சர்வதேசத்திலும் உள்நாட்டிலும் எதிர்ப்புகள் வலுவடைந்துள்ள போதிலும் தூக்குத் தண்டனையை நிறைவேற்றியே ஆக வேண் டும் என்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானத்தில் தளர்ச்சியைக் காண முடியவில்லை. மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளை தூக்கில் இட்டு தண்டிக்கின்ற நடைமுறை நான்கு தசாப்தங்களுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மரண தண்டனைக்குப் பதிலாக அந்தக் கைதிகள் ஆயுட்கால சிறைத் தண்டனையை அனுபவித்து வந்துள்ளார்கள். ஜனாதிபதியின் தூக்குத் தண்டனை நிறைவேற்றத் தீர்மானம் இந்த நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வழிவகுத்துள்ளது. எதிர்ப்புகள் இருந்த போதிலும், மரண தண்டனைக் கைதிகளை – குறிப்பாக போதைப் ...
Read More »கொட்டுமுரசு
கொள்ளையடித்த பணத்தை தந்துவிட்டு பாகிஸ்தானை விட்டு வெளியேறுங்கள்!
பாகிஸ்தான் முன்னாள் அதிபரும் முன்னாள் பிரதமரும் மக்களிடம் கொள்ளையடித்த பணத்தை திருப்பித் தந்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறுவதில் எனக்கு ஆட்சேபணை இல்லை என இம்ரான் குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மற்றும் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் ஆகியோருக்கு எதிராக பல்வேறு ஊழல் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அவர்கள் சில வழக்குகளில் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் அடைப்பட்டிருக்கும் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி நேற்று மற்றொரு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், மக்களிடம் கொள்ளையடித்த பணத்தை திருப்பித் ...
Read More »அரசியல் சகதிக்குள் சிக்கித் தத்தளிக்கும் நிலை !
கல்முனை வடக்கு உபபிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தக்கோரி நடத்தப்பட்ட உண்ணாவிரதப்போராட்டம் கடந்த வாரம் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தது. கடந்த திங்கள்(17) முதல் ஞாயிறு (23) ஏழு தினங்கள் சாகும்வரை உண்ணாவிரதமிருந்த கல்முனை சுபத்ரா ராமய விகாராதிபதி வண.ரண்முத்துகல சங்கரத்ன தேரர் கிழக்கிலங்கை இந்து குருமார் ஒன்றியத் தலைவரும் கல்முனை முருகன் ஆலய பிரதம குருவுமான சிவஸ்ரீ க.கு.சச்சிதானந்த சிவக்குருக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான சந்திரசேகரம் ராஜன், அழகக்கோன் விஜயரெத்தினம் அனைத்து இந்து ஆலயங்களின் ஒன்றியத்தலைவரும் தொழிலதிபருமான கிருஸ்ணபிள்ளை லிங்கேஸ்வரன் ஆகியோர் இதில் ...
Read More »மைத்திரியின் இன்னொரு குத்துக்கரணம்!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆகப் பிந்திய குத்துக் கரணம், 19 ஆவது திருத்தச்சட்டத்துக்கு எதிராகத் தூக்கியிருக்கின்ற போர்க்கொடி தான். ஆடத்தெரியாதவன் மேடை கோணல் என்றானாம், என்பது பழமொழி. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 19 ஆவது திருத்தச்சட்டத்தை இல்லாமல் செய்ய வேண்டும் என்று வெளியிட்டிருக்கின்ற கருத்து, அந்தப் பழமொழியைத் தான் நினைவுபடுத்துகிறது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இன்னமும் அவ்வப்போது முட்டி மோதிக் கொண்டிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவருக்கு முன்பாகவே இந்தக் கருத்தை முதலில் வெளியிட்டிருந்தார். தற்போதைய அரசாங்கம், கடந்த நான்கரை ஆண்டுகளில் சரியாகச் செயற்படாமல் ...
Read More »நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஒரு ஜனாதிபதியின் தடுமாற்றம்!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமது அரசியல் எதிர்காலத்துக்காகவும் இருப்புக்காகவும் தமது குடும்பத்தின் பாதுகாப்புக்காகவும் என்னென்னவோ எல்லாம் செய்து வருகிறார். அந்த விடயத்தில், அவருக்கு எவ்வித கொள்கைகளும் இருப்பதாகத் தெரியவில்லை. ஒரு நாள், முன்னாள் ஜனாதிபதியும் 2014ஆம் ஆண்டு முதல் மூன்றாண்டுகளாகத் தமது பரம எதிரியாகவும் இருந்தவருமான மஹிந்த ராஜபக்ஷவுடன் அவர் கூட்டுச் சேர முயற்சிக்கிறார். மறுநாள், அந்த முயற்சிகள் அவ்வாறே இருக்க, ஐக்கிய தேசிய கட்சியுடன் சேரத் தயார் எனக் கூறினார். இப்போது, ஜனாதிபதித் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாகத் தெரிவித்துள்ளார். இப்போது அவர், ...
Read More »பல்திறப்புலமையும் ஆளுமையும் கொண்டிருந்த தில்லைநாதன்!
எஸ்.தில்லைநாதனின் மரணம் எம்மத்தியிலிருந்து பல்திறப்புலமையும் ஆளுமையும் கொண்ட மூத்த ஊடகவியலாளர் ஒருவரை அபகரித்துச் சென்றுவிட்டது. அரைநூற்றாண்டுக்கும் அதிகமான காலமாக ஊடகத்துறையில் சேவையாற்றிய தில்லைநாதன் 1960களின் முற்கூறில் அச்சு இதழியலில் பணியாற்றத் தொடங்கியிருந்தாலும், பிற்காலத்தில் இலத்திரனியல் ஊடகத்துறையிலும் தனது முத்திரையைப் பதித்தவர். மும்மொழிகளிலும் வளமான ஆற்றலைக் கொண்ட அவர் வீரகேசரியில் ஒரு இளைஞனாக 1960களில் சேர்ந்தபோது இலங்கையின் தமிழ்ப் பத்திரிகை உலகில் பழுத்த அனுபவமும், அறிவாற்றலும் உடையவர்களாக விளங்கிய கே.வி.எஸ்.வாஸ், எஸ்.டி.சிவநாயகம், கே.சிவப்பிரகாசம் போன்றவர்களின் வழிநடத்தலில் பணியாற்றும் அதிர்ஷ்டத்தைக் கொண்டிருந்தார். ஒரு அலுவலகச் செய்தியாளர் என்ற ...
Read More »இராணுவ முகாமில் 3 வருடமாக பாலியல் அடிமையாக வைக்கப்பட்டிருந்த பெண்!
முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக மனித உரிமை மீறல் வழக்குகள் பத்து அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. யஸ்மின் சூக்காவை தலைமையாக கொண்ட சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பின் ஏற்பாட்டில் இந்த நட்டஈட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஏப்ரலில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்களிற்கு மேலதிகமாக எட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில் 3 வருடமாக பாலியல் அடிமையாக வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் இளம்பெண் ஒருவரும் வழக்கு தாக்கல் செய்துள்ளார். கருத்தடை மருந்துகள் ஏற்றப்பட்டு, இராணுவ முகாமில் பாலியல் அடிமையாக வைக்கப்பட்டிருந்ததாக அவர் ...
Read More »இல்லாத உறவுக்கு ஏன் இந்த அபிஷேகம்!
“நான் சொன்னவற்றைச் செய்வேன்; செய்தவற்றைச் சொல்வேன்”. இது சூப்பர்ஸ்டார் ரஜனிகாந்த், தனது படங்களில் பொதுவாக உச்சரிக்கும் வாக்கியம் (பஞ் டயலக்) ஆகும். திரையில் கதைக்க, கேட்க சுவையானது; சுவாசிரியமானது. ஆனால் நிஜ வாழ்வில்? அவ்வாறே, உறுதிமொழிகள் வழங்குவதும் மிக இலகுவானது. ஆனால், அதை நிறைவேற்றுவது மிகக் கடினமானது. இலங்கை அரசியல் வரலாற்றில், இனப்பிணக்கு விவகாரத்தில் தமிழ் மக்களுக்குக் காலத்துக்குக் காலம் ஆட்சியாளர்களால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் ஆயிரம் ஆயிரம். அவற்றில் நிறைவேற்றப்பட்டவைகள்? ‘மனிதன் அனுபவிக்கும் பெரும்பாலான துன்பங்களைத் தன்பேச்சின் மூலமாகத்தான் தேடிக் கொள்கின்றான்’ என்கிறார் ரேபியா ...
Read More »மாற்று கூட்டணி அமைப்பதில் உள்ள பிரதான தடை எது?
தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றாக வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான கூட்டணி அமைவதில் தடைகள் உள்ளமைக்கு காரணம், ஒரு தரப்பினர் தமது தனிப்பட்ட அடையாளம் அழிந்து விடுமோ என்று எண்ணுவதே ஆகும் என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் வழங்கிய செவ்வியில் தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு, கேள்வி:- தற்போதைய தமிழர் அரசியல்களம் தமிழர்களின் உரிமையை பெறுவதற்கு சாதாகமானதாக உள்ளதா? பதில்:-ஆங்கிலேயரின் காலனித்துவ ஆட்சியின் கீழ் இலங்கை இருந்தபோது நிர்வாக வசதி கருதி இந்நாட்டில் ...
Read More »தேசிய அளவில் பரிணமித்த கல்முனை விவகாரம்!
“கல்முனை உப பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தும் விவகாரம் தீவிரமடைந்து, மூவின மக்களிடையேயும் மனக் கசப்பையும் வெறுப்புணர்வையும் வளர்த்துச் செல்கின்ற ஒரு மோசமான நிலைமை உருவாகி இருந்த போதிலும், அரசியல்வாதிகளும், ஆட்சியாளர்களும் இந்த விடயத்தில் அசமந்தப் போக்கைக் கடைப்பிடித்து வருவது கவலைக்குரியது.” கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தக் கோரி நடத்தப்பட்ட போராட்டமும், அதனை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டமும் இந்த நாட்டில் இனங்களுக்கிடையிலான நல்லுறவு மோசமடைந்து செல்வதைக் கோடிட்டுக் காட்டியிருக்கின்றன. இந்த செயலகத்தை முழுமையானதொரு பிரதேச செயலகமாகத் தரமுயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை மூன்று ...
Read More »