கொட்டுமுரசு

8652 கோடி ரூபா பண உதவியை இழந்த இலங்கை : மைத்திரி கையெழுத்து இடாதது ஏன்?

2015 ஆம் ஆண்டு புதிய அரசாங்கம் தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, இலங்கைக்கு மேற்கத்தைய நாடுகளிலிருந்து பெருமளவில் பொருளாதார வளங்கள் வந்து சேரப் போகின்றன என்றும் அதன் விளைவாக நாட்டில் பொருளாதார வளர்ச்சி ஏற்படுவதோடு அதனால் பொதுமக்களது சுபீட்சம் பெருகும் என்றும் ஒருவிதமான எதிர்பார்ப்பு நிலவியது. சர்வதேச சமூகம் எதிர்பார்த்திருந்த வகையிலும் அது தொடர்பாக அழுத்தங்களை ஏற்படுத்தி வந்திருந்தமைக்கும் அமைவாக இலங்கை அரசாங்கமும் மனித உரிமை நிலைவரங்கள் தொடர்பில் நேர்மறையாக நாட்டில் செயற்பட ஆரம்பித்ததனால் இவ்வாறான எதிர்பார்ப்புக்கள் வலுப்படுத்தப் பட்டிருந்தன. இதற்கு முன்னர் ஆட்சியில் இருந்த ...

Read More »

தமிழர் அரசியல்: கிழக்கில் பிரதிநிதித்துவம் பறிபோகும் அபாயம்!

தமிழ்த் தாயக உரிமைப் போரும் அதன் மதிப்பும், அதன் பின்புலத்தில் காணப்படும் தமிழ்த்தேசிய அரசியல் போக்கும், என்றுமில்லாத அளவுக்குத் தமிழ் மக்களிடையே அதிக காழ்ப்புணர்வையும் தமது எதிர்கால இருப்பு தொடர்பான அச்ச உணர்வையும் ஏற்படுத்தியுள்ளன. இந்நிலைமைகள், வடக்கு, கிழக்குத் தமிழர் தொடர்பான பொருளாதாரத்தையும் பண்பாட்டையும், வரலாற்றையும், கல்வியையும், அபிவிருத்தியையும், தொழிற்றுறையையும், கலைத் துறையையும் மிக மோசமானளவு  பின்னடைவுத் தளத்துக்குக் கொண்டுசென்று கொண்டிருக்கின்றன. காலத்துக்கு காலம், செயற்றிறனற்ற கொள்கைப் பரப்புரைகள் மூலமும் வாய்ச் சவாடல்கள் மூலமும் அரசியல் ஏமாற்று வித்தைகளைக் காட்டி, வாக்குப் பெற்று, சுயநல ...

Read More »

தமிழ் குடும்பத்தை நாடு கடத்த தயாராகின்றது அவுஸ்திரேலியா!

ஏபிசி தமிழில் – ரஜீபன் தமிழ் குடும்பத்தை அவுஸ்திரேலியா நாடு கடத்துவதற்கு தயாராகும் அதேவேளை இலங்கையில் தொடர்ந்தும் தாங்கள் ஒடுக்குமுறைக்கு உள்ளாவதாக தமிழர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர் என ஏபிசி செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து அவுஸ்திரேலியாவின் ஏபிசி நியுஸ் மேலும் தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலிய அரசாங்கம் குயின்ஸ்லாந்தின் பைலோ நகரிலிருந்து தமிழ் குடும்பத்தினை இலங்கைக்கு நாடு கடத்த தயாராகின்றது அதேவேளை அவர்கள் அங்கு சித்திரவதைக்கு உள்ளாகலாம் என அவர்களிற்கு சார்பாக குரல்கொடுப்பவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவில் பிறந்த இரண்டு வயது தருணிகாவே இந்த விவகாரத்தில் முக்கியமானவராக ...

Read More »

‘ ஒரு நாடு, இரு சமூக அமைப்புமுறைகள் ‘ பயன்தரவில்லை!

சீனாவின் ஹொங்கொங் விசேட நிருவாகப் பிராந்தியத்தில் வன்முறை ஆர்ப்பாட்டங்களை மூளவைத்த சர்ச்சைக்குரிய நாடுகடத்தல் சட்டமூலம் நிறுத்திவைக்கப்பட்டிருக்கின்றது.ஆனால், மார்ச் மாதத்தில் தொடங்கிய ஆர்ப்பாட்டங்கள் இன்னமும் தொடர்கின்றன ;அவற்றின் தீவிரம் அதிகரித்து பரவலாக வன்முறைகளும் இடம்பெறகின்றன.அதனால் கிழக்காசியாவின் பொருளாதார இயக்கமையம் என்று வர்ணிக்கப்படும் அந்த பிராந்தியம் முடங்கிப்போய்க்கிடக்கிறது. சீனாவில் இருந்து தப்பியோடிவரும் குற்றவாளிகள் தலைமறைவாக இருப்பதற்கு வசதியான ஒரு ‘ புகலிடமாக ‘ ஹொங்கொங் மாறுவதற்கு காரணமாக இருக்கும் சட்ட ஓட்டைகளை மூடுவதை நோக்கமாகக்  கொண்டதே சீன நாடுகடத்தல் சட்டமூலம்.ஆனால், அதேவேளை சீனாவின் கொள்கைகளை  எதிர்க்கும் ஹொங்கொங் ...

Read More »

தமிழ் மக்களும் ஜே.வி.பி.யும் !

தேசிய மக்கள் சக்தி இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளரான ஜனதா விமுக்தி பெரமுன ( ஜே.வி.பி. ) வின் தலைவர் அநுரா குமார திசாநாயக்க கடந்தவாரம் ‘ கேசரி ‘ க்கு வழங்கிய நேர்காணலில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கு இருக்கக்கூடிய தெரிவு குறித்து தெரிவித்திருக்கும் கருத்து விரிவான விமர்சனத்துக்குள்ளாக்க வேண்டிய ஒன்றாக இருக்கிறது. வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் ஏனைய தேர்தல்களில் தமிழ் அரசியல் கட்சிகளை ஆதரிக்கலாம்.ஆனால், ஜனாதிபதி தேர்தல் என்று வரும்போது தமிழ் மக்கள் தென்னிலங்கை கட்சியொன்றை ஆதரிப்பதென்றால், ...

Read More »

மஹிந்த ராஜபக்‌ஷவின் பேரம்!

வரப்போகும் ஜனாதிபதித் தேர்தலில், தமிழ் மக்களின் வாக்குகள் தீர்க்கமானவையாக இருக்கும் என்பதால், பேரம் பேசுவதற்கு இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற கருத்து, பரவலாக இருக்கின்ற நிலையில், மஹிந்த தரப்பே பேரத்தை ஆரம்பித்து வைத்திருக்கிறது. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை முன்வைத்து, தமிழ்க் கட்சிகள் தான் ஜனாதிபதி வேட்பாளர்களிடம் பேரம் பேசும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதும், இதுவரையில் அவ்வாறான எந்தப் பேரமும் நடந்ததாகத் தெரியவில்லை. ஏற்கெனவே மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சியில் இருந்த காலத்தில், அந்த அரசாங்கத்துடன் ஒட்டி, உறவாடிய தமிழ்க் கட்சிகள், எந்தப் பேரத்துக்கும் ...

Read More »

காஷ்மீரும் வட அயர்லாந்தும் எங்கே ஒன்றுபடுகின்றன ? எங்கே வேறுபடுகின்றன ?

ஜூலை நடுப்பகுதியில் ஒரு நாள் பெல்பாஃஸ்டில் இருந்து டப்ளினுக்கு பஸ்ஸில் பயணம் செய்தேன். பெல்பாஃஸ்ட் வட அயர்லாந்தில் இருக்கிறது ; மதத்தை அடிப்படையாகக் கொண்ட தேசியவாதத்தினால் பளவுபடுத்தப்பட்ட  தீவின் ஒரு பகுதியான அயர்லாந்து குடியரசில் டப்ளின் இருக்கிறது.ஆனால், சோதனை நிலையம் எதுவும் இருக்கவில்லை ; வீதி அறிவிப்புகளில் மைல்கள் கிலோமீட்டர்களாக மாறியபோது, விளம்பர பதாகைகளில் விலைகள் பவுண்களில் இருந்து யூரோவாக மாறியபோது, எழுத்துக்களில் அசையழுத்தக்குறியைக் கண்டபோது எல்லையைக் கடந்துவிட்டேன் என்பதை புயிந்துகொண்டேன். இன்னொரு நாட்டில் நான் இருப்பதை எனது கையடக்க தொலைபேசி காட்டியது.   ...

Read More »

தொடாவிடினும் சுடும் அமேசன் தீ !

இந்தப் பூமி  தனி ஒருவருக்கு  சொந்தமானது அல்ல. மற்றும் மனிதன் என்ற ஓர் உயிரினம்  மட்டும் வாழ்வதற்கானதும் அல்ல. இது எல்லோருக்கும் எல்லா ஜீவராசிகளுக்கும் உரியது. மனிதன் எப்படி நீரை, காற்றை, நிலத்தை அனுபவிக்கிறானோ அதே உரிமை சிங்கத்துக்கும் சிட்டுக்குருவிக்கும் ஏன் கண்களுக்குப் புலப்படாத சிறு புழுவுக்கும் உள்ளது. இயற்கையின் படைப்பு எல்லோருக்குமானதே. ஆனால் மனிதன்மையை அழித்துவிட்டு மனிதன் என்ற  உடலுக்குள் இருக்கும் பேராசை கொண்ட  கொடூரமான பெருவிலங்குகள்  இயற்கையின் கொடைகளை அழித்து அத்தனையையும் வெறும் பணமாக்க முனைகின்றன. இந்தப் பேராசையின் விளைவுகள் உலகில் ...

Read More »

தமிழ் நோக்கு நிலையிலிருந்து ஜனாதிபதித் தேர்தலை அணுகுதல்!

தற்போது கிடைத்திருக்கும் தகவல்களின் படி மூன்று தரப்புகள் போட்டியிடுகின்றன. இம்மூன்று தரப்புகளையும் தமிழ் நோக்கு நிலையிலிருந்து அணுகலாம். முதலில் தமிழ் நோக்கு நிலையிலிருந்து அணுகுவது என்றால் என்ன? தமிழ் மக்களிடம் பல கோரிக்கைகள் உண்டு. போர்க்குற்ற விசாரணைகள், அதற்கான அனைத்துலகப் பொறிமுறை, இனப்படுகொலைக் குற்றச்சாட்டுக்கு எதிரான நீதி போன்ற கோரிக்கைகள் தமிழ் மக்களிடம் உண்டு. இக்கோரிக்கைகள் எவற்றையும் இப்பொழுது அரங்கில் உள்ள எந்த ஒரு தரப்பும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. எனவே அடிப்படையான கோரிக்கையும் குறைந்தபட்ச கோரிக்கையுமான இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பதன் அடிப்படையில் மேற்படி மூன்று தரப்புக்களிடமும் ...

Read More »

ஜனாதிபதித் தேர்தல்; இலவு காத்த கிளியின் கதை

எல்லோரும் ஜனாதிபதித் தேர்தலை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். நடைபெறவுள்ள தேர்தல், இலங்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற மாயை, ஊடகங்களால் கட்டியெழுப்பபட்டுள்ளது. சுதந்திரத்துக்குப் பிந்தைய இலங்கையின் அரசியல் வரலாற்றில், ஒவ்வொரு ஜனாதிபதித் தேர்தலின் போதும் நாடாளுமன்றத் தேர்தலின் போதும், இவ்வாறான ஆலவட்டங்கள் கட்டப்படுவதுண்டு. இறுதியில், எதிர்பார்ப்புகள் காற்றுப்போன பலூன் போலாவதும் பின்னர், அடுத்த தேர்தலில் நம்பிக்கை வைப்பதுமெனத் தொடர்ச்சியாக நடைபெற்று வந்துள்ளது. நடைபெறவுள்ள தேர்தலும், அதற்கு விலக்கல்ல. இப்போது எல்லோரின் கவனமும் ஜனாதிபதி வேட்பாளர்கள் யார், யார் யாருடன் கூட்டணி வைப்பார்கள், யாருக்கு யார் ஆரவு ...

Read More »