Home / செய்திமுரசு (page 740)

செய்திமுரசு

புதுவருடத்தில் அவுஸ்ரேலியாவில் தாக்குதல் நடத்த திட்டம்!

புது வருடத்தில் அவுஸ்ரேலியாவில் தாக்குதல் மேற்கொள்ள திட்டமிட்டிருந்ததாக தெரிவித்து லண்டனில் இருந்து சிட்னி சென்ற ஒருவரை விமானநிலையத்தில் வைத்து கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட குறித்த நபர் 40 வயதுடையவர் என வெளிநாட்டு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கைது செய்யப்பட்ட குறித்த நபர் சிட்னி நகரப்பகுதியில் வசித்து வருவதாகவும், புதுவருட தினம் அன்று மாலை வேளையிலேயே தாக்குதல் மேற்கொள்ள இருப்பதாக இணையத்தில் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ...

Read More »

மெல்போர்னில்அவுஸ்ரேலிய அணியின் அதிகபட்சம்

மெல்போர்ன் டெஸ்டில் கடைசி நாளில் அதிரடி திருப்பமாக பாகிஸ்தானை 163 ரன்களில் சுருட்டி அவுஸ்ரேலியா இன்னிங்ஸ் வெற்றியை ருசித்தது. அவுஸ்ரேலியா – பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் கடந்த 26-ந்திகதி தொடங்கியது. ‘பாக்சிங் டே’ என்று அழைக்கப்பட்ட இந்த டெஸ்டில் பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 443 ரன்கள் சேர்த்து ‘டிக்ளேர்’ செய்தது. அவுஸ்ரேலிய அணி புத்தாண்டு பரிசாக இன்னிங்ஸ் மற்றும் 18 ...

Read More »

காணாமல் போனோரின் உறவினர்கள் உண்ணாவிரத போராட்டம்

வவுனியாவில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வவுனியா மாவட்ட செயலகம் அருகில் உள்ள பண்டார வன்னியன் சிலைக்கு முன்பாக இன்று(30) இந்த ஆர்ப்பாட்டத்தினை ஆரம்பித்துள்ளனர். கடந்த யுத்த காலத்தின் போது காணாமல் போன தமது உறவுகள் குறித்து அரசாங்கம் உரிய பதிலை அளிக்க வேண்டும், மற்றும் சிறையில் விசாரணைகள் இன்றி நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களை விடுதலை செய்யவேண்டும் எனத் தெரிவித்தே இவர்கள் இந்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். ...

Read More »

அவுஸ்ரேலிய அணியின் துணை பயிற்சியாளராக கில்லெஸ்பி நியமனம்

இலங்கை தொடருக்கான அவுஸ்ரேலிய அணியின் துணை பயிற்சியாளராக ஜேசன் கில்லெஸ்பி நியமிக்கப்பட்டுள்ளார். அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முந்தைய நாள் வரை அவுஸ்ரேலிய டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது. டி20 தொடரை முடித்துக்கொண்டு இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்வது சாத்தியமில்லை. இதனால் அவுஸ்ரேலிய அணியின் ...

Read More »

லயனுக்கு சிட்னி டெஸ்டில் இடம் கிடைக்குமா?

அவுஸ்ரேலியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான லயனுக்கு சிட்னி டெஸ்டில் உறுதியாக இடம் கிடைக்குமா என்பது உறுதியாக தெரியவில்லை. அவுஸ்ரேலியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. 2-வது டெஸ்ட் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 443 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அவுஸ்ரேலிய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் 23 ஓவர்கள் வீசி ...

Read More »

அவுஸ்திரேலியாவில் நாய் புலிச்சுறாவை வேட்டையாடியது

அவுஸ்திரேலியாவில் நாய் ஒன்று கடலில் புலிச்சுறாவை வேட்டையாடிய சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர வைத்துள்ளது. Cape York, Mabuiag தீவிலே இந்த சம்பவம் நடந்துள்ளது. Meroma Whap என்ற பெண்ணே குறித்த நிகழ்வை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். குறித்த வீடியோவில், கடற்கரையில் புலிச்சுறா ஒன்று நீந்திக்கொண்டிருக்கிறது. இதைக்கண்ட நாய் ஒன்று கரையிலிருந்து கடலில் நீந்தி சென்று புலிச்சுறாவை விரட்டி பிடிக்க செல்கிறது. இறுதியில் சுறா கடலுக்கு ...

Read More »

20 ஆண்டுகளுக்கு பிறகு கைதான கொலையாளி

அவுஸ்திரேலியா நாட்டில் இரண்டு இளம்பெண்கள் கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில் 20 ஆண்டுகளுக்கு பிறகு கொலையாளி தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிசார் தெரிவித்துள்ளனர். மேற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள பெர்த் நகரை சேர்ந்த 48 வயதான நபர் தான் தற்போது பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 1996-ம் ஆண்டு இரவில் வெளியே சென்றிருந்த Jane Rimmer(23) என்ற இளம்பெண் வீடு திரும்பவில்லை. இரண்டு மாதங்களுக்கு பிறகு அவரது வீட்டில் இருந்து 45 ...

Read More »

சாதனை படைத்த 102 வயதான விஞ்ஞானி

அவுஸ்ரேலியா நாட்டை சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் தன்னுடைய 102 வயதிலும் தொடர்ந்து பல்கலைக்கழக பணியாற்ற வேண்டும் என்ற விருப்பத்தை கடுமையான போராட்டத்திற்கு பிறகு நிறைவேற்றியுள்ளார். அவுஸ்ரேலியாவில் உள்ள பெர்த் நகரில் Edith Cowan என்ற பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் டேவிட் குட்டால் என்ற 102 வயதான விஞ்ஞானி ஒருவர் சூழலியல் பற்றி ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறார். பல்கலைக்கழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் டேவிட் ...

Read More »

சர்வதேச ரீதியில் பதக்க வென்ற யாழ். மாணவிகள்

சர்வதேசத்திலும் பதக்கத்தை வென்றனர் வயாவிளான்மத்திய கல்லூரி மாணவிகள். தேசிய ரீதியில் இதுவரை காலமும் பளுதூக்கலில் சாதனைபடைத்துவந்த வயாவிளான் மத்திய கல்லூரி மாணவிகள் சர்வதேச ரீதியிலும் தமது பதக்கத்தை  வென்றனர். தெற்காசியா நாடுகளுக்கு இடையிலான 20 வயதுப் பிரிவினருக்கான பளுதூக்கும் போட்டி நேற்று (28.12.2016) மலேசியா கோலாலம்பூர் நகரில் நடைபெற்றது. இதில் 53 கிலோ கிராம் எடைப்பிரிவில் பங்குபற்றிய தேவராசா லயன்சிகா 90 கிலோ கிராம் எடையினைத் தூக்கி வெண்கலப்பதக்கத்தினையும் 70 கிலோ ...

Read More »

காந்தி சிலை உடைக்கப்பட்டுள்ளது-முல்லைத்தீவு

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியகலாநிதி சிவமோகனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் முல்லைமாவட்டத்தில் அமைக்கப்பட்டு வந்த சிலைகளில் ஒன்றான முல்லைநகரின் மத்தியில் உள்ள மகாத்மாகாந்தி சிலை 26 ஆம் திகதி  இரவு  உடைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் முதல் இந்த சிலை நிர்மாணிக்கும் பணிகள் இடம்பெற்றுவந்த நிலையில் கடந்த முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் இந்த சிலை அமைப்பது தொடர்பில் பல்வேறு விவாதங்கள் இடம்பெற்ற நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த ...

Read More »