2020 சட்டப்பேரவைத் தேர்தலிலும் கேஜ்ரிவால் பெரும் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் 3-ம் முறையாக அவர் முதல்வர் பதவி ஏற்கவுள்ளார். ஹரியாணாவில் ஒரு நடுத்தரப் பொறியாளரின் குடும்பத்தில் 1968-ம் ஆண்டு பிறந்தவர் கேஜ்ரிவால். கோரக்பூரில் உள்ள ஐஐடியில் இயந்திரவியல் பொறியியல் பட்டம் படித்தவர், டாடா ஸ்டீல்ஸ் நிறுவனத்தில் ஜாம்ஷெட்பூரில் 1989-ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். பின்னர் அரசுப் பணித் தேர்வுக்குத் தயாரானதால் தனியார் பணியை விட்டு விலகினார். கொல்கத்தாவில் சில ஆண்டுகள் வசித்த அவர் அன்னை தெரசாவின் மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டீஸ், ராமகிருஷ்ணா மடம் ...
Read More »கொட்டுமுரசு
பொதுத் தேர்தலுக்கு பின்னர் தெரிவாகும் தமிழர் பிரதிநிதிகளை அரசாங்கம் பேச்சுவார்த்தைக்கு அழைக்கும்!
தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தற்சமயம் பேச்சுவார்த்தைகளில் அக்கறை இல்லை. அவர்கள் இலங்கையில் பெரும்பான்மை சமூகத்தினர் ஏற்றுக் கொள்ளாத விடயங்களையே கேட்டுக் கொண்டிருக்கின்றனர். அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தில் உள்ளவாறு அதிகாரப் பரவலாக்கலை முன்னெடுப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்துவதானால் தமிழர்களுக்காக பேசக் கூடிய பொறுப்புள்ள பிரதிநிதிகள் எமக்குத் தேவை. ;அதனால் பொதுத் தேர்தலை நடத்திய பின்னர் தமிழர்களினால் தெரிவு செய்யப்படக் கூடிய பிரதிநிதிகளுடன் எதிர்காலம் குறித்து பேச வருமாறு கேட்போம் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது இந்திய விஜயத்தின் போது சனியன்று டில்லியில் வைத்து ‘ ...
Read More »காணாமல் ஆக்கப்பட்டவர்களை மறக்க முயற்சிக்கும் ஒருதீவு?
காணாமல் ஆக்கப்பட்டவர்களை நிலத்தில் தோண்டித்தான் எடுக்கவேண்டும் என்று விமல் வீரவன்ச கூறியிருக்கிறார். இதை அவர் மட்டும்தான் கூறுகிறார் என்று இல்லை. ஏற்கனவே ஜனாதிபதி கோட்டாபய அதை கூறிவிட்டார். அவருக்கு முன் ரணில் விக்கிரமசிங்க அதைக் கூறிவிட்டார். சிங்களத் தலைவர்கள் மட்டுமல்ல சம்பந்தரும் அப்படித்தான் கூறுகிறார். ஆனால் அந்த உண்மையை கூறுவதற்கு அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளில் தான் வேறுபாடு உண்டு. 2016ஆம் ஆண்டு தைப்பொங்கல் தினத்தன்று அதை ரணில் விக்ரமசிங்க கூறினார். ஆனால் காணாமல் போனவர்களில் பலர் வெளிநாடு சென்று இருக்கலாம் என்று அவர் சொன்னார். ...
Read More »காணாமல்போனோர் பிரச்சினையைக் கையாளுதல்: அரசின் நிலைப்பாட்டில் மறுபரிசீலனை அவசியம்!
ஒரு அரசாங்கம் தன்மீது தானாகக் குற்றம் சுமத்தும் என்று எதிர்பார்ப்பது சாத்தியமில்லை. போரின் முடிவிற்குப் பின்னரான காலப்பகுதியில் அரசாங்கத்திற்கும், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களுக்கும் இடையில் ஒரு பாலமாக செயற்படுவதற்கு முயற்சித்த முன்னாள் இராஜதந்திரி ஒருவர் முன்னர் ஒருதடவை இவ்வாறு கூறினார். போரின் போது காணாமல்போனோராக அறிவிக்கப்பட்டவர்கள் உண்மையில் இறந்துவிட்டார்கள் என்றும், அவர்களுக்கு நேர்ந்த கதிக்கு அரசாங்கம் பொறுப்பல்ல என்றும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அண்மையில் வெளியிட்ட கருத்து இதுவிடயத்தில் மறுப்பைத் தெரிவித்து வருகின்ற ஒரு நீண்டகாலக் கொள்கையின் தொடர்ச்சியேயாகும். அரசாங்கத்தின் நடவடிக்கைகளின் விளைவாகக் காணாமல்போனோர் ...
Read More »ஒரு வதைமுகாமின் கதை!
உலக வரலாற்றில் இடம்பெற்றுவிட்ட ஒரு முக்கியமான இடமான ஆஸ்விட்ச் மீண்டும் பேசப்படலாகியிருக்கிறது. இந்த ஆண்டு முழுமையுமே அது பேசப்படும். மனித குலம் மறக்கவே முடியாத இடங்களில் ஒன்றான அது எப்படி பேசப்படாமல் இருக்க முடியும்? நாஜிக்களின் ஆஸ்விட்ச் வதைமுகாமிலிருந்து யூதர்கள் விடுவிக்கப்பட்டதன் 75-வது ஆண்டு தற்போது அனுசரிக்கப்படுகிறது. ஆஸ்விட்ச் ராணுவ வதைமுகாம் என்பது வெறும் முகாம் மட்டுமல்ல; நவீனக் கொலைக்களம். ஈவிரக்கமற்றவர்களிடம் அதிகாரமும் படைபலமும் சேர்ந்தால் என்ன ஆகும் என்பதற்கு உலக சாட்சியாக இருப்பது ஆஸ்விட்ச். ஜெர்மானிய நாஜி அரசு, இரண்டாம் உலகப் போரின்போது ...
Read More »கோத்தாபய ராஜபக்ஷவின் சுதந்திரதின உரையின் அரசியல் அர்த்தம்!
கொழும்பு (நியூஸ் இன் ஏசியா) இலங்கையின் 72 ஆவது சுதந்திரத்தினத்தை முன்னிட்டு கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்ற தேசிய வைபவத்தின் போது நாட்டு மக்களுக்கு நிகழ்த்திய உரையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அடுத்த ஐந்து வருடங்களுக்கு தான் முன்னெடுக்கவிருக்கும் கொள்கைகளை தெளிவாக விளக்கினார். இன மற்றும் மதக்குழுக்கள் உட்பட ஒவ்வொரு குழுமத்தினரும் சமத்துவமான உரிமைகளை அனுபவிக்கக்கூடிய இலங்கையொன்றை கட்டியெழுப்பப்போவதாக அவர் கூறினார். ஆனால் ,அதேவேளை சிங்கள பௌத்தர்களின் பரந்துபட்ட மேலாதிக்கத்தின் கீழேயே இந்த உரிமைகளளை அனுபவிக்கவேண்டியிருக்கும் என்பதில் எந்த சந்தேகத்தையும் அவர் ...
Read More »ஏப்பமிடப்படும் ஏகபிரதிநிதித்துவம்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை, தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகளாக ஏற்று, அவர்களுடன் மட்டும்தான் பேச்சு நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில், அரசாங்கம் இல்லை. மாறாக, வடக்கு, கிழக்கில் உள்ள அனைத்துத் தரப்பினருடனும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த, அரசாங்கம் தயாராக இருக்கின்றது என, அரசாங்கத்தின் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்து உள்ளார். இன்று, இலங்கை, தனது விடிவு தினமான (72வது) சுதந்திர தினத்தைக் கொண்டாடுகையில், நாட்டின் ஒரு பகுதி மக்கள், தாங்கள் இன்னமும் இருட்டுக்குள் வாழ்ந்து வருவதாவே உணர்கின்றனர். ...
Read More »தஞ்சைப் பெரியகோயில் எனும் தமிழனின் பெருமை!
தஞ்சையில் சோழப் பேரரசன் முதலாம் ராஜராஜனால் கி.பி. (பொ.ஆ) 1010ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப் பெற்றதே ‘இராஜராஜீச்சரம்’ எனும் சிவாலயமாகும். இதை மக்கள் வழக்கில் தஞ்சைப் பெரிய கோயில் எனக் குறிப்பிடுவர். இக்கோயில் கடைக்காலில் தொடங்கி விமானத்துச் சிகரம்வரை கருங்கற்கள் கொண்டே கட்டப்பெற்றதாகும். அதனால் இதனைக் கற்றளி எனக் குறிப்பிடுவர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி காலகட்டத்தில் பாமர மக்கள் இதனைப் பூதம் கட்டிய கோயிலென்றே கூறி வந்தனர். தஞ்சையில் ஆட்சிபுரிந்த மராட்டிய அரசர் சரபோஜி மன்னரின் ஆட்சிக் காலத்தில் மராட்டி மொழியில் எழுதப் பெற்ற ...
Read More »கரோனா: அச்சுறுத்தும் புதிய வைரஸ்!
உலக அளவில் பல்லாயிரக்கணக்கான மனித உயிர்களைக் காவு வாங்கி வரலாற்றில் இடம்பிடித்த ஆபத்தான வைரஸ் நோய்கள், 2002-ல் சீனாவில் சார்ஸ், 2009-ல் உலகில் பல நாடுகளில் பன்றிக்காய்ச்சல், 2014-ல் மேற்கு ஆப்பிரிக்காவில் எபோலா, 2016-ல் பிரேசிலில் ஜிகா, 2019-ல் சவுதி அரேபியாவில் மெர்ஸ் ஆகியவை. இந்த வரிசையில் 2020-ல் சீனாவில் கரோனா வைரஸ்! உலகில் உயிர் காக்கும் மருத்துவம் பல வழிகளில் முன்னேறிக்கொண்டிருந்தாலும், நாட்டில் மக்கள்தொகை பெருகினால், சுத்தமும் சுகாதாரமும் குறைந்தால், சுற்றுச்சூழல் கெட்டுப்போனால், மக்களுக்கு உணவு விஷயத்தில் அக்கறை இல்லாவிட்டால், தடுப்பூசி உள்ளிட்ட ...
Read More »கோத்தாபயவும் சிறுபான்மை சமூகங்களும்!
உள்நாட்டுப்போரில் 20 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டதாக முதற்தடவையாக இலங்கை ஜனாதிபதியொருவர் ‘ குண்டைத் தூக்கிப்போட்டிருக்கிறார். இது பற்றி நியூயோர்க் ரைம்ஸ், பி.பி.சி., த ரெலிகிராவ் ஆகியவற்றினால் வெளியிடப்பட்ட செய்திகளுக்கு இது வரையில் மறுப்பு தெரிவிக்கப்படவில்லை.இது குறித்து கருத்து தெரிவிப்பதற்கு முன்னர் அதிகாரப்பரவலாக்கம் பற்றி ஆராய விரும்புகின்றேன். (1) பெரும்பான்மைச் சமூகத்தவர்கள் எதிர்ப்பதன் காரணத்தினால் அதிகாரப்பரவலாக்கம் சாத்தியம் இல்லை என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச கூறியிருக்கிறார். (2) அது உண்மையில் சரியானது என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் அவர்கள் வசிக்கும் பகுதிகளில் எந்தவிதமான அதிகாரப்பரவலாக்கத்தையும் வழங்குவதை ...
Read More »