கருணாநிதியின் பெயரில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முகநூல் பக்கம் இயங்கியது. அதில் இடைக்கிடை கருணாநிதி அல்லது அதை இயக்கிய யாரோ ஒருவர் கருத்துக்களைத் தெரிவித்து வந்தார். ஒரு நாள் யாரோ ஒரு ஈழத்தமிழர் கருணாநிதிக்கு எதிராகக் கடுமையான வார்த்தைகளில் குறிப்பெழுதியிருந்தார். அதற்குக் கருணாநிதி ‘ஏனப்பா வயதை மதித்தாவது எழுத வேண்டாமா?’ என்ற தொனிப்பட ஒரு குறிப்பைப் போட்டிருந்தார். அதற்கு மேற்படி ஈழத்தமிழர் ‘நீங்கள் மட்டும் பார்வதியம்மாவின் வயதை மதித்தீர்களா?’ என்று கேள்வி கேட்டிருந்தார். அக்கேள்விக்கு கருணாநிதி எதிர்வினையாற்றவில்லை. ஈழத்தின் பெருங்கிழவியான பார்வதியம்மா பிறந்த ...
Read More »கொட்டுமுரசு
பூகோள அரசியல் மாற்றங்கள்: இலங்கை எதிர்கொள்ளும் சவால்!
ஒரு உறையில் இரண்டு வாள்கள் இருக்க முடியாது என்பது போல தான், முதன்மையான நாடு என்ற தகைமையைப் பங்கு போட்டுக் கொள்ள விரும்பாத இரண்டு நாடுகளும், முட்டி மோதத் தொடங்கியிருக்கின்றன. இந்த மோதலின் விளைவுகள் இலங்கை போன்ற நாடுகளிலும் எதிரொலிக்கலாம் என்பது பொதுவான எதிர்பார்ப்பு. கடந்தவாரம் பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கூட இதனை ஏற்றுக் கொண்டிருக்கிறார் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் நடந்து கொண்டிருக்கும் வணிகப் போர், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் நிலவி வரும் பிரச்சினைகள் என்பன இலங்கையின் பொருளாதாரத்தில் தாக்கத்தைச் செலுத்தக் ...
Read More »கலங்கிய குட்டையின் நிலையில் தென்பகுதி அரசியல்!
கூட்டு அரசின் ஆயுட்காலம் அடுத்த ஆண்டுடன் முடிவடையவுள்ள நிலையில், அரசுக்குள் பிளவை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதை அவதானிக்க முடிகின்றது. அடுத்த தமிழ், சிங்கள புதுவருடப் பிறப்புக்கு முன்பதாக மகிந்த ராஜபக்சவை, மைத்திரிபால சிறிசேனவே தலைமை அமைச்சராக நியமிப்பாரெனவும், சிறீலங்கா சுதந்திரக்கட்சி தனியாக ஆட்சியை அமைக்குமெனவும் பொது எதிரணியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவர் தெரிவித்திருக்கிறார். பொது எதிரணியினர் இவ்வாறு கூறிவருவது புதியதொரு விடயமெனக் கூறமுடியாது. வழக்கமானதொரு கருத்து வெளிப்பாடே அது. தமது எண்ணப்படி நாட்டின் நிர்வாகத்தை முன்னெடுத்தவர் முன்னாள் அரச தலைவர் மகிந்த ...
Read More »விக்கியின் தெரிவுகள்!
அண்மையில் நடக்க இருக்கின்ற வடக்கு மாகாணசபை தேர்தலில் பின்வரும் மூன்று தெரிவுகள் முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு காத்திருக்கின்றன, 01. விக்கி + விக்கியின் ஆதரவாளர்கள் + தமிழ் தேசிய கூட்டமைப்பு = விக்கியின் அரசியல் மரணம். 02. விக்கி + விக்கியின் ஆதரவாளர்கள் + ஒட்டுக்குழுக்கள் (PLOT, TELO, EPRLF) = விக்கியின் அரசியல் மலினம். 03. விக்கி + விக்கியின் ஆதரவாளர்கள் + தமிழ் தேசிய மக்கள் முன்னணி = விக்கியின் அரசியல் மலரும். முதலாவது கூட்டை பொறுத்தவரையில் அந்த தெரிவு விக்கியின் அரசியல் ...
Read More »யாழ். எஸ்.ஓ.எஸ். சிறுவர் கிராமம்! -நேர்காணல்
எஸ்.ஓ.எஸ் சிறுவர் கிராமம் என்பது, பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகளை வளர்த்து, அவர்களுக்குள் இருக்கும் திறமைகளை கண்டறிந்து, அவர்களை படிக்கவைத்து பாதுகாக்கும் ஒரு தொண்டு நிறுவனம் ஆகும். 2009 இறுதி யுத்தத்தின் பின்னர் பெற்றோரையும் அவர்களின் அரவணைப்பையும் இழந்து ஆபத்தில் தவித்த சிறுவர்களுக்கென ஓர் அன்பான இல்லம் அமைக்கவேண்டும் என்ற முயற்சியின் பயனாய் 2012 ஆம் ஆண்டு இலங்கையின் 6ஆவது சிறுவர் கிராமமாக யாழ்ப்பாணத்தில் “எஸ்.ஓ.எஸ் சிறுவர் கிராமம் யாழ்ப்பாணம்” அமைக்கப்பட்டது. யாழ். நகரில் இருந்து 4.5 கிலோ மீற்றர் தொலைவில் நாயன்மார்க்கட்டு பிரதேசத்தில் குறித்த ...
Read More »கருணாநிதி – திருவாரூர் முதல் தலைநகர் வரை – வாழ்க்கை வரலாறு
திமுக தலைவர் கருணாநிதி மரணம் நமது இதயத்தில் இடியாக இறங்கியுள்ள நிலையில், அவரது சிறுவயது முதல் அரசியல் வாழ்க்கையை பார்க்கலாம். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924-ம் ஆண்டு ஜூன் 3-ல் ஏழை குடும்பத்தில் முத்துவேலருக்கும் அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் தட்சிணாமூர்த்தி. தனது பள்ளிப் பருவத்திலேயே நாடகம், கவிதை, இலக்கியம் ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. நீதிக்கட்சியின் தூணாக இருந்த பேச்சாளர் அழகிரிசாமியின் பேச்சால் ஈர்க்கப்பட்ட கருணாநிதி, தனது 14-ம் வயதில், சமூக இயக்கங்களில் முழுமையாக தன்னை ...
Read More »வடக்குத் தொடர்பாக பிறந்த திடீர் ஞானம்!
வடக்கின் அபிவிருத்தி தொடர்பாக அரசியல் தலைவர்களுக்குப் பிறந்த திடீர் ஞானம் தமிழ் மக்களை வியக்க வைத்துள்ளது. இந்திய அரசின் நிதியுதவியுடன் இடம்பெற்ற நோயாளர் காவு வண்டியின் இலவச சேவைக்கான ஆரம்ப நிகழ்வின்போது இதை அவதானிக்க முடிந்தது. இலங்கையின் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க ஏனைய பிரதேசங்களுடன் ஒப்பிடும்போது வட பகுதியில் அபிவிருத்தி திட்டங்கள் இடம்பெற்றதாகத் தெரியவில்லையெனக் கூறியுள்ளார். இந்த நிகழ்வில் காணொலி மூலமாக உரையாற்றிய இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி, வட பகுதி மக்களின் கண்ணீரைத் துடைத்து அவர்களை வளமான எதிர்காலத்துக்கு இந்தியா ...
Read More »இறுதி வாக்குமூலத்தை சுமந்து வரும் ஈழத்தின் புதை குழிகளும், எலும்புக் கூடுகளும்!
1996இல் இலங்கை இராணுவம் கிளிநொச்சியை கைப்பற்றியபோது ஊர் பாக்கவும் பஞ்சத்தில் வயிறு வளர்க்கவும் கிளிநொச்சிக்கு வந்தவர்களை இலங்கை இராணுவம் கொன்று புதைத்தது. மிகவும் கொடூரமாக அவர்கள் சித்திரவதை புரிந்து கொல்லப்பட்டார்கள். அதில் காயங்களுடன் இராணுவத்தினரிடமிருந்து சாதுரியமாக தப்பியவர்களும் உண்டு. திரும்பி வருவார் என்று ஊருக்குச் சென்றவர்கள் பலரும் காணாமல் போயினர். இதன் விளைவாக 2000ஆம் ஆண்டில் ஆனையிறவு மீட்புடன் கிளிநொச்சி திரும்பியபோது பலரது வீட்டு கிணறுகளிலும் மலசல கூடங்களிலும் எலும்புக்கூடுகளே காத்திருந்தன. அந்தக் காட்சி இப்போதும் நினைவில் இருக்கிறது. கந்தபுரம் தமிழீழ காவல்துறை அலுவலகத்தில் ...
Read More »தாமதமாகக் கிடைக்கும் நீதி, மறுக்கப்பட்ட நீதிக்கு சமன்!
ஐந்து மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் வெள்ளை வேனில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் இடம்பெற்று இன்றுடன் 10 வருடங்களாகின்றன. எனினும் இத்தனை நாட்களாகியும் இந்த விவகாரத்தில் இன்னும் நீதியும் நியாயமும் மெளனம் காக்கிறது. ஏன், இவ்வளவு நாட்களாகியும் நீதி நிலைநாட்டப்படாமல் இழுத்தடிக்கப்படுகின்றது என எல்லோருக்கும் எழும் கேள்விகளுக்கு பதில் தேடும் போது தான், இந்த கடத்தல் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட விவகாரத்தில், திரைமறைவில் குற்றவாளிகளைக் காக்கும் காய் நகர்த்தல்களும் நீதியை பெற்றுக்கொடுக்க போராடுகின்றவர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள் தாராளமாக இடம்பெறுவதும் அவதானிக்கப்பட்டது. இந்த ...
Read More »மண்விடுதலைக்காக போராடிய வீரத்தாய்!
இந்திய சுதந்திர போராட்டடத்தில் பெண்களின் பங்கு என வரும்போது நம் நினைவுக்கு வரும் முதல் பெயர் ஜான்சி ராணி லட்சுமிபாய் மட்டும்தான். தமிழநாட்டை சேர்ந்தவர்களுக்கு நினைவுக்கு வருவது வீரமங்கை வேலுநாச்சியாராய் இருக்கும். ஆனால் அவர்களை விட பெரிய தியாகம் செய்து ஆங்கிலேயர்களை திணறடித்த ஒரு வீரத்தமிழச்சியை பற்றி வெகுசிலரே அறிந்து வைத்திருப்பார்கள். அந்த வீரத்தமிழச்சியின் பெயர்தான் “குயிலி”. ” வீட்டுக் குள்ளே பெண்ணைப் பூட்டிவைப் போமென்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்” என்னும் பாரதியார் கூற்றுக்கேற்றபடி பெண்ணடிமை தழைத்தோங்கிய காலத்திலேயே தன் பிறந்த மண்ணுக்காகவும், ...
Read More »