போருக்குப் பிந்தைய ஸ்ரீலங்கா மற்றும் ஆயுத வர்த்தக ஒப்பந்தம்!

எந்தவொரு சட்டபூர்வ அரசாங்கத்தினதும் அதி முக்கிய பொறுப்பு, அதன் சொந்த மக்களை எதிரிகளிடமிருந்து பாதுகாப்பது, அதன் பிராந்திய நிலத்தைப் பாதுகாப்பது,சட்டம் ஒழுங்கைப் பேணுவது, அதன் சமூக பொருளாதார அந்தஸ்தை முன்னேற்றுவது, அதன் இயற்கைச் சூழல் மற்றும் வரலாற்று மற்றும் வேறு தேசிய மதிப்புவாய்ந்த நலன்களை பாதுகாப்பதும் மற்றும் உலக சமாதானத்துக்கு தனது ஆதரவினை வழங்குதும் ஆகும். இவை அனைத்தையும் கொண்டிருப்பதற்கு அந்த அரசாங்கங்கள் சில குறிப்பிட்ட ஆயுதங்களுடன் கூடிய இராணுவம் மற்றும் காவல்துறையை வைத்திருக்க வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. அத்தகைய ஆயுதங்கள் வெளிப்படையானதும் மற்றும் பொறுப்பானதுமான முறையில் உற்பத்தி செய்யவேண்டும் அல்லது மற்றைய நாடுகளிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும். வெளிப்படையானதும் மற்றும் பொறுப்பானதுமான ஆயுத வர்த்தகம் தேசத்தின் பல காயங்களைக் குணப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

ஆனால் எத்தனை அரசாங்கங்கள் வெளிப்படையானதும் மற்றும் பொறுப்பானதுமான ஆயுத வர்த்தகத்தில் சட்டபூர்வமாக ஈடுபட்டுள்ளன என்பதுதான் கேள்வி? இன்றைய காலகட்டத்தில் ஆயுத வர்த்தகம் இந்த கிரகத்தில் நடைபெறும் மிகப்பெரிய வர்த்தகமாகும், முக்கியமாக அரசாங்கங்கள், அரசியல்வாதிகள், பெருநிறுவனத் துறைகள், ஆயுதத் தரகர்கள், பயங்கரவாதிகள், ஆயுதக்குழுக்கள் மற்றும் செல்வாக்குள்ள தனிநபர்கள் இதில் தொடர்புபட்டுள்ளார்கள். ஸ்டொக்ஹோம் சர்வதேச சமாதான ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கையின்படி 2015ல் உலகளாவிய ஆயுத வர்த்தகத்தின் மொத்த மதிப்பு 93.3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.

மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதில் அரசாங்கங்கள் தோல்வியடைந்துள்ளன.இன்று பெரும்பாலான அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் கடுமையான பொருளாதார, சமூக, சுற்றுச்சூழல் அல்லது அரசியல் நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து வருகின்றன, இது அவைகளின் சமூக பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வது மற்றும் இயற்கைச்சூழலைப் பாதுகாப்பது என்பனவற்றை தடுக்கின்றன. நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தற்போது நடந்துவரும் ஆயுத மோதல்களுடனோ அல்லது எதிர்காலத்தில் ஆயுத மோதல்கள் ஏற்பட்டால் அவற்றின் தயாரிப்புடனோ இணைந்துள்ளது. இது அரசாங்கங்களை, மக்களின் அடிப்படைத் தேவைகளை (மனித பாதுகாப்பு – சுகாதாரம், கல்வி போன்றவற்றை) நிறைவேற்ற முடியாத நிலைக்குத் தள்ளிவிட்டிருப்பதுடன் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை வாங்குவதற்கு அல்லது உற்பத்தி செய்வதற்கு மேலும் மேலும் வளங்களைச் செலவழிக்கும் நிலைக்கு வழிவகுத்துள்ளது. இந்தப்போக்கு அவர்களின் பிரச்சினைகளுக்கு சமாதானத் தீர்வு காண இயலாமல் செய்வது மட்டுமல்ல ஆனால் ஆயுத உற்பத்தியாளர்கள் மற்றும் ஆயுதத் தரகர்கள் இலாபம் சம்பாதிக்கவும் வழி உண்டாக்குகிறது.

பயங்கரவாதிகள் மற்றும் ஆயுதக்குழுக்கள் மரபு வழி ஆயுதங்களைப் பெறுகிறார்கள்.

உலகெங்கிலுமுள்ள பயங்கரவாதிகள் மற்றும் ஆயுதக்குழுக்கள் என்பன அரசாங்கங்களுக்கு எதிராகப் போராடுவது, ஆயுதக் குழுக்கள் இடையே போராடுவது, சட்டவிரோத வனவிலங்கு வியாபாரம், மனிதக் கடத்தல்கள், போதைப் பொருள் கையாள்கை, மற்றும் மனிதக் கொலை வியாபாரங்கள் போன்ற பல்வேறு சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடுகின்றார்கள். இந்த சட்ட விரோத ஆயுத வர்த்தகம் இ;ன்றைய ஆயுத வர்த்தகத்தில் பல்கிப் பெருகியுள்ளது. சில சமயங்களில் இந்த சட்டவிரோத ஆயுதங்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவே பயங்கரவாதிகள் அல்வது ஆயுதக் குழுக்களின் கைகளைச் சென்று சேரும்போது, அரசாங்கங்கள் கூட இந்த சட்டவிரோத ஆயுத வர்த்தகத்தில் ஈடுபடக்கூடிய நிலை தோன்றிவிடுகிறது.

உள்நாட்டு வளர்ச்சிக்காக அயுதத் தொழிலை ஒழங்குபடுத்துவதின் முக்கியத்துவம்

கட்டுப்பாடில்லாத மற்றும் பொறுப்பற்ற மரபுவழி ஆயுத வர்த்தகம் மோதல்களை தீவிரமாக்கி நீட்டிக்க வைக்கின்றன, இது ஆங்காங்கே நடைபெறும் மனித உரிமைகள் துஷ்பிரயோகம், சமூக பொருளாதார அபிவிருத்திக்கு தடையேற்படுத்துவது, பிராந்திய உறுதியற்ற தன்மை மற்றும் இயற்கை வளங்களின் இழப்பு போன்றவற்றையும் அதிகரிக்க வழி வகுக்கின்றன, இதில் சட்ட விரோத வனவிலங்கு வியாபாரமும் உள்ளடங்கியுள்ளது.

ஸ்ரீலங்கா போன்ற வளர்ச்சியடையும் நாடு அரசாங்கப் பாதுகாப்பு படைகளுக்கும் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ க்கும் இடையே 2009 வரை நடைபெற்ற 30 வருடப் போரில் பெருமளவு பாதிக்கப்பட்டது. அரசாங்கப் படைகளுக்கு எதிராகப் போரிடுவதற்காக உலகெங்கிலுமுள்ள பல்வேறு சக்திகளிடமிருந்து எல்.ரீ.ரீ.ஈ ஆயுதங்களைப் பெற்றுக்கொண்டது. ஸ்ரீலங்கா கடற்படையிடம் இல்லாத நீர்மூழ்கிக் கப்பல்களைக்கூட எல்.ரீ.ரீ.ஈ வைத்திருந்தது. உலகெங்கிலும் இருந்து ஆயுதங்களை ஏற்றி வருவதற்காக அவர்கள் பல கப்பல்களை வைத்திருந்தார்கள். ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்காக எல்.ரீ.ரீ.ஈ எவ்வளவு செலவு செய்தது என்பதற்கான பதிவுகள் இன்னமும் கிடைக்கவில்லை. சந்தேகமில்லாமல் அது பல பில்லியன் டொலர் பெறுமதியான வியாபாரமாக இருந்திருக்கும். யுத்தத்தின்போது வெளிவந்த ஊடக அறிக்கைகளின்படி ஸ்ரீலங்கா அரசாங்கமும் சில குறிப்பிட்ட மரபுவழி ஆயுதங்களைக் கொள்வனவு செய்தது அவை வெளிப்படையான முறையில் கொள்வனவு செய்யப்படவில்லை.

30 வருட யுத்தம் பல நிலைகளில் ஸ்ரீலங்காவை ஒரு அசையாத்தன்மைக்கு இட்டுச் சென்றது. இந்த ஒழுங்கற்ற ஆயுதத் தொழில் காரணமாக உலகத்திலேயே பெரிதும் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஸ்ரீலங்காவும் ஒன்று. ஸ்ரீலங்காவில் நடைபெற்ற 30 வருடப் போர் ஒழுங்கு படுத்தப்பட்ட ஆயுதத் தொழிலை வைத்திருக்கவேண்டியதன் அவசியத்தை உலகுக்குச் சொல்கிறது. மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவும் மற்றும் அரசாங்கங்கள் அவர்களை ஆதரிக்க வேண்டியதன் அவசியத்தையும் அறிவதற்கு வளரும் நாடுகளுக்கு சந்தேகமில்லாமல் இது உதவும்.

ஸ்ரீலங்காவில் சட்டவிரோத ஆயுதங்களால் ஏற்படும் பிரச்சினை

சட்ட விரோத ஆயுதங்கள் (சிறிய மற்றும் இலகு ரக) காரணமாக ஒவ்வொரு வருடமும் ஸ்ரீலங்காவில் பல பொதுமக்கள் கொல்லப்படுகிறார்கள். ஸ்ரீலங்காவில் பயன்படுத்தப்படும் பெரும்பான்மையான சிறய மற்றும் இலகு ஆயுதங்கள் தன்னியக்கத் தன்மை வாய்ந்தவை மற்றும் அதற்குப் பயன்படுத்தப்படும் ரவைகள் மற்றையை நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை அவற்றில் எதுவும் ஸ்ரீலங்காவில் தயாரிக்கப் படுவதில்லை. ஸ்ரீலங்காவில் உள்ள ஆயுதம் தாங்கிய தனிநபர்கள் மற்றும் பாதாள உலகக் குழுக்களின் கைகளில் எத்தனை சட்ட விரோத ஆயுதங்கள் உள்ளன என்பதற்கான பதிவுகள் எதுவும் இன்னும் கிடைக்கவில்லை. இது நாட்டின் சமூக பொருளாதார அபிவிருத்தி மற்றும் அரசியல் உறுதிப்பாடு என்பனவற்றையும் மக்களின் பாதுகாப்பையும் நேரடியாகவே பாதிக்கிறது.

2014ல் ஆயுத வர்த்தக ஒப்பந்தம் (ஏ.ரி.ரி) அமலுக்கு வருவதற்கு முன்பு சட்ட விரோத ஆயுதங்களின் துரித வளாச்சிக்கு எதிராக சில சுவராசியமான செயற்பாடுகள் இடம்பெற்றன. 2005ல் போரின் உச்சக் கட்டத்தில் அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா சட்ட விரோத ஆயுதங்களின் துரித வளர்ச்சிக்கு எதிராக எல்லா அம்சங்களுக்கும் ஏற்ற ஒரு தேசிய சபையை அமைத்தார் (என்.சி.ஏ.பி.ஐ.எஸ்.ஏ). அது முதன்முதலில் ஸ்ரீலங்காவில் மட்டும் அமைக்கப்பட்ட ஒரு ஆணைக்குழு அல்ல, ஆனால் அந்த வகையில் உலகிலேயே முதலில் அமைக்கப்பட்ட ஒரு ஆணையம் ஆகும். இந்த ஆணைக்குழு ஸ்ரீலங்காவில் சிறிய மற்றும் இலகு ஆயுதங்களின் துரித வளர்ச்சிக்கு எதிராக பல செயற்பாடுகளை முன்னெடுத்தது மற்றும் இந்த விஷயத்தில் ஸ்ரீலங்காவின் அர்ப்பணிப்பை உலகுக்கு எடுத்துக் காட்டியது.

2006ல் இது தொடர்பாக அநேக முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளபlanka weopens1்பட்டன. 2005 ஜூலையில் சர்வதேச துப்பாக்கி அழிப்பு நாளை குறிக்கும் விதமாக சுதந்திர சதுக்கத்தில் வைத்து ஸ்ரீலங்கா 35,000க்கும் மேற்பட்ட சிறிய ரக ஆயுதங்களை அழித்தது. அதே வருடத்தில் ஸ்ரீலங்காவின் ஐநா வின் நியுயோர்க் தூதுவரும் மற்றும் நிரந்தரப் பிரதிநிதியுமான பிரசாத் காரியவாசம், அனைத்து அம்சங்களிலும் சிறிய மற்றும் இலகு ஆயுதங்களை தடுப்பது, எதிர்ப்பது மற்றும் அழிப்பது தொடர்பான திட்டத்தின் செயற்பாடுகள் மற்றும் நடவடிக்கைகளை மீளாய்வு செய்வதற்காக நியுயோர்க்கில் நடைபெற்ற ஐநா கருத்தரங்கிற்கு தலைமை தாங்கினார். 26 ஜூன் 2016ல் நடைபெற்ற அதே கருத்தரங்கில் அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாயா ராஜபக்ஸ என்.சி.ஏ.பி.ஐ.எஸ்.ஏ யில் ஸ்ரீலங்காவின் முன்னேற்றம் மற்றும் இந்த விஷயத்தில் நாட்டின் அர்ப்பணிப்பு என்பன தொடர்பாக ஒரு அறிக்கையையும் வெளியிட்டார்.

2008 மார்ச்சில் என்.சி.ஏ.பி.ஐ.எஸ்.ஏ ஒரு ஆய்வறிக்கையை அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாயா ராஜபக்ஸவின் முன்னுரையுடன் பிரசுரம் செய்தது. 8, மே 2008ல் மேலே குறிப்பிடப்பட்ட ஐநா கருத்தரங்கில் ஒரு அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது. 2009ல் எல்.ரீ.ரீ.ஈ உடனான யுத்தம் முடிவடைந்தது, அந்த நேரத்தில் என்.சி.ஏ.பி.ஐ.எஸ்.ஏ செயலிழந்து போனது, போருக்குப் பிந்தைய ஸ்ரீலங்கா திரும்பவும் சட்ட விரோத ஆயுதங்களின் துரித வளர்ச்சியை அனுபவித்து வருகிறது.

ஆயுத வர்த்தக உடன்படிக்கை (ஏ.ரி.ரி) என்றால் என்ன?

2013 ல் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் 154 அங்கத்துவ நாடுகளால் இந்த ஆயுத வர்த்தக உடன்படிக்கை (ஏ.ரி.ரி) ஏற்றுக் கொள்ளப்பட்டது, மற்றும் அது 2014 முதல் அமலுக்கு வந்தது. ஆயுத வர்த்தக உடன்படிக்கை (ஏ.ரி.ரி), மரபுவழி ஆயுத வர்த்தகத்தின் பொறுப்பான வர்த்தகத்துக்காக சர்வதேச நியமம் ஒன்றை உருவாக்குவதற்கான ஒரு கட்டமைப்பை வழங்குகிறது. ஆயுத வர்த்தக உடன்படிக்கை (ஏ.ரி.ரி) ஒரு ஆயுதக் களைவு ஒப்பந்தம் அல்ல. அது பொறுப்பான ஆயுத வர்த்தகத்தை அடைவதற்கான ஒரு ஆயுதக் கட்டுப்பாட்டு உடன்படிக்கையாகும். ஆயுத வர்த்தக உடன்படிக்கை (ஏ.ரி.ரி), உலகளாவிய ஆயுத வர்த்தகத்தில் அயுதப் பரிமாறலை ஒழுங்குபடுத்தவும் மற்றும் பொறுப்பு, வெளிப்படைத்தன்மை, மற்றும் பொறுப்பணர்வு என்பனவற்றை ஊக்குவிக்கவும் வடிவமைக்கப் பட்டுள்ளது. இந்த உடன்படிக்கையின் முக்கிய நோக்கம் மனித துயரங்களைக் குறைப்பது ஆகும்.

ஆயுத வர்த்தக உடன்படிக்கை (ஏ.ரி.ரி) பெருமளவில் ஒரு ஒழுங்குமுறை உடன்படிக்கையாகும், இது எல்லைகள் கடந்து மரபுவழி ஆயுதங்கள் விற்பனையாகும்போது பொருத்தமான அரசாங்கக் கட்டுப்பாட்டை ஊக்குவிப்பதற்கு முற்படுகிறது. இந்த உடன்படிக்கையில் ஏற்றுமதிக்கான சர்வதேச வர்த்தகச் செயற்பாடுகளான ஏற்றுமதி, இறக்குமதி, போக்குவரத்து, மாற்றி ஏற்றுதல், பரிமாற்றம் மற்றும் இடைத்தரகு போன்றவை உள்ளடக்கப்பட்டுள்ளன. மரபுவழி இராணுவ ஆயுதங்கள் பயங்கரவாதிகள் அல்லது ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழக்களின் கைகளில் விழுந்து விடாமல் தடுப்பதை இந்த உடன்படிக்கை மேற்கொள்கிறது.

ஏ.ரி.ரி ஒரு ஆயுதம் தொடர்பான உடன்படிக்கை மட்டுமே அது பாலின அடிப்படையிலான வன்முறை அல்லது ஆயுத மோதல் மற்றும் ஆயுத வன்முறை காரணமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான தீவிர செயற்பாடுகள் பற்றியும் பேசுகிறது. ஏ.ரி.ரி, சில எண்ணிக்கையிலான நீடித்த அபிவிருத்தி இலக்குகளை (எஸ்.டி.ஜி) அடைவதில் சாதகமான தாக்கங்களை ஏற்படுத்துகிறது, இதில் பாலின சமத்துவ இலக்கு 5, நீடித்த நகரங்கள் மற்றும் சமூகங்கள் மீதான இலக்கு 11, மற்றும் பங்காளித்துவ இலக்கு 17 என்பன உட்படுகிறது.

யுத்தத்தின் பின்னான ஸ்ரீலங்காவின் ஆயுத வர்த்தக உடன்படிக்கை (ஏ.ரி.ரி) உடனான ஈடுபாடு

ஆயுத வர்த்தக உடன்படிக்கை (ஏ.ரி.ரி) ஸ்ரீலங்காவில் யுத்தம் முடிவடைந்த ஐந்து வருடங்களின் பின்னர் 2014ல் நடைமுறைக்கு வந்தது. ஆனால் ஸ்ரீலங்கா இன்னமும் ஆயுத வர்த்தக உடன்படிக்கை (ஏ.ரி.ரி)யில் ஒரு அரசாங்க கட்சியாக இடம்பெறவில்லை. 2013ல் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் ஏ.ரி.ரி பற்றிய பேச்சு வார்த்தை இடம்பெற்றபோது ஸ்ரீலங்கா ஒரு தீவிர பங்களிப்பாளராகவும் மற்றும் உடன்படிக்கையை ஏற்றுக்கொள்வது தொடர்பான வாக்கெடுப்பில் அதற்குச் சாதகமாகவும் ஸ்ரீலங்கா வாக்களித்தது. ஒரு முக்கியமான ஸ்ரீலங்காத் தூதுவரான எச்.எம்.ஜி.எஸ். பளிகக்கார ஆயுதக்களைவு விவகாரம் தொடர்பான ஆலோசனைக் குழுவின் (ஐநா செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்டது) 2012ல் நடைபெற்ற வருடாந்த அமர்வுகள் இரண்டிற்கு (57வது மற்றும் 58வது) தலைமை தாங்கியுள்ளார், அவை ஆயுத வர்த்தகத்திற்கு முக்கியத்துவம் வழங்கியிருந்தன.

உலகளாவிய செயற்பாடுகளுக்கான பாராளுமன்ற உறுப்பினர்களின் (பி.ஜி.ஏ), ஸ்ரீலங்கா அத்தியாயத்தின் தலைவரான அமைச்சர் நிமால் சிறிபால டீ சில்வா பா.உ மற்றும் செயலாளர் திலங்க சுமதிபால பா.உ ஆகியோர் ஏ.ரி.ரி யினை முன்னேற்றுவதற்கு ஆதரவாக செயற்பட்டார்கள். 2017ல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உலகளாவிய ஆயுதத் தொழில் தொடர்பாக சில முக்கிய அறிக்கைகளை வெளியிட்டார். அவைகளின் மத்தியில் மே 11ல், ?எனது கருத்துப்படி துப்பாக்கி உற்பத்தியாளர்கள் வாழ்க்கை நடத்துவதற்காக உழைப்பதற்கு வித்தியாசமான வேறு வழிகளைத் தேர்ந்தெடுப்பார்களானால் எங்களால் மோதலற்ற ஒரு உலகத்தை உருவாக்க முடியும், துப்பாக்கி உற்பத்தியாளர்களைத்தான் பேச்சு வார்த்தை மேசைக்கு அழைத்து வரவேண்டும்? என்று அவர் பேசியிருந்தார். இந்த வருடம் மே மாதத்தில் ஹர்சன ராஜகருணா பா.உ, நேபாளில் நடைபெற்ற ?ஆயுத வர்த்தக உடன்படிக்கையை முன்னேற்றுவதும் மற்றும் சர்வதேச மயமாக்குவதும்? என்கிற தலைப்பிலான தெற்காசிய வட்ட மேசை கலந்தரையாடலில் ஆர்வமாகப் பங்கேற்றிருந்தார்.

முன்னாலுள்ள வழி

அனைத்து அம்சங்களிலுமான சட்ட விரோத ஆயுதத்தின் துரித வளர்ச்சிக்கு எதிரான தேசிய ஆணைக்குழுவை (என்.சி.ஏ.பி.ஐ.எஸ்.ஏ) ஸ்ரீலங்கா உடனடியாக மீள் செயற்படுத்த வேண்டும். அதன் முதல் நடவடிக்கையாக எல்.ரீ.ரீ.ஈ யிடமிருந்தும் மற்றும் பாதாள உலக செயற்பாட்டாளர்களிடமிருந்தும் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை சுதந்திர சதுக்கம் அல்லது காலிமுகத் திடல் போன்ற ஒரு இடத்தில் வைத்து பகிரங்கமாக அழிக்க வேண்டும். எல்.ரீ.ரீ.ஈ மற்றும் அரசாங்க ஆயுதப்படைகளுக்கு இடையிலான யுத்தம் முடிவடைந்து 10வது ஆண்டு நிறைவு அடுத்த ஆண்டு இடம்பெற இருப்பதால் அந்தத் தருணத்தில் இதை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யலாம்.

போருக்குப் பிந்தைய ஸ்ரீலங்கா, ஏற்றுமதி, இறக்குமதி, தரகுச்சேவை மற்றும் பரிமாற்றம்? என்பனவற்றுடன் இணைந்த சட்ட விரோத ஆயுத வர்த்தகத்தை ஒழிப்பதற்கு சர்வதேச சமூகlankaweopens2த்துடன் இணைந்து ஈடுபடவேண்டும். மாறாக அது சமூகபொருளாதாரம், அரசியல், சுற்றுச்சூழல் மற்றும் உள்நாட்டிலும் மற்றும் உலகளவிலும் அபிவிருத்தியடையும் எனைய துறைகளுக்கும் அது உதவியாக இருக்கவேண்டும்.ஸ்ரீலங்காவைப் போன்ற யுத்தத்துக்கு பிந்திய ஒரு நாட்டுக்கு சட்ட விரோத ஆயுத வர்த்தகத்துடன் இணைவதற்கு பல்வேறு சந்தர்ப்பங்கள் உள்ளன.சட்டவிரோத உலகளாவிய ஆயுத வர்த்தகத்தில் ஈடுபடவோ அல்லது உருவாக்கவோ முடியாது என்பதால் எந்தவித கேள்வியும் இன்றி அரசாங்க கட்சியாக அதில் இணைவதற்கான ஒரு வாய்ப்பை அது வழங்குகிறது. தெற்காசியாவிலேயே ஏ.ரி.ரி யில் இணையும் முதல் நாடாக யுத்தத்துக்குப் பின்னான ஸ்ரீலங்கா இருக்க வேண்டும். இந்த வாய்ப்பை ஸ்ரீலங்கா தவறவிடக் கூடாது. இது எடுத்துக்காட்டுவது இந்த நாடு எந்த ஒரு பக்கத்தையும் சாராது இந்தப் பிராந்தியத்தில் ஒரு நடுநிலை நாடாகச் செயற்படுவதுடன் அணிசேரா வெளிநாட்டுக் கொள்கையையும் பராமரிக்கிறது என்பதை. இந்தப் பிராந்தியத்தில் ஸ்ரீலங்கா ஒரு மென் சக்தியாக திகழ்வதுக்கான பாதையை ஏற்படுத்துவதுடன், ஆயுதக் களைவின் சம்பியன் என்கிற பழைய மகிமையையும் அது பெற்றுத்தரும் என்பதில் எதுவித ஐயத்துக்கும் இடமில்லை.

தாவரங்கள் மற்றும் விலங்குகளில் அருகிவரும் இனங்களின் சர்வதேச வர்த்தகம் பற்றிய மாநாட்டின் (சிஐரிஈஎஸ்) 18வது கட்சிகளின் கருத்தரங்கு (சிஓபி) அடுத்த வருடம் ஸ்ரீலங்காவில் நடைபெற உள்ளது. இது ஸ்ரீலங்காவில் முதல்முறையாக நடைபெறவுள்ளது இதில் 184 நாடுகள் பங்குபற்றவுள்ளன. ஸ்ரீலங்காவில் முதல்முறையாக கூடப்போகும் மிகப்பெரிய சர்வதேசக் கூட்டம் இதுவாகும். சிஐரிஈஎஸ் எப்போதும் சட்ட விரோத ஆயுத வர்த்தகம் மற்றும் சட்டவிரோத சர்வதேச வனவிலங்கு வியாபாரம் என்பனவற்றுக்கு இடையேயான நேரடி இணைப்பு பற்றி எப்போதும் பேசி வருகிறது. சிஐரிஈஎஸ் இனது 18வது கட்சிக் கருத்தரங்கினை நடத்தும் நாடான ஸ்ரீலங்கா அடுத்த வருடத்துக்குள் ஏ.ரி.ரி யினது அரசாங்க கட்சியாக மாறினால், அது சர்வதேச சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகத்தை கண்டனம் செய்வதற்கான நாட்டின் அர்ப்பணிப்பையும் ஆதரவையும் உலகுக்கு எடுத்துக்காட்டுவதாக அமையும்.

சாதாரண மனிதன் ஐந்து வகையான தவறான செய்கைகளில் ஈடுபடக்கூடாது என்று புத்த பகவான் போதித்துள்ளார், ஆயுத வியாபாரம் செய்வது அவற்றில் ஒன்று. பௌத்தம் மட்டுமல்ல ஏனைய மதங்களும்கூட ஆயுத வியாபாரத்தை சகித்துக் கொள்ளாது. பெரும்பான்மையான பௌத்த நாடான ஸ்ரீலங்கா, இந்து, கிறீஸ்தவம், மற்றும் இஸ்லாம் என்பனவற்றுடன் சேர்ந்து ஒரு பல் மத தேசமாக பரிமளிக்கிறது மற்றும் அது சட்டவிரோத ஆயுத வர்த்தகத்துக்கு உதவக் கூடாது மற்றும் அது தாமதமின்றி ஆயுத வர்த்தக உடன்படிக்கையில் (ஏ.ரி.ரி) இணைய வேண்டும்.

-வித்யா அபேகுணவர்தன

– தமிழில்: எஸ்.குமார்