கொட்டுமுரசு

டியூ குணசேகர !அவர் ஒரு கைதேர்ந்த கம்யூனிஸ்ட்!

நீண்டகாலம் சேவை செய்த அரசியல் தலைவராக டியூ.குணசேகர விளங்குகிறார். சரியாகச் சொல்லப்போனால் 60 வருடங்கள். டட்லி சேனாநாயக்க 31 வருடங்கள் சேவை செய்தார் ஜே.ஆர்.ஜயவர்தன 50 வருடங்கள் ;  சிறிமாவோ பண்டாரநாயக்க 40 வருடங்கள் ;  கலாநிதி என்.எம்.பெரேரா 46 வருடங்கள் ;  கலாநிதி கொல்வின் ஆர்.டி.சில்வா 56 வருடங்கள் ; கலாநிதி எஸ்.ஏ.விக்ரமசிங்க 50 வருடங்கள் ; பீட்டர் கெனமன் 57 வருடங்கள். நோர்வேயைச் சேர்ந்த சிறந்த நண்பரொருவர் டி.யூவுடன் குறுகிய நேரம் சந்தித்துப் பேசிவிட்டு அவர் எத்தகைய பண்பு கொண்டவர் என்று ...

Read More »

மதமாற்றத்துக்கு என்ன தண்டனை கூறப்பட்டுள்ளது?

1981 இல் அச்சிடப்பட்ட புத்தகத்தில் இஸ்லாமிய மதத்தை விட்டு செல்பவர்களுக்கு மரணமே தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் சமூக வாழ்வியல் கட்டமைப்பை சிதைப்பவர்களுக்கு  வழங்கப்படும் தண்டனை பற்றி கூறப்பட்டுள்ளன இந்த தண்டனைகளால் தவறுகளை செய்யாத சமூக கட்டமைப்பை ஒன்றை உருவாக்குவதே இஸ்லாம் மதத்தின் நோக்கமாக உள்ளதெனவும்  கூறப்பட்டுள்ளது என  பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க அழைக்கப்பட்ட கல்வி அமைச்சின் செயலாளர் – இ.எம்.எம். ரணசிங்கவிடம் தெரிவுக்குழு நடத்திய விசாரணைகளின் போதே அவர் இதனை தெரிவித்தார். கேள்வி – கல்வி அமைச்சின் செயலாளர் என்ற வகையில் இஸ்லாமிய ...

Read More »

நல்லிணக்கத்துக்கான வழி!

அர­சியல் கைதி­களின் விடு­தலை மறந்து போன விவ­கா­ர­மாக மாறி­விட்­டது போலத் தோன்­று­கின்­றது. அர­சாங்கம் இந்தப் பிரச்­சி­னையைத் தீர்ப்­ப­ தாகப் பல தட­வை­களில் வாக்­கு­றுதி அளித்­தி­ருக்­கின்ற போதிலும், அதனை முடி­வுக்குக் கொண்டு வரு­வதில் அக்­க­றை­யற்ற ஒரு போக்­கையே கடைப்­பி­டித்து வரு­கின்­றது. பயங்­க­ர­வாதத் தடைச் சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்­ட­வர்கள் பயங்­க­ர­வாதச் செயல்­க­ளுடன் தொடர்­பு­டைய பயங்­க­ர­வா­திகள் என்­பதே அர­சாங்­கத்­தி­னதும், பேரின அர­சி­யல் ­வா­தி­க­ளி­னதும் நிலைப்­பா­டாகும். ஆனால் உண்­மையில் அவர்கள் பயங்­க­ர­வா­தி­க­ளல்ல. அவர்கள் அர­சியல் கைதிகள். இத­னையே அந்தக் கைதி­களும், தமிழ்த்­ த­ரப்­பி­னரும் அர­சாங்­கத்­திடம் வலி­யு­றுத்திக் கூறி வரு­கின்­றார்கள். ...

Read More »

எங்களை ரணில் நம்புவதில்லை!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தங்களை (கூட்டமைப்பை) நம்புவதைவிட, முஸ்லிம் அமைச்சர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களையுமே நம்புவதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். கடந்த மாத இறுதியில் (ஜூன் 26), வவுனியா – பாலமோட்டை பகுதியில், அவரது விசேட நிதியில் அமைக்கப்பட்ட சனசமூக நிலையக் கட்டடத்தைத் திறந்து வைத்த பின்னர் ஊடவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே, இவ்வாறாகக்  கூறியுள்ளார். இது, வெறுமனே சராசரியாக விட்டுவிடக் கூடிய கருத்து அல்ல. அத்துடன், சாதாரண நபர் கூறிய கருத்தும் அல்ல. தமிழ் ...

Read More »

கைவிடப்பட்ட கதை?

ஜனாதிபதி தேர்தலுக்கு பிரதான அரசியல் கட்சிகள் தயாராகிக்கொண்டிருக்கின்றன. வேட்பாளர்களாக களமிறங்கக்கூடியவர்கள் குறித்து அறிகுறிகள் காட்டப்படுகின்றனவே தவிர, திட்டவட்டமான அறிவிப்புகள் இதுவரையில் இல்லை. ஆனால், தேர்தலுக்கு இன்னமும் ஐந்து மாதங்களே இருக்கும் நிலையில், பிரதான கட்சிகள் அல்லது கூட்டணிகள் அவற்றின் வேட்பாளர்களை அறிவிப்பதில் நீண்ட தாமதத்தைக் காட்டமுடியாதநிலை நெருங்கிக்கொண்டிருக்கிறது.   இத்தடவை ஜனாதிபதி தேர்தலில் கட்சிகளினால்  முன்வைக்கப்படக்கூடிய பிரதான பிரச்சினை எதுவாக இருக்கும் என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. கடந்த கால்நூற்றாண்டு காலத்தில் ஜனாதிபதி தேர்தல்களில் பிரதான பிரசாரப்பொருளாக இருந்த  ‘ நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ...

Read More »

மனங்­க­ளை­விட்டு நீங்­காத திருமலை படுகொலை!

2006  ஆம் ஆண்டு திரு­கோ­ண­ம­லையை கதி­க­லங்க வைத்த 5 மாணவர் படு­கொ­லை­யோடு சம்பந்­தப்­பட்­ட­தாக கருதி கைது­செய்­யப்­பட்டு கடந்த 6 வரு­டங்­க­ளாக சிறை­வைக்­கப்­பட்­டி­ருந்த  12 அதி­ர­டிப்­ப­டை­யி­னரும் சுமார் 13 வரு­டங்­க­ளுக்­குப்­பி­றகு தீர்ப்பு வழங்­கப்­பட்ட நிலையில்  கடந்த புதன்­கி­ழமை (3.7.2019) விடு­தலை செய்­யப்­பட்­டுள்­ளார்கள். அவர்­களின் விடு­த­லைக்­கான தீர்ப்பை திரு­கோ­ண­மலை நீதவான் நீதி­மன்ற பிர­தான நீதி­பதி முகமட் ஹம்சா வழங்­கி­யுள்ளார். வழக்கு தொடுநர் சார்­பாக  முன்­வைக்­கப்­பட்ட சாட்­சி­யங்கள் இவ்­வ­ழக்கில் சம்­பந்­தப்­பட்ட எதி­ரி­களை  மேல் நீதி­மன்றில் முன்­னி­லைப்­ப­டுத்­து­வ­தற்கு  போது­மா­ன­தாக  அமை­யாத கார­ணத்­தினால்  இவ்­வ­ழக்­கி­லி­ருந்து  13 எதி­ரி­க­ளையும் விடு­விப்­ப­தாக  திரு­மலை நீதவான் ...

Read More »

மோசமான நிலை நீடித்தால் ஐ.நா.செல்வது உறுதி!-ரிஷாத்

ஐ.நாவை நாடுவது என்பது ஜனநாயக விரோதமான செயற்பாடொன்றல்ல. குண்டுத்தாக்குதலின் பின்னரான காலப்பகுதியில் திட்டமிட்ட தாக்குதல்களின் சூத்திரதாரிகள் இன்னமும் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்படவில்லை. தண்டிக்கப்படவுமில்லை. இவ்வாறான மோசமான நிலைமை தொடருமாக இருந்தால் நிச்சயமாக ஐ.நாவினை நாடவேண்டிய நிலைமையே ஏற்படும் என கைத்தொழில், வாணிப அலுவல்கள், நீண்ட காலம் இடம்பெயர்ந்துள்ளவர்களின் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாத் பதியுதீன் வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின்போது தெரிவித்தார். அச்செவ்வியின் முழுமையான வடிவம் வருமாறு, ...

Read More »

மீண்டும் ஏமாற்றம் மாறாத வரலாறு!

தமிழ் மக்கள் மீண்­டு­மொ­ரு­முறை தென்­னி­லங்கை அதி­கா­ரத்த­ரப்­பி­னரால் ஏமாற்­றப்­பட்­டி­ருக்­கின்­றனர். வர­லாறு முழு­வதும் தமிழ் பேசும் மக்கள் தமக்­கான அர­சியல் அதி­கா­ரங்கள்,  தீர்­வுத்­திட்­டங்கள் தொடர்பில் எவ்­வாறு தமிழ் மக்கள் ஏமாற்­றப்­பட்­ட­னரோ அதே­போன்று மீண்டும் ஒரு­முறை ஏமாற்­றப்­பட்­டுள்­ளனர். நியா­ய­மான அர­சியல் தீர்வு ஒன்று கிடைக்கும் என்ற எதிர்­பார்ப்­பி­லி­ருந்த தமிழ் மக்கள் தற்­போது நம்­பிக்­கை­யி­ழந்­த­வர்­க­ளா­கவும் எதிர்­பார்ப்பு அற்­ற­வர்­க­ளா­கவும் மாறி­யி­ருக்­கின்­றனர். 2015ஆம் ஆண்டு உரு­வா­கிய நல்­லாட்சி அர­சாங்­கத்தின் பத­விக்­காலம் முடி­வ­டை­யப் ­போ­கின்­றது. இன்னும் சில மாதங்­களில் ஜனா­தி­பதித் தேர்தல் நடை­பெ­றப் ­போ­கி­றது. ஆனால் அதே­போன்று தமிழ் மக்கள் தீர்­வுத்­ திட்டம் தொடர்பில் ...

Read More »

ஒரு தசாப்தம் கடந்தும் கூட நிலையான வாழ்விடம் இல்லை!

சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை 65 இலங்கை அகதிகளை இந்தியப் பிரஜாவுரிமைக்கு விண்ணப்பிக்குமாறு அண்மையில்  பிறப்பித்த உத்தரவு நீண்டகாலப் பிரச்சினை ஒன்றுக்கு இரு நாடுகளும் தீர்வுகாணவேண்டிய தேவை மீது மீண்டும் கவனத்தை திருப்பியிருக்கிறது. இலங்கையில்  இருந்து 1983 — 2012 காலகட்டத்தில் தமிழ்நாட்டுக்கு தப்பியோடிவந்த சுமார் 95 ஆயிரம் அகதிகள் சம்பந்தப்பட்டதே இந்த பிரச்சினையாகும். அவர்களில் சுமார் 60 ஆயிரம் பேர் மத்திய அரசாங்கத்தின் கணிசமான நிதியுதவியுடன் மாநில அரசாங்கத்தினால் நிருவகிக்கப்பட்டுவருகின்ற 107 முகாம்களில் தங்கியிருக்கிறார்கள் என்று மதிப்பீடு ஒன்று தெரிவிக்கிறது மீதிப்பேர் முகாம்களில் வசிக்காத ...

Read More »

மரணதண்டனை: தீர்வில்லாத தீர்வு!

அண்மையில், நால்வருக்கு மரணதண்டனையை உறுதிசெய்து, ஜனாதிபதி கையொப்பமிட்டுள்ளார் என்ற செய்தி ஏற்படுத்திய அதிர்ச்சி, கொஞ்சமல்ல. ஆனால், இப்படியொரு செயலை ஜனாதிபதி செய்யமாட்டார் என்று எண்ண நியாயமில்லை. அவரது நடத்தை, அதையே காட்டி நிற்கின்றது. மரணதண்டனை வழங்குவதற்கு, அடிப்படையாக அமைவது, அந்த வழக்கை விசாரணை செய்யும் அதிகாரிகளின் புலனாய்வும் அதன் மூலமாகத் திரட்டப்பட்ட ஆவணங்களுமேயாகும். இலங்கை போன்ற நாடுகளில், சட்டம் ஒழுங்கின் யோக்கியம் எமக்குத் தெரியாததல்ல. பொலிஸார் குற்ற வழக்குகளைப் புலனாய்வு செய்து, அந்தக்க குற்றத்தின் உண்மையான பின்னணி குறித்தும், அதில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் கண்டறிந்து, ...

Read More »