செய்திமுரசு

போருக்குப் பின்னர் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்துள்ளன! பத்மினி சிதம்பரநாதன்

போருக்குப் பிந்திய காலத்தில் ஈழத்தமிழ்ப் பெண்களைப் பொறுத்தவரையில் அவர்கள் பல்வேறு ஒடுக்குமுறைக்குள் ஆட்பட்டதுடன் அவர்களுக்கெதிரான வன்முறைகளானது தற்போதுவரை பன்மடங்காக அதிகரித்துள்ளது. எனவே அத்தகைய வன்முறைகளை முற்றாக ஒழிக்க சமூக ஒத்துழைப்புடன் தனிநபர் ஒத்துழைப்பு என்பன மிகவும் அவசியமானதாகும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பெண்கள் விவகாரக் குழுத் தலைவியுமான திருமதி பத்மினி சிதம்பரநாதன் தெரிவித்துள்ளார். சர்வதேச மனித உரிமை தினமாகிய இன்று பெண்களுக்கெதிரான வன்முறை ஒழிப்பின் 16 ஆவது நாள் செயல்வாதத்தின் இறுதி நாள் முன்னெடுக்கப்படுகின்றது. இந்நிலையில் இது ...

Read More »

அவுஸ்ரேலியாவின் இந்திய தூதரக அலுவலகத்தில் இரங்கல் கூட்டம்

தமிழக முதல்வராக இருந்து மறைந்த ஜெயலலிதாவிற்கு தமிழகம் மட்டும் அல்லாமல் நாட்டில் பல மாநிலங்களில் அஞ்சலி செலுத்திய நிலையில், கடல் கடந்து வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களும் அஞ்சலி மற்றும் இரங்கல் கூட்டம் நடத்திவருகின்றனர். தமிழ் கலை மற்றும் பண்பாட்டு கழகம் சார்பில் அவுஸ்ரேலியாவின் சிட்னி நகரில் உள்ள இந்திய தூதரக அலுவலகத்தில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இதில் இந்திய தூதரக அதிகாரி வன்லால் வானா மற்றும் அமைப்பின் நிர்வாகிகள் அனகன் பாபு, கர்ணன் சிதம்பரபாரதி, நாராயணன் மற்றும் சிட்னி வாழ் தமிழர்களுடன் பிற மாநிலங்களை ...

Read More »

அவுஸ்ரேலியா அணிக்கு லாங்கர் பயிற்சியாளர்

இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது இலங்கை டி20 தொடர் வருவதால் இலங்கை தொடருக்கு ஜஸ்டின் லாங்கரை பயிற்சியாளராக அவுஸ்ரேலியா நியமித்துள்ளது. இலங்கை அணி மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அவுஸ்ரேலியா செல்கிறது. முதல் போட்டி மெல்போர்னில் பிப்ரவரி 17-ந்திகதி தொடங்குகிறது. 2-வது போட்டி 19-ந்தேதியும், 3-வது மற்றும் கடைசி போட்டி 22-ந்திகதியும் நடக்க இருக்கிறது. அதே சமயத்தில் பிப்ரவரி 23-ந்திகதி இந்தியா – அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. இரண்டிற்கும் வெவ்வேறு அணி என்பதால் அவுஸ்ரேலியா ...

Read More »

நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது அவுஸ்ரேலியா

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை முழுவதுமாக கைப்பற்றி நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது அவுஸ்ரேலியா. அவுஸ்ரேலியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. ஏற்கனவே முடிந்துள்ள இரண்டு பேட்டிகளிலும் அவுஸ்ரேலியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இதனால் இன்றைய போட்டியில் வெற்றி பெற்று நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில்அவுஸ்ரேலியா களம் இறங்கியது. இந்த போட்டியில் ஆறுதல் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் நியூசிலாந்து களம் இறங்கியது. டாஸ் வென்ற ...

Read More »

மட்டக்களப்பில் எழுக தமிழ் – ஜனவரி 21

கிழக்கு மாகாணத்து மக்கள் தமது பிரச்சனைகளை ஒரே இடத்தில் முன்வைக்கும்பொருட்டு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 21ஆம் திகதி மட்டக்களப்பில் மாபெரும் ‘எழுக தமிழ் பேரணி’ நடாத்தப்படவுள்ளது. கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் பௌத்தமயமாக்கலைத் தடுத்து நிறுத்தக் கோரியும், சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தக் கோரியும், ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் நிலங்களை மீட்கும் நோக்குடன் ஆக்கிரமிப்புப் படைகளை கிழக்கு மாகாணத்திலிருந்து வெளியேறக்கோரியும் குறித்த பேரணி நடைபெறவுள்ளது. அத்துடன், தமிழ் மக்கள் மீது நடாத்தப்பட்ட இனவழிப்பு யுத்தத்திற்கு சர்வதேச நீதி விசாரணையே தேவை என்பதை வலியுறுத்தியும், காணாமல் போனவர்களைக் ...

Read More »

சிட்னியில் தாக்குதலை நடத்த திட்டமிட்டவர்களுக்கு 20 ஆண்டு சிறை

சிட்னியில், பயங்கரவாதத் தாக்குதலை நடத்த சதித்திட்டமிட்ட இருவருக்கு, 20 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், ஷியா புனிதத்தலம் ஒன்றில் தாக்குதல் நடத்த அந்த இரண்டு பேரும் திட்டமிட்டிருந்தனர். எனினும், அதற்கு மாறாக ஆயுதத் தாக்குதல் நடத்த அவர்கள் சதித்திட்டம் தீட்டியதாகக் கூறப்பட்டது. அவர்களின் சதித்திட்டம் குறித்து பயங்கரவாத எதிர்ப்புக் கூட்டுக் குழுவுக்குத் துப்பு கிடைத்ததாக ஆஸ்திரேலிய ஊடகம் தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து அந்த நபர்களின் வீடுகள் சோதிக்கப்பட்டன. கைதுநடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. அதற்கு முன் அவர்கள் காணொளி ஒன்றைப் பதிவு செய்திருந்ததாக ...

Read More »

ஜெயலலிதா மறைவு! அவுஸ்ரேலிய தமிழர்கள் இரங்கல்

கடந்த 5ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா மறைந்தார். அவரது உடல் எம்ஜிஆர் நினைவிடத்தின் அருகில் 6ம் தேதி நல்லடக்கம் செய்யப்பட்டது. உலக நாடுகளில் வாழும் தமிழர்களும் ஜெயலலிதாவின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தினார்கள்.அதன் வகையில் அவுஸ்ரேலியாவின் சிட்னி நகரில் உள்ள இந்திய கல்சுரல் சென்டரில் ஜெயலலிதா மறைவுக்கு 07 ஆம் திகதி மாலை இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில் ஜெயலலிதாவின் நினைவுகள் குறித்து பலரும் பேசினார்கள். ஜெயலலிதாவின் இழப்பு உலகம் முழுவதும் வசிக்கும் தமிழர்களுக்கு பேரிழப்பு என்று நிகழ்ச்சி ...

Read More »

அவுஸ்திரேலிய சுற்றுப்பயணம்- பாகிஸ்தான் அணியில் 17 வயது புதுமுக வீரர்

அவுஸ்ரேலியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அணியில் இடம் பெற்றிருந்த சுழற்பந்து வீச்சாளர் யாசிர்ஷா காயமடைந்தார். அவருக்கு பதிலாக 17 வயது புதுமுக வீரர் முகமத் அஸ்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி வருகிற 15-ந்தேதி பிரிஸ்பெனில் தொடங்குகிறது. இதற்கான பாகிஸ்தான் அணியில் இடம் பெற்றிருந்த முன்னணி சுழற்பந்து வீச்சாளர் யாசிர்ஷா காயம் அடைந்தார். இதையடுத்து அவருக்கு பதில் 17 வயது புதுமுக வீரர் முகமத் அஸ்கர் ...

Read More »

நிமலராஜன் கொலை வழக்கின் பிரதான சந்தேக நபருக்கு இரட்டை மரண தண்டனை

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீது 2001 ஆம் ஆண்டு தாக்குதல் நடாத்தியமை தொடர்பான வழக்கில் இரட்டை மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ள நெப்போலியன் எனும் நபர் பிரபல ஊடகவியலாளரான மயில்வாகனம் நிமலராஜன் கொலை வழக்கின் பிரதான சந்தேகநபர் ஆவார். கடந்த 2000ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19ம் திகதி இரவு 8 மணியளவில்  நிமலராஜன் வீட்டில் செய்தி தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த வேளை சுட்டு படுகொலை செய்யப்பட்டார். குறித்த படுகொலையின் பிரதான சந்தேகநபர் நெப்போலியன் என பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளின் இனம் காணப்பட்டு கைது ...

Read More »

ஆசிரியர்கள் அகதிகளுக்கு ஆதரவான போராட்டம்

அவுஸ்ரேலியாவின் விக்ரோறிய மாநிலத்தில் பாடசாலை ஆசிரியர்கள் அகதிகளுக்கு ஆதரவான போராட்டமொன்றை எதிர்வரும் வாரம் தொடங்கவிருப்பது பெரும் சர்ச்சையை அரசியல்மட்டத்தில் உருவாக்கியுள்ளது. விக்ரோறிய மாநிலத்தில் – குறிப்பாக மெல்பேர்ண் நகரத்தில் 16 பாடசாலைகளைச் சேர்ந்த 500 வரையான ஆசிரியர்கள் இந்தப் போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவுஸ்ரேலிய பெருநிலப்பரப்புக்கு அப்பால் தடுப்பு முகாம்களை மூடவேண்டுமென்றும் அகதிகளை அவுஸ்திரேலியாவுக்குக் கொண்டு வரவேண்டுமென்றும் வாசகங்கள் பொறித்த மேற்சட்டைகளை அணிந்து இந்த ஆசிரியர்கள் கடமையில் ஈடுபடுவார்கள் என்றும், அகதிகளுக்கு ஆதரவான பரப்புரையையும் விளக்கத்தையும் மாணவர்களுக்கு வழங்குவார்கள் என்றும் இந்தப் போராட்டத்தை ...

Read More »