சிறப்பு செய்திகள்

ட்ரம்ப் – கிம் சந்திப்பு: பலன் யாருக்கு?

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் உடனான சந்திப்புக்கு பிறகு நாடு திரும்பியதும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ட்விட்டரில் இவ்வாறு பதிவிடுகிறார் ‘நம்முடைய மிகப்பெரிய மற்றும் மிக ஆபத்தான பிரச்சினை வட கொரியா என்று அதிபர் ஒபாமா சொன்னார். இனிமேல் அப்படி இல்லை. இன்றிரவு நிம்மதியாக உறங்குங்கள்’. ஓவர் நைட்டில் ஒபாமா ஆகிவிட்டான் என்று ஒரு சொலவடை நம் ஊரில் உண்டு. அதுபோல, கிம் ஜாங் உன் உடனான சந்திப்புக்குப் பிறகு தனது பழைய நடவடிக்கைகளை மறக்கச் செய்து, ஒரே இரவில் ஒபாமாவின் ...

Read More »

அந்நியர்கள் பேராசைக்காரர்கள் எங்கள் நிலத்தைவிட்டுப் போகவேண்டும்!எங்கள் நிலம் எங்களுக்கே!

சிலியின் காடுகளைப் (Chilean forests) பற்றித் தெரியாதவன், இந்தப் பூமியை நன்குணர்ந்தவன் என்று சொன்னால் அதை நான் ஏற்றுக்கொள்ளவே மாட்டேன்” – என்கிறார் சிலியன் கவிஞர் பாப்லோ நெருடா. அந்தப் பழைய கவிஞர் 50 வருடங்கள் கடந்து வந்து அவர் உலவித்திரிந்த சிலியின் மேற்குக் காடுகளைப் பார்த்தால் “நாம வேற எங்கேயோ இருக்கிறோம்” எனக் குழம்பிவிடுவார். அந்த அளவிற்கு அந்த வனப்பகுதி முழுவதும் மாற்றமடைந்து தற்போது முழுக்கப் பைன் மற்றும் யூகலிப்டஸ் மரங்களால் நிரம்பியுள்ளது.  சிலியன் அரசாங்கமும், சில மேல்நாட்டு நிறுவனங்களும் அந்நாட்டின் ஒரு பகுதியான அரகானியாவில் ( ...

Read More »

அப்பாவாக இருப்பது எவ்வளவு சவாலானது தெரியுமா?

அப்பா… இந்த வார்த்தைக்குக் கட்டுப்படாதவர்கள் மிகக் குறைவு. பெரும்பாலும் கண்டிப்பே அப்பாக்களின் பிம்பமாக இருக்கும். ஆனால், அது பிள்ளைகளின் பார்வையே! உண்மையில் அவர் மனசு என்ன?! பிள்ளைகளின் பார்வையில் தங்களின் ஒவ்வொரு வயதிலும் அப்பா தங்களுக்கு எப்படிப்பட்டவராக இருக்கிறார் என்பதைச் சொல்லும் குட்டிக்கதை ஒன்று உண்டு! 5 வயது – ‘என் சூப்பர் ஹீரோ!’ 10 வயது – ‘வீட்டில கொஞ்சம் கத்துவார்… மத்தபடி நல்லவர்தான்!’ 15 வயது – ‘எப்போ பார்த்தாலும் என்னைத் திட்டிக்கிட்டே இருக்கார்… சொல்லிவைம்மா அவர்கிட்ட!’ 20 வயது – ...

Read More »

சட்டங்களால் ஆண்களின் மனதை மாற்றிவிட முடியுமா?

“ஆத்திரம் என்பது பெண்களுக்கெல்லாம் அடுப்படி வரைதானே – ஒரு ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால் அடங்குதல் முறைதானே” என்று பல ஆண்டுகளுக்கு முன் எழுதினார் கவிஞர் கண்ணதாசன். பெண்களின் கோபதாபங்கள் எல்லாம் சமையலறை வரையில்தான். இதுவே இந்த வரிகளின் அர்த்தம். பல தசாப்தங்கள் முடிந்து தற்போது நாம் டிஜிட்டல் யுகத்தில் வாழ்கிறோம். இன்று பெண்களுக்கான வாய்ப்புகள் பரந்து விரிந்திருக்கின்றன. சொல்லப் போனால் பெரிய பெரிய நிறுவனங்களிலும், அலுவலகங்களிலும் பெண்கள் முக்கிய பொறுப்புகளை வகிக்கின்றனர். ஆனால், மற்றொரு புறம் பெண்கள் இன்னும் அடிமைகளாக வாழ்ந்து வருகின்றனர். ...

Read More »

போருக்குப் பிந்தைய ஸ்ரீலங்கா மற்றும் ஆயுத வர்த்தக ஒப்பந்தம்!

எந்தவொரு சட்டபூர்வ அரசாங்கத்தினதும் அதி முக்கிய பொறுப்பு, அதன் சொந்த மக்களை எதிரிகளிடமிருந்து பாதுகாப்பது, அதன் பிராந்திய நிலத்தைப் பாதுகாப்பது,சட்டம் ஒழுங்கைப் பேணுவது, அதன் சமூக பொருளாதார அந்தஸ்தை முன்னேற்றுவது, அதன் இயற்கைச் சூழல் மற்றும் வரலாற்று மற்றும் வேறு தேசிய மதிப்புவாய்ந்த நலன்களை பாதுகாப்பதும் மற்றும் உலக சமாதானத்துக்கு தனது ஆதரவினை வழங்குதும் ஆகும். இவை அனைத்தையும் கொண்டிருப்பதற்கு அந்த அரசாங்கங்கள் சில குறிப்பிட்ட ஆயுதங்களுடன் கூடிய இராணுவம் மற்றும் காவல்துறையை வைத்திருக்க வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. அத்தகைய ஆயுதங்கள் வெளிப்படையானதும் மற்றும் ...

Read More »

ட்ரம்ப் எனும் அமெரிக்க ஜமீன்!

பணக்கார வீட்டுப் பையனையோ/பெண்ணையோ பார்த்தால் நீயெல்லாம் யாருப்பா ”Born with Silver Spoon”’னு சொல்லுவாங்க. அமெரிக்காவின்  ”Born with Silver Spoon” என்ற வார்த்தைக்குப் பொருத்தமான நபர்களில் டொனால்ட் ட்ரம்ப்பும் ஒருவர். 70களின் மத்தியில் நியூயார்க் நகரம் பெரும் பொருளாதார வீழ்ச்சியிலும், மக்கள் வறுமையிலும் தவித்தனர். ஒரே நாளில் வேலையிலிருந்து 20 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் வெளியேற்றப்பட்டனர். அப்போது ஒரு ஆங்கிலப் பத்திரிகை டொனால்ட் ட்ரம்பிடம் கருத்து கேட்கிறது. “அரசியல்வாதிகளும், தலைவர்களும் தங்கள் மூளையை 1% உபயோகமாக பயன்படுத்தினால் இந்த பிரச்னைக்கெல்லாம் தீர்வு கிடைக்கும்” என்கிறார் ரியல் எஸ்டேட் ...

Read More »

செளபா: சாம்பலான தோட்டம்!

காணி நிலம் வேண்டிச் செத்துப்போன கவிராஜனின் கனவை நனவாக்கிய தோட்டச்சாமி. நாலு திக்கும் மலைகள் சூழக் குடில் அமைத்து, அடுப்பு நெருப்பை அணையவிடாமல், பொங்கிப் பொங்கிப் போட்டுக் களித்த நளராஜா. மழையும் குளிரும் தராது தோற்கும் வாஞ்சையை, காண்பவர் மீதெல்லாம் கொட்டித் தீர்த்த பேரருவி. வெண்கலக் கும்பாவுக்குள் உருளும் கோலிக்குண்டுச் சிணுங்கலாய், வார்த்தைக்கு வார்த்தை அன்பை இசைத்த நாதமுனி. ஒவ்வொரு எட்டுக்கும் முன், தும்பிக்கையால் தரை சோதித்து நடந்த காட்டு யானை. அவன் வளர்த்த காடுகளுக்குள் கூடு கட்டிக் குதூகலித்த குயில்களும் கிளிகளும் ஏராளம் ...

Read More »

சிறையில் பேரறிவாளனுக்கு 27-வது ஆண்டு நிறைவு!

“ஒன்றுமில்லாததற்கு அவனுக்கு அந்த புதிய வாழ்க்கை வழங்கப்படமாட்டாது, அதற்கு அவன் மிக மிக அதிகமான விலையைத் தர வேண்டும் அதாவது அது பெரிய போராட்டத்தையும், பெருந்துயரத்தையும் விலையாகக் கேட்கும். ஆனால், அதுதான் புதிய கதையின் தொடக்கம் – ஒரு மனிதனின் படிப்படியான புதுப்பித்தலின் கதை, அவனது மீளுருவாக்கத்தின் கதை, ஒரு உலகத்திலிருந்து இன்னொன்றுக்கு அவன் கடந்து செல்வதன் கதை, அவனறியாதப் புதிய வாழ்க்கையின் தொடக்கம் அது. அதுவே அந்த புதிய கதையின் கருவாக இருக்கும், ஆனால், அதற்கு நமது தற்போதைய கதை முடிய வேண்டும்’’ ...

Read More »

அமெரிக்காவைக் கண்டுபிடித்தது கொலம்பஸ் இல்லையா?

ஐரோப்பிய மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆணிவேராகத் திகழ்ந்தவர்கள் ஆப்பிரிக்கர்கள். அட்லாண்டிக் கடல் பகுதியில் தனித்துவிடப்பட்டிருந்த அமெரிக்க கண்டங்களில் ஐரோப்பியர்கள் கோலோச்சுவதற்குத் தங்கள் வேர்வையோடு ரத்தத்தையும் விலையாகக் கொடுத்தவர்களும் அவர்களே. ஸ்பானிய மன்னர் ஃபெர்டினான்ட் அமெரிக்க பூர்வகுடிகளிடமிருந்து ஆக்கிரமித்த நிலப்பகுதியைப் பயனுள்ள வகையில் பயன்படுத்த முடிவுசெய்தார். அதற்காக அவரிடமிருந்த 200 ஆப்பிரிக்க அடிமைகளை அங்கே அனுப்பி உழைக்கவைத்தது முதலே அமெரிக்காவுடனான அவர்களின் தொடர்பு தொடங்கியதாகப் பழைய வரலாறு கூறுகிறது. வரலாற்றின் பக்கங்களில் பாதி மட்டுமே படிக்கப்பட்டிருக்கிறது என்பதைத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தொடர்ச்சியாக நிரூபித்துக் ...

Read More »

சிவகுமாரனின் நினைவு நாளில் தமிழ் மக்கள் பேரவை விடுத்த அழைப்பு!

கடந்த புதன்கிழமை சிவகுமாரனின் நினைவு நாளில் தமிழ் மக்கள் பேரவை ஒர் ஊடகவியலாளர் சந்திப்பை ஒழுங்குபடுத்தியிருந்தது. பேரவையை ஓரு மக்கள் இயக்கமாக மாற்றும் செயற்பாட்டின் ஒரு பகுதியாக இளையோர் அமைப்புக்களை உருவாக்குவது பற்றி அதில் கூறப்பட்டுள்ளது. ஓர் இளையோர் மாநாட்டை விரைவில் ஏற்பாடு செய்யவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவகுமாரனின் நாளை இதற்கென்று தெரிவு செய்தது தற்செயலானதாகத் தோன்றவில்லை. ஏனெனில் ஈழத் தமிழர்களுடைய ஆயுதப் போராட்டத்தின் முன்னோடிகள் பலர் தமிழ் மாணவர் பேரவையைச் சேர்ந்தவர்களே. குறிப்பாகச் சிவகுமாரன் ஈழத்து சயனைட் மரபின் முன்னோடியாவார். நஞ்சருந்தி உயிரைத் துறப்பது ...

Read More »