பத்திரிகையாளர் கௌரி லங்கேஷின் இறுதிக் கணங்களைப் பற்றி அவரது சகோதரியின் மகள் இஷா லங்கேஷ் இணையத்தில் எழுதிய நினைவுக் கட்டுரை வைரலாகிக்கொண்டிருக்கிறது. அம்மா கவிதா லங்கேஷின் இயக்கத்தில் ‘சம்மர் ஹாலிடேஸ்’ படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறாரே அதே சிறுமிதான். ‘அம்மாவைக் கொலைசெய்தவர்களின் மீது எனக்கு கோபம் கோபமாக வந்தது. அவர்களையும் அதேபோலச் செய்ய வேண்டும், பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்று தோன்றியது. அந்த வலியை அவர்கள் உணர வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், அதனால் என் அம்மா திரும்ப வர மாட்டார். பழிக்குப் பழி ...
Read More »கொட்டுமுரசு
தமிழ் ஆளுமைகளைக் கொண்டாடுவோம்!
‘தமிழ் திரு’ வாழ்நாள் சாதனையாளர் விருது: கோவை ஞானி கோவையில் தமிழாசிரியராக 30 ஆண்டுகள் பணியாற்றிய கோவை ஞானி மார்க்ஸிய நெறியில் தமிழிலக்கிய ஆய்வில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டுவருகிறார். தமிழ் மரபையும் மார்க்ஸியத்தையும் இணைத்ததன் மூலம் தமிழ் மார்க்ஸியத்தைப் படைத்துள்ளார். ‘புதிய தலைமுறை’, ‘வானம்பாடி’, ‘மார்க்சிய ஆய்விதழ்’, ‘பரிமாணம்’, ‘நிகழ்’, ‘தமிழ் நேயம்’ என்று தமிழ்ச் சிற்றிதழ் இயக்கத்தில் முக்கியப் பங்கு வகித்தவர். கோவை வட்டாரத்தில் சிறந்த தமிழ் அமைப்புகளை உருவாக்கியதோடு சிறந்த ஆய்வாளர்களை, கட்டுரையாளர்களை, படைப்பாளிகளையும் உருவாக்கினார். கடந்த 40 ஆண்டுகளில் ...
Read More »நிதி அல்ல நீதியே வேண்டும்!
ஜெனீவா மனித உரிமைச் சபை எதிர்வரும் மார்ச் மாதம் கூடவுள்ள நிலையில், 2009 ஆம் ஆண்டுக்கு முன்னரான காலத்திலும் அதற்குப் பின்னரான காலத்திலும் கொல்லப்பட்ட, கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களது குடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங்க இலங்கை அரசாங்கம் தீவிர முயற்சி எடுத்துள்ளது. ஆனால் நஷ்டஈட்டை விட நீதி கிடைக்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்டவர்களின் எதிர்பார்ப்பு என தமிழ் ஊடகவியலாளர்கள் கூறியுள்ளனர். அத்துடன் இந்த நஷ்டஈடும் உரிய முறையில் வழங்கப்படுமா என்பது குறித்தும் ஊடக அமைப்புகளின் பிரதிநிதிகளும் பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்களும் சந்தேகம் ...
Read More »ஆப்கானிடம் படித்த பாடங்கள்!
ஒரு இராணுவத்தின் எச்சமிச்சம் ; வரலாற்றில் இடம்பெற்ற இராணுவ மோதல்களின் காட்சிகளை தத்ரூபமாக வரைவதில் புகழ்பெற்ற 19 ஆம் நூற்றாண்டின் பிரிட்டிஷ் பெண் ஓவியர் எலிசபெத் பட்லர் வரைந்த மெழுகுச்சேலை ஓவியம் முதலாவது இங்கிலாந்து – ஆப்கான் போரின் (1839 — 1842 ) நீடித்து நிலைக்கும் காட்சித்தோற்றமாக விளங்குகிறது. அது பிரிட்டிஷ் இராணுவத்தின் ஒரு மருத்துவ அதிகாரியான வில்லியம் பிரைடன் 1842 ஆம் ஆண்டில் காபூலில் இருந்து ஜலலாபாத் வந்துசேருவதைச் சித்திரிக்கிறது. காயமடைந்த பிரைடனுடன் அவரது குதிரையும் களைத்துச் சோர்ந்துபோய்விட்டது. பிரிட்டனின் ஆப்கான் ...
Read More »தகவல் அறியும் உரிமை சட்டமும், தட்டிக்கழிக்கும் செயற்பாடுகளும்!
தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை உள்ளது என மார்தட்டி கொண்டாலும், தகவல் அறியும் உரிமை சட்டம் அமுலுக்கு வந்து கடந்த பெப்ரவரி 4ஆம் திகதியுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையிலும் அது தொடர்பில் விழிப்புணர்வு அல்லது அதனை நடைமுறைபடுத்தல் என்பது எவ்வளவு தூரத்தில் நிற்கின்றது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. வடக்கில் குறிப்பாக யாழ்ப்பணத்தில் அரச அலுவலகங்களில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக தகவல்களை பெற்றுகொள்வதில் சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. இருந்த போதிலும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ...
Read More »கூட்டமைப்பின் தலைமைக்குப் பொருத்தமானவர் யார்?
கூட்டமைப்பின் அடுத்த தலைமை தொடர்பாக இப்போதே கேள்விகள் எழ ஆரம்பித்து விட்டன. சம்பந்தன் மூப்பின் இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டதால் இந்தக் கேள்விகள் எழுவது இயல்பானது. இந்தியாவின் தமிழ்நாட்டில் மு.கருணாநிதியும் மூப்பின் எல்லையில் நின்றபோது தி.மு.கவுக்கு அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. ஆனால் வாரிசு அரசியலில் ஊறிப்போன இந்தியாவில் வழக்கம்போல கருணாநிதியின் மகன்களில் ஒருவரான மு.க. ஸ்டாலினின் பெயர் நீண்ட காலமாகவே அந்தப் பதவிக்கு அடிபட்டு வந்தது. இதற்கு ஏற்றாற்போன்று தி.மு.கவின் செயல் தலைவராக அவர் அந்தக் கட்சியின் தலைவரான அவரது தந்தையாரான ...
Read More »ஆண்டுகளோ பத்து; வார்த்தைகளோ பொய்த்து!
“முப்பது ஆண்டுகாலப் போர் முடிந்து, பத்து ஆண்டுகள் கழிந்தும் தீர்வு வராதது வருத்தம்; இலங்கை மீது சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்துள்ளன; அபிவிருத்தி அடைவதில் தோல்வி கண்டுள்ளோம்; செந்தணலின் மீதுள்ள சாம்பல் மீது நல்லிணக்கம் நிற்கின்றது; ஊழலை ஒழிக்க முடியாது உள்ளது; போதைப் பொருள் வணிகத்தை அழிக்க முடியாது உள்ளது” இவ்வாறாக, இலங்கையின் 71ஆவது சுதந்திரதின பிரதான நிகழ்வு காலிமுகத்திடலில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்ட போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வரிசையாகத் தெரிவித்த உண்மையும் ஏமாற்றமும் கலந்த உரை இதுவாகும். முப்பது ஆண்டு கால யுத்தம் ...
Read More »தேர்தலுக்கான அரசியல் !
நாட்டின் பிரதான அரசியல் கட்சிகள் ஒன்றுக்கொன்று நேர் முரணான அரசியல் நிலைப்பாட்டைக் கொண்டுள்ள நிலையில் தேசிய அரசாங்கத்தை உருவாக்குகின்ற முயற்சிகள் குறித்தும் பேசப்படுகின்றது. தேர்தல்கள் வரிசையாகத் தெரு முனையில் எட்டிப்பார்த்துக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், நிலைமையாக இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது. இந்த முயற்சியின் மூலம் தேசிய அரசாங்கத்தை உருவாக்கி காலதாமதமின்றி, இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காண முடியும் என்பதற்காக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு முனைந்திருக்கின்றது. நாட்டில் இது ஒரு வேடிக்கையான அரசியல் நிலைமையாகப் பரிணமித்திருக்கின்றது. நாட்டின் 71 ஆவது சுதந்திர தினத்தின்போது ...
Read More »ஜோர்ஜ் ஃபெர்னாண்டர்ஸ் – தமிழ் மக்களுக்குக் கதாநாயகன் – சிங்கள மக்களுக்கு வில்லன்?
கருணாநிதி உயிர் நீத்தபொழுது முகநூலில் ஈழத் தமிழர்கள் இரு கூறாகப் பிரிந்து நின்றார்கள். ஈழத் தமிழர்கள் மட்டுமல்ல ஒரு பகுதி தமிழகத்தவர்களும் இரு கூறாகப் பிரிந்து நின்றார்கள். புலிகள் இயக்கத்தை ஆதரித்தவர்கள் கருணாநிதியை கடுமையாக விமர்சித்தார்கள். புலிகள் இயக்கத்தை எதிர்த்தவர்கள் அல்லது விமர்சித்தவர்கள் கருணாநிதியை நியாயப்படுத்தினார்கள். ஆனால் அண்மையில் ஜோர்ஜ் ஃபெர்னாண்டர்ஸ் உயிர்நீத்த பொழுது ஈழத்தமிழர்களில் பெரும் பகுதியினர் அவரைக் கண்ணியமாக நினைவு கூர்ந்தார்கள். தமிழகத்திலும் ஜோர்ஜ் ஃபெர்னான்டஸ் மதிப்போடு நினைவு கூரப்பட்டார். தமிழகத்துக்கு வெளியில் துலங்கிய ஒரிந்தியத் தலைவருக்கு இவ்வாறு தமிழகத்திலும் ஈழத்தமிழர்கள் ...
Read More »தலைவர் பிரபாகரன் வழியில் பாவமன்னிப்பு வழங்கினாராம் விக்கி!
வாரத்திற்கொரு கேள்வி 10.02.2019 இவ்வாரத்தின் கேள்வி சீக்கிரமே கிடைத்துள்ளது. அது பலர் கேட்கும் கேள்வியாக ஆனால் தனியொருவரிடமிருந்து வந்துள்ளது. இதோ அந்தக் கேள்வி – கேள்வி : ஈ.பி.ஆர்.எல்.எவ் கூட்டத்தில் கலந்து கொள்ளாதீர்கள் என்று நான்எச்சரித்தேன் அதற்கு காரணங்கள் தந்து நீங்கள் பங்குபற்றினீர்கள். நாங்கள் தடுத்தமை பற்றிக்கூட உங்கள் பேச்சில் குறிப்பிட்டிருந்தீர்கள். இப்பொழுது நடந்ததைப் பார்த்தீர்களா? அது உங்களுக்கே உலை வைத்துள்ளதே! நீங்கள் அந்தக் கூட்டத்தில் பங்கு பற்றியது சரியா? பதில்- கட்டாயம் சரி! மூளை உள்ளவன் தன்நலங் கருதி இவ்வாறானவற்றைத் தவிர்ப்பான். நெஞ்சத்தில் ஈரம் ...
Read More »