருக்­கிறார். இந்தச் சம்­ப­வங்கள் இரண்டும்  புதிய அர­சாங்­கத்தின் மீது ஆரம்­பத்­தி­லேயே கரும்­புள்­ளியை ஏற்­ப­டுத்தும் சூழலை உரு­வாக்­கி­யுள்­ளன.

அது மாத்­தி­ர­மன்றி, நிசாந்த சில்வா நாட்டை விட்டு வெளி­யே­றி­யதை அடுத்து, சுவிஸ் தூத­ரக பெண் அதி­காரி ஒருவர் கடத்­தப்­பட்டு, அச்­சு­றுத்­தப்­பட்­டுள்­ள­துடன், அவ­ரது அலை­பே­சியில் இருந்த தர­வு­களும் உரு­வி­யெ­டுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.

இந்தச் சம்­பவம் அர­சியல் இரா­ஜ­தந்­திர மட்­டங்­களில் இன்னும் அதிர்­வ­லை­களைத் தோற்­று­வித்­தி­ருக்­கி­றது.

ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ தேர்­த­லுக்கு முன்னர், அளித்­தி­ருந்த செவ்வி ஒன்றில், தாம் ஆட்­சிக்கு வந்­தாலும், பொலிஸ் விசா­ர­ணை­க­ளிலோ வழக்­கு­க­ளிலோ தலை­யீடு செய்யப் போவ­தில்லை என்றும், நீதித்­துறை சுதந்­திரம் பாது­காக்­கப்­படும் என்றும் உறு­தி­ய­ளித்­தி­ருந்தார்.

அது­போ­லவே, புதிய அர­சாங்கம் பத­விக்கு வந்த பின்னர் அவ­ரது பேச்­சாளர், டலஸ் அழ­கப்­பெ­ரு­மவும் கூட, நீதித்­துறை விசா­ர­ணை­களில் தலை­யி­ட­மாட்டோம் என்று உறு­தி­ய­ளித்­தி­ருந்தார்.

ஆனால் இப்­போது நடந்து கொண்­டி­ருக்­கின்ற சம்­ப­வங்கள், அர­சியல் உள்­நோக்கம் கொண்­டவை என்­பதே பொது­வான கருத்­தாக உள்­ளது.

நீதித்­துறை சுதந்­தி­ரத்தில் தலை­யீடு செய்யும் வகை­யி­லேயே நிகழ்­வுகள் பல நடந்­தே­று­கின்­றன.

பொய்­யான குற்­றச்­சாட்­டுகள் சுமத்­தப்­பட்டு பழி­வாங்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு நீதி கிடைக்கும் என்று மஹிந்த – – கோத்தா  தரப்­புகள் கூறி­யி­ருந்­தன. நீதித்­து­றையில் தலை­யீ­டுகள் செய்­யப்­ப­டாது என்று உறு­தி­ய­ளிக்­கப்­பட்­டாலும், நீதித்­துறை சுதந்­தி­ரத்தை பாது­காப்­ப­தற்கு அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை என்­பதே உண்மை.

குற்­றம்­சாட்­டப்­ப­டு­ப­வ­ருக்கு எதி­ரான விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து, போதிய சாட்­சி­யங்கள், சான்­று­க­ளுடன் பொலிஸ் தரப்பு அறிக்­கை­களை சமர்ப்­பித்தால் தான், நீதி­மன்றம் ஒன்­றினால் நீதியை வழங்க முடியும்.

மஹிந்த ராஜபக் ஷ ஆட்­சியில் இருந்த காலத்தில், இடம்­பெற்ற பல குற்றச் செயல்கள் குறித்து, ஏற்­க­னவே நீதி­மன்­றத்தில் குற்­றச்­சாட்­டுகள் சுமத்­தப்­பட்­டுள்­ளன, இன்னும் சில வழக்­குகள் விசா­ரிக்­கப்­பட்டு வந்­தன.

இவ்­வா­றான நிலையில், விசா­ர­ணை­களை மேற்­கொள்ளும் அதி­கா­ரி­களை தூக்கி அடித்து விட்டால், அந்த வழக்­கு­களை சட்­டமா அதிபர் திணைக்­களம் பார­பட்­ச­மின்றி நடந்தால் கூட நீதியைப் பெற்றுக் கொடுக்க முடி­யாது.

விசா­ர­ணை­களின் ஆணிவேரைப் பிடுங்கி விட்டு, நீதித்­துறை சுதந்­தி­ர­மாக இருக்­கி­றது என்று காட்­டு­வதில் அர்த்­த­மில்லை.

ஐ.தே.க அர­சாங்கம், தமது தரப்­பி­னரைப் பழி­வாங்­கி­யது என்­பது மஹிந்த தரப்பின் குற்­றச்­சாட்­டா­கவே இருந்­தாலும், அந்தக் குற்­றச்­சாட்­டுகள் பொய்­யா­னவை என்­பதை நிரூ­பித்து வெளியே வரு­வது தான் முறை­யா­னது.

அதற்கு மாறாக குறுக்­கு­வ­ழியில், அதி­கா­ரத்தைப் பயன்­ப­டுத்­தியோ, அச்­சு­றுத்­தியோ வழக்கு, விசா­ர­ணை­களைப் பல­வீ­னப்­ப­டுத்தி, தப்பிக் கொள்ள முனை­வது மக்கள் மத்­தியில் இன்­னமும் சந்­தே­கங்­க­ளையே வலுப்­ப­டுத்தும்.

இந்த அர­சாங்கம் பத­விக்கு வந்­த­போதே, தாங்கள் பழி­வாங்­கப்­ப­டு­வோமோ என்று சிறு­பான்­மை­யின மக்கள் அஞ்­சி­னார்கள். என்ன நடக்­குமோ என்ற கலக்கம் ஏற்­பட்­டது. ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவின் முதல் உரை இன்­னமும் அச்­சத்­தையும் ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

ஆனாலும், யாரையும் பழி­வாங்கப் போவ­தில்லை என்றும், அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் மக்­களை நம்ப வைத்துக் கொள்ள முயன்று கொண்டே அதற்கு மாறான செயல்­மு­றை­களில் ஈடு­படும் போது அர­சாங்­கத்தின் மீது மக்­க­ளுக்கு நம்­பிக்­கை­யீ­னமே அதி­க­ரிக்கும்.

இப்­போது ஏற்­பட்­டி­ருக்­கின்ற ஆட்சி மாற்றம் முழு­மை­யா­னது கூட இல்லை. தற்­போ­தைய அர­சாங்­கத்­துக்கு  பாரா­ளு ­மன்­றத்தில் பெரும்­பான்மை பலமும் இல்லை. அதனை மார்ச் 1ஆம் திகதிக்கு  முன்னர் கலைப்பதற்கான அதிகாரமும் கிடையாது.

பாராளுமன்றத் தேர்தலிலும் கூட இந்த அரசாங்கம் மக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டுமாயின், அவர்கள் மத்தியில் நம்பிக்கையை உருவாக்க வேண்டும்.

வடக்கு, கிழக்கு, மலையக மக்கள் நம்பிக்கை வைக்கும் அளவுக்கு மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கம் செயற்படவில்லை. அதனால் தான் அவர்களால் கோத்தாபய ராஜபக் ஷ மீது நம்பிக்கை வைக்க முடியாதிருந்தது.

இப்போது ஆட்சிக்கு வந்து குறுகிய காலத்துக்குள்ளாகவே அதிகாரத்தைக் கொண்டு மக்களின் நம்பிக்கையை சிதைக்க முனையும் போது, அவர்கள் இந்த அரசாங்கத்திடம் இருந்து இன்னமும் தூர விலகிச் செல்வார்களே தவிர நெருங்கி வரமாட்டார்கள்.

நீதியை எதிர்பார்த்திருக்கும் எல்லா இனமக்களின் கண்களுக்கு முன்பாகவும், அதற்கான வாய்ப்புகள் பறித்தெடுக்கப்படுகின்ற போது, அரசாங்கத்தின் மீது நம்பிக்கையீனம் தான் அதிகரிக்கும்.

அதனைத் தான் தற்போதைய அரசாங்கம் எதிர்பார்த்திருக்கிறதா ?

என்.கண்ணன்