கொட்டுமுரசு

தமிழ்க் கட்சிகளின் கூட்டு நிலைக்குமா?

கடந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது யாழ் பல்கலைக்கழகத்தில் தமிழ் கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் பல்கலைக்கழக மாணவர்கள் ஈடுபட்டார்கள். ஒரு கட்டத்தில் 5 கட்சிகள் கூட்டாக ஒரு பொது ஆவணத்தில் கையெழுத்திட்டன. ஐந்து கட்சிகளும் கூட்டாக கையொப்பமிட்ட பின் அதில் பங்குபற்றிய ரெலோ அமைப்பின் பிரதானி சிறீகாந்தா பல்கலைக்கழக மாணவர்களை நோக்கி பின்வரும் தொனிப்படக் கூறினார்….முன்பு விடுதலைப் புலிகள் இயக்கம் துப்பாக்கிகள்; பீரங்கிகள் ; படைபலத்தை வைத்துக் கொண்டு தமிழ்க் கட்சிகளை ஒருங்கிணைத்தது. ஆனால் இன்றைக்கு நீங்களோ துப்பாக்கிகளோ பீரங்கிகளோ படைபலமோ எவையும் இன்றி ...

Read More »

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு?

நடந்து முடிந்த தேர்தலில் மாவை சேனாதிராஜா தோல்வியுற்று இருந்திருந்தால் இன்று இந்த கடையடைப்பு வெற்றி பெற்றிருக்குமா?என்று மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்த் தேசிய வாழ்வுரிமை அமைப்பின் தலைவரான சிவகரன் கேட்டார். அவர் ஏன் அப்படி கேட்டார்? ஏனெனில் நடந்த முடிந்த கடையடைப்பில் ஒருங்கிணைப்பாளராக செயற்பட்டது மாவை சேனாதிராஜாதான். மாவை அடுத்த மாகாணசபைத் தேர்தலை இலக்கு வைக்கிறார் என்றும் எனவே தோல்வியில் இருந்து மீண்டு வருவதற்கு இது போன்ற சந்தர்ப்பங்களைப் பயன்படுத்துகிறார் என்றும் பொதுவாக ஒரு கணிப்பு உண்டு. அவர் உண்மையாகவே அப்படி தன்னுடைய அடுத்த ...

Read More »

சங்கர்: சிறுவர்களின் ஓவிய அரசர்

ஒரு தலைமுறையின் இளவயதுக் கொண்டாட்ட இதழான ‘அம்புலிமாமா’வின் பாத்திரங்களுக்குத் தன் தூரிகையால் உயிர் கொடுத்தவரான ஓவியர் சங்கர் விடைபெற்றுக்கொண்டார். காலத்தில் அவரும் ஒரு கதையாகிவிட்டார். இன்னும் மூன்றாண்டுகளில் நூற்றாண்டைத் தொடவிருந்த சங்கர் தொண்ணூறுகளிலும் தூரிகையுடன் இயங்கிவந்தவர். ஓவியப் பள்ளியின் உருவாக்கம் 1924 ஜூலை 19-ல் ஈரோடு அருகில் உள்ள கிராமம் ஒன்றில் பிறந்தவர் சங்கர். இயற்பெயர் கே.சி.சிவசங்கரன். தனது 10-வது வயதில் தாய், தம்பியுடன் சென்னைக்கு வந்தவர். பிராட்வே கார்ப்பரேஷன் பள்ளியில் படிப்பைத் தொடர்ந்தார். பள்ளிக் காலத்திலேயே தனது ஓவியத் திறமையால் சக மாணவர்களை ...

Read More »

வெளிவிவகாரத்தைக் கையாள்வதற்கான குழு ஒன்றை தமிழ்க் கட்சிகள் இணைந்து அமைக்க வேண்டும்

“தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து தமிழ் மக்களின் சார்பில் வெளிவிவகாரத்தைக் கையாள்வதற்கான குழு ஒன்றை அமைக்க வேண்டும். குறிப்பாக இந்தியாவையும், ஐ.நா. வையும் கையாளக் கூடிய குழு அவசியம். பிரத்தியேகமாக இந்தியாவைக் கையாள்வதற்கான தனியான குழு ஒன்றை அமைப்பது கூட பயனுள்ளதாக இருக்கும்” என ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்திருக்கின்றார். அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தம் குறித்து தற்போது இடம்பெறும் சர்ச்சை மற்றும், தமிழ்க் கட்சிகளிடையேயான இணக்கப்பாடு – எதிர்கால வேலைத் திட்டம் என்பன தொடர்பில் ‘தினக்குரல்‘ இணையத் தளத்துக்குக் கருத்து ...

Read More »

ஜே.ஆர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை உருவாக்கியது ஏன்?

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தன நாட்டின் ஸ்திரதன்மை மற்றும் பொருளாதார சுதந்திரம் ஆகியவற்றை உறுதிசெய்வதற்காகவே நிறைவேற்று அதிகார முறையை உருவாக்கினார் என அவரது பேரன் பிரதீப்ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார். ஜனநாயகத்துக்குள் சர்வாதிகாரம் என்ற நூலை வெளியிட்டு உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். நாடு எதிர்கொண்டிருந்த பல சவால்களை எதிர்கொண்டு அகற்றுவதற்கு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை உதவியது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஆக்கிரமிப்புகளை கட்டுப்படுத்தி முறியடிப்பதற்கு நிறைவேற்று அதிகார முறை உதவியது வெளிநாட்டு இராணுவங்களின் ஊருடுவல்கள்,கிளர்ச்சி மற்றும் நாட்டை அழித்த யுத்தம் ஆகியவற்றை எதிர்கொள்ள அது ...

Read More »

காவியுடைக் காடையர்களும் ஆட்சியின் காவலர்களா?

சில தினங்களுக்குமுன் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடந்த ஒரு வெட்கக்கேடான சம்பவம் இலங்கையின் பௌத்த மக்களுட்பட மனிதாபிமானம் கொண்ட எந்த ஒரு பிரஜைக்கும் மிகக் கவலையையும், ஏன் ஆத்திரத்தையும் கொடுத்திருக்கலாம். மட்டக்களப்பு நகரின் மங்களறாமய விகாரையைச் சேர்ந்த அம்பிற்றிய சுமணரத்தன தேரர் என்ற ஒரு காவியுடை தரித்த நபர் தன்னை ஒரு பௌத்த துறவியெனப் பறைசாற்றிக் கொண்டு அரசாங்க தொல்லியற் திணக்கள அதிகாரிகள் மூவரை (இருவர் தமிழர், ஒருவர் சிங்களவர்), அகழ்வாய்வுக்கென குறிவைக்கப்பட்ட ஒரு நிலத்தை அவர்கள் கனரக யந்திரத்தைக்கொண்டு தரைமட்டமாக்கினரென்று குற்றஞ்சாட்டி, அவர்களை அடித்துக் காயப்படுத்தி, ...

Read More »

அச்சாப்பிள்ளை அரசியல் தான் நடக்கின்றதா?

2009ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் தமிழ்க் கட்சிகள் அல்லது தமிழ் அரசியல் பிரதிநிதிகள் அச்சாப்பிள்ளை அரசியலில் ஈடுபட்டு வருவதையே காண முடிகின்றது. அதாவது இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்கு அமைவாகச் செயற்பட்டுச் சிங்கள ஆட்சியாளர்களின் மனங்களையும் நோகடிக்காமல், அதேவேளை தமிழ்த் தேசிய அரசியலையும் தீவிரமாகப் பேசிக் கொண்டு சொத்துச் சுகங்களையும் அனுபவித்துக் கொண்டு தம்மைத் தியாகிகளாகவும் வெளிப்படுத்த முற்படுகின்றனர். ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக்காக உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்த தியாகி திலீபன் நினைவேந்தல் நிகழ்வுக்கு இலங்கை ஒற்றையாட்சி அரசின் யாழ் நீதவான் ...

Read More »

மோடியின் கருத்திற்கு சிறிலங்கா உறுதிமொழி எதனையும் வழங்கவில்லை

13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தவேண்டும் என இந்திய பிரதமர் விடுத்த வேண்டுகோளிற்கு சிறிலங்கா உறுதிமொழி எதனையும் வழங்கவில்லை. நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுப்பதன் மூலம் சிறிலங்கா  அரசாங்கத்தை தமிழ் மக்களின் ஐக்கிய இலங்கைக்குள்ளான சமத்துவம் நீதி கௌரவம் குறித்த அபிலாசைகளுக்கு தீர்வை காணுமாறு கேட்டுக்கொண்டுள்ள இந்திய பிரதமர் 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். மக்களின் ஆணை மற்றும் அரசமைப்பு ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதன் மூலமும் நல்லிணக்கதத்தை ஏற்படுத்துவதன் மூலமும் தமிழ் மக்கள் உட்பட அனைத்து இன மக்களினதும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை இலங்கை முன்னெடுக்கும் என ...

Read More »

திலீபனை முன்னிறுத்தி சில கேள்விகள்

திலீபனின் ஏன் உண்ணாவிரதம் இருந்தார்? யாருக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தார்? அவர் இலங்கை இந்திய அரசுகளுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தார். இரண்டு அரசுகளிடமும் நீதிகேட்டு உண்ணாவிரதம் இருந்தார். அதாவது திலீபனின் உண்ணாவிரதம் எனப்படுவது நாட்டுக்கு உட்பட்டது அல்ல.  அதற்கு ஒரு பிராந்திய பரிமாணம் உண்டு. ஈழத் தமிழர்களின் ஆயுதப் போராட்டம் பிராந்திய பரிமாணத்தை அடைந்ததன் விளைவாக எழுதப்பட்டதே இந்திய – இலங்கை உடன்படிக்கை. அந்த உடன்படிக்கையின் போதாமைகளையும் இயலாமைகளையும் உணர்த்துவதற்காகவே திலீபனும் பூபதியும் உண்ணாவிரதம் இருந்தார்கள். அதாவது மறு வளமாகச் சொன்னால் இந்தியத் தலையீட்டின் ...

Read More »

சுமணரதன தேரருக்கு தமிழில் வந்த நீதிமன்ற உத்தரவு

மட்டக்களப்பில் ஆம்பிடியே சுமணரதன தேரருக்கு இன்று தமிழில் நீதிமன்ற உத்தரவு அனுப்பப்பட்டுவிட்டதாம். அதனால் அவர் அந்த உத்தரவை புறக்கணிக்கிறாராம். நீதிமன்றத்துக்கும் போகப்போவதில்லையாம். அவருக்கு அவரின் மொழியில் தான் அனுப்பியிருக்க வேண்டும். அதில் சந்தேகத்துக்கு இடமில்லை. ஆனால் அதனால் நீதிமன்றத்துக்கு போகப்போவதில்லை உத்தரவை புறக்கணிக்கிறேன் என்று பொலிஸாரிடம் திருப்பிக்கொடுத்து அனுப்பும் உரிமையை இலங்கையில் ஏனைய பிரஜைகளுக்கும் உண்டா? குறிப்பாக இத்தனை காலம் அரச நிறுவனங்களிலும் இருந்தும் தமிழர்களுக்கு கிடைக்கின்ற அறிவித்தல்கள், அரச கடிதங்கள் அனைத்தும் தமிழில் தான் கிடைக்கின்றனவா? ஆம்பிடியே சுமணரதன தேரருக்கு எதிராக 70 ...

Read More »