தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீது 2001 ஆம் ஆண்டு தாக்குதல் நடாத்தியமை தொடர்பான வழக்கில் இரட்டை மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ள நெப்போலியன் எனும் நபர் பிரபல ஊடகவியலாளரான மயில்வாகனம் நிமலராஜன் கொலை வழக்கின் பிரதான சந்தேகநபர் ஆவார்.
கடந்த 2000ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19ம் திகதி இரவு 8 மணியளவில் நிமலராஜன் வீட்டில் செய்தி தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த வேளை சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.
குறித்த படுகொலையின் பிரதான சந்தேகநபர் நெப்போலியன் என பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளின் இனம் காணப்பட்டு கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
அதன் பின்னர் வழக்கு விசாரணைக்கு சமூகம் அளிக்காது தலைமறைவானார். அந்நிலையில் கூட்டமைப்பின் மீதான தாக்குதல் வழக்கில் மேல் நீதிமன்றால் சர்வதேச பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
அந்நிலையில் கூட்டமைப்பினர் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கில் நெப்போலியனுக்கு இரட்டை மரண தண்டனை அளித்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தீர்ப்பளித்துளார்.