அவுஸ்திரேலியாவில் நாய் ஒன்று கடலில் புலிச்சுறாவை வேட்டையாடிய சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர வைத்துள்ளது.
Cape York, Mabuiag தீவிலே இந்த சம்பவம் நடந்துள்ளது. Meroma Whap என்ற பெண்ணே குறித்த நிகழ்வை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
குறித்த வீடியோவில், கடற்கரையில் புலிச்சுறா ஒன்று நீந்திக்கொண்டிருக்கிறது. இதைக்கண்ட நாய் ஒன்று கரையிலிருந்து கடலில் நீந்தி சென்று புலிச்சுறாவை விரட்டி பிடிக்க செல்கிறது.
இறுதியில் சுறா கடலுக்கு உள்ளே நீந்தி செல்ல நாய் கரைக்கு திரும்புகிறது. கடலில் மனிதர்களையே வேட்டையாடும் சுறாவை நாய் தைரியமாக விரட்டியதை பலர் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
உள்ளுர் வாசி ஒருவர் கூறியதாவது, குறித்த நாய் சுறாக்களை விரும்பி வேட்டையாடும் என தெரிவத்துள்ளார்.
Eelamurasu Australia Online News Portal