1981 இல் அச்சிடப்பட்ட புத்தகத்தில் இஸ்லாமிய மதத்தை விட்டு செல்பவர்களுக்கு மரணமே தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் சமூக வாழ்வியல் கட்டமைப்பை சிதைப்பவர்களுக்கு  வழங்கப்படும் தண்டனை பற்றி கூறப்பட்டுள்ளன இந்த தண்டனைகளால் தவறுகளை செய்யாத சமூக கட்டமைப்பை ஒன்றை உருவாக்குவதே இஸ்லாம் மதத்தின் நோக்கமாக உள்ளதெனவும்  கூறப்பட்டுள்ளது என  பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க அழைக்கப்பட்ட கல்வி அமைச்சின் செயலாளர் – இ.எம்.எம். ரணசிங்கவிடம் தெரிவுக்குழு நடத்திய விசாரணைகளின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

கேள்வி – கல்வி அமைச்சின் செயலாளர் என்ற வகையில் இஸ்லாமிய பாடப்புத்தகங்களில் 1982-84 வரையில் மதமாற்றத்துக்கு என்ன தண்டனை கூறப்பட்டுள்ளது?

பதில்:- 1981 இல் அச்சிடப்பட்ட புத்தகத்தில் குற்றம் மற்றும் தண்டனைகள் பற்றி கூறப்பட்டுள்ளது. வரலாறு காலம் தொடக்கம் கூறப்பட்டுள்ளது. அதற்கமைய அந்த புத்தகத்தின் 283 ஆவது பக்கத்தில் மதத்தை  விட்டுச் செல்பவர்களுக்கு மரணமே தண்டனை எனக் கூறப்பட்டுள்ளது.  அதன் பின்னர் அந்த குற்றங்கள் பற்றி விவரிக்கபட்டுள்ளன. அதற்கமை சமூக வாழ்வியல் கட்டமைப்பை சிதைப்பவர் களுக்கு  வழங்கப்படும் தண்டனை பற்றி கூறப்பட்டுள்ளன.

அதற்கமைய திருட்டுச் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களின் கைகள் வெட்டப்பட வேண்டும் எனவும்  தகாத உறவை பேணும் பட்சத்தில் அவர்கள் கல்லெறிந்து கொள்ளப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. ஏவ்வாறாயினும் இந்த தண்டனைகளால் தவறுகளை செய்யாத சமூகம் ஒன்றை கட்டமைப்பை உருவாக்குவதே இஸ்லாம் மதத்தின் நோக்கமாக உள்ளதெனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கேள்வி – இந்தப் பாடத்திட்டங்கள் அரபு மொழியிலிருந்து மொழிமாற்றம் செய்யப்பட்டவையா?

பதில்:- ஆம் பல்கலைகழக பேராசிரியர்களை கொண்டுதான் இந்த பாடப் பரப்புக்கள் தயாரிக்கப்படும் அதன் பின்னர் இஸ்லாம் மதம் தொடர்பில் ஆராயும்  குழுவால் அங்கிகாரம் வழங்கப்பட்ட பின்பே பாடப்புத்தகம் மாணவர்கள் கைகளில் வழங்கப்படும். அதற்கமைய இந்த புத்தகத்தில் உள்ள சில விடயங்கள் அரபு நூல்களில் இருந்தும் தொகுக்கப்பட்டுள்ளன.

கேள்வி – 1983 இஸ்லாம் பாடப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ள விதம் பற்றி விபரியுங்கள் ?

பதில் :- அந்த புத்தகத்துக்கமைய ஆண் பெண் வேறுபாடுகளை கருத்திற் கொள்ளாமல் நடத்தல் மது அருந்துதல் உள்ளிட்ட விடயங்கள் இஸ்லாம் மதத்துக்கு எதிரான புரட்சிகள் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  அத்தோடு இந்த புத்தகத்திலும் 283 ஆம் பக்கத்தில் ரிப்பாத் எனப்படும் மதத்தை விட்டுச் செல்லும் செயலுக்கு மரணமே தண்டனையாகும் என கூறப்பட்டுள்ளது. இது 1981 புத்தகத்திலும் கூறப்பட்டுள்ள விடயமாகும்.

கேள்வி –புதிய புத்தகப் பதிப்பில் எவ்வாறு தண்டனைகள் விளக்கப்பட்டுள்ளன?

பதில் :- புதிய புத்தகத்திலும் மேற்குறிபிட்ட விடயங்கள் அவ்வண்ணமே உள்ளன. 2013 ஆம் ஆண்டு பின்னர் தான் அந்த பாடத்திட்டங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ள 2016 ஆம் ஆண்டு பதிப்புகளில் அந்த விடயம் நீக்கப்பட்டுள்ளது.

கேள்வி – கல்வி அமைச்சினால் அச்சிடப்பட்ட புத்தகங்களுக்கு அமைச்சு முழுமையாக பொறுப்புக்களை ஏற்காதா?

பதில் :- உள்ளீடு செய்யப்பட்டுள்ள விடயங்கள் பற்றி ஆராய்வதற்கான நிபுணர் குழுவொன்றும் உள்ளது. அதனுல் கல்வி அமைச்சின் அமைச்சு, மஹாரகமவில் உள்ள அரசாங்க அச்சகத்தின் நிபுணர்கள் ஆகியோர் உள்ளடங்குவர்.

கேள்வி – மற்றைய மதங்களை பற்றி மாணவர்களுக்கு அறிவூருத்த கல்வி அமைச்சிடம் என்ன திட்டம் உள்ளது?

பதில் :- மொழிப்  போட்டிகள் மதசார்பான நிகழ்வுகள் ஊடாக அந்தச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதேபோல் சகல மாணவர்களையும் மாற்றைய மதத் தலங்களுக்கு அழைத்துச்  செல்வதற்கான பாடத்திட்டம் ஒன்றும்,  பாடப்புத்தகங்களில் காணப்படுகிறது.

கேள்வி – கல்வி அமைச்சின் செயலாளர் என்ற வகையில் முஸ்லிம் மாணவிகள் முகங்களை மறைத்துக்கொண்டு பாடசாலைகளுக்கு வருவது பொருத்தம் என நினைக்கிறீர்களா ?

பதில் :- மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கமைய பாடசாலை மாணவர்களின் ஆடைகள் பற்றிய திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.