தலைக்கு மேல் ‘தொங்கும்வாளுக்கு’ இலங்கை தலைவணங்காது பேராசிரியர் ஜி. எல். பீரிஸ்

*ஐ. நா. முறைமையை  மறுசீரமைப்பதற்கானதருணம்.
*தடை செய்யப்பட்ட குழுக்களுடன் பேச்சுவார்த்தை  இல்லை
*சிஓபி 26 மாநாட்டிற்கு பிறகு ஜனாதிபதி தமிழ் தேசிய கூட்டமைப்பை சந்திப்பார்
*இலங்கையைவிசேடமாக  இலக்கு வைக்கும் பொறி முறைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை
*எங்களுக்கு எதிராக எவர்கள்   ஆதாரத்தை வழங்கு கிறார்கள் என்பதை நாம் தெரிந்து கொள்வது அவசியம்
*ஐ ஸ்மின் சூக் கா ஒரு பிரசாரகர்
*அரசசார்பற்ற தொண்டர்  நிறுவனங்கள்   அரசின் எதிரிகளாக பார்க்கப்படவில்லை
*ஒரு நாட்டுடன் மட்டும் பிரத்யேக உறவென்று  இல்லை
*ஜெனீவா காரணமாக வே அமெரிக்காவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டது

இலங்கையின் வெளியுறவுக் கொள்கை கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து  ஆட்சியிலிருந்துவந்த அரசாங்கங்களின் கீழ் முரண்பாடாக இருந்துவந்ததுடன்  குறிப்பிட்ட  சில நாடுகளுடனான அதன் நடவடிக்கைகள் சில சமயங்களில்  கேள்விகள்  பலவற்றை எழுப்பியுள்ளன. டெய்லி  மிரர் பத்திரிகைக்கு அளித்திருக்கும் பேட்டியில்  வெளிவிவகார  அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் எதிர்காலத்தில் பின்பற்றவுள்ளவெளியுறவு கொள்கை பற்றியும்  மனித உரிமைகள்விவகாரம்  குறித்து ம் தன து கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்.
நேர்காணல் வருமாறு ;

கேள்வி ;.  நீங்கள் மிக அண்மையில் பதவியேற்றதற்கு பின்னர் , இராஜதந்திரிகள்பலர்  த ங்களை தனித்தனியாகசந்தித்திருந்தனர் மற்றொரு நாள் கொழும்பிலுள்ள அனைத்து இராஜதந்திரிகளையும்ஒன்றாக    சந்தித்தீர்கள். இலங்கை உலகிற்கு தெரிவித்திருக்கும்  முக்கிய செய்தி என்ன?
பதில்;சகல வேளைகளிலும்  ஈடுபாட்டை  நாங்கள் நம்புகிறோம் என்பது முக்கிய செய்தி. அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். இருதரப்பு உறவுகளில் அது இயல்பானது, ஆனால் எங்கள் முயற்சி எப்போதும் ஒருமித்த கருத்து மற்றும் உடன்பாடு ஆகியவற்றை உறுதிப்படுத்திக்கொள்வதாகும்.. இரு நாடுகளினதும்  பரஸ்பர நன்மைக்காக நாங்கள் ஒத்துழைக்கக்கூடிய விடயங்கள்  எப்போதும் உள்ளன.
குறிப்பிட்ட முறைகள் குறித்து ஆட் சேபனைகள்  இருந்தாலும், முதலீட்டு வாய்ப்புகள், சுற்றுலாமற்றும்  வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதற்கு ஏராளமான வாய்ப்புகள் இன்னும் உள்ளன. நாங்கள்பரஸ்பரம் நல்லுறவை ஏற்படுத்திக் கொண்டிருப்பதால்  இது வெற்றி பெறுகிறது என்று நான் நினைக்கிறேன். நாடுகள் எ ம்மை அணுகுகின்றன. இலங்கையில் கிடைக்கும் வாய்ப்புகளுக்காக  பொதுவான அங்கீகாரம் உள்ளது, மேலும் கடந்த இரண்டு மாதங்களில் வெளிநாடுகளின் பிரதிநிதிகளுடன் நான் நடத்திய கலந்துரையாடல்கள்  மற்றும் சாராம்சம்  குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
கேள் வி; 2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் அப்போதைய ஜனாதிபதி மகி ந்த ராஜபக்சவின்  கீழ் அரசாங்கம் மேற்கு நாடுகளுக்கு எதிராக மிகவும் கடுமையான  நிலைப்பாட்டை எடுத்தது மற்றும் சீனாவை நோக்கி தன்னை சாய்த்துக்கொண்டது இன்றும் கூட . சீன சார்பு கொள்கையை இலங்கை இன்றும் பின்பற்றுவதை நாம் பார்க்கிறோமா?

பதில்;சீனா ஒரு நண்பர்.நன்மை மற்றும்தீமையான   காலங்களில் சீனா எங்களுக்கு ஆதரவாக உள்ளது. இலங்கையின் பொருளாதார மேம்பாட்டிற்கு, குறிப்பாக உள்சார் கட்டமைப்பு மேம்பாடு, வீதி கள், துறைமுகங்கள் மற்றும் துறைமுகங்களுக்கு சீனா குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது. இது வெகுவாகப் பாராட்டப்பட்டது, மேலும் சீனாவின் ஒரே மண்டலம் ஒரேபாதை  முன்முயற்சி போன்ற முக்கியமான விட யங்களில் நாங்களும் சீனாவுக்கு ஆதரவாக இருந்தோம். நாங்கள் மிகவும் வலுவாக ஆதரித்தோம். நாங்கள் அந்த முயற்சியின் ஒரு அங்கமாக  இருக்கிறோம். ஆனால் அதே நேரத்தில்,ஏனைய சகல  நாடுகளையும் நிறுத்தி விட்டு  குறிப்பிட்ட ஒரு  நாட்டுடன்  மட்டும் எங்களுக்கு பிரத்யேக உறவுகள் இல்லை என்பதை வலியுறுத்த விரும்புகிறேன். அது எப்போதும் இருந்ததில்லை. ஜனாதிபதி மகி ந்த ராஜபக்சவின்   காலத்தில் நீங்கள் வெளியுறவுக் கொள்கையைப் பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள்  அந்த காலகட்டத்தில் நான் வெளியுறவு அமைச்சராக இருந்தேன், குறிப்பிட்ட ஒரு நாட்டுடன் மட்டும் தனியாகவென  எந்த பிரத்தியேகமும் இல்லை. வெளிப்படையாககூறினால் , சீனா மிக முக்கியமான வளர்ச்சிக்கான  பங்காளியாக இருந்தது. ஆனால் அதுஏனைய  நாடுகளுடன் நாங்கள் கொண்டிருந்த சமமானஆக்கபூர்வமான உறவுகளிலிருந்து விலகவில்லை. அந்த வகையில் தொடர்ச்சி தன்மை த் உள்ளது. இது ஏனைய நாடுகளுடனான எ மது உறவுக்கான அணுகுமுறையாகும். நாங்கள் அனைவருடனும் நட்புறவு வைத்துள்ளோம்.  நாடொன்று இலங்கையை மற்றொறு  நட்பு நாட்டின் நலன்களுக்கு கேடு விளைவிக்கும் விதத்தில் எதனையும்  செய்ய நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். எனவே எங்களுடன் பழகும் அனைத்து நாடுகளுடனும் பரஸ்பர நன்மை பயக்கும் உறவுகளை எங்களால் உருவாக்க முடிந்தது.
கேள்வி ; அமெரிக்காவுடனான இலங்கையின் உறவுகள் 2019 முதல் இறுக்கமடைந்து காணப்படுகின் றன . 2010 இல் அமெரிக்க முன்னாள்  வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டனுடன் உங்கள் சந்திப்பைத் தொடர்ந்துநான்  நினைவு கூர்கிறேன் .அச்சமயம்  வெளியுறவு அமைச்சராக இருந்த  உங்கள் மீது வைத்திருந்த நம்பிக்கைபற்றி  அவர் குறிப்பிட்டிருந்தார்.. அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவை மீண்டும் கட்டியெழுப்பவும்  வலுப்படுத்த வும் வெளியுறவு அமைச்சராக நீங்கள் இப்போது என்ன நடவடிக்கையை  எடுப்பீர்கள்?

பதில்;சரி, இந்த நாட்டில் முதலீடு செய்வதில் ஆர்வமுள்ள அமெரிக்க நிறுவனங்கள் உள்ளன. எங்களின் பல ஏற்றுமதிகள், குறிப்பாக ஆடை ஏற்றுமதிகள், அமெரிக்காவில் உள்ள சந்தைகளுக்குச் செல்கின்றன. பிராண்டிக் ஸ் மாஸ்  ஹோல்டிங்ஸ் போன்ற நிறுவனங்கள் தங்கள்உற்பத்திகளை  அதிக அளவில் அமெரிக்காவின் சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன. எங்களின்  முக்கியமான கொள்வனவாளர்களில்  ஒருவர்அமெரிக்காவிலுள்ளவிக்டோரியாஸ் சீக்கிரட்  டாகும்
 . மேலும் கோவிட் 19 காலத்தில், எ மது வழமையான  ஏற்றுமதிகளை வெளியே அனுப்ப முடியாதபோது, அவர்களுக்கு தேவை இல்லாததால், மிகவும் வெற்றிகரமாக , தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களுக்கு மாற்றம் செய்யப் பட்டது. மேலும் உற்பத்தி துறைகள்தொடர்ந்துஇயங்கவும்   வேலைவாய்ப்பு தொடர்ந்து வழங்கப்படவும் உதவியது. பணிநீக்கம் இல்லை. எனவே வட அமெரிக்காவின் சந்தைகள் எங்களுக்கு மிகவும் முக்கியம். இலங்கை தொடர்பாக ஜெனிவாவில் தீர்மானங்களுக்குஅனுசரணை   வழங்கும் பிரதான  நாடு அமெரிக்கா என்பதால் சில பதற் ற ங்கள்அதிகரித்தன.அது வருடாந்தம்  தொடர்கிறது. மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா ஒரு காலத்தில் வெளியேறியது. ஆனால் 2012,20 13 மற்றும்20 14 ஆம் ஆண்டுகளில், அந்தத் தீர்மானங்களை நிறைவேற்றுவதில் அவர்கள் தீவிரமாக இருந்தனர் மற்றும் இந்தத் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதற்கு மிகவும் கடுமையாக உழைத்தனர். ஆனால் மற் றை  ய   நாளில்   கொழும்புக்கு அங்கீகாரம் பெற்றிருந்த  அதிக  எண்ணிக்கையான  தூதர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களை உருவாக்கினேன், நான் அவர்களை பக்கச் சார்பற்ற முறையில்  இருக்கச் சொன்னேன். மிகவும் கடினமான சூழ்நிலைகளில் எட்டப்பட்ட  முன்னேற்றத்திற்காக  நீங்கள் எங்களுக்கு அங்கீகாரம் கொடுக்கவேண்டிய தேவை  உள்ளது.
உள்ளூர் ஆணைக்குழுக்களால் களத்தில் என்ன சாதிக்கப்பட்டதுஎன்பதுபற்றி  சிந்தியுங்கள். காணாமல்போனோர் அலுவலகம், இழப்பீடுகளுக்கான அலுவலகம் மற்றும் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம்இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு போன்றவை  உள்ளூர் பொறி முறைகளா கும்.ஜனாதிபதி ராஜபக்ச வால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு,உயர்  நீதிமன்றத்தின் தற்போதைய நீதிபதி தலைமையில் உள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி அல்ல, மேலும் என்ன செய்ய வேண்டிய தேவையுள்ளது  .உங்களுடன் இணைந்து தகவல்களைப் பகிர்ந்து கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம். நாம் தடுத்து நிறுத்த விரும்புவது எதுவுமில்லை, ஆனால் குறிப்பாக இலங்கையை இலக்கு வைக்கும் பொறி முறைகள் இருக்கக்கூடாது,  குறிப்பாக அவைஏற்றுக்கொள்ள முடியாதவை. ஜெனீவாவில் உள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின்  அறிக்கையில் அவர் இலங்கைக்கு எதிரான 120,000 ஆதாரங்களை சேகரித்துள்ளாரென தெரிவிக்கப்பட்டுள்ளது . அந்த வகையான அணுகுமுறை அடிப்படையில் ஏற்றுக்கொள்ள முடியாததாகும்  ஏனென்றால் அந்த ஆதாரம்எங்கிருந்து  வருகின்றது என்ற கேள்வி எழுகிறது.
இது நேர்மை மற்றும் உரிய செயல்முறைக்கான  அடிப்படை விதிகளுடன் ஒத்திசைவாகவுள்ளதா ? எங்களுக்கு எதிராக யார் ஆதாரம் தருகிறார்கள் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் நிழலில் ஒளிந்து கொண்டு சான்றைக்   கொடுக்க முடியாது, இது முற்றிலும் பட்டியலிடப்படாததாகும் சான்றுகளின் தரத்தை தீர்மானிக்கப் பயன்படுத்தப்படும் சட்டக் கோட்பாடுகள் உள்ளன. அதனால் நாங்கள் அதனை  எதிர்க்கிறோம், நாங்கள் அமெரிக்காவிற்கும்ஏனைய  நாடுகளுக்கும்இதனை  சொல்கிறோம். நாம் புதிதாக  ஆரம்பிப்போம் . தீர்வுகளை நாடுகள் மீது திணிக்க முடியாது. வெளிப்படையாக, ஒரு 30 வருட மோதலின் முடிவில், கடுமையான பிரச்சினைகள் இருக்கும், அது உலகில் எங்கும் நடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட நாடு தீர்வுகளை கண்டுபிடிப்பதில் முன்முயற்சி எடுக்க வேண்டும், ஏனெனில் தீர்வுகள் நாட்டின் கலாசாரம் மற்றும் மக்களின் அபிலாஷைகளுடன் ஒத்துப்போக வேண்டும். அவற்றை வெளியில் வடிவமைத்து இங்கு செயற் படுத்த முடியாது. அது ஒருபோதும்செயற்படாது.. முன்னைய  அரசாங்கம் களத்தில் குறைவாகவே சாதித்ததற்கு  இதுவே முக்கிய காரணம் என்று நான் கூறுவேன். அவர்கள் வாக்குறுதிகளை அளித்திருந்தனர்
அவர்களிடம் நல்ல எண்ணம் இருந்திருக்கலாம், ஆனால் அவர்கள் நீரோட்டத்திற்கு எதிராக கடுமையாக  நீந்துவதை அவர்கள் பார்த்தனர் . எனவே களத்தில்  செயற் படுத்த, நீங்கள் குறைந்தபட்சம் பொது மக்களின் ஆதரவைக் கொண்டிருக்க வேண்டும். அது இல்லாமல் எதுவும் வெற்றி பெறாது. எனவே நான் சொல்வது என்னவென்றால், நாங்கள் உங்களுடன் பங்குடைமை  மனப்பான்மையுடன் பணியாற்றுவோம், ஆனால் நீங்கள் தீர்மானங்கள் மூலம், அச்சுறுத்தல்கள் மூலம்வலியுறுத்துவதை  விரும்பவில்லை. உங்களுடன் பணியாற்றுவதில் நாங்கள் எதிர்நோக்கும்உணர்வு  அதுவல்ல. மேலும், நாம் பெற்றிருக்கக்கூடிய ஓரளவு ஒத்திசைவு  இருந்திருக்கிறது என்று நான் சொல்ல வேண்டும், அது கட்டி யெழுப்புவதற்கான  மிகவும் நம்பிக்கைக்குரிய அடித்தளமாகும்
கேள்வி ; நீங்கள் மனித உரிமைகள் பிரச்சினைபற்றி  குறிப்பிட்டீ ர்கள்   மனித உரிமைகள் நிகழ்ச்சி நிரலில் இருந்து நாட்டை எடுத்துவிடுமாறு  ஐ.நா. வை இலங்கை கேட்டுவருகிறது ஆனால் அது நடக்கவில்லை. மனித உரிமைகள் பிரச்சினையில்ஐ. நா.வுடன் , குறிப்பாக ஐ.நா மனித உரிமைகள்பேரவையுடன் விடயங்களை  கையாளும் போது, இலங்கை ஒரு வித்தியாசமான அணுகுமுறையை முன்னெடுக்குமா?

பதில்; இந்த தருணத்தில்  உலகில் மிகவும் சிக்கல் நிறைந்த நாடாக இலங்கை உள்ளதா? வேறு இடங்களில் உள்ள சூழ்நிலைகளைப் பாருங்கள். எனவே இலங்கைமீது செலுத்தப்படும்  கவனத்தின் அளவு நியாயமானதா ?  இல்லையென்றால், இந்த நிகழ்ச்சி நிரலின் பின்னணி என்ன என்று  எ ம்மை நாமே  கேள்வி கேட்க வேண்டும்.
இது இலங்கையில் உள்ள மக்களின் நல்வாழ்வோடு தொடர்புடையதா அல்லது ஏனைய செயற்பாட் டாளர்கள்  , ஏனைய  நாடுகளின் அரசியல், ஏனைய  நாடுகளின் அரசியல்வாதிகளின் நன்மைகள் , புலம்பெயர்ந்தோரின்  செல்வாக்கு  செல்வாக்கு, தேர்தலில் அவர்களின் செல்வாக்கு ஆகியவற்றின் நிகழ்ச்சி அவர்களின் கட்டளையில் வளங்கள், நிறுவன திறன்ஆகியவற்றுடன் தொடர்புடையதா?. இவை இந்த நிகழ்ச்சி நிரலை இயக்கும் காரணிகளா? அப்படியானால், அது இலங்கை மக்களின் நல்வாழ்வுக்கு ஏற்புடையதாக  உள்ளதா?
அதாவது, மிகவும் குறிப்பிடத்தக்க விட யம் என்னவென்றால், ஏற்றத்தாழ்வு என்று பலர் என்னிடம் சொன்னார்கள். உலக மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஒரு தடுப்பூசியைக் கூட பெறாத சூழ்நிலையில் இது நியாயமானதா, இலங்கை மீதான விசாரணைக்கு நூற்றுக்கணக்கான மில்லியன் டொ லர்கள் செலவிடப்படுவது நியாயமானதா?  ஐக்கிய நாடுகள் முறைமையின்  குறிக்கோள் மற்றும்  முன்னுரிமைகளுடன்அது ஒத்துப்போகிறதா?  ஐ. நா.வின் குறிக்கோள் குறிப்பிட்ட நாடுகளை இலக்கு வைத்து , வெளிப்படையாக அனைவருக்கும் பொருந்தாத தரங்களைப் பயன்படுத்துவதா? இரட்டைத்தனமான  நிலைப்பாடுகளாகும். இது எல்லாம் மிகவும் வெளிப்படையானவை . இப்போது இதன் விளைவு என்னவென்றால், ஐ. நா. முறைமையின் தார்மீகதன்மை  மற்றும் தார்மீக தரத்தின்  மீது நம்பிக்கை குறைபாடு ஏற்படும்,
சில நாடுகள் சவால் செய்ய முடியாதவை என்பதால்  தப்பித்துக்கொள்ளலாம். அந்த வகையான வலிமை இல்லாத சிறிய நாடுகள் பொறுக்கியெடுக்கப்பட்டு  இடைவிடாமல் தொடரப்படுகின்றன. அதுதானா  ஐ.நா. முறைமை ? அமைப்பின் பிரதான அம்சங்களில்  ஒன்று அரசு களின்  சமத்துவம். கருத்து தரையை தொடும்போது  ஐ. நா.சபை என்பது ஏனையநலன்சார்   அடிப்படையில் செயற் படும் ஒரு அமைப்பாகும், அது நம்பிக்கைக்கு பாரியளவில்  விரோதமானது.
ஐ. நா. முறைமைதொடர்பான   சீர்திருத்தம் குறித்து  தீவிர மாக சிந்திக்கவேண்டிய  வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் நான் நினைக்கிறேன்.
இன்று எ ம்மிடம் உள்ள கட்டமைப்பு இரண்டாம் உலகப் போரின் முடிவில் உருவானது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. பாதுகாப்பு சபை , அதன் அமைப்பு, நிரந்தர வீட்டோ, இவை அனைத்தும். அப்போதிலிருந்து இப்போது உலகம் கணிசமாகமுன்  நகர்ந்துள்ளது. ஆனால் அந்த முன்னேற்றங்கள் போதுமான அளவு காரணியாகஎடுக்கபட்டி ரு  க்கவில்லை . இப்போது ஒரு வலுவான கருத்து இருப்பதாக நான் நினைக்கிறேன். ஏனைய  நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் பிராந்திய குழுக்களுடனான எனது தொடர்புபாடல்களின்போது  நியூயோ ர்க்கில் இதை நான் கண்டேன். ஐக்கிய நாடுகள் சபையை சமகால யதார்த்தங்களுக்கு ஏற்ப கொண்டுவரவும், நாம் வாழும் உலகிற்கு மிகவும் பொருத்தமானதாக மாற்றவும் வலுவான தீர்மானம் உள்ளது. பூமியிலுள்ள பாரிய   மக்கள்தொகையின் வாழ்வை  மேம்படுத்த.சிலசமயம்  பொருளாதார மற்றும் சமூக பேரவைக்கு   அதிக முக்கியத்துவம்கொடுக்கப்படலாம்  . .இவற்றில் சில தவறான நிலைக்கு  போய்விட்டன என்று நான் நினைக்கிறேன் . உலகெங்கிலும் உள்ள சாதாரண மக்கள் ஐக்கிய நாடுகள் முறைமை  தங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்பினால். செலவழிக்கப்படும் பணம் மதிப்புக்குரியது மற்றும் ஒட்டுமொத்த அமைப்பிற்கும் ஒரு சிறந்த எதிர்காலத்தை உறுதி செய்ய ஒரு வழி உள்ளது.நீண்ட காலம் தாமதமாகியுள்ள  கட்டமைப்பு ரீதியான சீர்திருத்தங்கள் இப்போது வரை பெற்றி ருப்பதை  விட அதிக கவனத்தை செலுத்த வேண்டும்
கேள்வி;ஐ.நா முறைமைக்கு  இலங்கை நிதி ஒதுக்குகிறது. நாம் அந்த செயல்முறையைத் தொடரப் போகிறோமா?
பதில்;நாங்கள் ஐ. நா.முறைமைக்கு  பங்களிப்பு செய்கிறோம், எனவே எங்களுக்குகவுரவம்  மற்றும் சுயமரியாதைக்கான  உரிமை உண்டு. , நாங்கள் அச்சுறுத்தல்கள் மூலம் செயற் பட விரும்பவில்லை. நாங்கள் பங்களிக்கும் தொகை பெரியதல்ல, ஆனால் பங்களிப்பின் அளவு முக்கியமல்ல. நாடுகள் தங்கள் சொந்த பொருளாதார வளங்களைப் பொறுத்து,வேறு பட்ட தொகைகளை வழங்குகின்றன. நாங்கள் மிரட்டவில்லை. எங்களுக்குப் பிடிக்காத வகையில் நீங்கள் நடந்து கொண்டால், நாங்கள் உங்களிடமிருந்து வளங்களை துண்டித்துவிடுவோம் என்று நாங்கள் கூறவில்லை. நாம் செயல்பட விரும்பும்உணர்வு  அதுவல்ல. நாங்கள் ஈடுபடுவோம் என்று கூறியுள்ளோம். ஐக்கிய நாடுகள் அமைப்பின் தொடக்கத்தில் இருந்தே நாங்கள் அதன் உறுப்பினர்களாக இருந்தோம். ஆனால், எங்களின் தன்னாட்சி அதிகாரத்தையும், இலங்கை பாரா ளுமன்றம்  நீதித்துறை மற்றும் சுயாதீன நிறுவனங்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட எல்லைக்குள் செயற் படுவதற்கான உரிமையை நீங்கள் மதிக்க வேண்டும், மேலும் உள்ளூர் நிறுவனங்களுக்குச் சொந்தமான அந்த செயற் பாடுகளை அபகரிக்க எதுவும் செய்யக்கூடாது. வெளிநாடுகளில் உள்ள எங்கள் நண்பர்களின் ஒத்துழைப்பு மற்றும் உதவியுடன் பிரச்சினைகளை தீர்க்க உதவும் வகையில் அந்த முறைமை  எங்களுடன் மேம்பட  வேண்டிய உறவாகும்.
கேள்வி ; நீங்கள் புலம்பெயர்ந்தோர் பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச நியூயார்க்கில் இருந்தபோது, நல்லிணக்க செயல்முறையின்ஓரங்கமாக   புலம்பெயர் தமிழர்களை  அணுகுவதாக கூறினார். புலம்பெயர் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளதா?
பதில்;;ஆமாம், நாங்கள் நிச்சயமாக அதை வரவேற்போம். எல்லாவற்றிலும் உங்களுடன் உடன்படும் ஆட் களுடன் உரையாடுவது மிகவும் எளிது. அத்தகைய உரையாடல் சவாலானது அல்ல, ஆனால் அத்தகைய உரையாடலும் விளைவைஏற்படுத்தாது. . அடிப்படையில் வேறுபட்ட ஒரு கண்ணோட்டத்தைக் கொண்ட ஆட் களுடன் ஈடுபடுவது சவாலானது,. புலம்பெயர்ந்தவர்களுடன் , நாங்கள்  பேசுவதில் நிச்சயமாக மகிழ்ச்சி அடைகிறோம். நான் நியூயார்க்கில் விம்பிள்டனின் தாரிக் அகமதுபிரபுபை   சந்தித்தபோது, புலம்பெயர் மக்களிடம் பேசுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைவோம் என்று சொன்னேன். அவர்கள் எல்லாவற்றையும் ஏற்க மாட்டார்கள். அவர்களின் சொந்தக் கருத்துக்கள் எங்களால் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படாமல் இருக்கலாம், ஆனால் ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ள முயற்சிப்பது மதிப்புக்குரியது. மேலும் புலம்பெயர் மக்கள் உண்மையில் இலங்கையில் நிகழும் மாற்றங்கள் அல்லது தற்போதைய அரசாங்கத்தின் முயற்சிகள் பற்றி அறிந்திருக்கிறார்களா என்று எனக்குத் தெரியாது. மேலும் சாத்தியமான முழுமையான தகவல்கள் அவர்களிடம் இருக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். புலம்பெயர் மக்கள் மட்டுமல்ல. உதாரணமாக அரசசார்ப்பற்ற தொண்டர்நிறுவனங்கள்   மீதான எ மது அணுகுமுறை. அரசு சாரா நிறுவனங்களை நாங்கள் எதிரிகளாக கருதவில்லை. அவற்றை தூரத்தில்  வைத்திருக்க எங்களுக்கு விருப்பமில்லை. நாங்கள் அவர்களுடன் ஈடுபட விரும்புகிறோம். அவர்கள் மிகவும் குறிப்பிடத்தக்க வெளிப்பாட்டைக் கொண்டுள்ளனர். அவர்கள் பல தசாப்தங்களாக விரிவான அனுபவத்தைப் பெற்றுள்ளனர். ஜனாதிபதிகோத்தாபய ராஜபக்ச அவர்களை ஆகஸ்ட் 3 இல்  சந்தித்தார். நான் அவர்களை செப்டம்பர் 8 இல்  சந்தித்தேன். அரசசார்பற்ற நிறுவனங்களின்  செயலகத்தின் தலைவர் அவர்களைச் சந்திக்கிறார், அதன் பிறகு நான் அவர்களுக்கு மீண்டும் முன்மொழிந்தேன். வீட்டிற்குச் சென்று அதை மறந்துவிடுகின்ற ஒரு இனிமையான உரையாடலாக மட்டுமல்ல, ஆனால் அவர்கள் குறிப்பிட்ட பகுதிகளில் உதாரணமாக நிலையான வளர்ச்சி இலக்குகள்கணிசமான பங்கை வகிக்க முடியும் என்று நான் நினைக்கிறேன், . அது அவர்கள் உதவக்கூடிய ஒன்று. மேலும் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம்விடயத்தில்  அவர்கள் ஈடுபட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அலுவலகம் இப்போது மாவட்ட அளவிலான முயற்சிகளைத் தொடங்குகிறது. தன்னார்வநிறுவனங்கள்   நிச்சயம் பங்களிப்பு செய்யலாம். அவர்களின் யோசனைகளிலிருந்து நாங்கள் பயனடைய விரும்புகிறோம்.எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளிடம் பேசுவோம். பிரிட்டிஷ் பிரதமரின் அழைப்பின் பேரில் நாங்கள் கலந்து கொள்ளும்காலநிலை மாற்ற ம் தொடர்பான மாநாட்டிலிருந்து  திரும்பியவுடன் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தமிழ் தேசிய கூட்டமைப்பை சந்திக்க உள்ளார். எனவே அது அரசசார்பற்ற தொண்டர்நிறுவன   சமூகமாக இருந்தாலும் அல்லது வெளிநாட்டு புலம்பெயர்ந்தவர்களாக இருந்தாலும் சரி அல்லது இலங்கையில் உள்ள பாராளுமன்ற எதிரணியாக  இருந்தாலும் சரி. அவர்கள் அனைவருடனும் நாங்கள் ஈடுபட விரும்புகிறோம், அதுவே முன்னோக்கி செல்லும் வழி
கேள்வி ;  புலம்பெயர் குழுக்களில் சில இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ளன. உலகத்  தமிழ ர்  பேரவை போன்ற குழுக்களுடன் நீங்கள் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான தடையை நீக்க அரசாங்கம் பார்க்கிறதா?
பதில்;இல்லை, இலங்கை அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட அமைப்புகளுடன் எங்களால் பேச முடியாது. இது சாத்தியமில்லை, ஏனென்றால் அது எங்கள் சட்டத்தை மீறுவதாகும். ஆனால் ஏனைய  கருத்துகள் உள்ளன. எனவே, அவர்களுடன் ஈடுபடுவது பயனுள்ளது. நாங்கள் என்ன செய்கிறோம் என்பதில் அவர்கள் திருப்தி அடையவில்லை என்றால், நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்? ஆனால் நாட்டில் சில விட யங்கள் நடக்கின்றன, உதாரணமாக, பயங்கரவாதத் தடை ச்  சட்டத்தின் மறுசீரமைப்பாகும்.
நாம் அதை இ ரத்து செய்ய முடியாது. நாங்கள் அதை மிகவும் தெளிவுபடுத்தியுள்ளோம். தேசிய பாதுகாப்பு நலன்கள்எமது  மனதில் முதன்மையாக வையாக இருக்க வேண்டும். இந்த நாட்டில் மட்டுமல்லாமல் , பிராந்திய மற்றும் உலகளாவிய சூழலைக் கருத்தில் கொண்டு தொடர்ச்சியான  விழிப்புணர்வு முற்றிலும் அவசியம். எனவே,  நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் சட்டத்தை நாம் தக்கவைக்க வேண்டும். அதே நேரத்தில், மிக நீண்ட காலத்திற்கு முன்பு இயற்றப்பட்ட சட்டம், அவ்வப்போது திருத்தப்பட வேண்டும். அது அந்த வடிவத்தில் நிரந்தரமாக இருக்க விரும்பவில்லை. மாற்றப்பட வேண்டிய சில விதிகள் உள்ளன. நாங்கள் அதைச் செய்கிறோம். அழுத்தத்திற்கு பதிலாக  அல்ல. ட மோக்கிளி ஸின் வாள் [ தலைக்கு மேலாக தொங்கிக்கொண்டிருக்கும்வாள் ]  காரணமாக அல்ல, ஆனால் இது சரியான விட யம் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். மிக நீண்ட காலமாக சிறையில் இருந்தவர்கள், முன்னாள் விடுதலைப் புலிகள், அவர்களில் சிலரை மீண்டும் சமூகத்தில் விடுவிக்க முடியுமா என்பதை நாம் ஆராய வேண்டும். அவர்கள் மறுவாழ்வு பெற்றுள்ளனர். எனவே அவர்களின் பாதுகாப்பை தேசிய பாதுகாப்புக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் செய்ய முடியுமாஎன்பவை  நாம் களத்தில்  செய்யும் மாற்றங்கள். அதனால் அது ஆரோக்கியமானது. தன்னிச்சையாக மற்றும் ஒருதலைப்பட்சமாக முடிவுகளை எடுக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை. இது மேல்-கீழ் அணுகுமுறையாக இருக்காது. கருத்துக்களைப் பெறுவது எப்போதும் நல்லது, நாங்கள் இப்போது சகல லமட்டத்திலும் மக்களுடன் விரிவான கலந்துரையாடல்களை  நடத்துகிறோம். நாங்கள் ஆரம்பித்த  நல்லிணக்க செயல்முறைகளை அது செழுமையாக்குகிறது என்று நான் நினைக்கிறேன்.
கேள்வி ; அடையாள குறியீடான சிலவிடயங்கள்   சர்வதேச ஊடகங்களில் தொடர்ந்து முன்னிலைப்படுத்தப்படுகின்றன மேலும்ஜ ஸ்மின் சூக்கா போன்றவர்கள் இந்த விடயங்களை முன்னிலைப்படுத்தி வருகின்றனர். அந்தவிடயங்களு ம்   இந்த அரசு பார்க்கும் ஒன்றா?
பதில்;ஆனால் அது செல் வாக்கு செலுத்தப்படாமல்  பக்கசார்பற்ற   வழியில் செய்யப்பட வேண்டும். ஜ ஸ்மின் சூக் கா தருஸ்மன் குழுவில் உறுப்பினராக இருந்தார். எனவே நீங்கள் குழுவில் உறுப்பினராக இருந்தால், உங்களிடம் ஓரளவு பற்றின்மை மற்றும் பக்கசார்பின்மை இருக்க வேண்டும். ஆனால் அவர் எப்போதுமே இலங்கைக்கு எதிரான தீவிரமான மற்றும் இடைவிடாத செயற்பாட் டாளராக  இருந்தார். அவரு க்கு ஒரு பார்வை இருக்கிறது. அவர்  ஒரு பிரசாரகர். அதனால் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், அவர்  இலங்கைக்கு எதிராக மிகவும் விசனத்துடன்  இருந்தார் . அவருக்கு  ஏனைய  அமைப்புகளுடன் தொடர்பு உள்ளது. சூழ்நிலைகளின் நியாயமான மதிப்பீடாக நாங்கள் அதை கருதவில்லை. அடையாள குறியீடான வழக்குகள், ஆம். ஆனால் உதாரணமாக ஹிஜாஸ் ஹிஸ்புல்லா விட யம். அது நீதிமன்றத்தின் முன் உள்ளது. சுமார் மூன்று அல்லது நான்கு நீதிமன்ற விசாரணைகள் நடந்திருப்பதை நான் புரிந்துகொள்கிறேன். எனவே அது இனி நிர்வாகக் காவலில் அல்லது சட்டத்தின் விதிக்கு முரணான விட யம் அல்ல. இது இலங்கை நீதிமன்றத்தால் விசாரிக்கப்படும் வழக்கு. எனவே இந்த வழக்குகளில் ஒவ்வொன்றும்பற்றி  ஒரு பாரிய  தவறான தகவல் உள்ளது அதேவேளை ஒரு  நியாய பூர்வமான உணர்வும் இருக்க வேண்டும். பரந்த ளவில் பாருங்கள். நாம் சரியான திசையில் செல்கிறோமா? இந்த மாற்றங்கள் விரும்பத்தக்கதாக இருந்தால், நாம் விரும்புவது அதிக ஆட்களின்  ஈடுபாடாகும்., அதிக ஒத்துழைப்பைவிட , அழிவுகரமான விமர்சனம்  முன்னேறுவதைத் தடுக்கும்.
கேள் வி;  எங்கள் வெளிநாட்டு உறவுகளுக்குமீண்டும் செல்ல விரும்புகிறேன், இந்தியாவுடனான எங்கள் உறவைப் பற்றி உங்களிடம் கேட்க வேண்டும், ஏனெனில் அதுவும் குறிப்பாக சீனாவைஇந்திய ஊடகங்களில் முன்னிலை ப்படுத்தப் படுகிறது. இந்தியா வுடன்  நாம் எவ்வாறு முன்னோக்கி செல்வதை எதிர்கொள்ளப் போகிறோம்?
பதில்;உங்களுக்குத் தெரியும், இந்தியாவுடனான எங்கள் உறவைப் பற்றி நினைவில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான ட யம் என்னவென்றால், அது ஒரு விவகாரத்துடன்   மட்டுப்படுத்தப்படவில்லை. இது மனித செயற்பாட்டின்  ஒவ்வொரு அம்சத்தையும்அகலிக்க வைக்கும்  ஒரு உறவு. இது மிகவும் நெருக்கமான உறவு மற்றும்மிக  , நீண்ட காலஉறவு. இலங்கையின் ஐந்து பெரிய முதலீட்டாளர்களில் இந்தியாவும் ஒன்றாகும். இப்போதே நாங்கள் சுற்றுலாவை மீண்டும் தொடங்குகையில், ஒரு நாளைக்கு 3500 சுற்றுலாப் பயணிகள் சில நேரங்களில் வருகிறார்கள், அந்த சுற்றுலாப் பயணிகளில் பெரும்பான்மையானவர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். இந்தியாவுடன் எங்களுக்கு கணிசமான அளவு வர்த்தகம் உள்ளது.
அந்த உறவின் மிக முக்கியமான அம்சம் மக்கள் தொடர்பு என்பது என்று நான் கூறுவேன். அக்டோபர் 20 அன்று, குஷிநகருக்கு ஒரு விமானம் உள்ளது. அ து சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்தப்பட்டுள்ளது. குஷிநகருக்கு செல்லும் முதல் விமானம் இலங்கையிலிருந்துசெல்கிறது  அந்த விமானத்தில் நூறு புத்த பிக்குகள் பயணிப்பார்கள். விமானத்தை வரவேற்க குஷிநகருக்கு தனிப்பட்ட முறையில் வருவேன் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். எனவே, இந்த வகையான மக்கள் தொடர்பு  உறுதியான அடித்தளத்தை  கொண்டதாகும்.. மக்கள் தொடர்பு கொள்ளும் பரிமாணத்தை  கருத்தில் கொள்ளுங்கள். கல்வியாளர்கள் அங்கு செல்கிறார்கள் . எங்களிடம் நடனக் குழுக்கள் உள்ளன. வணிகர்கள் சென்று கொண்டிருக்கிறார்கள், எங்களிடம் திரைப்படத் தொழிலதிபர்கள் உள்ளனர், அது கொழும்புக்கும் புதுடி ல்லிக்கும் இடையிலான உறவு மட்டுமல்ல என்பதை மறந்துவிடாதீர்கள். இந்தியாவின் ஏனைய மாநிலங்களான , உத்தரபிரதேசம், பீகார், கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகியவற்றுடன் எங்களுக்கு உறவு உள்ளது. இந்த மாநிலங்கள் அனைத்தும் முக்கியமானவை. இது பலதரப்பட்ட உறவாகும், பாதுகாப்பு,விடயத்தில் எமது  இ ராணுவ வீரர்களுக்கு பயிற்சி, தகவல் பரிமாற்றம், ஆகிய துறைகளில் நாங்கள் நிறைய செய்து வருகிறோம். , உரம் தொடர்பான எங்கள் பிரச்சினைகளுக்குகூட  இந்தியா எங்களுக்கு கணிசமான  அளவுவுக்கு  உதவுகிறது,
கேள் வி;  ஆப்கானிஸ்தான் பற்றி உங்களிடம் கேட்க விரும்புகிறேன், ஏனெனில் அது சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்த்த ஒன்றாகும் . தலிபான் அரசை அங்கீகரிக்க இலங்கை தயாரா?
பதில் ;அது பரிசீலனையில் உள்ளது. தலிபான்கள் முடிந்தவரைசகலதரப்பையும் உள்ளடக்கிய  நிர்வாகத்தை உருவாக்க விரும்புகிறோம், பெண்களை நடத்துவது  மிக முக்கியமான கருத்தாகும். பெண்கள் கல்வி பெற வேண்டும். கடந்த நிர்வாகத்தின் அதிகாரிகளுக்கு த லிபான் பொது மன்னிப்பு வழங்கியதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஆனால் அவர்கள் தங்கள்நற்  சான்றுகளை நிறுவுவது முக்கியம். அவர்களின் உண்மையான செயற்பாடுகளே அவர்களின் நேர்மைதன்மையை வெளிப்படுத்தும்.. எனவே நாங்கள் அந்த நிலைமையை தொடர்ந்து பரிசீலனை செய்து வருகிறோம், உரிய நேரத்தில் உரிய முடிவுகளை எடுப்போம்