நல்லிணக்கத்துக்கான வழி!

அர­சியல் கைதி­களின் விடு­தலை மறந்து போன விவ­கா­ர­மாக மாறி­விட்­டது போலத் தோன்­று­கின்­றது. அர­சாங்கம் இந்தப் பிரச்­சி­னையைத் தீர்ப்­ப­ தாகப் பல தட­வை­களில் வாக்­கு­றுதி அளித்­தி­ருக்­கின்ற போதிலும், அதனை முடி­வுக்குக் கொண்டு வரு­வதில் அக்­க­றை­யற்ற ஒரு போக்­கையே கடைப்­பி­டித்து வரு­கின்­றது.

பயங்­க­ர­வாதத் தடைச் சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்­ட­வர்கள் பயங்­க­ர­வாதச் செயல்­க­ளுடன் தொடர்­பு­டைய பயங்­க­ர­வா­திகள் என்­பதே அர­சாங்­கத்­தி­னதும், பேரின அர­சி­யல் ­வா­தி­க­ளி­னதும் நிலைப்­பா­டாகும். ஆனால் உண்­மையில் அவர்கள் பயங்­க­ர­வா­தி­க­ளல்ல. அவர்கள் அர­சியல் கைதிகள். இத­னையே அந்தக் கைதி­களும், தமிழ்த்­ த­ரப்­பி­னரும் அர­சாங்­கத்­திடம் வலி­யு­றுத்திக் கூறி வரு­கின்­றார்கள்.

ஆனால் அரச தரப்­பினர் அதனை ஏற்­றுக்­கொள்ளத் தயா­ரில்லை. தங்­க­ளிடம் அர­சியல் கைதிகள் என்று எவ­ருமே கிடை­யாது. பயங்­க­ர­வா­தத்­துடன் தொடர்­பு­டைய பயங்­க­ர­வா­தி­களே சிறைச்­சா­லை­களில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளார்கள் என்றே அவர்கள் அடித்துக் கூறி வரு­கின்­றார்கள்.

அர­சியல் கார­ணங்­க­ளுக்­கா­கவே ஆயுதப் போராட்டம் முன்­னெ­டுக்­கப்­பட்­ட­தே­யொ­ழிய, வெறு­மனே பயங்­க­ர­வாதச் செயற்­பா­டு­க­ளுக்­காகத் தமிழ் இளை­ஞர்கள் ஆயு­தங்­களைக் கையில் எடுக்­க­வில்லை. ஆனால், இன­வாதக் குட்­டையில் ஊறித் திளைத்த ஆட்­சி­யா­ளர்கள் அர­சியல் கார­ணங்­க­ளுக்­காக ஆரம்­பிக்­கப்­பட்ட ஆயுதப் போராட்­டத்தை வெறு­மனே பயங்­க­ர­வா­த­மாகச் சித்­தரித்து, அதற்கு ஆத­ர­வா­கவே பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தை உரு­வாக்­கி­னார்கள். தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு நட­வ­டிக்­கையின் நோக்­கமும் அந்தச் சட்ட உரு­வாக்­கத்தில் இழை­யோடி உள்­ளது.

பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளுக்கு அதி உச்ச தண்­டனை சிறைத் தண்­ட­னையே தவிர மரண தண்­டனை கிடை­யாது. ஆனாலும், அந்தச் சிறைத் தண்­ட­னை­யா­னது மரண தண்­ட­னை­யிலும் பார்க்க மோச­மா­னது. வழக்குத் தாக்கல் செய்­யப்

ப­டாமல் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருப்­ப­வர்­களும், வழக்கு முடி­வ­டைந்து சிறைத் தண்­ட­னை அனு­ப­வித்து வரு­ப­வர்­களும் அநே­க­மாக தண்­டனை முடி­வ­டைந்து வெளியில் வரு­வ­தற்­கான சாத்­தியம் அற்­ற­வர்­க­ளா­கவே காணப்­ப­டு­கின்­றார்கள்.

இவர்கள் சிறைச்­சா­லை­க­ளி­லேயே மடிந்து போகின்ற அவ­ல­மான நிலைமை நில­வு­கின்­றது. இவ்­வாறு பத்து சிறைக் ­கை­திகள் சிறைச்­சா­லை­களில் மர­ண­ம­டைந்­துள்­ள­தாக அவர்­களின் உற­வி­னர்கள் கூறி­யுள்­ளனர். இதன் கார­ண­மா­கத்தான் பயங்­க­ர­வாதத் தடைச்­சட்டம் என்­பது மிக மிகப் பயங்­க­ர­மா­னது, கொடூ­ர­மா­னது, மோச­மா­னது என்று பல­ராலும் வர்­ணிக்­கப்­ப­டு­கின்­றது. சுட்­டிக்­காட்­டப்­பட்­டி­ருக்­கின்­றது.

காலம் கடத்­து­வ­தி­லேயே கவனம்

உண்­மை­யி­லேயே ஆயுதம் ஏந்தி அர­சுக்கு எதி­ராகப் போர் புரிந்த விடு­த­லைப்­ பு­லி­க­ளு­டைய நட­வ­டிக்­கை­களைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கா­கவே பயங்­க­ர­வாதத் தடைச்­சட்டம் கொண்டு வரப்­பட்­டி­ருக்­கு­மே­யானால், யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்டு வந்­ததன் பின்னர், அந்தச் சட்­டத்தை அர­சாங்கம் இல்­லாமல் ஒழித்­தி­ருக்க வேண்டும். ஆனால் அர­சுகள் அதனைச் செய்­ய­வில்லை.

யுத்­த ­மோ­தல்­க­ளின்­போது மனித உரி­மைகள் மீறப்­பட்­டி­ருக்­கின்­றன. சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்­டங்கள் மீறப்­பட்­டி­ருக்­கின்­றன என்று பட்­டி­ய­லிட்­டுள்ள ஐ.நா.வும், ஐ.நா. மனித உரிமைப் பேர­வையும் அந்த உரிமை மீறல்­க­ளுக்கு அர­சாங்கம் பொறுப்புக் கூற வேண்டும் என வலி­யு­றுத்­தி­யி­ருந்­தன.

மனித உரிமை மீறல் குற்­றச்­சாட்டை ஒரு தலைப்­பட்­ச­மாக அர­சாங்­கத்தின் மீது மட்டும் ஐ.நா. முன்­வைக்­க­வில்லை. யுத்­தத்தில் ஈடு­பட்­டி­ருந்த அரச படை­கள், விடு­த­லைப்­ பு­லி­கள் ஆகிய இரு தரப்­பி­ன­ருமே உரி­மை­களை மீறி­யி­ருக்­கின்­றார்கள் என்றே குற்றம் சுமத்­தி­யி­ருக்­கின்­றது.

யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்டு வந்­த­தை­ய­டுத்து, உரிமை மீறல்­க­ளுக்கு பொறுப்­பேற்றுச் செயற்­ப­டு­வ­தாக மஹிந்த ராஜ­பக் ஷ அர­சாங்கம் ஐ.நா.­விடம் உறு­தி­ய­ளித்­தி­ருந்­தது. அதனைத் தொடர்ந்து வந்த நல்­லாட்சி அர­சாங்­கமும், உரிமை மீறல்­க­ளுக்குப் பொறுப்­பு­க்கூறி, நிலை­மாறு காலத்தில் நீதியை நிலை­நாட்­டு­வ­தற்கும் ஐ.நா.­விடம் இணக்கம் தெரி­வித்­தி­ருந்­தது. ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் கொண்­டு­ வ­ரப்­பட்ட இது தொடர்­பி­லான தீர்­மா­னங்­க­ளுக்கு இந்த அர­சாங்கம் ஆத­ர­வ­ளித்து, இணை அனு­ச­ரணை வழங்கி அவற்றை நிறை­வேற்­று­வ­தற்கும் ஒத்­து­ழைத்­தி­ருந்­தது.

இந்தப் பொறுப்­பேற்­றலில் பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தை இல்­லாமல் செய்து சர்­வ­தேச நிய­மங்­க­ளுக்கு அமை­வாக புதிய சட்டம் ஒன்றைக் கொண்டு வருவோம் என்ற உறு­திப்­பாடும் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. ஆனால், பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தை அரசு இன்னும் இல்­லாமல் செய்­ய­வில்லை. அதற்­கான நட­வ­டிக்­கையை இழுத்­த­டித்து காலம் கடத்­து­வ­தி­லேயே கண்ணும் கருத்­து­மாக இருக்­கின்­றது.

எதிர்மறை­யான விளை­வு­களே ஏற்­பட்­டுள்­ளன 

யுத்தம் முடி­வ­டைந்து பத்து வரு­டங்­க­ளா­கி­விட்ட போதிலும், இந்தச் சட்­டத்தை ஆத­ர­வாக வைத்துக் கொண்டே, ஆட்­சி­யா­ளர்கள் அர­சியல் கைதி­களை பயங்­க­ர­வா­திகள் என சித்­தி­ரித்து, அவர்­களை விடு­தலை செய்ய மறுத்து வரு­கின்­றார்கள்.

ஆட்­சி­யா­ளர்கள் குறிப்­பி­டு­கின்ற பயங்­கர­வாதம், யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்டு வந்­த­துடன் நாட்டில் இல்­லாமல் செய்­யப்­பட்­டு­விட்­டது. மீண்டும் அது தலை­யெ­டுத்­து­விடக் கூடாது என்ற முன்­னெச்­ச­ரிக்கை நோக்­கத்­துக்­கா­கவே பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தை தொடர்ந்து பேணி வரு­வ­தாக அர­சாங்கம் கூறு­கின்­றது.

அர­சாங்­கத்தின் இந்த நிலைப்­பாடு, பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தை இல்­லா­தொ­ழிப்­ப­தாக ஐ.நா­.வுக்கும் சர்­வ­தேச நாடு­க­ளுக்கும் வழங்­கிய உறு­தி­மொ­ழியை புறந்­தள்­ளிய பழிச்­சொல்­லுக்கே ஆளாக்­கி­யி­ருக்­கின்­றது.

அர­சாங்கம் கூறு­கின்ற பயங்­க­ர­வாதம் மீண் டும் தலை­யெ­டுக்க விடக் கூடாது என்றால், அது தோற்றம் பெறு­வ­தற்­கான காரணம் இல்­லாமல் செய்­யப்­பட வேண்டும். அதற்குரிய நட­வ­டிக்­கை­களை அசாங்கம் துரி­த­மா­கவும், நேர்­மை­யான முறை­யிலும் முன்­னெ­டுக்க வேண்டும்.

அந்த வகையில் முதற் கட்­ட­மாக சிறைச்­சா­லை­களில் பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தின் கீழ் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள அனைத்து தமிழ் அர­சியல் கைதி­க­ளையும் பொது­மன்­னிப்­ப­ளித்து விடு­தலை செய்ய வேண்டும். இதன் மூலம் அர­சாங்கம் தனது நல்­லெண்­ணத்­தையும், பயங்­க­ர­வாதம் நாட்டில் உரு­வாகக் கூடாது என்ற நேர்­மை­யான அர­சியல் மனப்­பக்­கு­வத்­தையும் வெளிப்­ப­டுத்­து­வ­தற்கு முன்­வர வேண்டும்.

அத்­துடன் அரச தரப்­பினர் குறிப்­பி­டு­கின்ற பயங்­க­ர­வாதம் உரு­வா­வ­தற்குக் கார­ண­மா­கிய இனப்­பி­ரச்­சி­னைக்கு ஓர் அர­சியல் தீர்வு காண வேண்டும். அர­சியல் தீர்வின் மூல­மாக மறுக்­கப்­பட்ட தமிழ் மக்­க­ளு­டைய உரி­மைகள் நிலை­ நி­றுத்­தப்­ப­டு­மானால், போராட்­டங்­களும் இருக்­காது. ஆட்­சி­யா­ளர்கள் அதீத கற்­ப­னையில் எதிர்­பார்க்­கின்ற பயங்­க­ர­வா­தமும் தலை­யெ­டுக்க மாட்­டாது.

அர­சியல் கைதி­களின் விடு­த­லையும், அர­சி யல் தீர்­வுக்­கான நட­வ­டிக்­கையும் உண்­மையில் தேசிய நலன் சார்ந்த விட­யங்­க­ளாகும். தமிழ் மக்­க­ளுக்கு எதி­ராகக் கொண்டுவரப்­பட்ட பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தின் கீழ் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள அர­சியல் கைதி­களை பொது மன்­னிப்­ப­ளித்து விடு­தலை செய்­தி­ருந்தால், தமிழ் மக்கள் ஆட்­சி­யா­ளர்கள் மீது நம்­பிக்கை கொள்­வ­தற்கும், அவர்­களின் நல்­லெண்­ணத் தைப் புரிந்து கொள்­வ­தற்கும் வழி­யேற்­ப­டுத்தி இருக்கும். ஆனால் அதனை அவர்கள் செய்­ய­வில்லை. அர­சாங்­கத்தின் இந்தப் போக்கு எதிர்­ம­றை­யான விளை­வு­க­ளையே ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது.

என்ன நடக்­கின்­றது?

அர­சியல் கைதி­களின் விடு­த­லைக்­காக அந் தக் கைதி­களே மேற்­கொண்­டி­ருந்த உண்­ணா­வி­ரதப் போராட்­டங்­களும், சாகும் வரை­யி­லான உணவு ஒறுப்புப் போராட்­டங்­களும் அர­சாங்­கத்­துக்கு அழுத்­தத்தைக் கொடுத்­தி­ருந்­தன. இந்தப் போராட்­டங்­க­ளுக்கு ஊக்­க­ம­ளிக்­கவும், அதற்கு மேலும் வலு­வூட்­டு­வ­தற்­கு­மாக வெளியில் பல்­வேறு பொது அமைப்­பு­களும், அர­சியல் கட்­சி­க­ளும்­கூட போராட்­டங்­க­ளையும் பேர­ணி­க­ளையும் நடத்­தி­யி­ருந்­தன.

விசே­ட­மாக நல்­லாட்சி அர­சாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்­றி­ருந்த ஆரம்ப காலத்தில் முன்­னெ­டுக்­கப்­பட்ட அர­சியல் கைதி­களின் உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தைத் தொடர்ந்து அவர்கள் விடு­தலை செய்­யப்­ப­டு­வார்கள். அதற்­கான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­படும் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உறு­தி­ய­ளித்­தி­ருந்தார். அவ­ரு­டைய உறு­தி­மொழி எழுத்து வடி­வத்தில் கடி­த­மாக சிறைச்­சாலை ஆணை­யா­ள­ருக்கு அனுப்­பப்­பட்­டது. அந்தக் கடி­தத்தை சிறைச்­சா­லைக்குச் சென்ற தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலை­வரும் பாரா­

ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மா­கிய இரா.சம்­பந்தன் சிறைக் கைதி­க­ளுக்கு வாசித்­த­ளித்தார்.

ஜனா­தி­ப­தியின் இந்த உறு­தி­மொ­ழியும், அது வழங்­கப்­பட்ட விதமும் ஒரு வேடிக்கை நிகழ்­வா­கவே நடந்து முடிந்து போனது. அந்த உறு­தி­ மொ­ழியை நிறை­வேற்­ற ஆக்­க­பூர்­வ­மான நட­வ­டிக்­கைகள் அர­சாங்கத் தரப்பில் எடுக்­கப்­ப­ட­வில்லை. மாறாகக் கண்­ து­டைப்புச் செயற்­பா­டு­களே மேற்­கொள்­ளப்­பட்டு சில கைதிகள் பிணையில் செல்­வ­தற்கு அனு­ம­திக்­கப்­ப­டு­வ­தாக அறி­விக்­கப்­பட்­டது.

ஆனால் அவ்­வாறு சென்­ற­வர்­களும் ஜனா­தி ப­தியின் உறு­தி­மொ­ழிக்­க­மை­வான நட­வ­டிக்­கை­யாக இடம்­பெ­ற­வில்லை. அவர்­களின் வழக்கு விசா­ர­ணை­களின் அடிப்­ப­டை­யி­லேயே அந்தப் பிணை வழங்­கப்­பட்­ட­தாக சம்­பந்­தப்­பட்ட கைதிகள் தரப்பில் தெரி­விக்­கப்­பட்­டது.

இது ­போன்று எத்­த­னையோ போராட்­டங்கள் இந்த நல்­லாட்சி அர­சாங்க காலத்தில் நடத்­தப்­பட்­டன. ஜனா­தி­ப­தி­யி­டமும், பிர­த­ம­ரி­டமும் எத்­த­னையோ கோரிக்­கைகள் முன்­வைக்­கப்­பட்­டன. ஆனால் எந்த ஒரு சந்­தர்ப்­பத்­திலும் மனி­தா­பி­மான அடிப்­ப­டை­யிலோ அல்­லது நல்­லெண்ண வெளிப்­பா­டா­கவோ அர­சியல் கைதிகள் விடு­தலை செய்­யப்­ப­ட­வில்லை. அல்­லது அவர்­க ளின் நியா­ய­மான விடு­த­லையை நோக்­கிய நட­வ­டிக்­கை­களும் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை.

அவர்கள் அர­சியல் கைதிகள் அல்ல. சிறைச்­சா­லை­களில் அர­சியல் கைதிகள் என்று எவ­ரையும் அர­சாங்கம் தடுத்து வைத்­தி­ருக்­க­வில்லை. பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்ட பயங்­க­ர­மான குற்றச் செயல்­களைப் புரிந்த பயங்­க­ர­வா­தி­களே தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளார்கள். அவர்­களை விடு­தலை செய்ய முடி­யாது. அதற்கு நீதி­மன்ற விசா­ர­ணை­களும், சட்டம் தொடர்­பி­லான நடை­மு­றை­களும் இட­ம­ளிக்­காது என்ற நொண்­டிச்சாட்டு­க­ளையே ஆட்­சி­யா­ளர்கள் கூறி­யி­ருந்­தனர். இன்னும் கூறி வரு­கின்­றனர்.

சட்ட மீறல்­களும் உரிமை மீறல்­களும்

பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தின் கீழ் வரை­ய­றை­யற்று எவ­ரையும் தடுத்து வைத்­தி­ருக்க முடி­யாது. அந்தச் சட்­டத்­துக்கும் வரை­ய­றைகள் இருக்­கின்­றன. வரை­மு­றை­களும் இருக்­கின்­றன. அந்தச் சட்­டத்தின் வரை­ய­றை­க­ளையும், வரை­மு­றை­க­ளையும் விதி­க­ளையும் மீறிய வகை­யி­லேயே நியா­ய­மற்ற முறையில் அர­சாங்கம் அர­சியல் கைதி­களைத் தடுத்து வைத்­தி­ருக்­கின் ­றது.

அர­சியல் கைதி­களின் விசா­ர­ணைகள் முடி­ய­வில்லை என்ற நொண்­டிச்­சாட்டை பல வரு­டங்­க­ளாக பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்­ட­வர்­களை விசா­ரணை செய்யும் அதி­கா­ரிகள் தெரி­வித்து வரு­கின்­றார்கள். அந்த விசா­ர­ணைகள் முடி­வ­டை­யாத கார­ணத்­தால் அவர்­க­ளுக்கு எதி­ராக வழக்குத் தாக்கல் செய்­யப்­ப­ட­வில்லை என்ற உப்­புச்­சப்­பற்ற கார­ணத்­தையும் அவர்கள் கூறி வரு­கின்­றார்கள்.

சந்­தே­கத்தில் கைது செய்­யப்­பட்­ட­வர்­களை விசா­ரணை செய்து சந்­தே­கத்தை நிவர்த்தி செய்து அத­ன­டிப்­ப­டையில் நீதி­மன்ற நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட வேண்டும். சந்­தேக நபர்­க­ளுக்கு எதி­ராகக் குற்­றஞ்­சாட்ட முடி­யா­விட்டால் அவர்­களை விடு­தலை செய்ய வேண்டும். இதுவே சட்­டங்கள் தொடர்­பி­லான நிர்­வாக நட­வ­டிக்­கை­க­ளாகும். ஆனால் இத்­த­கைய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளாமல் பல அர­சியல் கைதி­களை சிறைச்­சா­லை­களில் அதி­கா­ரிகள் தடுத்து வைத்­தி­ருப்­பதை எந்த வகை­யிலும் நியா­யப்­ப­டுத்த முடி­யாது.

இத்­த­கைய நட­வ­டிக்­கை­களை ஏன் சட்­ட­ வி­ரோத நட­வ­டிக்­கை­க­ளாகக் கருத முடி­யாது? சட்­டத்­துக்கு அமை­வா­கத்­தானே சிறைச்­சா­லை­களில் கைதி­களைத் தடுத்து வைத்­தி­ருக்க முடியும்? விசா­ர­ணைகள் முடி­ய­வில்லை. குற்­றச்­சாட்­டு­க­ளுக்­கான ஆதா­ரங்கள் கிடைக்­க­வில்லை என்ற கார­ணத்தைக் கூறி சட்­டத்­ துக்கு முர­ணான வகையில் ஆட்­களைத் தடுத்து

வைத்­தி­ருப்­பதை,அப்­பட்­ட­மான மனித உரிமை மீறல் என்று ஏன் கொள்ள முடி­யாது?

அர­சியல் கைதிகள் மூன்று நான்கு வரு­டங்கள் தொடக்கம் பத்து இரு­பது வரு­டங்­க­ளுக்கு மேலான நிலையில் சிறைச்­சா­லை­களில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றார்கள். இவர்­களில் வழக்கு விசா­ர­ணைகள் முடி­வ­டைந்து, சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­ட­வர்­க­ளும்­கூட, சட்ட ரீதி­யான சிறைத்­தண்­டனைக் காலத்­துக்கும் அதி­க­மான காலம் சிறையில் வாடு­வதை எவ்­வாறு நியா­யப்­ப­டுத்த முடியும்?

சந்­தே­கத்­தின்­பேரில் பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளுக்கு எதி­ராக குற்­றச்­சாட்­டு­களைச் சுமத்­து­வ­தற்கு அவ­சி­ய­மான ஆதா­ரங்கள் கிடைக்­காத கார­ணத்­தால் அவர்கள் பல வரு­டங்கள் தடுத்து வைக்­கப்­ப­டு­கின்­றார்கள். விசா­ர­ணைகள் ஒரு வழி­யாக முடி­வ­டைந்து வழக்குத் தாக்கல் செய்யும் போது, அவர்கள் மீது சுமத்­தப்­பட்ட குற்­றச்­சாட்டு நிரூ­பிக்­கப்­பட்டால் அதற்­காக வழங்­கப்­ப­டு­கின்ற சிறைத் தண்­டனைக் காலத்தை­யும்­விட அதிக காலத்தை வழக்கு ஆரம்­ப­மா­வ­தற்கு முன்பே அனு­ப­வித்­து ­வி­டு­கின் ­றார்கள்.

சிறைச்­சாலை மர­ணங்­களும் மனி­தா­பி­மா­னமும்

வழக்குத் தாக்கல் செய்­யப்­பட்­டதும், வழக்கு விசா­ர­ணைகள் துரி­த­மாக நடத்­தப்­ப­டு­வ­தில்லை. ஆறு­ மா­தங்கள் சில வேளை­களில் ஒரு வருடத் தவ­ணையும் குறிக்­கப்­பட்டு வழக்கு விசா­ர­ணைகள் ஒத்தி வைக்­கப்­ப­டு­வ­தாக கைதி­களின் உற­வி­னர்கள் கூறு­கின்­றார்கள். வழக்குத் தவ­ணை­க­ளின்­போது அரச தரப்­பினர் நீதி­மன்­றத்தில் தங்­க­ளு­டைய வசதி வாய்ப்­புக்கு ஏற்ற வகை­யி­லேயே முன்­னி­லை­யா­வதை வாடிக்­கை­யா­கவே கொண்­டி­ருக்­கின்­றார்கள் என்று சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கின்­றது. இதன் கார­ண­மா­கவே வழக்கு விசா­ர­ணைகள் வரு­டக்­க­ணக்கில் இழு­பட்டுச் செல்­கின்­றன என்று குற்றம் சுமத்­தப்­பட்­ட­வர்கள் தரப்பில் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

சிறைச்­சா­லை­களின் நிலை­மைகள், விசா­ரணை முறை­மைகள், சிறைக்­கை­தி­களின் தனிப்­பட்ட உள­வியல், வாழ்­வியல், குடும்­ப­வியல் நிலை­மைகள் போன்ற பல்­வேறு கார­ணங்­க­ளால் அநே­க­மாக அனைத்து அர­சியல் கைதி­களும் நோயுற்­ற­வர்­க­ளா­கவும், உள­வியல் ரீதி­யான பாதிப்­புக்கு ஆளா­கி­ய­வர்­க­ளா­க­வுமே திகழ்­கின்­றார்கள்.

இவர்­க­ளுக்கு உரிய வைத்­திய வச­தி­களும், உள­வியல் ஆறு­த­லுக்­கான வாய்ப்­பு­களும் கிடைப்­ப­தில்லை. இதனால் அவர்கள் தேகா­ரோக்­கியம் பாதிக்­கப்­பட்­ட­ப­வர்­க­ளா­கவும் உள­வியல் ரீதி­யாகப் பாதிக்­கப்­பட்டு மனம் தளர்ந்­த­வர்­க­ளா­கவும் இருப்­ப­தாகக் கூறப்­ப­டு­கின்­றது. இத்­த­கைய சிறைக்­கை­தி­களில் அநே­க­மா­ன­வர்கள் குறிப்­பாக நீண்ட காலம் சிறைச்­சா­லை­களில் இருந்து முதுமை எய்­தி­ய­வர்கள் நடைப்­பி­ணங்­க­ளாக நேரிட்­டி­ருப்­ப­தா­கவும் தெரிவிக்­ கப்­ப­டு­கின்­றது.

சிறை­வாழ்க்­கையின் பாதிப்பு கார­ண­மாக சிறைச்­சா­லை­க­ளி­லேயே பத்துப் பேர் இது­ வ­ரையில் உயி­ரி­ழந்­துள்­ள­தாகத் தக­வல்கள் வெளி­யா­கி­யி­ருக்­கின்­றன. அவர்கள் தொடர்பில் பின்­வரும் விப­ரங்கள் கிடைத்­துள்­ளன.

1. சின்­னையா தெய்­வேந்­திரம் (31) வட்­டுக்­கோட்டை சிறைச்­சாலை வைத்­தி­ய­சா­லையில் 21.09.2009இல் இறந்­துள்ளார். 2 வரு­டங்­க­ளாக விளக்­க­ம­றி­யலில் இருந்த போது சம்­பவம் நிகழ்ந்­துள்­ளது.

2. சின்­னத்­துரை தர்­ம­லிங்கம் (54) வெலிக்­கடை சிறைச்­சாலை வைத்­தி­ய­சா­லையில் 2005 மே மாதம் இறந்­தவர். தீர்ப்புத் தண்­டனை வழங்­கப்­பட்டு வழக்கு மேன்­மு­றை­யீடு செய்­யப்­பட்ட நிலையில் 7 வரு­டங்கள் சிறை­வாசம் அனு­ப­வித்­தவர்.

3. பிரான்சிஸ் நெல்சன் (37) மகசின் சிறைச்­சா­லையில் 02.09.2013 இல் இறந்­தவர். 5 வரு­டங்­க­ளாக மேன்­மு­றை­யீட்டு வழக்கின் கைதி­யாக இருந்­தவர்.

4. விஸ்­வ­லிங்கம் கோபிதாஸ் (41) மகசின் சிறைச்­சா­லையில் 7 வரு­டங்கள் சிறைத் தண்­டனை அனு­ப­வித்து வந்த தண்­டனைக் கைதி 29.02.2014 இல் இறந்து போனார்.

5. ஜி.ஜோசப்(58) விசா­ரணைக் கைதி­யாக நீர்­கொ­ழும்பு சிறைச்­சா­லையில் இருந்­தவர். 2012 செப்டெம்பர் மாதம் இறந்தார்.

6.சின்னத்துரை காத்தாயம்மா (61) தண் டனைக் கைதியாக 11 வருடங்கள் இருந்து சிறைச்சாலையில் 2013ஆம் ஆண்டு இறந்து போனார்.

7. சுந்தரம் சதீஸ்குமார்(33) விசாரணைக் கைதியாக 8 வருடங்கள் இருந்தவர். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 14.05.2015இல் இறந்தார்.

8. குணரத்ன கஜதீர(58) விசாரணைக் கைதியாக 10 வருடங்கள் இருந்து 01.12.2016 இல் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இறந்து போனார்.

9. சண்முகம் தியாகன் (70) 10 வருடங்கள் தண்டனைக் கைதியாக சிறையில் இருந்து தேசிய வைத்தியசாலையில் 15.03.2018இல் இறந்து போனார்.

10. முத்தையா சகாதேவன்(62) 13 வருடங்கள் சிறைச்சாலையில் இருந்தவர் 22.06.2019இல் தேசிய வைத்தியசாலையில் இறந்து போனார்.

தமிழ் அரசியல் கைதிகள் செய்ததாகக் கருதப்படும் குற்றச் செயல்களுக்குரிய தண்டனையைவிட அதிகப்படியான தண்டனை அனுபவித்து சிறைச்சாலையிலேயே தங்களு டைய வாழ்க்கையை முடித்துக் கொள்ள வேண்டிய மிக மோசமான நிலைமைக்கு ஆளாகியிருப்பதையே இந்த பத்துப் பேரின் மரணங்களும் வெளிப்படுத்தி இருக்கின்றன.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நிரபராதியென விடுதலை செய்யப்பட்டவர்களும், தண்டனைக் காலம் முடிவடைந்து வெளியில் வந்தவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். இல்லை யென்று மறுப்பதற்கில்லை.

ஆனால் யுத்தம் முடிவடைந்து பத்து வருடங்கள் கழிந்த நிலையிலும் விசாரணைக் கைதிகளாகவும், தண்டனைக் கைதிகளாகவும் சிறைச்சாலைகளில் அவலமான நிலை மைகளுக்கு ஆளாகி மரணத்தைத் தழுவிக் கொள்கின்ற மோசமான நிலைமை நீடிப் பதை ஒரு ஜனநாயக நாட்டின் நீதியான செயற்பாடாகவோ  நல்லாட்சியின்  அம்சமா கவோ கொள்ள முடியாது.

இதனை இன அழிப்பு சிந்தனை சார்ந்த ஒரு மோசமான நடவடிக்கையின் விளைவாகவே நோக்க வேண்டி உள்ளது. இந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட வேண்டும். அரசியல் கைதிகள் மனிதாபிமான முறையில் நடத்தப்பட்டு அவர்கள் மனிதாபிமான ரீதியில் விடுதலை செய்யப்பட வேண்டும். இதுவே மோசமான ஒரு நீண்டகால யுத்தத்தின் பின்னர் ஒரு நாட்டில் நல்லிணக்கமும் ஐக்கியமும் உருவாவதற்கு வழிவகுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

பி.மாணிக்கவாசகம்