Home / செய்திமுரசு (page 730)

செய்திமுரசு

அவுஸ்திரேலியாவில் நாய் புலிச்சுறாவை வேட்டையாடியது

அவுஸ்திரேலியாவில் நாய் ஒன்று கடலில் புலிச்சுறாவை வேட்டையாடிய சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர வைத்துள்ளது. Cape York, Mabuiag தீவிலே இந்த சம்பவம் நடந்துள்ளது. Meroma Whap என்ற பெண்ணே குறித்த நிகழ்வை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். குறித்த வீடியோவில், கடற்கரையில் புலிச்சுறா ஒன்று நீந்திக்கொண்டிருக்கிறது. இதைக்கண்ட நாய் ஒன்று கரையிலிருந்து கடலில் நீந்தி சென்று புலிச்சுறாவை விரட்டி பிடிக்க செல்கிறது. இறுதியில் சுறா கடலுக்கு ...

Read More »

20 ஆண்டுகளுக்கு பிறகு கைதான கொலையாளி

அவுஸ்திரேலியா நாட்டில் இரண்டு இளம்பெண்கள் கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில் 20 ஆண்டுகளுக்கு பிறகு கொலையாளி தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிசார் தெரிவித்துள்ளனர். மேற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள பெர்த் நகரை சேர்ந்த 48 வயதான நபர் தான் தற்போது பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 1996-ம் ஆண்டு இரவில் வெளியே சென்றிருந்த Jane Rimmer(23) என்ற இளம்பெண் வீடு திரும்பவில்லை. இரண்டு மாதங்களுக்கு பிறகு அவரது வீட்டில் இருந்து 45 ...

Read More »

சாதனை படைத்த 102 வயதான விஞ்ஞானி

அவுஸ்ரேலியா நாட்டை சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் தன்னுடைய 102 வயதிலும் தொடர்ந்து பல்கலைக்கழக பணியாற்ற வேண்டும் என்ற விருப்பத்தை கடுமையான போராட்டத்திற்கு பிறகு நிறைவேற்றியுள்ளார். அவுஸ்ரேலியாவில் உள்ள பெர்த் நகரில் Edith Cowan என்ற பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் டேவிட் குட்டால் என்ற 102 வயதான விஞ்ஞானி ஒருவர் சூழலியல் பற்றி ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறார். பல்கலைக்கழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் டேவிட் ...

Read More »

சர்வதேச ரீதியில் பதக்க வென்ற யாழ். மாணவிகள்

சர்வதேசத்திலும் பதக்கத்தை வென்றனர் வயாவிளான்மத்திய கல்லூரி மாணவிகள். தேசிய ரீதியில் இதுவரை காலமும் பளுதூக்கலில் சாதனைபடைத்துவந்த வயாவிளான் மத்திய கல்லூரி மாணவிகள் சர்வதேச ரீதியிலும் தமது பதக்கத்தை  வென்றனர். தெற்காசியா நாடுகளுக்கு இடையிலான 20 வயதுப் பிரிவினருக்கான பளுதூக்கும் போட்டி நேற்று (28.12.2016) மலேசியா கோலாலம்பூர் நகரில் நடைபெற்றது. இதில் 53 கிலோ கிராம் எடைப்பிரிவில் பங்குபற்றிய தேவராசா லயன்சிகா 90 கிலோ கிராம் எடையினைத் தூக்கி வெண்கலப்பதக்கத்தினையும் 70 கிலோ ...

Read More »

காந்தி சிலை உடைக்கப்பட்டுள்ளது-முல்லைத்தீவு

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியகலாநிதி சிவமோகனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் முல்லைமாவட்டத்தில் அமைக்கப்பட்டு வந்த சிலைகளில் ஒன்றான முல்லைநகரின் மத்தியில் உள்ள மகாத்மாகாந்தி சிலை 26 ஆம் திகதி  இரவு  உடைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் முதல் இந்த சிலை நிர்மாணிக்கும் பணிகள் இடம்பெற்றுவந்த நிலையில் கடந்த முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் இந்த சிலை அமைப்பது தொடர்பில் பல்வேறு விவாதங்கள் இடம்பெற்ற நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த ...

Read More »

பொழுது போக்கு கிளப் ஆக மாறிவிட்டது ஐநா சபை: ட்ரம்ப்

ஐக்கிய நாடுகள் சபை வெறும் பொழுது போக்கு கிளப் ஆக மாறிவிட்டது என அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், ஐநா அமைப்புக்கு மிக அதிக அளவில் ஆற்றல் உள்ளது, ஆனால் அந்த அமைப்பு மக்கள் ஒன்று கூடி சந்தித்து பேசி மகிழும் கிளப் போல மாறிவிட்டது என விமர்சித்துள்ளார். ஐநா அமைப்பின் தற்போதைய நிலைமை தனக்கு ...

Read More »

ஒட்டாவா பிரகடனத்தில் ஒப்பமா? முடியாது என்கிறது சிறீ. இராணுவம்!

இராணுவ முகாம்களை பாதுகாப்பதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்ட பின்னரே, கண்ணிவெடிகளைத் தடைசெய்யும் அனைத்துலக பிரகடனமான ஒட்டாவா பிரகடனத்தில் அரசாங்கம் கையெழுத்திடுமென சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலர் கருணாசேன கெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். ஒட்டாவா என அழைக்கப்படும், அனைத்துலக ரீதியில் கண்ணிவெடிகளைத் தடைசெய்யும் பிரகடனத்தில் இதுவரை 160 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. இந்தப் பிரகடனத்தில் கையெழுத்திடுவதற்கு கடந்த மார்ச் மாதம் அமைச்சரவை அனுமதி அளித்திருந்தது. இருப்பினும், இதற்கு பாதுகாப்பு அமைச்சு இன்னமும் தனது ஆதரவைத் தெரிவிக்கவில்லை. ...

Read More »

அவுஸ்ரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்: பாகிஸ்தான் வீரர் அசார்அலி சதம்

அவுஸ்ரேலியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அசார்அலி அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவுஸ்ரேலியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்ன் நகரில் நேற்று தொடங்கியது. முதலில் விளையாடிய பாகிஸ்தான் நேற்றைய முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 142 ரன் எடுத்து இருந்தது. தொடக்க வீரர் அசார்அலி 66 ரன்னும், ஆசாத் ...

Read More »

நான் செவ்வாய்கிரக வாசி!- அவுஸ்ரேலியப் பெண்..!

அவுஸ்திரேலிய நாட்டின் மெல்பேர்ன் நகரில் வசித்து வரும் Lea Kapiteli என்ற யுவதி தான் மனித இனத்தை சேர்ந்தவர் அல்ல எனக் கூறி அனைவரையும் பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளார். 22 வயதான இந்த யுவதி தான் செவ்வாய் கிரகவாசிகளின் மரபணுவை கொண்ட கலப்பினம் என தெரிவித்துள்ளார். தனது பிறப்பு பற்றி கருத்து வெளியிட்டுள்ள யுவதி, தனது தாய் உறக்கத்தில் இருந்த போது, செவ்வாய் கிரகவாசிகள் தன்னை பெற்றெடுக்க தேவையான அடிப்படை மரபணுவை ...

Read More »

ரவிராஜின் கொலை வழக்கின் தீர்ப்பானது ஒரு புதிரின் சிறுபகுதி!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான நடராஜா ரவிராஜின் கொலை வழக்கின் தீர்ப்பானது ஒரு புதிரின் சிறுபகுதியாகும் என்று தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன், “இந்தப் படுகொலைச் சம்பவம், இன்றைக்கு 10 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது. ஆனால், அந்தச் சம்பவத்துக்குக் கட்டளையிட்டவர் யார் என அறிய நாம் இன்னும் காத்திருக்கிறோம்” என்று தெரிவித்தார். இந்தியாவின் ‘த ஹிந்து’ பத்திரிகைக்கு அவர் வழங்கிய பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். “ரவிராஜின் ...

Read More »