முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தன நாட்டின் ஸ்திரதன்மை மற்றும் பொருளாதார சுதந்திரம் ஆகியவற்றை உறுதிசெய்வதற்காகவே நிறைவேற்று அதிகார முறையை உருவாக்கினார் என அவரது பேரன் பிரதீப்ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார்.
ஜனநாயகத்துக்குள் சர்வாதிகாரம் என்ற நூலை வெளியிட்டு உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாடு எதிர்கொண்டிருந்த பல சவால்களை எதிர்கொண்டு அகற்றுவதற்கு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை உதவியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆக்கிரமிப்புகளை கட்டுப்படுத்தி முறியடிப்பதற்கு நிறைவேற்று அதிகார முறை உதவியது வெளிநாட்டு இராணுவங்களின் ஊருடுவல்கள்,கிளர்ச்சி மற்றும் நாட்டை அழித்த யுத்தம் ஆகியவற்றை எதிர்கொள்ள அது உதவியது என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் அமெரிக்கா போன்று தொடர்ச்சியாக அமெரிக்க காங்கிரசுடன் மோதலில் ஈடுபடும் ஒன்றாக மாறாவில்லை என பிரதீப்ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை உருவாக்கிய பின்னர் அது நாடாளுமன்றத்தை கண்ணிற்கு தெரியாததாக மாற்றும் ஒன்றாக மாறுவதை தவிர்ப்பதற்காக பத்து உறுதிமொழிகளை வழங்கினார் என பிரதீப் தெரிவித்துள்ளார்.
அவர் ஜனாதிபதிக்கு என தனியான குழுவொன்றை நியமிக்காமல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் ஊடாக செயல்படுவது என தீர்மானித்தார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மிகவும் வலுவான ஜனாதிபதி செயலாளர் பதவியை உருவாக்குவதில்லை என தீர்மானித்தார் எனவும் பிரதீப் குறிப்பிட்டுள்ளார்.
இந்த உறுதிமொழிகள் இலங்கையில் அமெரிக்கா போன்று ஒரு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை தோன்றுவதை தவிர்த்தன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Eelamurasu Australia Online News Portal