தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இப்போது 20 வயது.இலங்கையின் வடக்கு,கிழக்கு தமிழ் மக்களின் முதன்மையான அரசியல் அணியான கூட்டமைப்பு 2001 டிசம்பர் பாராளுமன்ற தேர்தலுக்கு ஒரு சில வாரங்கள் முன்னதாக 2001அக்டோபர் 22 அமைக்கப்பட்டது.அதற்கு பிறகு ஆனையிறவின் இருமருங்கிலும் எத்தனையோ நிகழ்வுப் போக்குகள் நடந்தேறிவிட்டன. வடக்கு,கிழக்கில் தமிழ் மக்கள் வாழ்கின்ற பகுதிகளில் தேர்தல்களில் தொடர்ச்சியாக பெரும்பாலான ஆசனங்களை வென்றதன் மூலம் இலங்கைத் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான அரசியல் அணியாக கூட்டமைப்பு விளங்கிவருகிறது.2001, 2004, 2010, 2015, மற்றும் 2020 பாராளுமன்ற தேர்தல்களில் கூட்டமைப்பு இரட்டை இலக்கத்தில் ...
Read More »கொட்டுமுரசு
கூட்டமைப்பு: இரு தசாப்த ஏற்றமும் இறக்கமும்
2001 அக்டோபரில் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 2004ம் ஆண்டுத் தேர்தலில் 22 ஆசனங்களைப் பெற, அதனை உருவாக்கிய விடுதலைப் புலிகள் சமயோசிதமான உத்தியைக் கையாண்டனர். இத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 22 பேரில் ஐம்பது வீதமானோர் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள். அன்றுஇ 633,654 வாக்குகளைப் பெற்ற கூட்டமைப்பு 2009க்குப் பின்னர் கதிரை அரசியலுக்கு மாறி கடந்த வருடத் தேர்தலில் 327,168 வாக்குகள் மட்டும் பெற்று பத்து ஆசனங்களுடன் சரிவு நிலைக்கு வந்துள்ளது. ‘கட்டாக்காலி’ அரசியலால் கழுதை தேய்ந்து கட்டெறும்பாகிய கதையாக கூட்டமைப்பு ஆகிவிட்டது. ...
Read More »இந்திய அழுத்தம் – மாகாண சபைத் தேர்தலுக்கு, இலங்கை ஆயத்தமா?
இலங்கையில் மூன்று முதல் ஐந்து வருட காலமாக வலுவிழந்துள்ள மாகாண சபைகளை, வலுப்படுத்தும் வகையில், மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டமிட ஆரம்பித்துள்ளது. இலங்கை மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த இலங்கை மத்திய அரசாங்கத்திற்கு இந்தியத் தரப்பில் அழுத்தங்களை பிரயோகிக்குமாறு, இலங்கை சென்றிருந்த இந்திய வெளியுறவுச் செயலருக்கு, இலங்கையின் சில கட்சிகள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனினும், இந்திய அரசின் அழுத்தத்தால் தேர்தல் நடத்தும் முடிவு எடுக்கப்படவில்லை என்று இலங்கை அரசு மறுப்பு தெரிவிக்கிறது. கிழக்கு, வடமத்திய ...
Read More »13ஆவது திருத்தமும் புதிய யாப்பும்!
ஒரு புதிய யாப்பை இந்த ஆண்டின் இறுதிக்குள் கொண்டு வரப்போவதாக ஜனாதிபதி அண்மையில் தெரிவித்திருக்கிறார். இலங்கை ராணுவத்தின் 72வது ஆண்டு நிறைவையொட்டி அனுராதபுரத்தில் உள்ள ஒரு படை முகாமில் நடந்த ஒரு வைபவத்தில் அவர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.இது அரசாங்கம் அதன் யாப்புருவாக்க முயற்சியில் மெய்யாகவே ஈடுபடுகிறதா என்ற கேள்வியை மேலும் வலிமைப்பப்படுத்தியிருக்கிறது. யாப்புருவாக்கத்திற்கான நிபுணர் குழுவை சேர்ந்த ஒருவர் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் ஒரு புதிய யாப்புக்கான சட்ட வரைபை அரசாங்கம் தயாரித்து வருவதாக கூறப்படுகிறது.அதை நம்பித்தான் சம்பந்தர் ...
Read More »பழைய குருடி கதவை திறவடி
குறித்த செய்திகளே பரவலாக பேசப்பட்டு வருகின்றன. இன்றைய காலத்தில் இலங்கையானது பெரும் பொருளாதார சிக்கலை எதிர்நோக்கி வருகின்றது. இதனால் நாட்டில் தொழிலாளி முதல் முதலாளிகள் வரை அனைவரது வாழ்க்கையிலும் பொருளாதார சிக்கல் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தி வருகின்றது. திடீரென ஏறிய விலைவாசிகள் ஒட்டுமொத்த நாட்டு மக்களின் வாழ்க்கைச் செலவுகளை புரட்டிப் போட்டுவிட்டது. இப் பெருந்தொற்றுக்காலத்தில் சிறு சிறு கூலி தொழில்களை செய்து அன்றாடம் தன் வாழ்க்கைச் செலவுகளை சமாளித்து வருகின்ற சாதாரண மக்களின் காதுகளில் பேரிடியாய் விழுந்தது அச்செய்தி. ஒரே இரவில் எரிவாயு, சீனி, ...
Read More »தலைக்கு மேல் ‘தொங்கும்வாளுக்கு’ இலங்கை தலைவணங்காது பேராசிரியர் ஜி. எல். பீரிஸ்
*ஐ. நா. முறைமையை மறுசீரமைப்பதற்கானதருணம். *தடை செய்யப்பட்ட குழுக்களுடன் பேச்சுவார்த்தை இல்லை *சிஓபி 26 மாநாட்டிற்கு பிறகு ஜனாதிபதி தமிழ் தேசிய கூட்டமைப்பை சந்திப்பார் *இலங்கையைவிசேடமாக இலக்கு வைக்கும் பொறி முறைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை *எங்களுக்கு எதிராக எவர்கள் ஆதாரத்தை வழங்கு கிறார்கள் என்பதை நாம் தெரிந்து கொள்வது அவசியம் *ஐ ஸ்மின் சூக் கா ஒரு பிரசாரகர் *அரசசார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் அரசின் எதிரிகளாக பார்க்கப்படவில்லை *ஒரு நாட்டுடன் மட்டும் பிரத்யேக உறவென்று இல்லை *ஜெனீவா காரணமாக வே அமெரிக்காவுடனான ...
Read More »காந்தி தொகுப்பு நூல்கள்: ஓர் இமாலய முயற்சியின் கதை
நூறு தொகுதிகளைக் கொண்டிருக்கும் ‘மகாத்மா காந்தி எழுத்துகளின் தொகுப்’பின் (The Collected Works of Mahatma Gandhi- CWMG) முதல் தொகுதியில் முதல் பதிவே ஒரு பாவமன்னிப்பைப் பற்றிய நினைவுகூரல்தான்: “என் குற்றத்தை ஒரு கடிதத்தில் எழுதி, என் தந்தையிடம் கொடுத்து மன்னிப்புக் கேட்பதென்று கடைசியாகத் தீர்மானித்தேன். ஒரு துண்டுக் காகிதத்தில் அதை எழுதி, நானே என் தந்தையாரிடம் கொடுத்தேன். அக்குறிப்பில் நான் என் குற்றத்தை ஒப்புக்கொண்டிருந்ததோடு அதற்குத் தக்க தண்டனையை எனக்குக் கொடுக்குமாறும் கேட்டிருந்தேன். என் குற்றத்திற்காக அவர் தம்மையே தண்டித்துக்கொள்ள வேண்டாம் ...
Read More »மனப்பான்மையை மாற்றுங்கள் வாழ்க்கை அழகாகும்…
குடும்பத்திற்காக கனவுகளுக்கு கல்லறை கட்டிய பெண்களுக்கு ஊதியம் இல்லையென்றாலும் உபரியாய் கிடைப்பது என் கனவுகளைத் தியாகம் செய்த பின்னும் எனக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற உளைச்சல் தான். பெண்மையின் சிறப்பு “பன்முகத் தன்மை”. பல வேலைகளையும் ஒரே நேரத்தில் செய்திடும் ஆற்றல் பெற்றவள் பெண். தன் திறமைகளை உலகறியச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு, சாதனை கனவுகளோடு சமூகத்திற்குள் அடியடுத்து வைக்கும் ஒவ்வொரு பெண்ணின் முன்பும் இன்று விஸ்வரூப வினாவாய் எழுந்து நிற்பது குடும்பத்தையும், அலுவல் பணியையும் சரியாக சமன் செய்கிறேனா? என்பது தான். ...
Read More »கேட்க நினைப்பதைக் கேளுங்கள்
பிள்ளைக்கு குறித்த பாடசாலையில் ஏன் அனுமதி கிடைக்கவில்லை; தான் வாழும் பிரதேசத்தில் குடிதண்ணீர் ஏன் வழங்கப்படவில்லை; பிரதேச சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதி, எவ்வாறு செலவு செய்யப்பட்டது; வீதிப் புனரமைப்பில் ஈடுபட்டுள்ள ஒப்பந்தக்காரர் தெரிவு செய்யப்பட்ட முறை என்பதிலிருந்து, பயன்படுத்தப்பட்ட பொருள்களின் மாதிரிகளைப் பெற்று, தரத்தை உறுதி செய்வது வரை, மக்கள் தகவறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் நன்மையடைய முடியும்” என்கிறார் சட்டத்தணியும் வளவாளரும் சிவில் சமூகத்தின் சார்பில் தகவலறியும் உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளவருமான ஐங்கரன் குகதாசன். இவர், தகவல் அறியும் ...
Read More »தமிழர்கள் எப்படி நம்புவது?
ஏறக்குறைய ஒரே காலப்பகுதியில் இரண்டு ராஜபக்ச சகோதரர்களும் மேற்கு நாடுகளுக்கு விஜயம் செய்திருக்கிறார்கள்.ஜனாதிபதி கோட்டபாய அமெரிக்காவிலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்களை நோக்கி உள்ளக விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அழைப்பு விடுத்திருக்கிறார். உள்நாட்டு பொறிமுறைக்கு ஒத்துழைக்குமாறு உள்நாட்டில் உள்ள மக்கள் பிரதிநிதிகளை நோக்கிக் கேட்காத நாட்டின் தலைவர் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களை நோக்கி ஏன் கேட்கிறார் ? சில மாதங்களுக்கு முன் அவருடைய அரசாங்கம் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் சிலவற்றையும் தனி நபர்களையும் தடை செய்து ஒரு பட்டியலை வெளியிட்டிருந்தது. ஒரு பெரும் தொற்றுநோய்க் காலத்தில் மேற்குநாடுகளில் ...
Read More »
Eelamurasu Australia Online News Portal