பத்திரிகையாளர் கௌரி லங்கேஷின் இறுதிக் கணங்களைப் பற்றி அவரது சகோதரியின் மகள் இஷா லங்கேஷ் இணையத்தில் எழுதிய நினைவுக் கட்டுரை வைரலாகிக்கொண்டிருக்கிறது.
அம்மா கவிதா லங்கேஷின் இயக்கத்தில் ‘சம்மர் ஹாலிடேஸ்’ படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறாரே அதே சிறுமிதான்.
‘அம்மாவைக் கொலைசெய்தவர்களின் மீது எனக்கு கோபம் கோபமாக வந்தது. அவர்களையும் அதேபோலச் செய்ய வேண்டும், பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்று தோன்றியது.
அந்த வலியை அவர்கள் உணர வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், அதனால் என் அம்மா திரும்ப வர மாட்டார். பழிக்குப் பழி வாங்குவது உலகையே குருடாக்கிவிடும் என்பது புரிகிறது.
வலி குறையட்டும் என்று காத்திருப்போம். சட்டபூர்வமான நீதி கிடைக்கும் என்று நம்புவோம்’ என்று எழுதியிருக்கிறார் இஷா லங்கேஷ். குழந்தையில்லாத கௌரி, இஷாவை மகள் என்று அழைப்பது வழக்கம். இஷாவும் அவரை ‘அவ்வா’ என்றுதான் அழைப்பாராம்.
Eelamurasu Australia Online News Portal