நந்தசேன கோத்தாபய ராஜபக்ச முழுமையான வெள்ளை ஆடையில் நவம்பர் 18 ம் திகதி அனுராபுரத்தில் உள்ள ருவன்வெலிசயவில் உள்ள பௌத்த தூபியில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டவேளை வடக்குகிழக்கில் அச்சம்
பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்ற இடம்போன்று அந்த நிகழ்வில் தெரிவிக்கப்பட்ட சிங்களவர்கள் மாத்திரம் செய்தியும் முக்கியமானது என அதனை தொலைக்காட்சியில் பார்வையிட்ட தமிழர்கள் தெரிவித்தனர்.
செயற்பாட்டாளர்கள் மிகவும் அமைதியாக உள்ளனர்,அவர்கள் கட்டுரை எழுதுவதையும் அறிக்கைகள் விடுவதையும் நிறுத்திவிட்டனர்,அச்சம் வெளிப்படையாக தெரிகின்றது என யாழ்ப்பாணத்தை சேர்ந்த செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்தார்.
நல்லாட்சிக்காக பிரச்சாரம் செய்த காமினிவியாங்கொடவும் சந்திரகுப்ததேனுவரவும் தேர்தல் வாக்களிப்பு இடம்பெற்ற தினத்தன்று இலங்கையிலிருந்து வெளியேறிவிட்டனர் என செயற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இவர்கள் இருவரும் கோத்தபாயவின் பிரஜாவுரிமை குறித்து நீதிமன்றம் சென்றிருந்தனர்.
தேர்தல் வாக்களிப்பு தினத்தன்று வடமேற்கு புத்தளத்திலிருந்து மன்னாரிற்கு வாக்களிக்க முஸ்லீம்கள் பயன்படுத்திய பேருந்து தாக்கப்பட்டது.
வடக்குகிழக்கு தமிழர்கள் பெரும்பான்யைமாக ஐக்கியதேசிய கட்சியின் சஜித்பிரேமதாசவிற்கு வாக்களித்துள்ளனர். இவர் விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மகன்.
பெரும்பான்மையான தமிழர்கள் கோத்தபாய மீண்டும் அதிகாரத்திற்கு வருவதை விரும்பாத அதேவேளை தமிழ் முஸ்லீம்களும் பொதுஜனபெரமுனவின் வேட்பாளரை கடுமையாக எதிர்த்தனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு எழு மாதங்களின் பின்னர் பாதுகாப்பை அடிப்படையாக வைத்து பிரச்சாரத்தை மேற்கொண்ட கோத்தபாய ராஜபக்சவிற்கு- முஸ்லீம்கள் மீதான தாக்குதலிற்கு காரணமானவர்கள்- முஸ்லீம்கள் குறித்த எதிர்ப்புணர்வை தூண்டியவர்கள் என கருதப்பட்ட சிங்கள தேசியவாத குழுக்கள் ஆதரவளித்திருந்தன.
வடக்குகிழக்கின் தமிழ் பெரும்பான்மை மக்கள் கோத்தாபயவின் வருகையால் அச்சத்தில்
உறைந்துபோயுள்ளனர் என தெரிவிக்கின்றனர் அரசியல்வாதிகள்.
கோத்தபாய ராஜபக்சவின் வெற்றி எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் அரசியல்வாதிகளிற்கு பின்னடைவாகவும் அமைந்துள்ளது.
பெப்ரவரியில் இடம்பெறலாம் என கருதப்படும தேர்தலில் நாடாளுமன்றத்தில் தமிழர்களின் பிரதிநிதித்துவம் குறிப்பிடத்தக்க அளவிற்கு குறையலாம் என்ற கருத்து நிலவுகின்றது.
யுத்தம் முடிவடைந்து பல வருடங்களின் பின்னரும் தமிழ் மக்களின் அபிலாசைகள் இன்னமும் பூர்த்தி செய்யப்படாத நிலை நிலவுகின்றது என்கின்றார் ஈபிஆர்எல்எவ் அமைப்பின் தலைவர் சுரேஸ்பிரேமசந்திரன் தெரிவிக்கின்றார்.
தமிழர்களிற்கான ஒழுங்கான புனர்வாழ்வு திட்டங்கள் எதுவுமில்லை,முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவும் எதனையும் செய்யவில்லை,சுமார் 50,000 விதவைகள் வடக்குகிழக்கில் உள்ளனர் அவர்களே தங்கள் குடும்பத்திற்காக உழைக்கின்றனர்,சொத்துக்கள் சேதமாக்கப்ப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவிக்கின்றார்.
அவர்கள் தங்கள் கோரிக்கைகளை சஜித்பிரேமதாசவிடம் சமர்ப்பித்தனர்,தங்கள் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என அவர்கள் எதிர்பார்த்தனர்,தற்போது அவர்கள் எந்த நம்பிக்கையும் இல்லாத நிலையில் உள்ளனர்,இதனை கோத்தபாய எவ்வாறு கையாள்வார் என்பது தெரியவில்லை எனவும் அவர் தெரிவிக்கின்றார்.
பொலிஸாரிற்கு சோதனை செய்வதற்கும் கைதுசெய்வதற்கும் தடுத்துவைப்பதற்கும் அதிகாரத்தை வழங்கும் 1982 ம் ஆண்டின் பயங்கரவாத தடுப்பு சட்டம் குறித்தே தமிழர்களும் முஸ்லீம்களும் அதிகளவு அச்சம்கொண்டுள்ளனர்.
பொதுஜனபெரமுனவின் பிரச்சாரத்தின் போது விமர்சனங்களை முன்வைத்தமைக்காக தாங்கள் பழிவாங்கப்படலாம் என பலர் அஞ்சுகின்றனர், புதிய ஜனாதிபதி இந்த அச்சங்களை போக்கவேண்டும் என்கின்றார் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்.
ஐக்கியதேசிய கட்சியை ஆதரித்த தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சிவி விக்னேஸ்வரன் வேறு விதமான கருத்தினை வெளிப்படுத்துகின்றார். சிலர் புலியினால் தனது குணத்தை மாற்றமுயலாது என கருதுகின்றனர்,ஆனால் கோத்தபாய ராஜபக்ச காலத்தில் நிலைமை முன்னேற்றமடைவதற்கான வாய்ப்புள்ளதாக நான் கருதுகின்றேன்,என்கின்றார் அவர்.அவர் தமிழ் முஸ்லீம் வாக்குகளை நம்பியிருக்கவில்லை,இதன் காரணமாக நாட்டின் நன்மைக்காக அவர் செயற்படலாம் என்கின்றார் முன்னாள் முதல்வர்.
தமிழ் மக்களின் விவகாரத்திற்கு தீர்வை காண்பதற்கு இந்தியாவின் உறுதிப்பாட்டையே தமிழ் தலைவர்கள் நம்பியுள்ளனர்.
தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கும் மகிந்த அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின் போது குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டதை அனேகமானவர்கள் மறந்துவிட்டனர் என்கின்றார் சென்னையை சேர்ந்த அமைப்பின் தலைவர் என் சத்தியமூர்த்தி.
இந்தியாவை பொறுத்தவரை கோத்தாபய ராஜபக்சவின் சீனாசார்பு போக்கும் அதன் காரணமாக ஏற்படக்கூடிய புவிசார் அரசியல் சூழ்நிலைகளும் இலங்கையுடனான உறவுகளை அதிகளவிற்கு தீர்மானிப்பவையாக அமையலாம்.
இந்தியா குடும்பம், சீனா நண்பன் என மகிந்த ராஜபக்ச ஒரு முறை தெரிவித்தார்.
புதிய அரசாங்கம் இந்த சமநிலையை பேணுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.
டைம்ஸ் ஓவ் இந்தியா
தமிழில் ரஜீபன்