அன்று தைப்பொங்கல் திருநாள். கவிதாவின் வீட்டுக்கு, அவளின் நண்பர்களான அன்வரும் மேரியும் தமது பெற்றோருடன் வந்திருந்தனர். தோழர்களைக் கண்ட கவிதா, வீட்டு வாசல் வரை ஓடி வந்து, அவர்களை அன்புடன் வரவேற்றாள். “வணக்கம்! வாருங்கள் வாருங்கள்” எனக் கவிதா நண்பர்களை வரவேற்றாள். மேரியும் அன்வரும் பொங்கல் வாழ்த்துகளைக் கூறி, அன்பையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர். இது நான்காம் ஆண்டு மாணவர்களுக்கான, தமிழ்ப் பாட நூலில், ‘பண்டிகைகள்’ என்ற தலையங்கத்தின் கீழ், உரையாடல் வடிவில் அமைந்த பாடப்பரப்பு ஆகும். எம் உயிரிலும் மேலான தமிழைத் தாய் மொழியாகக் ...
Read More »கொட்டுமுரசு
தீயில் எரிந்து கரிகிப்போன அரிய பொக்கிஷம்!
நான்கு தசாப்தங்கள் கழிந்துவிட்டன. சரியாகச் சொல்வதானால் யாழ்.நூலகம் எரித்தழிக்கப்பட்டு, 38 ஆண்டுகள் கடந்துவிட்டன. தமிழர்களின் கலாசார தலைநகராகிய யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் கொழுந்துவிட்டு எரிந்த தீச்சுவாலையில் கலாசார, கல்வி, பண்பாட்டு ரீதியான இன அழிப்பு நடவடிக்கையே மேற்கொள்ளப்பட்டிருந்தது. அந்த வன்முறையின் பாதிப்பு நீறுபூத்த நெருப்பாக தமிழ் மக்கள் மனங்களில் இன் னும் கனன்று கொண்டிருக்கின்றது. மாவட்ட சபைகளுக்கான தேர்தல் நடைபெற்ற தருணம் அது. அந்தத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி முழுமையாக வெற்றி பெறுவதை எப்படியாவது தடுத்து, குறைந்தது ஒரு ஆசனத்தையாவது கைப்பற்றிவிட வேண்டும் ...
Read More »நேசமணியும், நரேந்திர மோடியும்..!
புறக்கணித்தல் வலி தரும். ஒருவரை முற்றுமுழுதாக விரும்பாதிருத்தலை விடவும் அவரை வேறுபடுத்திப் பார்ப்பதும், புறக்கணிப்பதும் ஆகக்கூடுதலான சேதத்தை ஏற்படுத்தும் என்பார், எழுத்தாளர் ஜே.கே.ரோவ்லிங்ஸ். உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேசத்தில், வடக்கத்தியர்களால் நீண்டகாலமாக மதராஸிகள் என்று புறக்கணிக்கப்பட்டு வேறுபடுத்தப்பட்ட தமிழர்கள். இந்த மக்கள் புறக்கணிப்பை புறக்கணித்திருப்பதன் மூலம் அரசியல் ரீதியான பதிலடி கொடுத்திருக்கிறார்கள். லோக் சபா தேர்தலில் வாக்குகள் மூலம் பாரதிய ஜனதா கட்சியை நிராகரித்ததன் மூலம் ஜனநாயக ரீதியில் பதிலடி கொடுத்த தமிழர்கள், சர்வதேச தகவல் வலைப்பின்னலில் நேசமணி மீதான நேசிப்பின் மூலம் நரேந்திர ...
Read More »சீனா உருவாக்கும் ‘நிழற்படை’
ஏப்ரல் 21ஆம் திகதி கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு நகரங்களில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை, சக்தி வாய்ந்த பல்வேறு நாடுகள், தமது நலன்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்குப் பயன்படுத்திக் கொள்ள ஆரம்பித்துள்ளன. சீனாவும் அதற்கு விதிவிலக்கானது அல்ல என்பதை, நிரூபித்திருக்கிறது. அண்மையில் சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, கடந்த 14ஆம் திகதி, சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார். ‘ஆசிய நாகரிகங்களின் கலந்துரையாடல்’ மாநாட்டில் பங்கேற்பதற்காகவே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தப் பயணத்தை மேற்கொண்டார் என்று கூறப்பட்டாலும், அந்தப் பயணத்தின் ...
Read More »புதிய பாதையின் அவசியம்!
உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களின் பின்னணியிலும் கொழும்பு துறைமுக நகர நிர்மாணத்தின் பின்னணியிலும் நாட்டின் மீது அக்கறையும் கரிசனையும் கொண்டுள்ள சர்வதேச நாடுகளின் கவனத்தைத் தமிழ் அரசியல் தரப்பினர் தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி காய் நகர்த்தல்களை மேற்கொள்ள வேண்டும். இதன் ஊடாக தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளையும் பிரச்சினைகளையும் தீர்த்துக் கொள்வதற்கான புதிய வழிமுறையொன்றில் பயணம் செய்வதற்கு முயற்சிக்க வேண்டும். இத்தகைய முயற்சிக்கான சூழலும் நாட்டின் நிலைமைகளும் எவ்வாறிருக்கின்றன என்று நோக்குவது முக்கியம். கொழும்பிலும் மட்டக்களப்பிலும் தொடர்ச்சியாகத் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை ...
Read More »இலங்கை சிவசேனை: பேசப்பட வேண்டிய அயோக்கியர்களின் யோக்கியதை!
எமது சமூகம், முற்போக்கான திசைவழியில் பயணப்படுவது பலரது நலன்களுக்கு ஆபத்தானது. அவர்கள் மதத்தின் பெயராலும், சாதியின் பெயராலும் மக்களைப் பிரிக்கும் காரியத்தைக் கனகச்சிதமாகச் செய்கிறார்கள். இதைச் செய்யப் புறப்பட்டிருக்கும் இன்னொரு குழுதான் இலங்கை சிவசேனை. இலங்கையில் மக்களை மதரீதியாகப் பிரித்து, தமது அரசியல் நலன்களை நிறைவேற்றிக் கொள்ளும் வேலையையே இவர்கள் செய்கிறார்கள். இந்த ஆபத்துகளை, நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். அண்மையில், பொதுபல சேனா அமைப்பின் தலைவர் ஞானசார தேரரை விடுவித்ததைப் பாராட்டி, அறிக்கையொன்றை வெளியிட்ட, இலங்கை சிவசேனையின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம், ஞானசாரரின் ...
Read More »அரசியல் தந்திரோபாயம்!
நாட்டில் ஜனநாயகம் கோலோச்சுகின்றது. அது ஜனாதிபதி ஆட்சி முறையைக் கொண்டது என்று கூறப்படுகின்றது. ஆனால், அந்த ஜனநாயகத்தில், தானே தன்னிகரில்லாத உயர்ந்த சக்தி என்பதை நிறைவேற்று அதிகாரம் மீண்டும் ஒரு முறை உரத்து வெளிப் படுத்தி இருக்கின்றது. நிறைவேற்று அதிகாரம், நீதித்துறை, சட்டவாக்கம் ஆகிய மூன்றுடன் சமூகத்தின் காவல் நாய் என வர்ணிக்கப்படுகின்ற ஊடகத்துறையையும் சேர்த்து நான்கு தூண்களில் கட்டி எழுப்பப்பட்டிருப்பதே ஜனநாயகம் என்பதே கோட்பாடு. இந்தக் கோட்பாட்டின் அடிப்படையில் நான்கு சக்திகளும் தம்மளவில் தனித்துவமானவை. ஓன்றையொன்று மிஞ்ச முடியாது. ஒன்று மற்றொன்றை ...
Read More »ஆள்வதற்கான விருப்பமும் மகிழ்வதற்கான விருப்பமும்!
நாட்டின் சமகால நெருக்கடிகளுக்கு மத்தியிலும் முல்லைத்தீவு, வற்றாப்பளை அம்மனைத் தரிசித்தால் எமது நெருக்கடிகள் தீரும் என்ற அளப்பரிய நம்பிக்கையுடன், அம்பாளின் வைகாசிப் பொங்கலுக்கு (மே20) சென்றிருந்தோம். அன்னையிடம் மக்கள் தங்களது ஆற்றொனாத் துன்பங்களைக் கொட்டிக் கதறி வழிபட்டனர். மனதில் அடக்கி வைத்திருக்கும் ஆதங்கங்களை, ஆற்றாமைகளை இவ்வாறாகக் கொட்டுவது ஒருவித உளவியல் ஆற்றுப்படுத்தல் ஆகும். அன்றைய போக்குவரத்தில், பலரோடு பலவித எண்ணங்களைப் பகிரும் சந்தர்ப்பங்கள் நிறையவே ஏற்பட்டன. அதில் ஒருவர், ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர்; மற்றையவர் வணிகம் செய்பவர். இருவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள். இன்றைய பத்தியை ...
Read More »தாமரை ஏன் நனி சைவத்தைப் பின்பற்றுகிறார்?
இறைச்சி, பால் பொருள்களின் தேவை குறையும்போது பண்ணைகளின் எண்ணிக்கை குறையும். இவையனைத்தையும் யோசித்துதான் நான் இந்த உணவுமுறைக்குத் திரும்பினேன். இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி ஒரு நனிசைவர். உலகளவில் பலர் இந்த உணவு முறையைப் பின்பற்றுகிறார்கள். ‘முன்பெல்லாம் காபி இல்லாமல் என் பொழுதுகள் விடியாது, முடியாது. அந்த அளவுக்குக் காபி என் வாழ்க்கையோடு கலந்திருந்தது. குறிப்பாகப் பாடல் எழுதும் நேரங்களில் ஆவி பறக்க காபி வேண்டும். ஆனால், இப்போது முற்றிலும் காபியைத் தவிர்த்துவிட்டேன். காபி மட்டுமல்ல பால், நெய், மோர், தயிர் எனப் ...
Read More »பாதிக்கப்பட்ட மக்களை கவனத்தில் கொள்ளுங்கள்!
யுத்தம் முடிவடைந்து பத்து வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் இதுவரை யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி நிலைநாட்டப்படவுமில்லை. நிவாரணங்கள் சரியான முறையில் அந்த மக்களை சென்றடையவுமில்லை. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட மக்களாகவே இருப்பதுடன் நீதிக்காக தொடர் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர். நாட்டின் தற்போதைய இக்கட்டான சூழலில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் விடயங்கள் குறித்து கவனம் செலுத்துவது முக்கியத்துவமற்றது என யாரும் கருதிவிடக் கூடாது நாட்டின் தற்போதைய நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுத்து மக்களுக்கு பாதுகாப்பான ஒரு சூழலை உருவாக்கிக் கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் ...
Read More »